புதன், 16 ஜூன், 2021

குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி பாகம்_2

👆👆👆
(சிங்கை ஆரியன் எனப்படும் யாழ்ப்பாணம் ஆரியசக்கரவர்த்தி கல்வெட்டு)

********************

"குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி" பாகம்_2 கட்டுறைக்கு குருகுலராயன் அகமுடையார் உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன்,

பாகம்_1 கட்டுறையில் அத்திக்கும்பா கல்வெட்டும் & கலிங்க காரவேலன் பற்றிய அடிப்படை விடயங்களை முழுமையாக கண்டோம்,
பாகம்_1 வாயிலாக நமக்கு உறுதியான விடயங்கள் கலிங்கநாட்டு காரவேலன் 

1.சேதிராஜா,
2.கலிங்காதிபதி
(கலிங்கத்தரையர்),
3.ஆரிய மாமன்னர்,
4.வசு(புரு வம்சம் உபரிசர "வசு" ) வழித்தோன்றல்
5.மகாமேகவாண வம்சம் என்ற 5 முக்கிய விடயங்கள் நமக்கு இரண்டாயிரம் ஆண்டு முந்தைய கல்வெட்டு வழி உறுதியானது,
மேலும் கலிங்கர் தலைநகரம் "சிங்கபுரம்"

காரவேலன் கூறிய புரு வம்சம் குருகுலத்து 
உபரிசர "வசு" dienesty விவரம்;👇👇
*****

கலிங்கத்தவரின் தலைநகரம் "சிங்கபுரம்" மேலும் பழமையான அத்திகும்பா கல்வெட்டு விவரம் பற்றிய குறிப்பு தமிழக இலக்கியம் எதிலும் உள்ளதா எனில்.? பாண்டியர் தலைநகராம்  மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தலபுராணமான "திருவிளையாடல் புராணம்" "மெய்காட்டிட்ட படலம்" என்பதில் கூறப்பட்டுள்ளது அவ்விவரங்களை எஸ் ராமச்சந்திரன் அவர்கள் "தமிழக வேளாளர் வரலாறு" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்,👇👇

***
திருவிளையாடல் புராணம் பாடல் விவரம்,

கிராதர்,நிஷாதர் எனும் பெயர்கள் "கங்கை துறைவன்" எனப்பட்ட "குகனை" குறிக்கும் பெயர்கள் என்பதற்கு பெரும்புலவன் கம்பர் சான்று;

*****

மேலும் "ஆரிய" என்ற பெயர் என்பதால் பலரும் பிராமணர் என நினைக்கிறர் இது மிகத்தவறு காரணம் அச்சொல்லுக்கு அகராதி கூறும் பொருள்;
மாணிக்க வாசகர்;👇👇
மேலும் கம்பர் ராமனையும் "ஆரியர்" என்கிறார் அதுமட்டுமல்லாது சந்திரகுல அரசின் முக்கிய அரசனான யயாதியின் தந்தை "நாகன் நகுஷன்" ஆரியசக்கர்வர்த்தி எனப்படுகிறார் மகாபாரத ஸ்லோகத்திலேயே..👇👇 
                   👆👆
(ஜோதிடமாமனி திருமதி சாரானாதன் அவர்களின் தமிழன் திராவிடனா நூல்)

இங்கனமாக ஆரியர் என்ற சொல்லுக்கு பண்பாடு மிக்கவர், உயர்ந்தவர்,அறிவில் சிறந்தவர் எனதான் பொருளே தவிற "பிராமணர்" என்று அர்த்தம் கிடையாது.. 

நாகன் நகுஷன் "ஆரியன்" எனப்படும்போது நாவலந்தீவின் "சந்திரகுல அரசர்" அனைவரும் ஆரியர்களே இதற்கு உயர்ந்தோர் என்பதே பொருள்,,

பாண்டியர்களும் தம்மை அதே "நகுஷன் வழியினன்" எனும்போது தென்னவனும் ஆரியனே... ஒருநாளும் இச்சொல்லுக்கு பிராமணன் என்பது பொருள் அல்ல,

தமிழகத்தில் "திராவிட" பெயரிலான கோட்பாட்டு அரசியலுக்கு செய்யபட்ட ஆதாரமற்ற திருவிளையாடல்களே "ஆரியன்" எனில் பிராமணன் என்ற போலி அரசியல் வரலாற்று பிரச்சாரம்...
இத்தியரியின் தோற்றுவாய் நாவலந்தீவை கைப்பற்றிய பிறகான ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரி ஆய்வாளர்களே ஆவர்,

++++

தமிழக வேந்தர் கால கல்வெட்டுகள் சான்றின் மூலமே பிராமணர்_ஆரியர் வெவ்வேறு என்பதை கீழே காண்க;👇👇

இன்றும் தமிழகத்தில் ஆரிய வேளாளர் என்பவரும் உள்ளர் & "ஆரியநாட்டு தெரு" என்பது கிழக்கு கடற்கரை முழுவதும் "செம்படவர்கள்" வாழிடமாக பல ஊரில் உள்ளது..

மேலே ஒரே கல்வெட்டில் பிராமணர் தனியாக "ஆரியர்" என ஒருவர் தனியாக கூறப்பட்டுள்ளனர்,

++++

"குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி" கட்டுறை பாகம் 1ல் கிமு கால கலிங்க அத்திகும்பா கல்வெட்டு & இக்கட்டுறையில் அதனை குறிக்கும் தமிழக திருவிளையாடல் புராணம் விவரம் &  கம்பர் மேற்கோள் & ஆரிய பெயர் விளக்கம் வரை முன்னுறையாக பார்த்தாகிவிட்டது ஆதலால் இனி "ஆரியசக்கரவர்த்தி" கல்வெட்டுகள் & சமகால ஆரியசக்கரவர்த்தி அரச யாழ்ப்பான இலக்கியம் கூறுவனவற்றை இனி காண்போம்,

***
கல்வெட்டு_1,

யாழப்பாணம் ஆரியசக்கரவர்த்திகளின் "சிங்கை ஆரியன்" கல்வெட்டு,
(சிங்கபுரம் என்பது கலிங்கம் தலைநகர் ஆரியமாமன்னர் என்றவர் அதன் அரசர் காரவேலர் நினைவில் கொள்க)

****

கல்வெட்டு_2,

தமிழகத்தில் திருப்புலானி கோவில் பணியில் "ஆரியசக்கரவர்த்தி"
+++

கல்வெட்டு_3,

"செவ்விருக்கை நாட்டு சக்கரவர்த்தி நல்லூர் மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாள் ஆன ஆரியசக்கரவர்த்திகள்"

"செவ்விருக்கை நாட்டு" கல்வெட்டுகள் நமது தளத்தில் பல கட்டுறைகளில் குருகுலத்தவருடையதாக பார்த்துள்ளோம் நினைவில் கொள்க,

***

கல்வெட்டு_4,

ஆரியசக்கரவர்த்தியை அம்மான் என பாண்டியன் மாமனாக கூறும் திருப்புலானி கல்வெட்டு,

+++

கல்வெட்டு_5,

***

கல்வெட்டு_6,

****

யாழ்ப்பாண ஆரியசக்கரவர்த்திகள் கால இலக்கியம் கூறும் விடயங்களை இனி காண்போம்;

கைலாயமாலை ஆரியசக்கரவர்த்தியான செகராசனை பாண்டியன் மகன்போல வந்தான் என்றும் கல்விநிறைந்த தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை மன்னவனாகும் "சிங்கை ஆரிய" என்கிறது,,

+++

பாகம்_1&2 கட்டுறையின் மனிமகுடமாக ஆரியசக்கரவர்த்திகளே நேரிடையாக இயற்றிய ஈழத்து "கண்ணகி வழக்குரை காவிய" சான்றை இங்கு காண்போம்;


ஆரியசக்கரவர்த்திகள் நேரிடையாக இயற்றிய கண்ணகிவழக்குரை காவியத்தை இயற்றிய காரணமாக "குருகுலத்தோர்" கொண்டாட பாடியது என தெளிவுபடுத்துகிறார்..

++++

செகராசசேகரமாலை எனும் நூலில்,

"கந்தமலை ஆரியர் கோன் செகராசசேகரமன் கங்கை நாடன்" எனப்படுகிறார்..

+++

யாழ்பான ஆரியசக்கரவர்த்திகள் கொடி:

இதே அடையாளமே கலிங்க நாட்டின் "கீழை கங்கர்" அடையாளமாகவும் இருந்ததற்கான சான்று;
👇👇

👆👆👆
கலிங்கத்து சோடகங்கர் தம்மை "விஜயசிங்கபுரத்து கலிங்காதிபதி" என்கிறர்..

சோடகங்கர்களை மூலமாக கொண்ட யாழ்ப்பாணம் ஆரியசக்கரவர்த்திகள் "சிங்கை ஆரியர்" என்கிறர் தற்போது ஒற்றுமை புலப்படும் என நம்புகிறேன்...


பாண்டியர் காலம் வரை தமிழகத்தில் சேதுகாவலர்களாக "வாணாதிராயர்களே" இருந்தனர் என்பதற்கான கல்வெட்டு சான்று நமது தளத்தில் தனிகட்டுறையாக உள்ளதை காண்க,

அதே போல மறுகரையான இலங்கையில் சேதுகாவலர்களாக இருந்தவர்கள் ஆரியசக்கரவர்த்திகள்..

தனது "சந்திரகுல" அடையாளத்தையும் & காளை அடையாளத்தையும் பொறித்த நாணயமே அவர்கள் பயன்படுத்தியதாகும்..

(பிற்காலத்தில் அதாவது வாணர்களை வீழ்த்தி நாயக்கர் உதவியுடன் சேதுகாவலர் ஆன இன்றைய சேதுபதி "மறவர்" அனைவரும் தம்மை ரவிகுலம்(சூரிய) என்றே அனைத்து கல்வெட்டிலும் கூறிக்கொண்டதை நினைவுபடுத்துகிறேன்)

+++

இலங்கைக்கு "சோடகங்கர்" சென்றடைந்ததை நாளுடன் கூறும் ஈழம் கல்வெட்டு;

+++

இலங்கையின் எந்த வரலாற்று நூலை எடுத்து படித்தாலும் அது கூறும் தகவல் ஒன்றுதான்,
Jafna Kingdom எனப்படும் "ஆரியசக்கரவர்த்தி" அரசு தோன்றிய காலம் கிபி 1215 லிருந்து கிபி 1619 வரையான ஒல்லாந்தார் காலம் வரை என்றும் தோற்றுவித்தவர்களாக "கலிங்கமாகன்" & "சோடகங்கர்" ஆகியோருமே கூறப்படுவர்..


நாம் "குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி பாகம்_1&2" வாயிலாக கண்ட ஆவணங்களை குறிப்பெடுத்துவிட்டு இக்கட்டுறையை நிறைவு செய்வோம்..

Point_1,

கலிங்கத்தின் அரச மூலத்தை அத்திகும்பா கல்வெட்டு வாயிலாக அறிந்துள்ளோம்,
(பாகம்_1)
Point_2,
அதில் நமக்கு கலிங்க காரவேலனின்,
a-கலிங்காதிபதி
(கலிங்கத்தரையன்),
b-சேதிராயன்,
c-ஆரியமன்னன்,
d-குருகுல மரபு உபரிசரவசு வழித்தோன்றல், என்பதை அறிந்துள்ளோம்..
(பாகம்_1)
Point_3,
கலிங்க காரவேலன் கல்வெட்டு தொடர்பான விவரத்தை கூறும் தமிழக திருவிளையாடல் புராணம் செய்தி கண்டுள்ளோம்..
(பாகம்_2)

Point_4,
ஆரியசக்கரவர்த்தி யாழ்ப்பாணம் கல்வெட்டு,தமிழக கல்வெட்டு & சிங்கை ஆரியர்களே நேரிடையாக இயற்றிய இலக்கியங்களை கண்டுள்ளோம்,
(பாகம்_2)

Point_5,
ஆரிய பெயர் பொருள் விளக்கம்,சோடகங்கர் கல்வெட்டுகளை கண்டுள்ளோம்..

(முற்றும்)

"குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி"எனும் கட்டுறையின் தலைப்பிற்கு மூலமாக தேவையானவற்றை அனைத்தையும் பாகம்_1&2 என பார்த்தாகிவிட்டது மேலும் சேதிராயர்,கலிங்கத்தரையர்,சோடகங்கர் என்ற ஆரியசக்கரவர்த்திகளின் மூலகர்த்தாக்களான கலிங்ககாரவேலன் தொடர்புடைய அரசர்கள் "தமிழகத்தில் யார்" எனும் கல்வெட்டு மேற்கோளுடன் அவர்களே ஈழத்து ஆரியசக்கரவர்த்திகள் என்பதற்கான கல்வெட்டு சான்றுகளுடன் "குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி பாகம்_3 நிறைவு" கட்டுறையில் சந்திப்போம் "சந்திரகுல" சொந்தங்களே...

(பின்குறிப்பு; இக்கட்டுறைக்கு ஏன் மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் படம் எனில் நம் தலைவர் "சூரியகுல" இராமன் வம்சம் அல்ல அசுரவம்சம் குருகுலராயன் என்பதால்தான்)
♥♥
++++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக