கடந்த காலங்களில் சமுதாயம் தொடர்பான பாதுகாப்பிற்காக சமுதாய பெரியோர்கள் முன்னோர்கள் எழுதிய முக்கிய கடிதங்களை தொகுப்பது இக்கட்டுறை நோக்கமாகும்...
தென்னிந்திய அகமுடையார் மாநாடு மலர்;
அகமுடையார் அரசானை Go No 1564 July_30_1985 க்காக நன்றி கூறி பிரசுறிக்கப்பட்டது;
அகமுடையார் அரசானை தொடர்பாக அம்பா சங்கர் கமிஷனிடம்; ராமசாமி சேர்வை & பாண்டியன் சேர்வை..
16_11_83
நாம் எல்லாம் ஒன்று என முக்குல நாடகமாடும் போலிகளான ரவிகுல மறவர்கள் உண்மை முகம்;
தேவர் அரசானையை எதிர்த்து தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதிய அகலிகை குல கள்ளர் மானஸ்தர்கள்,
+++
தேவர் பேரவைக்கு தமிழ்நாடு அகமுடையார் முன்னேற்ற சங்கம் எழுதிய கடிதம்...
தேவர் அரசானை சாத்தியமில்லாதது என்ற விளக்கம்..
++++
டெல்டா நாடிமுத்துபிள்ளை ஐயா அவர்கள் 1945 ல் முக்குலத்தோர் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து "தென்னிந்திய அகம்படியார் சங்கதலைவர்" எனும் முறையில் எழுதிய அரசாங்கத்திற்கு ஆட்சேபனையையும் கூறிய கடிதம்;
முக்குலத்தோர் (தேவரினம்) என்ற கோரிக்கைக்கு எதிராக 1945 ஆம் ஆண்டு,
சென்னை மாகாண அகம்படியர் மகாஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் வை.நாடிமுத்து பிள்ளை EX.M.L.A., அவர்கள் அளித்த ஆட்சேபனை மனுவின் தமிழாக்கம்.
"சந்திர விலாஸ் பட்டுக்கோட்டை.
15 நவம்பர், 1945
வை.நாடிமுத்து பிள்ளை, M.L.A.,
தலைவர்,ஜில்லா போர்டு, தஞ்சாவூர்.
தலைவர்,மாகாண அகம்படியர் மகாஜன சங்கம்.
பெறுநர்,
அரசு செயலர்,
வளர்ச்சித் துறை,
மெட்ராஸ் அரசாங்கம்,
மெட்ராஸ்.
ஐயா,
முக்குலத்தோர் சங்கச் செயலர் அவர்கள் கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் ஆகிய மூன்று இனத்தவரையும் சேர்த்து "முக்குலத்தோர்" என ஒரே இனமாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளதாகவும், அதற்கு ஏதும் ஆட்சேபனை இருப்பின் தெரியப்படுத்தவும் என்று தாங்கள் செய்தி ஊடகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பொது மக்களுக்குத் தெரியப்படுத்தயுள்ளீர்கள்.
எங்களது மாகாண அகம்படியர் சங்கத்துடன் இணைந்த பல்வேறு அகம்படிய கிளைச் சங்கங்கள் மேற்படி கோரிக்கையை ஏற்கவில்லை.என்னை அவர்களின் பிரதிநிதியாக அங்கீகரித்து,மேற்படி கோரிக்கையை ஆட்சேபிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே மேற்கூறிய மூன்று சமூகத்தினரும் இப்போது உள்ளது போலவே தனித்தனியாக கள்ளர், மறவர்,அகம்படியர் என தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எங்கள் அகம்படியர் சங்கங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
"இப்படிக்கு"
வை.நாடிமுத்து பிள்ளை..
தென்மாவட்ட அகமுடையார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கமுதி நடராசன் சேர்வை ஐயா அவர்களின் சிறப்பான விளக்கம்...
எஸ்.ராமசாமி சேர்வை அவர்கள் அம்பாசங்கர் கமிஷனிடம் வாதிட்டு தனித்தன்மையை காக்க "முக்குலத்தோர்" என்ற சொல்லையே நீக்கியதை பெருமையுடன் கூறியுள்ள விவரம்...
++++++
திரு நாராயனசாமி அகம்படியார் கடிதத்தில் பச்சையப்ப முதலியார் பற்றிய விவரம்..
ஆண்டு_1930
23-12-1930 ஆம் ஆண்டு,
மதுரை கோரிப்பாளையம்
அகம்படியர் சங்கத்தின் சார்பாக,
வீரமிகு V.நாராயணசாமி அகம்படியர் அவர்கள்,
முன்னாள் அமைச்சர் P.T.ராஜன் அவர்களுக்கு அச்சிட்டு வழங்கிய துண்டரிக்கையின் பிரதியின் நகல்.
இத்துண்டரிக்கையில் நாம் கவனமாக வாசிக்க வேண்டிய பகுதி,
"மலர்தலையுலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குந்தானை மூவேந்தர் நாட்டின் பண்டைப் பழங்குடி அகம்படியர் என்பதும், அவர் அரசர் மரபினர் என்பதும்,
அகம்படி - தேவாலய கெர்பகிரஹப் படியை காத்தல் பற்றி அகம்படியர் என்ற தொழிற்பெயர் இச்சமுகத்தினருக்கு ஏற்பட்டதென்பது அறிவுள்ளோர் கூற்று.
சித்தர் பிரான் சுந்தரானந்தர், வங்கி மன்னன் கந்தவர்மன், கலிங்கத்துக்கொற்றவன் கருணாகரன், சிவகெங்கை மன்னன் மருதுபாண்டியன், தொண்டை மண்டலச்சீமான் பச்சையப்பன் (முதலியார்) முதலாயினோர் இம்மரபினர் என்பதும் உலகமறிந்ததே."
90 ஆண்டுகள் முன்னரே மிகத்தெளிவாக கொடைவள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்களை தென்னாட்டு அகம்படியார் சிங்கம் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கது...
******
துண்டரிக்கையின் முழுப்பகுதி.....
-------------------------------------------------
சென்னை அரசாங்க மந்திரி, கனந்தங்கிய
P.T.ராஜன், பி.ஏ., (பாரிஸடர் அட்லா) அவர்களுக்கு,
மதுரை கோரிப்பாளையம் அகம்படியர் சங்க அங்கத்தினர்
சமர்ப்பித்த திருமுகம்.
ஆசிரிய விருத்தம்.
திருவுலவு மதுரைபதி தருமதலை விதிநிபுண தியாகரா ஐய்ய வருக!
தேவியங் கயற்கணருள் மேவிடும் நிறைசெல்வ தீர்க்காயுள் ராஜன் வருக!
அருமருந் தென்னபொன் னம்பலந் தருஞ்சேய! அருள்பெருகு நயன வருக!
அறமது நிறைந்தவுளத் தண்ணலே நின்வரவு அளவிலா மகிழ்வு வருக!
பெருமைபெரு நினதுபுக ழுலகெலா மோங்கதயை பிரியா மனத்தன் வருக!
பேசரிய தென்னாட்டு தலைவர்சுப் பிரமணிய பிரபுமர போங்க வருக!
மருவுநற் தண்டமிழ் மண்டலக் கலிதீர மகிபனே ராஜன் வருக!
மாக்ஷிமை சென்னைஅர சாட்சியின் அமைச்சனே வள்ளலே வருக! வருக!!
(கவிராஜ் N.ராமசாமி சேர்வை)
பிறர்க்குதவும் பேரறிவுடைய பெரியோய்!
பார்மகள் வதன பரதகண்டத்துத் திலகந்தென்பாண்டி மதுரையம்பதி செய்த நற்றவப் பயனால் நுமது சேவை கிடைக்கப்பெற்றனம். வருக! வருக!! நுமது வரவு நல்வரவாகுக!!!
போற்றற்குரிய ஆற்றலுடையீர்!
தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்,முதலையுண்ட பாலனை அழைத்ததும், என்பு பெண்ணுருவாய்க் கண்டதும், மறைக்கதவினைத் திறந்ததும்,புனலில் எடெதிர் சென்றதுமான அற்புத செயலினையுடைய தமிழணங்கின் அருந்தவப் புதல்வ,பாண்டி நாட்டை ஆண்ட நாயக்க மன்னர் பலருக்கு அமைச்சராயும் தண்டத் தலைவராயுமமைந்த அரியநாயக முதலியார், அறச்சாலை தேவாலயக் கட்டளை அமைத்த தனவான் தானப்ப முதலியார் இன்னோர் வழிவந்த நுமது பண்டைத் தண்டமிழ் பெருங்குடித் தொல்குலம் விளங்க, தராதலம் விளங்க, தவநெறி விளங்க, புராதன எமது சமுகம் புவிமிசை விளங்க, ஆங்கிலக்கலைவல்ல, சட்டநிபுணப் பட்டம் பெற்ற தங்களை சென்னை அரசாங்க மந்திரியாய் நியமனம் செய்தமைக்கு நாங்கள் அளவிலா ஆனந்தமடைகின்றனம்.
தண்டமிழ் மண்டலத் தலைவ!
மலர்தலையுலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குந்தானை மூவேந்தர் நாட்டின் பண்டையப் பழங்குடி "அகம்படியர்" என்பதும் அவர் அரசர் மரபினர் என்பதும் அகம்படி - தேவாலய கெர்பகிரஹப் படியை காத்தல் பற்றி அகம்படியர் என்ற தொழிற்பெயர் இச்சமுகத்தினருக்கு ஏற்பட்டதென்று அறிவுளோர் கூற்று. சித்தர் பிரான் சுந்தரானந்தர், வங்கி மன்னன் கந்தவர்மன், கலிங்கத்துக்கொற்றவன் கருணாகரன், சிவகெங்கை மன்னன் மருதுபாண்டியன், தொண்டை மண்டலச் சீமான் பச்சையப்பன் முதலாயினோர் இம்மரபினர் என்பதும் உலகமறிந்ததே. அவ்வாறு தொன்றுதொட்டு சிறப்புற்று விளங்கிய எமது மரபு கல்வி, கைத்தொழில், வர்த்தகம் முதலிய வற்றில் பிற்கோக்கடைந்து அரசாங்க ஸ்தாபனங்கிளில் பிரதிநிதித்வம் பெறாது தவிக்கின்ற கஷ்டத்தை நிவர்த்திக்கத் தாங்கள் இதுகாறும் உழைத்து வந்தது விரித்துரைக்கின் மிகை என அஞ்சி விடுத்தனம். "செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை" என்னும் முதுமொழி போற்றி எமது சமுகத்தினர் தங்கள் சட்டசபை தேர்தலுக்கு விசேஷ ஊக்கங்காட்டி அறிக்கை வெளியிட்டு மதுரை ஜில்லாவில் எமது சமுக ஒற்றுமை காட்டியது தாங்கள் அறிந்ததே. இனியும் எமது சமுகம் அதன் குறைகளை நிவர்த்திக்க தங்களின் மேன்மை தங்கிய உதவியை மிகுதியும் எதிர்பார்க்கின்றது.
இன்னும் மதுரை நகரில் அமைந்துள்ள ஆயுள்வேத ஒளஷதசாலை நோயுற்ற மக்கள் பலரின் கஷ்டத்தை நிவர்த்தித்து புகழ்பெற்றதென்பது போற்றற்குறியது அதனை விரிவான வைத்தியசாலை ஆக்குவதுடன் ஆயுள்வேத வைத்திய கல்லூரி ஒன்று மதுரையில் ஸ்தாபித்தும் தென்னிந்தியா முழுதும் பலவிடங்களில் தற்போதய மந்திரிகளின் முயற்சியால் ஆயுள்வேத ஔஷதசாலைகளை ஸதாபித்தும் நுமது ஆற்றல் தேச சரித்திரத்தில் இடம்பெற்று என்றென்றைக்கும் பொன்றாப் புகழ்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனம்.
ஆரூயிர் அணைய அன்பீர்!
எமது சமுகம் தங்களை மற்றுமோர் முறை வரவேற்க அவாகொண்டிருப்பதோடு தங்களுக்கு சுகஜீவியமும் நித்யானந்த வாழ்க்கையும் கொடுத்தருளுமாறு கங்கையஞ்சடைக் கண்ணுதற் பெருமானை அனவரதமும் இறைஞ்சுகின்றனம்.
இங்ஙனம்,
V.நாராயணசாமி அகம்படியர்,
கோரிப்பாளையம் அகம்படியர் சங்கத்தின் சார்பாக.
மதுரை.
23-12-30
--------------------------------------------
++++
வழக்கரிஞர் சன்முகசுந்தரம் சேர்வை ஆட்சேபனை கடிதம்..
அகமுடையார்களின் ஆட்சேபனை மனு,
---------------------------------------------------------------
1945 ஆம் ஆண்டு, அகில இந்திய முக்குலத்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரு சிவானாண்டி தேவர் அவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் மூவருக்கும் பொதுவாக "தேவர்" என்று ஒரே பெயர் வைக்க வேண்டி அனுப்பிய கோரிக்கை மனுவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதுமிருந்து கள்ளர், மறவர், அகமுடையார் சங்கங்களின் சார்பாகவும், தனி நபர்களின் சார்பாகவும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மனுக்களில் ஒன்றே இக்கடிதம்.
வழக்கறிஞர் வி.சண்முகசுந்தரம் சேர்வை அவர்கள் தாக்கல் செய்த இந்த ஆட்சேபனை மனுவின் ஆங்கில மொழியின் சாராம்சத்தை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து பதிவு செய்துள்ளோம்.
இந்த மனு 3 பக்கங்களை உள்ளடக்கியது. முழுமையாக படித்து தமது முன்னோர்களின், அகமுடையார் பேரினத்தவரின் தனித்தன்மை அரசியலின் தேவையை நன்கு உணர்வோம்.
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம். ----------------------------------------------------------
பெறுநர்,
அரசு செயலர்,
வளர்ச்சி துறை,
மெட்ராஸ் அரசாங்கம்,
மெட்ராஸ்.
1) அகம்படியர் சமுதாயம் தன்னளவில் மகத்துவம் வாய்ந்த தனிச் சமுதாயமாகும். இச்சமுதாயம் தொன்றுதொட்டு வித்தியாசமான, மகத்துவமான கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் மற்றும் சம்பிரதாயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பழங்காலத் தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், செந்தமிழ் தொகுதி (வித்வான் இராகவ ஐயங்கார் அவர்களால் தொகுக்கப்பட்டது) மற்றும் பண்டையத் தமிழ் அகராதி முதலியவற்றில் அகம்படியர் சமுதாயத்தினரின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், கவுரவம், பாரம்பரியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே அகம்படியர் சமுதாயம் ஒரு பெருமை மிகுந்த பாரம்பரியமான தனி இனமாகும். இதற்குச் சான்றாக மேற்கண்ட தமிழ் இலக்கியப் புத்தகங்களிலிருந்து, அகம்படியர் இனம் பற்றிய மேற்கோள்களை தனியே எடுத்து அதன் சாரத்தை அச்சிட்டு நாங்கள் ஏற்கனவே மெட்ராஸ் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளோம். அவற்றின் நகல்கள் இங்கே தங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
2) கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாக கள்ளர் மற்றும் மறவர் சமுதாயத்தினர் இருவரும் அகம்படியர் சமுதாயத்திலிருந்து வேறுபட்டுள்ளனர் என்ற போதும், சமீபகாலமாக அவர்கள் அகம்படியர் சமுதாயத்தையும் தங்களோடு இணைந்து தங்களது அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஆதாயத்திற்காக "முக்குலத்தோர்" என்ற பொது இனமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
3) கள்ளர் மற்றும் மறவர் சமுதாயம் தனக்கென தனிக் கலாச்சாரத்தை உடையதால், அவர்களிருவரும் அகம்படியர் சமுதாயத்திலிருந்து மிகவும் வேறுபட்ட தனி இனம் அல்லது சமுதாயமாகும். கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற மூன்று இனத்தவருக்கும் பொதுவான கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் என்று இல்லை. எனவே அம்மூவருக்குள் திருமண உறவும் இல்லை. அப்படி ஒரு வேளை திருமண உறவு இருந்தாலும் அதை அகம்படியர்கள் அங்கீகரிப்பதில்லை.
4) மக்கள் தொகையைப் பொருத்தவரை மொத்தமாக கள்ளர் மற்றும் மறவர் இனத்தினரைக் காட்டிலும் அகம்படியர்களே எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக, மெட்ராஸ் அரசாங்கத்தின் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை பார்க்குமாறு வேண்டுகிறேன். மேலும் அகம்படியர்களில் பெரும்பான்மையினர் வேளாண்மைத் தொழில் செய்யும் விவசாயிகளாகவும், ஒரு சிலர் கவுரவமிக்க அரசு அலுவலர்களாகவும் உள்ளார்கள். ஆனால் கள்ளர் மற்றும் மறவர் இனத்தவர்கள், மெட்ராஸ் அரசாங்கத்தின் குற்றப்பிரிவு சட்டத்தின்படி, குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குற்றப்பரம்பரைச் சட்டம் கள்ளர் மற்றும் மறவர் இனத்திற்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. அகம்படியர் சமுதாயத்தினருக்கு அல்ல.
5) மேற்கூறிய விளக்கங்களைத் தெரிந்து கொண்ட சூழ்நிலையில், கள்ளர் மற்றும் மறவர்களோடு அகம்படியர்களையும்
சேர்த்து "முக்குலத்தோர்" என ஒரே இனமாகக் கருதும் பட்சத்தில் அச்செயல் அகம்படியர் இனத்தவர்களின் மனதில் மோசமான அதிருப்தியை ஏற்படுத்தும். அதாவது மறைமுகமாக இச்செயல் அகம்படியர்களின் சுயமரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்தும். மேலும் அகம்படியர்களின் கலாச்சாரம், பண்பாடு முதலியவற்றிற்குப் பங்கம் விளைவிப்பதாகக் கருதப்படும். இது அகம்படியர்களுக்கு மோசமான மிகுந்த மன உளைச்சல்களையும், அதிருப்திகளையும் ஏற்படுத்தும் என்பதையும் அரசுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
6) கலாச்சாரம் மற்றும் பண்பாட்டால் வேறுபட்ட கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் இனங்களை ஒன்று சேர்த்து, "தேவர்" என்ற ஒரே இனமாக அரசு அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கள்ளர் மற்றும் மறவர் சமுதாயப் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக எனக்கும், எங்களது அகம்படியர் சமுதாய மக்களின் மற்ற பிரதிநிதிகளுக்கும் தெரியவந்துள்ளது அத்தகைய கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது மூன்று சமுதாயத்தினரிடையே தவறான புரிதல்களையும் இதயபூர்வமாக மிகுந்த மன வருத்தத்தையும் மேலும் பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
7) எனவே, மூன்று சமுதாயத்தினரின் பொது நலன், கள, அமைதி மற்றும் சமாதான நல்லிணக்கம் கருதி
இக்கோரிக்கையை கைவிட்டு, இப்பொழுது இருப்பது போலவே கள்ளர், மறவர், அகம்படியர் என மூன்று தனிப் பிரிவினர்களாக இருப்பதே சிறந்தது என வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன். மேலும் மெட்ராஸ் அரசாங்கம் மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலிக்க நினைக்கும் பட்சத்தில், வெவ்வேறு மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் அகம்படியர்களின் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் உள்ள பொது ஜன/ மகாஜன மக்களின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு நல்ல முடிவை எடுக்குமாறு வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்.
8) மேலும், இக்கோரிக்கையைப் பரிசீலிக்கும் மெட்ராஸ் அரசின் வளர்ச்சித் துறை ஆலோசகர் அவர்களை, அகம்படியர் சமுதாயத்தின் பிரதிநிதி என்ற முறையில் நான் நேரில் சந்தித்து எனது கருத்துக்களையும் மற்றும் ஆட்சேபனை களையும் எடுத்துரைக்க எனக்கு வாய்ப்பளிக்கும்படியும் வேண்டுகிறேன்.
10) எனவே, மேலே கூறப்பட்டுள்ள எனது ஆட்சேபனைகளையும், மற்ற அகம்படிய சங்கங்களின் பிரதிநிதிகளால் ஏற்கனவே அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ள ஆட்சேபனை மனுக்களையும் கருத்தில் கொண்டு, மூன்று இனங்களையும் "தேவர்" என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையைக் கைவிடுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அவ்வாறு "தேவர்" என ஒரே இனமாக அறிவிப்பதால், அது அகம்படியர்களுக்கு எந்த வகையிலும் நற்பலன்களைத் தராது என்றும் மேலும் அது நடைமுறைக்கு ஒத்து வராது என்றும், மாறாக இக்கோரிக்கை அகமுடையார்களுக்கு பின்னடைவையே தரும் என்றும் சமர்ப்பிக்கின்றேன்.
சண்முகசுந்தரம்,
வழக்கறிஞர்,
25-11-1945.
-----------------------------------------------------------
அகமுடையார் வரலாற்று மீட்புப்
பணியில்...
நன்றி அண்ணன்
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச: 94429 38890.
++++++++
தொடரும்..
@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்...
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக