முனையதரையர் என்பவர்கள் நடுநாடு எனப்படும் "மிலாடு" எனப்படும் மலைநாட்டின் ஒருபகுதியான தென்பெண்ணை ஆற்றின் தென்பகுதியில் உள்ள சோழ நாட்டின் வட எல்லை பகுதியான & மலைநாட்டின் தெற்கு எல்லையான வடவெள்ளாற்றை ஒட்டிய "திருநாவலூர்" பகுதியை ஆட்சி செய்த மலையமான் குல மன்னர்களாவர்..
இவர்கள் "மலையர்குல" மன்னர் என்பதாலேயே திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் "சேதி" மன்னரும் 63 நாயன்மாரில் ஒருவருமான "மெய்ப்பொருள் நாயனார்" முக்திதலத்தில் அவருடனேயே மலையர்குல மன்னர் "நரசிங்க முனையரைய நாயனாருக்கும்" சிலை உள்ளது,
திருக்கோவிலூர் தொழிலதிபர் உயர்திரு TKT முரளி அகமுடையார் & உயர்திரு தியாகராஜன் அகமுடையார் (zodiac Cable) ஆகியோர் 2020 ஆண்டு கீழையூர் வீரட்டேஷ்வரர் கோவில் குருபூஜையின்போது மலையர்குல மன்னர்களை வணங்கியபோது எடுத்த படம் & 2021 ஆண்டு குருபூஜை நாளுக்கான தேதிகளுடன்,
நமது மலையர்குல மன்னர்கள் இருவரின் ஐம்பொன் சிலைகள் காளையார் கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர் மனிமண்டபத்தில் வைத்து வணங்கவும் & வருடாந்திர குருபூஜைக்கும் வாங்க உள்ளோம் என்பதையும் பெருமையுடன் கூறிக்கொண்டு "முனையதரையர்" கல்வெட்டுகளை மட்டும் இக்கட்டுறையில் தொடர்ச்சியாக காண்போம்..
( 85 படங்கள் கொண்ட நாயனார் குருபூஜை நிகழ்வுகள் தனிக்கட்டுறையாக உள்ளது அதை உறவுகள் வாசிக்க வேண்டுகிறேன் )
+++++
கல்வெட்டு_1,
"முனையதரையனான குலோத்துங்க சோழ மலையராயன் மகன் திருவரங்கமுடையான் தன்மபரிபாலனான ராசாதிராச மலையராயன்"
முனையதரையர்களை மலையர்குலமாக கூறும் நேரிடையான கல்வெட்டு,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 வெளியீடு...
தென்னிந்தி கோயிற் சாசனம் வெளியிட்ட அதே கல்வெட்டை காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுதி 2 ம் வெளியிட்டுள்ள விவரம்;
+++++
கல்வெட்டு_2,
"முனையதரையன் திருவரங்கமுடையான் ராஜாதிராஜ மலையராயன்"
கல்வெட்டு_3
இக்கட்டுறையில் முதல் கல்வெட்டு அருளால பெருமாள் கோவில்,இரண்டாவது கல்வெட்டு திருப்பாசூர் & தற்போது பார்ப்பது மூன்றாவது திருவண்ணாமலை கோவில் "முனையதரையர் மகன் திருரங்கமுடையான் இராஜாதி ராஜ மலையராயன்"
+++
கல்வெட்டு_4;
திருமுனைப்பாடி ஆள்மூர் நாட்டு பெருங்குளத்தூர் வாழும் முனைப்பேரரையர் மகன் முனையர்கோனிளவரையன்"
+++
கல்வெட்டு_5;
"முன்பு நாடு செய்த விக்கிரமசோழ தேவரான இருங்கோளசநியன் வாணராய திருமலைதந்தார் ஆன முனையதரைய"
+++
கல்வெட்டு_6
"நடுநாடு மண்டலத்தில் திருமுனைப்பாடியின் ஒரு பகுதியாக திருவெண்ணைநல்லூர் நல்லூர்" கல்வெட்டு;
கல்வெட்டு_7,
தமிழக கல்லூரித் தேர்வில் கேள்விகளாக உள்ள பேராசிரியர்களால் தொகுக்கப்பட்ட முக்கிய சாசனங்கள் 20 "தென்னாட்டு கல்வெட்டுகள்" எனும் நூலில் வெளிவந்துள்ளது, அதில் வில்லவராயன் சாசனம் என்ற கல்வெட்டுகளில் "முனையந் வில்லவராயன்" எனும் விவரங்களை கூறும் படங்களை கீழே தொடர்ச்சியாக காண்போம்,
நூல் முகப்பு;
அதில் வில்லவராயன் சாசனம் பேஜ் 86,
மிகப்பெரிய இக்கல்வெட்டின் சிறப்பு ஒரே கல்வெட்டில் 4 இடங்களில் "முனையந் அருன்மொழித்தேவனான வில்லவராயன்" எனப்படுவதும்,
"முனையந் வில்லவராயன்" என ஒரே பெயராக ஒரே கல்வெட்டில் கூறப்படுவதுமாகும்,
ஏனெனில் "வில்லவராயன்" என்பது வாணாதிராயர்கள் பெயராகும்...
சான்று திருவலம் கல்வெட்டு;
மாவலி வாணாதிராயர் மகள் "வில்லவன் மாதேவி" எனப்படும் திருவலம் கல்வெட்டு இதிலேயே "அச்சல வீமன்" எனப்படுவதும் நினைவில் கொள்க ஏனெனில் அச்சல என்பது மலையர் என பொருள்படும் மலைநாட்டு
மலையர்குலத்திற்கு வீமன் போன்ற பலம்பொருந்திய தலைவன் எனப்பொருள், இக்கட்டுறை நாயகன் முனையதரையர் மலைநாட்டின் மன்னர் மறவாதீர்,
மிலாட்டின் எல்லைக்கு அப்பால் "முனையாடுவார் நாயனார்" எனவும் ஒருவர் கூறப்படுகிறார் சேக்கிழாரால் ஆனால் அவர் வேளாளர் மரபை சேர்ந்தவர் மிலாட்டு எல்லையை சேர்ந்த முனையதரையர் "மலையர்குலத்தவர்" இவ்வேறுபாட்டையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்,
+++++
கல்வெட்டு_8,
பாண்டியநாட்டில் திருநெல்வெலி கல்வெட்டில் உயர் அலுவலராக "ஐயன்" அடைமொழியுடன் முனையதரையர் குறிக்கப்படும் செய்தி;
கல்வெட்டு_9,
"அம்மான் முனையதரையர்"
++
கல்வெட்டு_10,
"பள்ளிபீடம்(அரசசிம்மாசனம்) முனையதரையர்"
கல்வெட்டு_10,
கல்வெட்டு_11,
"முனையதரைய பல்லவரையர்" கல்வெட்டு..
கல்வெட்டு_12,
+++
கல்வெட்டு_13,
வல்லங்கிழான் "மல்லன்" திருச்சிற்றம்பலமுடையானான முனையதரையன்
(மல்லன் எனில் மற்போர் வீரன் எனப்பொருள்)
சங்ககாலத்தில் நடுநாட்டின் ஒருபகுதியான இன்றைய திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட மன்னன் "அவியன்" அப்பெயரை வாணகோவரைய மாளவசக்கரவர்த்தி தன் பெயராக கூறும் விவரங்கள் "புறநானூறு மூலமும் உரையும்" எனும் நூல் வாயிலாக கீழே;
மலையர்குலராயர் முனையரையர் நாட்டின் சங்ககால சான்றுவரை மாவலி வாணர்கள் கொண்டுள்ளது மிகச்சிறப்பான விடயமாகும்...
+++முனையதரையர்கள் பற்றிய முக்கிய கல்வெட்டுகள் அனைத்தும் இக்கட்டுறையில் இனைக்கப்படும்..
கட்டுறை தொடரும்...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக