"பல்லவராயர்" என்பது பட்டமாக எந்த சமூகத்திற்கு எல்லாம் வந்துள்ளது என்பதை தொகுக்கும் கட்டுரை இது;
கல்வெட்டு_1;
"மீனவன் பல்லவராயர்"
(பின்குறிப்பு; இது சோழஅரசர் கல்வெட்டு)
கல்வெட்டு_2;
"இப்படி அறிவேன் ஆலங்குடையான் மீனவன் பல்லவராயன்"
(பின்குறிப்பு; இது சோழஅரசர் கல்வெட்டு)
கல்வெட்டு_3,
"கறைய வேட்டுவரில் செய்யான் பல்லவராயன்"
+++
கல்வெட்டு_4,
"இடையரில் மாதன் மஞ்சனான மனுதிங்க பல்லவரையன்"
***
கல்வெட்டு_5,
"தேவர் தொண்டைமானார் அகம்படியார் பல்லவராயன்"
+++
கல்வெட்டு_6,
"வளவன் பல்லவதரையன்" கல்வெட்டு,
வேட்டுவர்,ஆயர்,மீனவர் ஆகிய மூன்று சமூகங்களுக்கான பல்லவரையர் பட்டம் கல்வெட்டுகளுடன் அகம்படியர் சமுதாய பல்லவரையர் கல்வெட்டு இனைக்கப்பட்டுள்ளது...
அரசமரபினரில் பல்லவர் நாட்டெல்லையை சேர்ந்த குறுநில அரரமரபிற்கும் பல்லவரையர் பட்டம் உண்டு,
உதாரணமாக;
"சேதிராய பல்லவரையன்" என மலையமான் குடும்பத்திற்கு பல்லவரையன் பட்டமுள்ளது,
மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக முத்துப்பேட்டை மந்திரபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டு "பைய்யுழான் பல்லவராயன் வாணராயனான சோழிய அரையன்" எனக்கூறுகிறது...
இது வாணாதிராயர்களுக்கு பல்லவராயர் என்பது பட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறது..
முனையதரையர் அரசிற்கும் பல்லவரையர் பட்டமாக கல்வெட்டுகள் உள்ளன;
எனவே பல்லவராயர் என்பது பல குடிகளுக்கும்,சிற்றரசுகளுக்குமான பட்டமாக வந்துள்ளது என்பது ஆதாரங்களுடன் மிகத்தெளிவாகிறது...
************************************************************************************
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக