திங்கள், 24 மே, 2021

மல்லன் கல்வெட்டுகள்..

மல்லர் எனும் சொல்லுக்கு "மற்போர் வீரர்கள்" எனப் பொருள் கூறுகின்றன அகராதிகள் அனைத்தும்..

மலையர்குலத்தை "மல்லர்" என்ற பெயருடன் குறிப்பிடும் கல்வெட்டுகளை தொகுப்பது இக்கட்டுறையின் நோக்கம்..

கல்வெட்டு_1
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்வெட்டு,

"மூஞ்சிப்பாடி காணியுடைய மூஞ்சிப்பாடி உடையான் சீரன் சுத்தமல்லனான விக்கிரமசோழ மலையகுலராயன்"
கல்வெட்டு 👇👇
+++

கல்வெட்டு_2
கொல்லிமலை கல்வெட்டு 9 ஆம் நூற்றாண்டில் 
"வாணராச மல்ல நக்கன்"
"வாணராச அரைய நாடன்"
+++

கல்வெட்டு_3

தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 பக்கம்_84 சாசனம்_73 வது கல்வெட்டு 
"மலையன் மல்லனான விக்ரமசோழ மலையமான்"
+++++

கல்வெட்டு_4,

"சேம்பூர் மனிநாகன் இடர்நீக்கி மல்லனான வாணராயன்"

+++++

கல்வெட்டு_5,

"வேட்டுவ அதியரையனான மல்லன் வேங்கடவன்"
மேல் கல்வெட்டை தொல்லியல் ஆய்வுத்துறை நூல் தொகுப்பும் வெளியிட்டுள்ள விவரம்;
+++

கல்வெட்டு_6;

"வல்லங்கிழான் மல்லன் அழகிய திருச்சிற்றம்பலமுடையானான முனையதரையன்"

முனையதரையர்கள் "மலையர்" குலத்தவராவர்..

**

கல்வெட்டு_7

"இருங்கோளர் பிரிதிபதி அமனி மல்லர்"
இருங்கோளர் என்பது வாணர் குலப்பெயர் மற்றும் இப்பெயரை கொடும்பாளூர் இருங்கோவேள் எனக்கொண்டாலும் அவர்கள் "யதுகுலம்" ஆவர்,

இக்கல்வெட்டுகள் வாயிலாக "மல்லர்" என்பது மற்போர் வீரர் என்ற பொருளுடைய சொல்லே தவிற இனப்பெயர் அல்ல ஆனால் இவற்றை பள்ளர் எனப்படும் "தேவேந்திரகுல வேளாளர்" சமுதாயத்தவர் தங்கள் பெயர் என்பது அறியாமையன்றி வேறு காரணம் இல்லை..

தொடர்ச்சியாக "மல்லர்" எனும் சான்றுள்ள "மலையர்குல" கல்வெட்டுகள் அனைத்தும் இக்கட்டுறையில் இனைக்கப்படும்..

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக