தமிழக வரலாற்றில் மிக அதிக கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் உறுவானது "பல்லவர்" காலத்திற்கு அடுத்தபடியாக கிபி 800 க்கு பிறகு சோழர்காலத்தில் என்பது பலரும் அறிந்தது,
இக்காலகட்டங்களில் பாண்டியர்களும்,
சோழர்களும் பல கல்வெட்டுகளில் தங்களின் வம்சாவழி கொடிவழியை கல்வெட்டுகளாக பதிந்துள்ளனர்,
இதில் பாண்டியர்கள் அத்ரியை மூலமாக கொண்டு சந்திரகுல வரலாற்றை தொடங்கி புரூரவஸ், யயாதி என வம்சாவழியை பதிந்துள்ளது போல சோழர்கள் காசியபரை மூலமாக கொண்டு சூரியனில் தொடங்கி மனு,சிபி என வம்சாவழியை பதிந்துள்ளதுபோல வேந்தர்கால வரலாற்றில் அவர்களுக்கு நிகரான செல்வாக்கும்,கல்வெட்டுகளும் கொண்டுள்ள வாணாதிராயர்கள் தம்மை "அசுர குல ஷத்திரியர்" மாவலி அரசர் வாரிசாக சோழர்கால உதயேந்திரம் செப்பேட்டில் கூறியுள்ள கொடிவழி படம் 👇👇
சோழர்கால கல்வெட்டுகளில் வாணாதிராயர்கள் குருகுலராயர் என 100 க்கும் மேலான கல்வெட்டில் குறிக்கப்பட்டு இருப்பினும் வாணர்கள் தம்மை மாவலி அரசரை முன்னோர் எனும் மூலமாக செப்பேட்டில் குறித்துள்ளரே தவிற யயாதி மைந்தன் "புரு" வம்சா வழியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு கூறிக்கொள்ளவில்லை,
யயாதி மைந்தன் புரு வம்சத்தில் பிறந்தவர் பெரும்பாலானவர்கள்
அசுரகுலத்தவர் எனும் முறையிலும் "வாணாசுரன்"
மாவலி அசுரர் மகன் என்பதாலும் நாவலந்தீவின் முடிசூடும் உரிமையுடைய சந்திரகுல மரபான "குரு" மரபை குறிக்கும் விதமாக "குருகுலராயர்" என்ற பெயரில்
பல பல கல்வெட்டுகள் வாயிலாக "புரு" மரபின் முழு உரிமையும் அங்கீகாரமும் மாவலி
வாணாதிராயர்களுக்கு கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டியதும் முக்கிய விடயமாகும்,,
உதயேந்திரம் செப்பேட்டின் மாவலி வாணர் குல மன்னன் "விக்ரமாதித்யன்_2" வரையான முழு கொடிவழி விளக்கப்படம் கீழே;
படம்;1
கொடிவழியை பதியும் செப்பேடுகள் எங்கனம் இருக்கும் என்பதற்கான உதாரணமாக,
"சாளுக்கிய அரசின் கொடிவழி விளக்கங்களுடன்,
"சாளுக்கிய விக்ரமாதித்யன்_6" செப்பேடு விளக்கம் 👇👇
பிரம்மன் மகனும் முதல் மனுவான சுயவாம்பு மனுமுதல் அத்ரி மகரிஷி,புதன், புரூரவஸ்,என "சாளுக்கியர்" சந்திரகுலமாக தன் கொடிவழியை கூறியுள்ள செப்பேடு பக்கம்..
மூவேந்தர்கள் உட்பட அத்தனை அரகுலத்திற்கும் இங்கனமான வம்சாவழி & கொடிவழி கூறும் செப்பேடுகள் உண்டு ஆருயிர் குருகுல சொந்தங்களே,,
@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,,
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக