குருகுலத்தின் திருமகள் "செம்பியன் மாதேவியார்" புதிய கல்வெட்டு சான்று கட்டுறை...
19_10_2021 பத்திரிக்கை செய்தி படங்களுடன்..
++++
1.பெரும்பாணப்பாடி எனப்படும்
(வேலூர்_திருவலம்_ஆரணி),,
2.வாணகோப்பாடி எனப்படும்
(திருவண்ணாமலை),
3.மலைநாடு(மிலாடு) எனப்படும்
(திருக்கோவிலூர்
& ஆறகளூர்),
4.இருங்கோளப்பாடி எனப்படும்
(விருதாச்சலம்),
5.வேசாலிப்பாடி எனப்படும்,
(கடலூர்_பாண்டி)
6.மழநாடு எனப்படும்
(பெரம்பலூர்_சேலம்_நாமக்கல்_ராசிபுரம்_கிருஷ்ணகிரி_தர்மபுரி)
நாட்டிற்கான முதன்மை அடையாளமான,
காவிரி வடகரை முதல் வேங்கடம் வரையான நிலத்தின் மன்னவர்களான
வேலூர்_திருவலம் வாணாதிராயன்,
&
திருக்கோவிலூர் மலையமான்(மெய்ப்பொருள் நாயனார்),
&
சேலம்_ஆறகளூர் வாணகோவரையர் ஆகிய தன்னை பெற்ற "அப்பன்களை" கூட மறந்துவிட்டு
"Agamudayar Ottrumai" முகநூல் தளம் திரு Sakthi M சேர்வைக்காரர் அவரின் வழிகாட்டுதல்படி அல்லது அவரை பின்பற்றியதன்படி
சிறப்புடன் ஆரணியில் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழாவில் சூரியகுல "சோழன்" படத்தை போட்டு மருதுபாண்டியர் குருபூஜை பிளக்ஸ் அச்சடித்த அண்ணாரின்(Sakthi M) மாணாக்கர்களுக்கு
மாளவ(காளையார் கோவில்) தேசத்து மன்னர்குலம் குருகுலத்து
மருதுபாண்டியர்களின்_குருபூஜை மாதமான அக்டோபர்_2021 ல் எனது கேள்விகள் சிலவற்றுடன் கூடிய சிறப்பு காம்ப்ளிமென்ட் மேல் படங்களுடன் கூடிய கீழ்கானும் இக்கட்டுறை..
***
படங்களுடன் கல்வெட்டு தகவல் உதவிக்கு நன்றி,
@உயர்திரு_Balamurugan_சார்...
(சார் எழுதியதை இங்கு அப்படியே கீழே பகிர்கிறேன்)
👇👇
#tchr #tiruvannamalai_town #herostone #inscription #paranthagan
#chembiyan_mahadevi #history #archaeology #Saivam #kabaligam
#kalamugam
திருவண்ணாமலை வரலாற்றுக்கு புதிய வெளிச்சம்?
செம்பியன் மாதேவி “யார்”?
காளாமுகம் கபாலிகம் எங்கிருந்தன?
வரலாற்றுத் தேடலில் எப்போதுமே சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது, ஆனாலும் சில நேரங்களில் இது எப்படி சாத்தியமானது என நமக்குள் பல கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு சாத்தியமான கதை தான் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல்லும் கல்வெட்டும்
11 மாதங்களுக்கு முன்பு கல்லூரி முதல்வரும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும் பேராசிரியர் வே. நெடுஞ்செழியன் அவர்களை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். ஆய்வு நடுவத்தின் செயல்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கும் போது இந்த தெருவின் முனையில் உள்ள வேடியப்பன் கோயிலை பார்த்துச் செல்லவும், அங்கும் ஒரு கல்வெட்டு இருப்பதாக கூறினார். நானும் அதைப்பார்த்தேன், அன்று கதவு பூட்டியிருந்தது. சென்றுவிட்டேன். பின்னர் நீண்டநாட்களுக்கு பிறகு நானும் முனைவர் சுதாகரும் அங்கு மீண்டும் சென்றோம். அப்போது கதவு திறந்து இருந்தது நடுகல்லின் கீழ் உள்ள எழுத்துக்கள் எண்ணெயால் அதிகமாக படிந்திருந்ததால் அதைப்படிக்க இயலவில்லை. எனினும் நகரில் ஒரு புதிய நடுகல்உள்ளது, விரைவில் வந்து பார்க்கலாம் என்று சென்றுவிட்டோம்.
கடந்த 10 ஆம் தேதி திருவண்ணாமலை நகரில் நானும் பழனிச்சாமியும் மீண்டும் வலம் வந்த போது இந்த நடுகல் பற்றி நினைவுக்கு வர மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, பழனிச்சாமி நடுகல்லின் பின்புறம் சென்று பார்த்தார். அங்கு முழுவதுமாக கல்வெட்டு இருப்பது அப்போதுதான் தெரிந்தது. உடனே வேண்டிய பொருளை வாங்கி கல்வெட்டை படியெடுக்க தொடங்கினோம். கல்வெட்டு நல்ல நிலையில் இருந்தது. கீழே 2 வரி அளவில் மறைந்திருக்கலாம். கல்வெட்டைப் படிக்கும் போதே ஒரு புதிய உணர்வு மேலோங்கியது. காரணம் இந்த கல்வெட்டு பராந்தக சோழனின் காலத்தியது, இதில் செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த கண்டராதித்தன் என்றும் கபாலிகள் பற்றியும் அவர்கள் குரு, சிஷ்யர்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்ததே காரணம். எதிரில் உள்ள சிறிய கல்வெட்டு ஒன்றையும் படியெடுத்து அதன் புகைப்படங்களை மரு. அருண்குமாருக்கு அனுப்பி படிக்க கேட்டோம். அவரும் ஒரளவு முழுமையாக படித்து இந்த கல்வெட்டு செய்தி புதியதாகவும் சிறப்பாக இருக்கும் என்றும் மேலும் வல்லுநர்கள் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்பு கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், அரியலூர் கலைக்கல்லூரி மேனாள் முதல்வர் இல. தியாகராஜன், தொல்லியல் அறிஞர் சு. ராஜவேலு ஆகியோர்களிடம் குறிப்புகள் பெற்று செய்தியாக்கினோம்.
திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள இந்த கல்வெட்டு இதுவரை படித்து வெளிவராமல்போனது ஆச்சர்யமாக உள்ளது. எத்னையோ பேர் இந்த நடுகல்லையும கல்வெட்டையும் பார்த்துள்ளனர். ஆனால் தற்போது தான் செய்தி வருகிறது.
எத்தனையோ கல்வெட்டுகள் மலைகளில், காடுகளில் எடுத்த நம் அணியினருக்கு நகரத்தின் நடுவே கிடைத்த கல்வெட்டு ஒரு உற்சாகமே. நமக்கு கிடைத்த நல் வாய்ப்பு என்றே கருதுகிறோம்.
அதன் விவரம் இங்கு,
முதலாம் பராந்தகனின் 21 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ( கிபி 928) , இதன்படி இன்றைக்கு 1093 ஆண்டுகள் பழமை உடையதாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இக்கல்வெட்டில் ஸ்ரீ பராந்தகன் இருமுடி சோழனுக்கும் அவரின் மனைவியும் இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகள் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர் கண்டராதித்த சோழர் என்று கண்டாதித்தர் பிறப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது . இன்னும் தெளிவாக "செம்பியன் மாதேவியார் திருவயிற்றில் பிறந்த ஸ்ரீ கண்டராதிச்சன்" என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து பராந்தக சோழருக்கும் வைரமேக வாணகோவரையர் மகளுக்கும் பிறந்தவர் கண்டராதித்தர் என்பது தெளிவாக புலனாகிறது. இருப்பினும் திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி என்ற ஊரில் கிபி 947 இல் எழுதப்பட்டுள்ள முதலாம் பராந்தகன் கல்வெட்டு இவருக்கும் சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர் என்று கூறுகிறது. இதிலிருந்து செம்பியன் மாதேவி சோழ மாதேவி என்னும் பெயர்கள் ஒருவரையே சுட்டுகிறது என்று கருதலாம்.
மேலும், இக்கல்வெட்டு அண்ணாமலையாருக்கு மதிய உணவு பூஜை படையலின் அதே நேரத்தில் இருபது காபாலிக துறவிகளுக்கும் உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கண்டராதித்தர் வைச்சபூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் கண்டராதித்தர் காபாலிக சைவ வழி துறவிகளையும் ஆதரித்துள்ளார் என்று அறிய முடிகிறது. காபாலிகளர்களின் ஆச்சாரியராக அதாவது குருவாக வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர் என்பவர் இருந்துள்ளார். இவரும் இவருடைய சீடர் வாஜஸ்பதி வக்கானி படார முதலிகளும் இவருடைய சிஷ்யர்கள் மற்றும் இந்த சிஷ்யர்களின் சிஷ்யர்கள் ஆகியோரும் வைச்ச பூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி பொன் மற்றும் நிலங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து சைவத்தின் ஒரு பிரிவாக விளங்கிய காபாலிகம் காளாமுகம் ஆகியவை திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரச ஆதரவு பெற்று சிறப்புடன் இருந்தது என்பதை அறிகிறோம். அப்பிரிவினை கண்டராதித்தர் ஆதரித்தார் என்பதையும் அறிகிறோம். வைச்ச பூண்டி கிராமத்தை காபாலிகர்களின் கையில் இருக்கும் கபால ஓட்டில் நீர் வார்த்து கண்டராதித்தர் தர்மமாக கொடுத்துள்ளார். காளாமுகம், காபாலிகம் ஆகிய சமய பிரிவுகள் திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. கண்டராதித்த சோழர் வைரமேக வாணகோவரையர் குடும்பத்து இளவரசிக்கு பிறந்தவர் என்ற புதிய தகவலை இக்கல்வெட்டு கூறுகிறது. பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.
நடுகல்
இந்த கல்வெட்டு அமைந்துள்ள நடுகல் சோழர்கால சிற்ப அமைதி கொண்ட நடுகல்லாகும். இதில் வீரன் தனது வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் வைத்துக்கொண்டுள்ளார். வீரனின் தலையில் கரண்ட மகுடமும் காதில் பெரிய குண்டமும் இடுப்பில் கச்சை ஆடையும் வாள் உறையும் உள்ளது. இரண்டு கால்களும் மடக்கி எதிரியை தாக்க ஓடுவது போல அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்திற்குக் கீழ் இரண்டு வரிக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் ஒருபத்தாவது புதநாட்பாடி நாட்டு… என்று எழுத்து மட்டும் படிக்கும் படி உள்ளது. மற்றவை பொரிந்துபோயுள்ளன.
மாகேஸ்வரர் -
இந்த கோயிலின் எதிரில் உள்ள சிறிய அளவு சிற்பத்தில் ஆண், பெண் என இரண்டு உருவாங்கள் உள்ளன. இந்த உருவாங்களின் மேல்புறத்தில் ஒரு வரி கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் – ஸ்ரீமாஹேஸ்வர நம்பி என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாகேஸ்வர நம்பி என்பவர் சிவனின் பக்தராகலாம். இந்த மூன்று கல்வெட்டுகளும் வெவ்வேறு காலத்தியது ஆகும்.
திருவண்ணாமலை நகரிலே கிடைத்த இந்த நடுகல் கல்வெட்டும் பின்புறம் உள்ள கல்வெட்டும், எதிரே உள்ள கல்வெட்டும் வெவ்வேறு காலத்தியது ஆகும். இந்த கல்வெட்டுகள் மூலம் திருவண்ணாமலை கோயில் வரலாறு பற்றியும் வைச சமயப் பிரிவான கபாலிகம், காளமுகம் பற்றியும், கண்டராதித்தன் பிறப்பு பற்றியும் குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டாகும்.
இந்த கல்வெட்டைப் படித்தும் விளக்கம் அளித்த கல்வெட்டறிஞர்கள்
சு. இராகோபால் மற்றும்
இல. தியாகராஜன்,சு.ராஜவேல், மருத்துவர் அருண்குமார் அவர்களுக்கு நன்றி.இதை செய்தியாக வெளியிட்ட தினத்தந்தி,தினகரன்,இந்து தமிழ்திசை,அருணை எக்பிரஸ், சர்கிள் ஆப்,தினமலர்,
டி.டி. நெக்ஸ்ட்,தினமதி உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு நன்றி.
@balmurugan Sir..
இதுவரை நண்பர் கட்டுறையை படித்தீர்கள் இனிவருவண எனது என்னங்களில் கேள்விகளும்;👇👇
***
இக்கட்டுறை வழியில் கல்வெட்டுகளில் "மழவரையர் மகள்" எனப்பட்ட "செம்பியன் மாதேவியார்" குருவம்சத்து மகதராயர் எனப்பட்ட இன்றைய சேலம் மாவட்ட "ஆறகளூரை" தலைநகராக கொண்டு ஆண்ட "வாணகோவரையர்" மகள் என கல்வெட்டு வாயிலாக மிக மிகத்தெளிவாகிறது..
மழவராயர் என்பதும் வாணாதிராயர் குடும்ப பெயர் என்பதற்கு நமது தளத்தில் ஏற்கனவே கல்வெட்டுகளுடன் தனிக்கட்டுறை பதிவிட்டுள்ளோம்...
****
இக்கட்டுறையை தன்னை சூரியகுல சோழராக அடையாளப்படுத்திக்கொள்ள முதன்மையாக விரும்பும் திரு Sakthi M அவர்களுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் நான் பரிசாக வழங்குவது எதற்கு எனில் காவிரி வடகரையிலேயே "மழநாடு" தொடங்கிவிடுகிறது சேக்கிழாரின் பாடல் முதல் கல்வெட்டுகள் வரை இதற்கு சான்றுன்டு,அம்மழநாட்டு மன்னன் ஆகிய செம்பியன் மாதேவியின் அப்பனாகிய வாணகோவரையர் தம்மையும் & தம் நாட்டையும் "மகதநாடு" என்றும் "மகதராயன்" என்றும் "சந்திரகுல" அடையாள நாடாகவும் & மன்னனாகவும் கூறி பெருமைபட்டுக்கொண்டானே ஒழிய தம்மை "சூரியகுல" சோழதேசத்தின் மரபினன்
என்றோ,சூரியகுலம் என்றோ தம்மை அசிங்கப்படுத்திக் கொள்ளவில்லை... எனவே காவிரி வடக்கு கரை முதல் வேங்கடம்(திருப்பதி) வரையான இம்மன்னர்களின் நிலம் எவ்வளவு பெரியது என்பதை எவறாயினும் எளிதாக உணரலாம்.. மூவேந்தர்களும் தோன்றும் முன்னரே இவர்கள் இம்மன்னில் வாழ்ந்த "வேள்" மரபினர் என்பது உலகமறிந்த வரலாறு..
ஆனால் அவரின் மரபினர் என வரலாற்றை பேசும் காவிரி வடக்கு மண்டல இன்றைய "மலைநாட்டு அகமுடையார்" பேரினம் அத்தகைய நம் மன்னர்களின் வழி சந்திரகுலமாக(குருகுலராயர்) நடக்கிறீரா..?
& நம் மன்னர்களின் படங்களை பெரும்பாணப்பாடி எனப்படும் ஆரணி_வேலூர் மருதுபாண்டியர் குருபூஜை விழா உட்பட வடக்கு மண்டலங்களில் எங்கேயாவது தங்களின் குடும்ப விழா பதாகைகளில்தான் எங்கேனும் பயன்படுத்துகிறீர்களா..?
காவிரியின் தென்கரை சோழன், அதிகபட்சம் வடவெள்ளாறு வரை மட்டுமே தன் பூர்வீக எல்லையையுடைய சோழன், காவிரி வடகரை மன்னர்களின் பெண்ணை மனந்தவன் என்ற முறையில் ஆறகளூர்,திருக்கோவிலூர்,
வேலூர்_திருவலம்
"மலைநாட்டு அகமுடையார்" உறவுகளுக்கு மச்சான் உறவு மட்டும்தானே இந்நிலையில் தங்களை பெத்த தகப்பனை விட(உங்கள் மன்னன்) நீங்க பெண் கொடுத்த மச்சான் உங்களுக்கு பெரிதாகிப்போனானோ..?
நாமெல்லாம் ஒரே இனம் இதில் என்ன இருக்கு என்பீர் எனில் பிறகு ஏன் "ராஜகுலம் சேர்வை" என்றும் "கோட்டைப்பற்று தேவர்" என்றும் "மலைநாட்டு அகமுடையார்" என்றும் அவரவர் வாழிட நிலப்பகுதி சார்ந்து அகமணப்பிரிவும் அதற்கென தனித்துவங்களும் உள்ளன..?
"மலைநாட்டு அகமுடையார்களே" சிந்திப்பீரா..? உங்களுக்கு உங்கள் தகப்பன் என்ன குறையைய்யா வைத்தான்..? மகாபாரத கால கண்ணனுடன் போரிட்ட கால பழமையானவானாகிய
"மாவலி வாணாதிராயனை" வரலாற்று பெருமை & கல்வெட்டு என எதிலும் வெல்ல இவ்வுலகில் எவர் உண்டு என்னிப்பார்க்க மாட்டீரா..?
மலைநாட்டு அகமுடையார் சொந்த நிலம் எது..? காவிரி வடக்கா..? காவரி தெற்கா..?
நீங்க வடகரை "மலையர்" மரபு சந்திர குலமா..?
தென்கரை "வளவன்" மரபு சூரிய குலமா..?
யாரை நீங்க முதன்மையாக முன்னிலைப்படுத்தனும்...?
சந்திரகுல பெத்த அப்பனையா..? பொண்ணு கொடுத்த வகையிலான சூரியகுல மச்சானையா..?
உங்களின் மனசாட்சியை நீங்களே கேள்வி கேட்டுப்பார்க்க இக்கட்டுறையை காவரி வடக்கு மண்டலமான "மலைநாட்டு அகமுடையார்" அனைவருக்கும் காணிக்கையாக்குகிறேன்...
+++
இக்கட்டுறை எழுதப்பட காரணமான அக்டோபர்_24 மருதுபாண்டியர் குருபூஜை நடந்த பெரும்பாணப்பாடி_ஆரணி விழா பதாகை படம்;
எவறையும் குறை கூறுவது எம் நோக்கம் அல்ல காவிரி வடக்கு மண்டல "மலைநாட்டு அகமுடையார்" உறவுகள் சிந்திக்க வேண்டியே இக்கட்டுறை.. இக்கட்டுறையின் கருப்பொருளில் உள்ள ஆதங்கத்தை உறவினர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பது ஒன்றே எதிர்பார்ப்பு...
சந்திர வம்சம் குருகுலத்தின் குலவிளக்கு "மலைநாட்டு அகமுடையார்" மகள் செம்பியன் மாதேவியார் புகழ் ஓங்குக..
நன்றி நன்றி..
( கீழே உள்ள படத்தில் நமது காலண்டரில் என் பாட்டன் வேலூர்_திருவலம் வாணாதிராயன் & திருக்கோவிலூர் மலையமான் & ஆறகளூர் வாணகோவரையர் படங்கள் இதன் PNG படங்கள் பிளக்ஸ் உட்பட எந்த பயன்பாட்டிற்கு தேவை என்றாலும் தொடர்பு கொள்க
"அகம் கிரியேசன்ஸ்" திரு.மருதுபிரசன்னா
73589 10267 )
"இவண்"
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக