ஞாயிறு, 16 மே, 2021

பர்வதராஜகுல கல்வெட்டு செப்பேடுகள்..

மலையர்குல மன்னர்கள் அனைவருக்கும் குலமுதல்வனான மலைமகளின் தந்தை பர்வதராஜன் கல்வெட்டு மலையரையனின் சிலையுடன் உள்ள கோவில் கடலூர் மாவட்டம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலாகும்..

கல்வெட்டு;
கோவிலில் மலையரையன் சிலை,

கடலூர் மாவட்டம் மேலக்கடம்பூர் செல்லும் வாய்ப்புள்ள மலையர்குல உறவுகள் "மலைகளின் ராஜகுலத்தின்" குல முதல்வனை தரிசித்து ஆசிபெற்று வாருங்கள்..

++++++

"சுந்தரபாண்டிய பர்வதராயன்" கல்வெட்டு...

பர்வதராயன் என்பது மலையர்குலராயன் & மலைகளின் அரசகுலத்தவன் எனப்பொருள்படும்..
+++

மேலே "சுந்தரபாண்டிய பர்வதராயன்" எனப்பட்ட விவரம் மற்றொரு கல்வெட்டில் "சுந்தரபாண்டிய மலையராயன்" எனப்பட்டுள்ள விவரம்;

+++

பர்வதராஜகுலத்தின் மீனவர் பிரிவு என இன்றும் வாழும் செம்படவர் எனப்படும் சிவன்படவர் கல்வெட்டு_1..

++

பர்வதராஜகுல மீனவர்களான சிவன்படவர் கல்வெட்டு_2
+++

சிவன்படவர் செப்பேடு;

அஷ்ட(8) பர்வதங்களின் பெயர்களை கூறி உலகமாதா மலைமகளாம் பார்வதியை மகள் எனக்கூறி "ஆதியரசன்" என காஞ்சியில் தீட்சை செய்து வைக்கப்பட்ட விரிவான செப்பேடு இது தென்காசி பாண்டியரால் வழங்கப்பட்டது,
              ++++++++

எடப்பாடியில் வாழும் பர்வதராஜகுல மீனவர்கள் மலையரசி "அங்காளி" பிறந்த நாடான வாணகோப்பாடி, மலைநாடு எனப்படும் திருக்கோவிலூர்,விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி ஆகிய "மலையமான்" நாட்டை பூர்வீகமாக உடையவர்கள் என்றும் "மச்சகந்தி" எனப்படும் சத்யவதி விவரங்களுடனும் கூடிய விளக்கத்துடன் "உலகளந்தார் செப்பேடு"

@ஐயா அமரர் அரு.பரமசிவம் அவர்கள் வாயிலாக ஆவணம் இதழ்_17 ல் வெளியீடு..

++++++

இதுவரை இரண்டு செப்பேடுகளை பார்த்துள்ளோம் இது மூன்றாவது செப்பேடு;

"மலைகளிலே குடித்தனம் பன்னுகிற பெயர் போன செம்படவ சாதி"

இதன் வழி "செம்படவர்" இனம் மலையை பூர்வீகமாக கொண்ட ராஜகுலத்தின் வம்சாவழியாவார்கள் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளனர்,,
++++

கல்வெட்டு;

"மீனவன் மூவேந்த வேளான்" என பல ஓலைகளில்(கல்வெட்டு) பர்வதராஜகுல மீனவர் கையொப்பம் இட்டுள்ளனர்...
++++

கல்வெட்டு;

++++

கல்வெட்டு;

++++

கல்வெட்டு;

++++

மேலதிக விவரங்கள்;

கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலையமானின் நடுநாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் "மலையர்குல" முதல்வன் "பர்வதராஜனை" குல மூதாதையராக கொள்வது மரபு என்பதை இன்றைய "பார்கவகுலத்தாரின்" செப்பேடும் கூறும் விவரம்;
பார்கவகுலத்தாரின் குலப்புராணம்;

மலையமான்,சுருதிமான்,
நத்தமான் ஆகியோரின் குலமுதல்வன் "தெய்வீகன்" பர்வதராஜன் வழியினன் எனும் விவரம்,
இமவான் எனப்படும் மலையரையன் எனப்படும் "பர்வதராஜன்" தொடர்பாக பதிணென் புராணங்களில் ஒன்றான வாமண புராணத்தில் உள்ள தகவல்;
விஷ்ணு புராண தகவல்;
மாகாபலி வாணாதிராயர்களின் பிரபலமான அதிமுக்கிய குல பெயர் மலையர்குல ராயன் என்பதுபோல "மகாமேரு" & "ஜெயமேரு" என்பதும் சாசனங்களிலும் பதிவாகியுள்ளது "மேருமலை" இது அஷ்டபர்வதங்களில் ஒன்று,

+++++

இக்கட்டுறையின் ஆவணங்கள் வழி அறிவது 
"மலையமான்" நாடான நடுநாடு_மலைநாடு_மிலாடு எனப்படும் திருக்கோவிலூரை பூர்வீகமாக கொண்ட மலையர்குலத்தவர்களிடம் மிகத்தெளிவாக "பர்வதராஜகுலம்" எனும் விவரங்கள் வாழ்வியலாகவும் ஆவணமாகவும் காலம் காலமாக கடத்திவரப்பட்டுள்ளது,

இங்கு ஒரு முக்கியமான விடயம் நினைவில் கொள்ள வேண்டும் "பர்வதராஜா" எனில் "மலைகளின் அரசன்" என்பதே பொருளாகும் "மீனவர்" என பொருள் அல்ல மலையர்(பர்வத) குலத்தில் மீனவரும் ஒருவர் என்பதே வரலாறு வழி புரிந்துகொள்ளவேண்டிய அவ்விடயமாகும்...

மலையரையன் சாபம் பெற்று மீனவரானானதால் நாங்கள் அவ்வம்ச மீனவர் என்பதை வாழ்வியாலாக கொண்டுள்ள பர்வதராஜகுல மீனவர்கள்;👇👇
இதற்கு காரணம் தன்னை "குரு" வம்ச சேதிநாட்டு "சேதிராயர்" எனக்கூறிக்கொண்ட திருக்கோவிலூர் "மலையமான்" மகளே "மச்சகந்தி" எனும் "சத்யவதி" என்பது மகாபாரதம் கூறும் வரலாறு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

சேதிநாட்டு அரசன் மகளே 👆👆குருகுலத்தின் ராஜமாதா சத்யவதி என்பதற்கான மகாபாரத விவரம்,

++++

"அகமுடையார் அரன்" அமைப்பின் தலைவர் 
உயர்திரு பாலமுருகன் அகமுடையார் அவர்கள் சமய இலக்கியங்களில் அகமுடையார் எனும் நூல் விவரத்தை மேற்கோளாக காட்டி பதிந்துள்ள முகநூல் பதிவில் "பார்வதிதேவி" பிறந்த வம்சம் அகமுடையார் சமுதாயம் எனும் குறிப்பு;

"ராஜகுலம்" என்பது அகமுடையார் சமுதாய குலப்பெயர்களில் முக்கியமான ஒன்று..

+++

இங்கனமாக சங்க இலக்கியங்களில் & தமிழக கல்வெட்டுகளில் "மலையன்" என்றும் "மலையர்குல ராயன்" என்றும் கூறப்பட்ட திருக்கோவிலூரை ஆண்ட மகாபலி வாணர் வம்சத்தவரான "மலையமான்" மன்னர் குலத்தவரிடம் பர்வதராஜகுலம்(மலைகளின் ராஜகுலம்) என்ற அடையாளம் முக்கியமான பிரதானமான குல அடையாளமாக தொடர்ந்து வருவதையும் உறவுகள் அனைவரும் புரிந்துகொள்ளவும் இக்கட்டுறையின் வாயிலாக வேண்டுகிறேன்...

மலையர்குலத்தின் புகழ் ஓங்குக..

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன்
சுரேஷ் அகமுடையார்..
9500888335