இதில் "மறவர்" என்பது தனித்தமிழ் பெயர் "வீரன்" என்பது வடமொழி சொல்,
இப்பெயர் ஓர் தனி குலத்தவரை குறிக்காது என்பதற்கு வேந்தர்கால கல்வெட்டுகள் பல உள்ளன சிலவற்றை இங்கு காண்போம்,
"இவ்வூரில் இருக்கும் இடையன் தனியன் மறவனும்"
இது தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு,
+++
இடைக்குடி மக்களில் ஒருவருக்கு மறமாணிக்கம் என பேர் தந்த விவரம் கூறும் கல்வெட்டு;
***
"சுருதிமான் செங்குளவாயன் மறவனான விசையநாராயண தேவன்"
இது அசுரகுலத்தை மறவர்(வீரர்) எனும் கல்வெட்டு..
இங்கனம் இன்னபிற தமிழ்சாதிகளுக்கும் மறவர் என்றவாறாக கல்வெட்டு சான்றுகள் உள்ளது,
கடல் வணிகம் செய்த வணிகன் மகளான கண்ணகியை கருமறத்தி எனும் பாடல்;
இதே போல வணிகனான கோவலனை மறவன் எனக்கூறும் சிலம்பு பாடலும் உள்ளது..
இப்பெயர் தனி இனத்தை குறிக்காது..
+++
சங்க இலக்கியத்தில் "மறவர்" என்பது குறிஞ்சி,முல்லை நிலத்தில் வாழ்ந்த எயினர்(வேட்டுவர்) குலத்தை குறிக்கும் பன்பு பெயராகும், இதற்கு சான்று கோடை மலையன் கடியநெடு வேட்டுவனை "தென்னவன் மறவன்" என பாண்டியனின் தளபதி என்ற பொருளில் கூறும் பாடலாகும்...
***
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335