திங்கள், 31 மே, 2021

அகம்படியாரும் அகம்படி முதலிகளும்..


ஒவ்வொரு சமுதாயத்திற்கும் "குலம்" சார்ந்த அடையாளங்கள் எவ்வளவு முக்கியம் என்பதற்கு கீழ்வரும் கல்வெட்டுகளின் வாயிலாக சில முக்கிய விடயங்களை அகமுடையார் உறவுகள் புரிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியமாகும்..

ஏனெனில் கல்வெட்டின் நான்ங்காவது வரியில் "அகம்படியாரும் கைக்கோள முதலிகளும் பள் நாடவரும் பள் முதலிகளும்"

எனப்படும் வரிகள் கவணிக்கதக்கதாகிறது,

இவ்வரிகள் தெளிவாக "அகம்படியார்" என்பவரை மற்றும் "கைகோள முதலியாரை" அழகாக தனித்தனி இனத்தை சேர்ந்த நபராக கூறுகிறது,

அதே கல்வெட்டில் 16 வது வரி "அகம்படியாரும் அகம்படி முதலிகளும் பள் நாடவரும் பள் முதலிகளும்" என்கிறது,

அதாவது கல்வெட்டில் 4 வது வரியில் கைகோள முதலிகள் என்றதை 16 வரியில் "அகம்படி முதலிகள்" என்கிறது..

இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலம் கிபி_1290 ஆகும்..

இக்கட்டுறையின் துவக்கத்தில் கூறியதை போல ஒவ்வொரு சமுதாயத்தின் "குல" அடையாளமே அவர்களின் தனித்துவத்தை காக்கும் என்பதால் அது மிக அவசியம் என்பது எதெற்கு எனில்,

உதாரணமாக இன்றை செங்குந்தர்கள் எனப்படும் கைகோளர்கள் தன்னை "வீரவாகு தேவர்" வம்சம் என்ற 6 க்கும் மேலான செப்பேடுடைய இனத்தினர்,

இன்றைய அகமுடையார்கள் மலைமகளை தன் மகள் எனும் மலையர்குலராயர்கள் & மகபாரத சந்திரகுல வரலாற்றின்படி குருகுலராயர்கள்..

நினைவில் கொள்ளுங்கள் உறவுகளே "மலைகளின் ராஜகுலத்தான்" முருகனுக்கு படை உதவி தளபதியாக பிறந்த வீரவாகுவை தன் முன்னோர் என்று செப்பேடுடன் கொண்டாடும் செங்குந்தர் பங்காளிகள் ஒருபோதும் தம்மை மலைமகளின் தந்தை மலையர்குலராயர் என்பதில்லை & சந்திர(குரு)குல அரசன்(ராயன்) "குருகுலராயன்" என்றும் கூறுவதில்லை அது இயலாது என்பதும் யதார்த்த உண்மை...

இந்நிலையில் வேந்தர்கால கல்வெட்டுகளில் நமது பெயராக பயின்றுவந்த அடையாளங்களில் ஏதேனும் சிறு குழப்பம் தோன்றும்போது நமது தொண்மையான "குல" அடையாளமே நம் தனித்துவத்தை காக்கும் என்பதை உணர்வோம் "குருகுலராயன் அகமுடையார்" உறவுகளே..

இக்கட்டுறையின் கருப்பொருளுக்கு மேற்கோளாக மற்றொரு கல்வெட்டு;

"திருவகம்படிக் கைக்கோளரும்"

சுந்தரபாண்டியர் கால கல்வெட்டு, வெளியீடு 
"ஆவணம்" இதழ்_23..

கல்வெட்டுகளின் வாயிலாக இதுபோன்ற குறிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும்போது நாம் நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றுதான்;

உலகமாதா மலைமகளை தன் மகள் என கொண்டாடும் "மலைகளின் ராஜகுலம்" மருதுபாண்டியர் குலம்..


மலைமகள் பிறந்து சிவனுக்கு அகமுடையாளாகி பிறகு முருகன் பிறந்து குறிஞ்சித் தலைவனுக்கு படைத்தளபதியான "வீரபாகுத்தேவரை" தன் குல முதல்வனாக போற்றும் இனம் நம் "பங்காளி" முறை உறவுகளான மலையர்குலத்தின் சேனாதிபதிகளன செங்குந்தர்_சேனையர் எனப்படும் கைகோளர்கள்...

இங்கனமாக நமது பிரதான குல அடையாளமே 
1.அகலிகை குல கள்ளர்,
2.ரவிகுல மறவர்,
3.யதுகுல யாதவர்,
மற்றும் இன்னபிற தமிழ்சாதிகளான 
அனைவரிடத்தில் இருந்தும் நம்மை வேறுபடுத்தி காட்டும் முதன்மை அடையாளமாகும்...

மேலே மேற்கோளாக காட்டிய அதே கல்வெட்டை "தென்னிந்திய கோயிற் சாசனம்" தொகுதி_1 ல் "அகம்படி முதலிகள்" என மட்டுமே இரு இடத்திலும் வந்தபடியாக பிரசுரித்துள்ளது கைகோள முதலிகள் என்பது வரவில்லை,
 எனினும் இங்கனம் எந்த குழப்பம் எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் புதிய கல்வெட்டுகளால் ஏற்படினும் அப்போது குல அடையாளமே நம்மை காக்கும் பிரம்மாஸ்திரமாகும் என்பதை உணர வேண்டியது அவசியமாகும்...


            +++++++

நம் குல அடையாளம் போற்றுவோம்..
தனித்துவம் காப்போம்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக