ஞாயிறு, 23 மே, 2021

சூரியகுல முத்தரையர் கல்வெட்டு & செப்பேடுகள்..

வரலாற்றிற்கு அடிப்படையே கல்வெட்டுகளும் அது தொடர்புடையதாக ஓர் சமூகம் கொண்டுள்ள வாழ்வியல் சான்றுகளுமே ஆகும்,,


வேந்தர் கால பல ஆயிரம் கல்வெட்டுகளில் மூவேந்தர்களும் தங்கள் கொடிவழி மரபை மிக அழகாக தங்களின் கோத்திரம் மூலமும் & புராண வழிமுறையில் தான் யார் என்னவென்பதையும் குல அடையாளங்களை பதிந்துவிட்டே சென்றுள்ளனர் தன் இனத்தின் பாதுகாப்பிற்காக..

இங்கனம் 
1.பாண்டியர்கள்,2.வேளீர்கள்,
3.மாவலி வாணர் குலம்,
4.வாணர் குல மலையர்கள், மிகத்தெளிவாக தங்களை சந்திரகுல மகாபாராத வரலாற்றில் தன் அடையாளங்களை கூறி பல்வேறு கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர்,,

அதே போல சோழர்கள் மிகத்தெளிவாக தங்களை "காசியபர் கோத்திரம்" எனவும் "சூரியகுலம்" எனவும் பல பல கல்வெட்டுகளில் ஆயிரம் ஆண்டிற்கு முன்னரே பதிந்துள்ளனர்..

இவற்றிற்கு பொருந்தும் வாழ்வியலும் & சான்றுகளும் நிகழ்கால நடைமுறையில் எவரிடத்தில் உள்ளது என்பதை வைத்தே ஒருவரின் குலத்தை தீர்மானிக்க இயலும்,

இங்கனம் சோழரின் சூரியகுல சான்றுடைய முத்தரையர் சமுதாய ஆவணங்கள் சிலவற்றை தொகுத்து கூறுவதே இக்கட்டுறையின் நோக்கம்..

சோழர்களின் முன்னவர் மூத்தவரான "செம்பியன்" எனப்படும் "சிபி" பற்றிய விஷ்ணுபுராண தகவல் கீழே 👇👇
சூரியகுல சோழ மரபில் ஆண் வாரிசில்லாது பல ஆயிரம் ஆண்டு முன்னரே சந்திரகுல யயாதி மன்னனின் 5 வாரிசுகளில் நான்ங்காவது வாரிசான "அனு" வழிமுறையில் வந்த "சிபி" சக்கரவர்த்தி விவரங்களையே மேல் படம் கூறுகிறது,

ஒரு அரசிற்கு(சூரிய) ஆண்வாரிசில்லாமல் பிறகுலத்தில்(சந்திர) இருந்து மன உறவில் ஒருவர் அக்குலத்தின் ஆட்சி பொருப்பை ஏற்று தொடர்ந்தாலும் மரபுப்படி அவ்வரசின் குலத்தையே தனது அடையாளமாக தொடர்வர்,

இதற்கு சமீபகால உதாரணம் சாளுக்கிய சோழர் எனப்படுவர் "சந்திரகுலத்தவரே" புரு மரபினர் ஆயினும் "சூரியகுல" சோழமரபில் ஆன் வாரிசாக முடிசூடிய பிறகும் கல்வெட்டுகளில் அவ்வரசகுல மரபை சூரியகுல அடையாளத்தில்தான் தொடர்ந்தனர்,,

இந்த முக்கிய பழமையான வரலாற்று குறிப்பையும் மனதில் நிருத்தி இக்கட்டுறையின் நாயகர்களான "சூரியகுல முத்தரையர்" சான்றுகளை வாசிக்க வேண்டுகிறோம்..

+++


ஆந்திராவின் மிகப்பழமையான 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு "காசிப கோத்திரம்" சோழர் குறிப்பை தரும் விவரத்தை ஐயா மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்,

மேலும் ஆந்திராவின் செய்தித்தாள்களும் இதனை வெளியிட்டுள்ளது,👇
                      👆👆
"எரிகல் முத்துராஜா தனஞ்செய வர்மா"எனும் விவரங்களை தருகிறது ஆந்திர பத்திரிக்கை செய்தி,,
                        👆👆
தமிழகத்தில் 9 ஆம் நூற்றாண்டு பழமையான புதுக்கோட்டை மாவட்ட திருமயம் கல்வெட்டு "அரிகுல கேசரி முத்தரையன்" என்ற நேரடிக் கல்வெட்டை கொண்டுள்ளது..
"அரிகுல கேசரி" என்பது சோழன் பெயராகும்..
"செம்பியன்" சிபி குலத்தவரின் பெயரே "மிலேச்சர்" என்பது அதே மிலேச்சர் குலம் என 12 ஆம் நூற்றாண்டில் கூறப்பட்ட "திருமங்கை ஆழ்வாருக்கு" இன்றும் விழா எடுத்த்து வருகின்ற &
தற்போதும் தஞ்சை,வல்லம்,திருச்சி 
என சோழ தேசத்தின் எல்லைகளுக்குள் இன்றும் பெரும்பாண்மையாகவும்,
சோழர் ஆட்சி பரவிய இடம் எங்கும் பரவலாக வாழ்ந்து வரும், இவ்வாதாரங்களுக்கு பொருந்தும் பேரரசர் பெரும்பிடுகு குலத்தவர்களான முத்தரையர் சமுதாய செப்பேடுகள் சிலவற்றையே இக்கட்டுறையில் காண உள்ளோம்..

+++++

செப்பேடு_1

செப்பேடு ஒன்றின் பத்து பக்கங்கள் மிகத்தெளிவாக சூரியகுல முத்தரையர் வரலாற்றை,

"பாண்டியன் படையை வெட்டி தலைகொண்டோர்"

"பாண்டிய ராசனுக்கு சம்பந்தி குடியோர்"

"சூரிய வம்சத்தார்"

என தெளிவுபடுத்துகிறது..

ஆவணம் இதழ் 22 லிருந்து இச்செப்பேட்டை பகிர்கிறேன்..

+++

செப்பேடு இரண்டாம் பகுதியாக
காண உள்ளது மொத்தம் 8 செப்பேடுகள்;

"ஆவணம் இதழ் 3" ல் நாம் காணும் 8 செப்பேடுகளில் 7 செப்பேடு "சூரியகுல முத்தரையர்களை"
குறிப்பிடுவதோடு இன்றைய சோழ நாட்டில் சோழரை உரிமை கோரும் மற்றொரு தமிழ் குடியான "அகலிகை குல கள்ளரை" சூரியகுல அடையாளமுடன் இதே செப்பேடுகள் பதிவு செய்யவில்லை என்பதை "தமிழ்சாதி" உறவுகள் அனைவரும் கவணத்தில் கொள்ள வேண்டுகிறேன்..

மேலும் சோழருக்கும் நாககன்னிகைக்கும் பிற்காலத்தில் பிறந்த "தொண்டைமான்" அடையாளமுடன் சோழநாட்டில் வாழ்ந்து வரும் "கள்ளர்" உறவுகள் தம்மை "அகலிகை" குலம் எனவும் "இந்திரகுலம்" எனவும்தான் தமது 25 க்கும் மேலான செப்பேடு & கல்வெட்டு,நிலப்பத்திரங்களில் வரையும் பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறவுகள் நினைவில் கொள்ள வேண்டும்..

+++

வலையர்_முத்தரையர் கல்வெட்டு_1
கிபி 13 ஆம் நூற்றாண்டு,,

"வலையரில் எதிர்முனை கண்ட முத்தரையன்"

+++

கல்வெட்டு_2,

பேரரசர் பெரும்பிடுகு இனம் மிகத்தெளிவாக "மீனவர்" எனப்படுகிறர்.. இக்கல்வெட்டு பாண்டியன் கல்வெட்டு இல்லை எனவே மீனவன் என்பதை பாண்டியன் பெயர் எனக்கூறி பெரும்பிடுகு குலத்தை மீனவரினம் இல்லை எனக்கூற இயலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...


+++

கல்வெட்டு_3,

காவிரி தென்கரை சோழநாட்டு பெரும்பிடுகு சிற்றரச குலத்துடன் அதே சோழநாட்டு இருக்குவேள் அரச குடும்பம் மன உறவில் இருந்த கல்வெட்டு..
பின்குறிப்பு; கொடும்பாளூர் இருக்குவேள் தம்மை யதுகுலமாக கல்வெட்டில் பதிவு செய்துள்ளதை நினைவில் கொள்ளனும்,ஏனெனில் இது அரசகுல திருமணம் அன்றி ஒரே இனம் என்பதால் அல்ல...

++++

கல்வெட்டு_4,

+++

மேலதிக செப்பேடுகளும் எங்கள் வரலாற்று பயணத்தில் & வாசிப்பில் கிடைப்பின் இதே கட்டுறையில் இனைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொண்டு இக்கட்டுறையை நிறைவு செய்கிறேன்,,

சோழநாட்டின் மன்னின் மைந்தர்கள் பேரரசர் பெரும்பிடுகு குலத்தாரின் புகழ் ஓங்குக..

+++

       "சந்திர வம்ச பூபதி"
@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
Mobile_9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக