நிஷாதராயர்கள் பற்றிய கல்வெட்டுகளை காணும் முன்னர் "நிஷாதர்" பற்றிய அடிப்படை விவரங்களை அறிய வேண்டியது மிக அவசியமாகும்..
ஏனெனில் மூவேந்தரும் குரு வம்சத்தவர்களே என்கிறது மகாபாரதம்.. அதில் "கேரளன்" எனப்படுகிறார் சேரர் அப்பெயரில் அதாவது "கேரளன் நிஷாதராயன்" என தமிழ்நாட்டில் கல்வெட்டுகள் உள்ளது..
மேல் உள்ள மகாபாரதம் கூறும் மூவேந்தர் விடயத்திற்கு ஆதாரமாக பாண்டியனும் தன் மரபை மகாபாரதம் வழி வம்சாவழி கல்வெட்டாக பதிந்துள்ளான்;
எனவே மேலே உள்ள மகாபாரத படத்தில் சேரர் "கேரளன்" எனப்படுகிறார் அல்லவா அங்கனம் தமிழகத்தில் கல்வெட்டில் கூறப்பட்டது யார் என அறிந்துகொண்டால் சேரர் யார் என்பதை எளிமையாக அறியந்துவிட முடியும்..
கேரளர்களை(சேரர்) தரிசிப்போம் வாருங்கள்...
******************************
நாம் தற்போது இருப்பது "சூரியன்" மகன் "வைவஸ்த" மனுவின் 7 வது மன்வந்திரத்தில் வாழ்கிறோம்..
மன்வந்திரங்கள் மொத்தம் 14 என்பதையும் அதில் முதல் 6 மன்வந்திர காலம்(உலகம்) அழிந்து தற்போது நடப்பது 7 வது மன்வந்திரம் என்கிறது நமது நாவலந்தீவின் புராணங்கள் அனைத்தும்..
இதுவரையான 7 மன்வந்திர பட்டியல்;👇👇
7 வது மனுவான "வைவஸ்தன்" மட்டுமே "சூரியன் மகன்"
இதுவும் நமது அனைத்து புராணங்களும் தரும் தகவலே..
+++++
மொத்தம் 14 மன்வந்திரங்களின் பட்டியல்;👇👇அதில் 6 மன்வந்திர காலங்கள் அழிந்து 7 வது மன்வந்திரம் நடைபெறுகிறது தற்போது என்பதை மறவாதீர் உறவுகளே..
++++++++
அருமை உறவினர் திரு
"யதுகுல யாதவன்" எனப்படும் Vasanth Yaduvanshi அவர்களும் 20_டிசம்பர்_2020 அன்று இவ்விவரங்களை பதிவிட்டுள்ளார்.. 👇👇
👆👆கவணிக்க "நிஷாதர்கள்" என்போர் முதல் மனுவான "சுவயாம்பு" மனுவின் மகன் உத்தனபாதா வழித்தோன்றலான துருவன் வழிவந்த "வேணன்" வம்சம் "நிஷாதர்" என்கிறார்..
அதாவது 7 வது மன்வந்திர(உலகம்) "சூரியன் மகன் வைவஸ்தன்" வழித்தோன்றல் அல்ல "நிஷாதர்கள்" என்போர் மாறாக பிரம்மாவின் மகனான முதல் மனு "சுயவாம்பு மனுவின்" வழித்தோன்றல் என்கிறார்..
அருமை உறவினரின் தகவல்களை "விஷ்ணு புராணம்" துருவ சரித்திரம் பகுதியும் உறுதிசெய்கிறது.. 👇👇
அதாவது முதல் 6 மன்வந்திரங்கள் கால எல்லையில்(முடிவில்) உலகம் அழிந்துபட்ட போதும் முதல் மனு வழித்தோன்றலான "நிஷாதர்கள்" அழியவில்லை என்றால் மட்டுமே 7 வது மன்வந்திரத்திற்கு பிறகான இன்றும் "நிஷாதர்கள்" இன்றும் வாழ்ந்து வருகிறர் எனவும் அங்கனம் கல்வெட்டுகள் உள்ளன எனவும் இயற்கையாக புரியமுடிகிறது அல்லவா..?
++++++
"நிஷாதர்கள்" எனில் விஷ்ணு புராணம் உட்பட அனைத்து புராணங்களும் கூறும் தகவலின் படி "விந்திய பர்வத" வாசிகளாக மலையிலும் & சமவெளி ஆற்றங்கறைகளில் மீன்பிடித்தும் வாழ்பவர்கள் என்கிறது..
மேலுள்ள விஷ்ணு புராண படமும் 👆👆
மற்றும் பதிணென் புராணங்களும்..
விந்திய பர்வதர்களின் மற்றொரு பெயர் "வித்யாதரர்" alias விச்சாதரர் இவை அசுர குலத்தவர் பெயராக கல்வெட்டுகளில் பயின்று வருகிறது..
உதாரணமாக
"வாண வித்யாதரர்"
"வாண விச்சாதிரர்" என பல கல்வெட்டுகள் உண்டு
"அசுர" குலத்திற்கு..
தமிழக தொல்லியல்துறை கல்வெட்டு ஆவணத்தில்
"ஸ்ரீ உடையான் வாண விச்சாதரர்"
இதே கல்வெட்டு
ஆவணம் இதழ்_16 ல் வந்துள்ளது அதிலும்
"ஸ்ரீ உடையான் வாண விச்சாதிரர்"
வித்யாதரர் & விச்சாதரர் என்பது அஷ்ட(8) பர்வதங்களில் "விந்திய" பர்வதவாசிகள் என்பதை குறிக்கும் பெயராகும்..
மேலே விஷ்ணு புராண விவரங்களில் "நிஷாதர்" "விந்திய" பர்வதவாசிகளாயினர் எனும் விவரம் கண்டோம் அல்லவா அதையும் நினைவில் கொள்க...
+++++
நிஷாதர்களில் பிரபலமானவர்கள் பட்டியல்;
1.கம்பரால் புகழப்பட்ட,சூரியகுல இராமனுக்கு ஆற்றை கடக்க உதவிய கங்கை துறைவன் குகன்,
2.வில்வித்தையில் சிறந்த ஏகலைவன்,
3.புகழ்பெற்ற காதல் கதையான "நளதமயந்தி" நாயகன் "நளச்சக்கரவர்த்தி"
மகாபாரத்தின் வன பருவம் அத்தியாயம் 53 முதல் 78 முடிய நளன் - தமயந்தி தம்பதியரின் காதல், திருமணம், சூதாட்டம், தமயந்தியை பிரிதல் போன்ற சோதனைகளுக்குப் பின் மீண்டும் இருவரும் இணைவது குறித்து விரிவாக விளக்கப்படுகிறது.
இவர்கள் யாவரும் இராமாயன & மகாபாரத கால புகழ்பெற்ற "நிஷாதர்" இன மன்னர்களாவர்...
++++
இதுவரையான முன்னுரை சான்றுகளின் படி "நிஷாதர்" என்பவர்கள் 7 வது மன்வந்திர கால "சூரியகுல வைவஸ்தன்" பிறகான தோற்றம் பெற்ற வம்சத்தார் இல்லை என்பதும்,முதல் மன்வந்திர கால பிரம்மன் வழி "துருவன்" & "வேணன்" வழியினர் என்பதையும் தெளிவுபட அறியமுடிகிறது அல்லவா..
இதன்படி "நிஷாதர்" என்போர் சூரியகுலத்தவர் இல்லை என்பதையும்,
தெளிவுபடுத்திக்கொண்டு,
"நிஷாதர்களின்" தூய தமிழ் பெயர் "எயினர்" என்பதையும் புரிந்துகொண்டு வரிசையாக கல்வெட்டுகளை காண்போம்..
👇👇
++++++++
கல்வெட்டு_1
Inscription Number 161
திருமயம் தாலுகா இடையாத்தூர் சுவயம்பிரகாமூர்த்தி கோவில்;
"திருக்கொடுங்குன்றமுடையான் நிஷாதராயன் கேரளன்"
எனும் விவரங்களை கூறுகிறது..
ஆண்டு_கிபி_1206,
கல்வெட்டு_2
Inscriptions No_174,
ஆலங்குடி தாலுகா திருவரங்குலம் கல்வெட்டு,
"நிஷாதராஜர் கேரளான்டார்" விவரங்களை தரும் கல்வெட்டு,,
ஆண்டு_கிபி_1217,
கல்வெட்டு_3
Inscriptions No_168
திருமயம் தாலுகா சாத்தனூர் கல்வெட்டு;
"கேரளன் நிஷாதராஜன்" விரங்களை கூறுகிறது..
ஆண்டு_கிபி_1212,
+++
இதுவரை பார்த்துள்ள மூன்று கல்வெட்டுகளுமே "கேரளன் நிஷாதராஜன்" விவரங்களை தந்துள்ளதில் "கேரளன்" என்பது வேந்தர் கால நிகண்டு சான்றுகளின்படியும் & மகாபாரதம் கூறும் மூவேந்தவர் விவரம்படியும் "சேர" அரச மரபை குறிக்கும் சிறப்பு பெயராகும்..
👇👇
கல்வெட்டு_4
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை சிவன்கோவில் ஆண்டு_1158,
"பாண்டிநாட்டு புறமலை பொன்னமராவதி கேரளன் மங்கலதேவனான நிஷதராஜன்"
கல்வெட்டு_5
சிவகங்கை மாவட்ட நெற்குப்பை சிவன் கோவில்,
கல்வெட்டு_6
சிவகங்கை மாவட்ட நெற்குப்பை சிவன்கோவில் ஆண்டு_கிபி 1232,
+++++
இதுவரையாக 6 கல்வெட்டுகளை இக்கட்டுறையில் பார்த்துள்ளோம் அனைத்தும் சோழரின் ஆட்சிப்பகுதி எல்லையான "வடவெள்ளாற்றுக்கு"
தெற்கில்
"பாண்டிய நாட்டு பகுதி" கல்வெட்டு என்பதையும் "கேரளன்" எனவே "நிஷாதர்" தம்மை அடையாளப்படுத்தியுள்ளர் என்பதையும்,
மேலும் "திருக்கொடுங்குன்றம் உடையான்" என்றுள்ளதையும் நிணைவில் கொள்க..
ஏனெனில் "திருக்கொடுங்குன்றம்" என்பது சங்க இலக்கியம் போற்றும் "வேள்பாரியின்" பறம்புநாடாகும்..
++++++++
கல்வெட்டு_7
வரி 6 ல் "நிஷதராஜ பேரரையன்"
கல்வெட்டு_8
"புறமலை நாடன் திருக்கொடுங்குன்றமுடையான் நிஷாதராயன்"
கல்வெட்டு_9
"ஸ்ரீவரங்க தேவர்க்கு காரியம் செய்யும் அதிகாரி நிஷாதராஜர்"
கல்வெட்டு_10,
"கேரளனான நிஷாதராஜன்"
கல்வெட்டு_11,
"மலைநாட்டு வாழ் வணிகந் ஆதிராமந் கேரளந்"
மலை நாட்டினரை மட்டுமே "கேரளந்" என்பது மரபு..
தமிழக அரசகால கல்வெட்டுகளில் மலைநாடு எனப்பட்டது நடுநாட்டை மட்டுமே மழநாடும் மலைநாடே..
+++
கல்வெட்டு_12,
"நிஷாதராஜன்"என மட்டுமல்லாமல் "நிஷாதராஜன் வேளான்" எனவும் கூறப்படும் கல்வெட்டு..
கல்வெட்டு_13,
"வேட்டுவதியரையர் வாணகோவரையர்"
கல்வெட்டு_14,
"வேட்டுவன் ஆதிச்சபிடாரி"
கல்வெட்டு_15,
கல்வெட்டு_16,
"நிஷாதராஜன்"
கல்வெட்டு_17,
"கேரளனான நிஷாதராஜன்"
கல்வெட்டு_18,
"கேரளனான நிஷாதராஜன்"
கல்வெட்டு_19,
கல்வெட்டு_20,
"கேரளனான நிஷாதராஜன்"
கல்வெட்டு_21,
கல்வெட்டு_22&23&24&25
"கேரளனான நிஷாதராஜன்"
கல்வெட்டு_27,
"கேரளன் நிஷாதராஜன்"
கல்வெட்டு_28,
கல்வெட்டு_29,
கல்வெட்டு_30,
"கேரளன் மங்கலதேவனான நிஷாதராஜன்"
கல்வெட்டு_31,
"கேரளன் நிஷாதராஜன்"
***
கல்வெட்டு_32,
"கேரளன் நிஷாதராஜன்"
கல்வெட்டு_33,
கல்வெட்டு_34,
இக்கட்டுறையின் முன்னுறையில் "நிஷாதராயர்கள்" சூரியகுலம் இல்லை என்பதற்கான புராண விளக்கங்களையும் கல்வெட்டுகளில்
"கேரளன்" எனவும் "திருக்கொடுங்குன்றமுடையார்" என "பறம்பு" நாட்டையும்
அடையாளப்படுத்தியுள்ள விவரங்களையும் பார்த்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.. மேலும் மகாபாரதம் சேரரை "கேரளன்" என்பதையும் நினைவில் கொள்க;
++++
கட்டுறையில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளை கருத்தில் கொண்டு "கேரளன்" விவரக்குறிப்பு;
கேரளன் என்பது நிகண்டுகள் கூறும் "சேரர்" பெயர் என மேலே நிகண்டு படம் பார்த்தோம் இங்கு மேலதிக தகவல்கள் சிலவற்றை காணலாம்;
TNPSC குரூப்_4 தேர்விற்கான கேள்விகளில் ஒன்று "கேரளபுத்திரர் யார்" என்பது,
இக்கேள்விக்கான காரணம் அசோக பேரரசின் கல்வெட்டுகளில் சோழர்,பாண்டியருடன் "கேரளர்" பெயர் கூறப்பட்டிருப்பதே ஆகும்,
பதில்களுக்கான ஆப்சனில் "சேரர்" உள்ளதை கவணிக்க..
+++
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கீழே;
"கேரள வம்ச நிர்மூலந்" எனில் சேரரை வென்றவன்,
👇👇
இக்கல்வெட்டில் மிகத்தெளிவாக தனது ஆட்சியில் சேரரை வென்றதை "கேரளவம்ச நிர்மூலன்" எனக்குறித்துள்ளான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்..
+++
முதலாம் ராஜேந்திரனின் பல கல்வெட்டுகளில் வடமொழி மெய்கீர்த்தியில் "எறிபடை கேரளன்" என கூறப்பட்டது தமிழ் மெய்கீர்த்தியில் "எறிபடை சேரலன்" எனப்பட்ட சான்று..
++++
+++
சேரர் தொண்மை எனும் நூலை படைத்த பெருமதிப்பிற்குறிய வரலாற்று ஆசிரியர் ஐயா ஔவை துரைசாமிபிள்ளை அவர்களின் நூலில் "கேரளன்" குறிப்புகள்..
👆👆
மீண்டும் ஒருமுறை நிகண்டு படம் பதிந்து "கேரளன்" என்பதற்கு போதுமான விவரங்களுடன் இக்கட்டுறையை முடிக்கிறேன்..++++++
மூவேந்தரில் "கேரளன்" எனப்பட்டுள்ள சேரர் பற்றிய விவரங்களை கட்டுரையை முழுவதும் வாசித்தவர்கள் அறிந்திருப்பீர் என நம்புகிறோம்..
மேலதிக "நிஷாதராயர்" கல்வெட்டுகள் கிடைக்கப்பெறின் இக்கட்டுறையில் இனைக்கப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்..
நன்றி,நன்றி,நன்றி..
************************************************************************************
@டெல்டா_VKGN_குருகுலராயன்
சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக