திங்கள், 24 மே, 2021

மகதராயர் கல்வெட்டுகள்

குருகுலராயன் அகமுடையார் இனத்திற்கான வரலாற்று கல்வெட்டுகளின் மூலங்களுக்கு அடிப்படையே "சந்திரகுல" வரலாற்றை பேசும் நாவலந்தீவின் மகாபுராணமான "மகாபாரதமே" ஆகும்..

நம்மினத்தின் ஓர் கல்வெட்டை புரிவதற்கு முதலில் அப்பெயர் தொடர்பான காரண மூலங்கள் அறிந்திருக்கவேண்டியது மிக மிக அவசியம்,

இக்கட்டுறை "மகதராயர்" என்பது தொடர்பாக என்பதால் அப்பெயரின் காரண மூலத்தை முன்னுறையாக பார்த்துவிட்டு கல்வெட்டுகளை தொடர்வோம்,

தமிழகத்தில் "மகதநாடு" என்பது இன்றைய "சேலம்" மாவட்ட தலைவாசல் வட்டம் அருகாமை ஆறகளூரை தலைநகராக கொண்ட பகுதிகளாகும்..

வேந்தர்கால கல்வெட்டுகளில் "மிலாடு எனப்படும் சேதி நாடு எனப்படும் மலைநாட்டின்" ஒரு பகுதியாகவும் "மகதம்" கூறப்படுகிறது..

தமிழக இலக்கியத்தில் 11 ஆம் நூற்றாண்டு பெருந்தொகையில் "மகதம்" தொடர்பான விவரங்கள் படம் கீழே;👇👇
"வாரும் ஒத்தகுடி நீருநாமும்
மகதேசன் ஆறை நகர் காவலன்
வாணபூபதி மகிழ்ந் தளிக்க மிகு
வரிசை பெற்றுவரு புலவன் யான்"  
@ பெருந்தொகை(1192) 

ஆறை எனப்படும் ஆறகளூர் காவலன் மகதேசனான வாணபூபதி என மிக அழகாக பாடலாக விளக்கும் இவ்விவரங்கள் கெடிலக்கரை நாகரீகம் எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. 
( மேல் படம் 👆)

சரி 
"குருகுலராயன் அகமுடையாருக்கும்" "மகதநாட்டுக்கும்" என்ன தொடர்பு என அறிய நாம் முதலில் மகாபாரதத்தில் "மகதம்" என்பது குரு வம்சத்தார் ஆண்ட நாடா..? அல்லது யதுகுலத்தார் ஆண்ட நாடா..? என்பதை அறிய வேண்டும் அல்லவா..?

அதாவது யயாதி மன்னரின் வாரிசுகளில் "யது" குலத்தவர் நாட்டை அல்லது "குரு" குலத்தவர் நாட்டை இவ்விரண்டில் எதை தனது அடையளமாக ஓர் அரசர் கூறியுள்ளனர் என்பதை வைத்து இதனை நாம் கண்டரிய இயலும்,

"மகதம்" என்பதனை தோற்றுவித்த மன்னன் "அசுரன்" ஜராசந்தன் எனவும் அவனது நாடு "குருவம்சத்தார்" நாடு எனவும் மகாபாரதம் தெளிவுபட கூறியுள்ளது..

கொடிவழி படம் கீழே;👇👇
1.நாகன் நகுஷன் மகன் யயாதி,
2.யயாதி மகன் புரு,
3.புரு வம்ச நாடு குருநாடு,
4.குருவம்ச சேதிநாட்டு மன்னன் உபரிசரவசு,
5.உபரிசரவசு வாரிசுகள் 7 பேரில் ஒருவர் "மகதை" மன்னர் ஜராசந்தன்,

மகாபாரதம் கூறும் இவ்விரங்களை அதனை "பண்டைய இந்திய வரலாறு" எனும் பிரபல ஆங்கில நூலாக மொழிபெயர்த்த ஜேபி மிட்டல் அவர்கள் கூறியுள்ள படம் கீழே 👇👇

எனவே தமிழக கல்வெட்டுகளில் மகதராயர் எனப்படுபவர் "குருகுலராயர் வம்சம்"
"சேதிராய மன்னன் மகன்" "மகதராயர்" என்பதை எவறும் எளிமையாக புரிந்துகொள்ள இயலும்,,

அதே தமிழக கல்வெட்டுகளில் "குருகுலராயர்" எனப்படுவது தென்பெண்ணை வடக்கு மண்டல வாணகோப்பாடி,
பெரும்பாணப்பாடி எனப்படும் வாணபுரத்து வாணாதிராயர்கள்,

"சேதிராயர்" எனப்படுவது தென்பெண்ணை தெற்கு மிலாடு எனப்படும் சேதிநாட்டு மலையமான்கள்,

"மகதராயர்" எனப்படுவது "குரு" வம்சத்தின் சேதிகுலத்தின் திருமகன் மகதை நாட்டு வாணகோவரையர்கள்..

இதுவரையான முன்னுறை விளக்கங்கள் இக்கட்டுறையின் தலைப்பான "மகதராயர்" என்பவரின் "கொடிவழி" மரபை அறிய போதுமானது என்பதால் தமிழக "மகதம்" கல்வெட்டுகளை காணலாம்...

           +++++++++

முதலில் மகதம் பகுதி தமிழகத்தில் எதுவென்பதை கூறும் சில கல்வெட்டு சான்றுகளை காண்போம்;👇👇

கல்வெட்டின் 4&5 வரிகளை கவணிக்க, "பெண்ணை தென்கரை மகதை மண்டலம் மிலாடாகிய"
"மிலாடு நாட்டு மகதை மண்டலத்து ஆற்றூர் கூற்றம்"
"மிலாடாகிய மகதை மண்டலம் ஆற்றூர் கூற்றம்"

மகதை பகுதி எதுவென்பதற்கு போதுமான சான்றுகளை பார்த்துவிட்டதால் இனி 
மகதராயர் வாணர் கல்வெட்டுகளை காண்போம்,, 
          ++++++++++++++

கல்வெட்டு_1

"வாணகோவரையரான ராஜராஜ மகதை நாடழ்வான்"

பெரம்பலூர் வட்டம் திருமாந்துரை கோவில் கல்வெட்டு👇👇
++

கல்வெட்டு_2

மகதராயன் வாணகோவரையன் ஆனையான இக்கல்வெட்டில் அவரால் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவரின் பெயரினாலேயேயான "மகதேசன் கோலாலே" அளந்து அவ்வாணகோவரைய மன்னரால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது.. 👇👇
+++

கல்வெட்டு_3
மகதேசன்,மகதை பெருமாள் என வாணரை புகழும் கல்வெட்டு..

                   +++

கல்வெட்டு_4
பெண்ணை தென்கை மிலாடாகிய மகதை மண்டலம் என்ற விவரமும் கூறப்பட்டு கல்வெட்டின் 15 வது வரியில் "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் உலகங்காத்த வாணகோவரையன்"

                  ++++++++

கல்வெட்டு_5

"இராஜராஜ மகதனான வாணகோவரையன்"

+++++++
கல்வெட்டு_6,

"ஆறகளூர் உடையார் ஸ்ரீராசராசதேவன் பொன்பரப்பினான மகதை பெருமாள்"
+++++

கல்வெட்டு_7,
+++

கல்வெட்டு_8,
++

கல்வெட்டு_9,
++++

கல்வெட்டு_10,
+++

கல்வெட்டு_11,
+++

கல்வெட்டு_12
+++

கல்வெட்டு_13,
+++

கல்வெட்டு_14,
+++

கல்வெட்டு_15,
+++

கல்வெட்டு_16,
+++

கல்வெட்டு_17,
+++

கல்வெட்டு_18,
+++

கல்வெட்டு_19,

+++

கல்வெட்டு_20,

+++

கல்வெட்டு_21,

"ஆறகளூருடைய வாணகோவரையன்" பல்லவர் கல்வெட்டு..

+++

கல்வெட்டு_22,

+++

கல்வெட்டு_23,

+++

கல்வெட்டு_24,

+++

கல்வெட்டு_25,

+++

கல்வெட்டு_26,

+++

கல்வெட்டு_27,

+++

கல்வெட்டு_28,

+++

கல்வெட்டு_29,

+++

கல்வெட்டு_30,

+++

கல்வெட்டு_31,

+++

கல்வெட்டு_32,

+++

கல்வெட்டு_33

+++

கல்வெட்டு_34,

+++

இதே போல "மகதம்" தொடர்பான மிகமுக்கிய கல்வெட்டு ஆவணங்கள் இக்கட்டுறையில் தொடர்ச்சியாக இனைக்கப்படும்..

கட்டுறை தொடரும்..

+++

@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக