ஞாயிறு, 9 மே, 2021

குருகுலராயர்களே இருங்கோளர்கள் கல்வெட்டு சான்று..

தமிழகம் முழுவதும் சூரியகுல சோழர் ஆட்சிப்பகுதியாக மாறிய காலங்களில் தமிழகத்தின் பகுதிவாரியான சிற்றரரசு பலர் தங்களின் சந்திரகுல வரலாற்று அடையாளங்களை ஏதேனும் ஒரு சிறப்பு பெயர் மூலம் தற்காத்துக்கொண்டு அதை கல்வெட்டுகளிலும் பதிவு செய்துவிட்டே சென்றுள்ளனர் இதனை வேந்தர்களும் அனுமதித்துள்ளனர்,

இங்கனம் வடவெள்ளாற்றிற்கும்,
தென்வெள்ளாற்றிற்கும் 
இடைப்பட்ட நிலமானது பழமையான இருங்கோவேள் நாடு என்பது உலகம் அறிந்தது,

மும்முடி சோழராக பட்டம் சூடி சூரியகுல சோழர்கள் 
தென்னிந்தியாவை ஆண்டபோதும்
இருவெள்ளாற்றிற்கும் 
இடைப்பட்ட நிலத்தின் பழம்குடிகளான குருகுல(அசுர) மரபினர் தங்கள் நாட்டின் அடையாளத்தை பெயர்களின் வழியாக கடத்தியே வந்தனர்,

இருவெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட நில வரைபடம் கீழே;
கல்வெட்டு;1,
திருவையாறு என்பது இருவெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி இக்கல்வெட்டு "திருவையாறு உடையான் வில்லி மகதராயரான இருங்கோளனேன்" என்கிறது,,

கல்வெட்டு_2;
திருவையாறு அருகாமை ஆற்காடு கிராம பெயருடன் கிழான் அடைமொழியுடன் வாணாதிராயனை குறிப்படும் கல்வெட்டு 👇👇

கல்வெட்டு_3;

மகதராயர் என்பது குருகுலத்தவர் பெயர் என்பதற்கு கீழ்கானும் அழகர்கோவில் கல்வெட்டு தகவல் உதவும் "மகதநாயனார் பராக்கிரமபாண்டிய மாவலி வாணாதிராயர்"

மகதநாடு குருநாட்டின் ஓர் அங்கமானதாகும்..
கல்வெட்டு_4,

மகநாட்டின் தலைநகர் ஆறகளூரை குறிப்பிட்டு மகதை நாடாழ்வான் எனும் கல்வெட்டு,

++++
கல்வெட்டு_5
இருவெள்ளாற்றின் இடைப்பட்ட பகுதியில் உள்ள விளந்தை எனும் ஊரை குறிப்பிட்டு உடன் துவாரபதி என்றும் கூறப்பட்டு வலங்கை மீகாமன் வாணகோவரையன் எனக்கூறும் பெண்ணாடம் கல்வெட்டு..
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை சோழர்கால கல்வெட்டுகளில் இருங்கோளப்பாடி நாட்டு விளந்தை கூற்றம் எனப்படுவது முக்கிய தகவலாகும்..
(படத்தை சூம் செய்து காண்க)
+++

கல்வெட்டு_6

"வீரசோழதேவ இருங்கோளசநியன் alias வாணராயர்"
+++

6 கல்வெட்டுகளின் வழியாக அறிவது இருவெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட பகுதியை சேர்ந்த குருகுலத்தவர்கள்(அசுர) தங்களின் நாட்டு அடையாளமாக இருங்கோளப்பாடியையும்,
விளந்தையும்
மகதம் என சந்திரகுல நாட்டை அடையாளமாக பிரதானப்படுத்தினரே தவிற சூரியகுல சோழநாட்டினராக தம்மை அடையளப்படுத்திக் கொள்ளவில்லை..

திதியின் அசுரகுலத்திற்கு நேர் எதிர் அரசகுலம் அதிதியின் சூரியகுலம் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..
+++

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக