கட்டுக்கதைகளான புறம் 201 யாகக் கதையும் தொல்காப்பிய நச்சினார்க்கினியரின் துவாரகை கதையும்:-
வந்நியருள் இந்துத்துவ கொள்கை கொண்டோர் தமிழ் மன்னரான வேளிருக்கும் வேந்தருக்கும் வட இந்திய மூலம் காட்டி வருகின்றனர். அவர்களின் கூற்றின் பொருந்தாமையை இப்பதிவின் மூலம் காட்டுவோம்.
1) கம்பரின் சிலையெழுபதின் 51 வது பாடல் மிகத் தெளிவாக வந்நியர் சந்திர குல மன்னர்களின் மாசையும்,சூரிய குல மன்னர்களின் மாசையும் நீக்குகின்ற அக்கினி குல மன்னர்கள் என்றும் அவ்வக்கினி குல மன்னர்கள் மாசற்றவர் என்றும் கூறுகிறது.
இதன் மூலம் வந்நியர் அக்கினி குலத்தவர் மட்டுமே என்பதும் சந்திர குல மன்னர்களும்,சூரிய குல மன்னர்களும் வந்நியர் இல்லை என்பதும் தெளிவாக விளங்குகிறது. இதனால், நாவலந்தேயத்துள் விளங்கும் சந்திர( யது,புரு) & சூரிய குல மன்னர்களை உரிமை கோர எவ்வாறு வந்நியர் உரிமையுடையவர் என்ற கேள்வி எழுகிறது.
சான்று படம்_1
***
2).உருத்திர வந்நியர் அசுரன் வாதாபியை அழிக்க போருக்கு செல்லும் வழியில் சோழனையும்_பாண்டியனையும் சந்தித்தல் வந்நியர் புராணத்தில் வருகிறது.
வாதாபியை அழிக்கும் போரில் கலந்து கொண்டவர் உருத்திர வந்நியர் மற்றும் அவர் நான்கு மகன்களும்.
போர் முடிந்தப் பின் உருத்திர வந்நியரின் நான்கு மகன்களும் அசுர பெண்களை மணக்கின்றனர். பின்பு பிறக்கும் ஐந்தாவது மகன் சோழன் மகளை மணக்கிறான். உருத்திர வந்நியரின் இந்த ஐந்து மகன்களில் இருந்தே வந்நியர் குலம் பல்கி பெருகியதாக அவர்களின் குல புராணம் கூறுகிறது & நம்பப்படுகிறது.
ஆனால் போருக்கு முன்பே உருத்திர வந்நியர்
சோழ_பாண்டியரை சந்திக்கிறார்.
எனில் வந்நியர் குல புராணப்படி வந்நியர் என ஒருவர் தோன்றும் முன்னரே வாழ்ந்தவர்களாக வேந்தர்களான சோழர் & பாண்டியர் உள்ளனர் என்பது உறுதியாகிறது...
காண்க படம் 02-07,
சான்று படம்_2,
******
3) உருத்திர வந்நியர் இராமனால் நிறுவப்பட்டு பூசிக்கப்பட்ட இராமநாதரை (சிவன்) வணங்கினார் என்று வந்நியர் புராணம் கூறுகிறது. எனில் இராமாயண காலத்திற்கு பிறகு நடந்துள்ளது இவ்வரலாறு என்பது இப்புராணத்தாலேயே தெளிவாக விளங்கும்.
(காண்க படம் 08)
சான்று படம்;8,
****
4)போருக்கு முன் உருத்திர வந்நியருக்காக வாதாபியிடம் தூது சென்ற நாரதர்
வாதாபியிடம் இராவணனை பற்றியும் சொல்லுகிறார்.இதுவும் இராமாயண காலத்திற்கு பிந்தையது வந்நியர் தோற்றம் என்பதை நிறுவும்.
(காண்க படம் 09)
சான்று படம்;9,
*****
5).வால்மீகி ராமாயணத்திலேயே குறிக்கப்பட்டுள்ளனர் சேரர், இராமாயண காலத்திலேயே இருந்த சேரர் எவ்வாறு இராமாயண காலத்திற்கு பின்பு நடந்த நிகழ்வான சம்பு முனியின் யாகத்தினின்று தோன்றியிருக்க முடியும்..?
(காண்க படம் 10,11,12)
வால்மீகி ராமாயனத்தில் சேரர் கூறப்படும் சான்று படம்_10,
எனவே,வந்நியர் புராணத்தை முன்னிலை படுத்தி தன் குல வரலாறை பேசும் வந்நியர் சமூகம் மூவேந்தரை & அசுர குல வரலாற்றை சொந்தம் கொண்டாடவே முடியாது என்பது சான்றுகளின் படி நமக்கு விளங்கும் செய்தியாகும்.
+++++
மேலும்,
இனி புறம் 201 ஐ வந்நியர் புராணத்தோடு இணைத்தும் நச்சினார்க்கியார் தொல்காப்பிய உரையை வைத்தும் தாமே வேளிர் என்னும் வந்நியருக்கு நம் கேள்விகள்...
கபிலரின் புறம் 201,
"நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!"
- புறநானூறு 201 ( வரி 08-12)
என்கிறது.இதற்கு புறநானூறு பழையவுரையாசிரியர்
"‘வடபான் முனிவன் றடவினுட் டோன்றி’ என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும்; அது கேட்டுணர்க." என்று கூறி அத்தோடு நிறுத்தி விடுகிறார்.இந்தக் கதையை வட நாட்டு இராசபுத்திரரிடையே வழங்கும் கதைகளோடு பொருத்தி இன்றைய இராசசுத்தான் மாநிலம் அபு மலையில் இந்த யாகம் நடந்ததாகவும் அந்த யாகத்தில் தோன்றிய மரபினர் தான் வேளிர் என்றும் அவர்களே கிருட்டிணன் வழி வந்த யாதவர் என்றும் அவர்களை துவாரகையில் இருந்து அகத்தியர் அழைத்து வந்ததாகவும் அருமை சகோதரர் செயவர்ம உருத்திர சோழனார்(Jayavarma Ruthra Cholanar) கூறுகிறார்.மேலும் இவர் தம் கூற்றுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியார் கூற்றுகளையும் ஆதாரமாக காட்டுகிறார்.
நச்சினார்க்கினியர், "அகத்தியனார்..............துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரவுரையிலும், "மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்" என அகத்திணை யியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
தற்றோது நம் கேள்விகள் யாதெனில்...
1) சந்திர குல பேரரசன் யயாதியின் மைந்தர்கள் ஐவருள் இருவரே யதுவும் புருவும்.புருவின் வழி வந்தோரே கௌரவரும் பாண்டவரும் அதாவது குருகுலராயர்கள்.யதுவின் வழி வந்தவரே யாதவர் அதாவது யாதவராயர்கள்.வேளிர் யாதவராயின் அவரின் மூலம் சந்திரனிடமிருந்து தானே தொடங்க வேண்டும்? எவ்வாறு யாதவராகிய வேளிருக்கு யாக குண்ட தோற்ற கதை பொருந்தும்?
2) வடநாட்டு இராசப்புத்திர இலக்கியங்கங்களே கூறுவது யாதெனின்...அதாவது,பரசுராமன் சூரிய சந்திர குல சத்ரியர் பலரை அழித்ததால் வட நாட்டில் இராட்சசரின் அட்டூழியம் பெருகியதாகவும் அவர்களால் வைதீக மதத்தை பின்பற்றுவோருக்கு நிறைய இடர்கள் ஏற்பட்டதால் யாகம் வளர்த்து ஒரு புது அரச வம்சத்தை தோற்றுவித்ததாகவும் கூறுகிறது.நம் கேள்வி யாதெனில் இன்றைய வந்நியர் புது அரச வம்சமாயின் அவர்களுக்கு முன்பிருந்த சூரிய சந்திர குல அரச வம்சத்தவர் யார்..? இக்கேள்வி எவறுக்கும் தோன்றும்தானே..
3) கங்கை சமவெளியில் ஆண்டு கொண்டிருந்த யாதவர்கள், மகத அரசன் ஜராசந்தனின் தொல்லை தாங்காமல் தான் துவாரகை என்னும் ஒரு புது நகரை நிர்மாணித்து மேலைக் கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள் என்று புராணம் கூறுகிறது.வேளிர் கிருட்டிணன் வழி வந்த யாதவராயின் கீழை சாளுக்கியர் பட்டயங்கள் கீழை சாளுக்கியரைக் புரு வம்சமாக கூறுவது ஏன்?( படம் 13-25)புரு வம்சம் துவாரகை வரவில்லையே.யது வம்சம் தானே துவாரகை வந்தது?
கீழை சாளுக்கியர் புருவம்ச ஆவணங்கள் 13 படம் கீழே 👇👇
4) வேளிரை யதுகுல யாதவராக கொண்டாலும் சரி,பௌரவர்களான குருகுலராயர்களாக கொண்டாலும் சரி அவர்களின் மூலம் திங்கள் தானே அன்றி யாகக் குண்டமில்லை.முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தி சாளுக்கியரை வேள் குலத்தைச் சேர்ந்தோராக கூறுகையில் சந்திர குல சாளுக்கியருக்கு யாகக் குண்டம் அதாவது அக்னிசட்டி எவ்வாறு மூலமாகும்?
( படம் 26 காண்க;பட உதவி :- நன்றி செயவர்ம உருத்திர சோழனார் Jayavarma Ruthra Cholanar )
5) சத்ரியரே நெருப்பில் இருந்து தான் தோன்றியவர் என்று வேதம் கூறுவதாக வந்நியர் கூறிக் கேட்டுள்ளேன்.வேதம் நெருப்பிலிருந்து தோன்றியதாகக் கூறுமாயின் சந்திர ,சூரிய குல அரச வம்சம்த்தவர் தம் கொடி வழியாக தாமே தம் அரச ஆதாரங்களான கல்வெட்டுகளிலும்,பட்டயங்களிலும் கூறிய அனைத்துமே பொய்யானவையா?
மேலும் அதே வேதம் சத்ரியரின் பிறப்பை பரமாத்மாவின் தோளினின்று கூறுகிறதே அது ஏன்?ஒரே வேதம் இவ்வாறு முரண்பட்டு கூறுவதை எவ்வாறு சான்றாக ஏற்பது..?
6)அகத்தியர் துவாரகையில் இருந்து தான் அரசர் பதினெண்மரையும் பதிணென் குடி வேளிருள்ளிட்டாரையும் கொண்டு வந்தாராயின் யாதவர் மட்டுமே வாழ்ந்த துவாரகையில் பிற சூரிய வம்சத்து,சந்திர வம்சத்து சத்ரியர் எங்ஙனம் வந்தனர்..?
7) சேரரைப் பிற்கால இலக்கியங்கள் அக்னி குலம் என்று கூறுகிறதே அன்றி வேள்வியில் இருந்து தோன்றியதாக எங்கேனும் கூறுகிறதா?அவ்வாறு கூறுகின்றதாயின் அந்த சான்றை எவறாயினும் பதிந்து அருள்க! ஏனெனில் வேத காலத்தைச் சேர்ந்த.ஐத்ரேய ஆரண்யகமே சேரரை " .சேரப்பதா" என்று குறித்து விடுகிறது.அத்தகு தொன்மை வாய்ந்த சேரரை சந்திர குல,சூரிய குல அரசர் அழிவால் நிகழ்த்தப்பட்ட பிற்கால யாகத்தோடு அபு மலையில் தோன்றிய வந்நியரோடு( உங்கள் கூற்றுப்படி) எவ்வாறு தொடர்பு படுத்துகிறீர்..?
8) வேளிராக நீங்கள் கூறும் அனைவருக்கும்
சேரரை மூலமாக காட்டுகிறீர்?
சேரர் தம்மை யது குலம் என்று கூறியதாக பிற்கால ரவிவரும குலசேகரன் (இவர்கள் சேரரா வேணாட்டு வேளிரா என்பது ஆய்வுக்குரியது) சான்றைக் காட்டி கூறியுள்ளீர்.அவ்வாறாயின் சந்திரனை மூலமாகக் கொண்ட சேரரை எவ்வாறு யாகக் குண்டத்தில் தோன்றியதாகக் கூறப்படும் வந்நியரோடு தொடர்பு படுத்த முடியும்?
எனவே,கபிலரின் புறம் 201 சான்றையும்,நச்சினார்க்கினியர் உரை சான்றையும் முன்னிறுத்தி தொடர்ந்து தமிழ் அரசர் அனைவருக்கும் வட நாட்டு மூலம் காட்டுவது எவ்வாறு பொருந்தும்?பொருந்தவே பொருந்தாது.இவை இரண்டுமே உண்மைக்குப் புறம்பாக இட்டுக்கட்டிய கட்டுக்கதைகளாகும்.
தமிழ் இலக்கியங்கள் மூவேந்தருக்குக் கூறும் முச்சுடர் அவர்கள் தமக்குக் கொண்ட அடையாளமாகும்.
இதுவரையான வந்நியர் குல புராண விளக்கங்களின் வழியான கேள்விகள் யாவும் இன்றைய பார்கவகுலத்தார் என அறியப்படுபவர்களுக்கும் அப்படியே பொருந்தும்,
சான்று_படம்_1,
சான்று_படம்_2,
+++
பார்வதியின் தந்தை மலையரையன் தெய்வீகனாக பிறக்கிறார் தெய்வீகனின் புதல்வர் நால்வர் அதில் மூவரே மலைய மன்னர் ,சுருதிமன்னர்,
நத்தமன்னர்,👇👇
++++
ருத்திர வந்நியர்(பள்ளி) & தெய்வீகன்(பார்கவகுலம்) சான்றுகள் ஒப்பீடு;
1.இருவரின் குல புராணமும் அவர்களின் குல முதல்வர்கள் பிறப்பிற்கு முன்னரே "மூவேந்தர்" இருந்தனர் என்கிறது,
2.இருவரின் குல புராணமும் "அசுரர்களை" அழிக்க யாகத்தில் அவதரித்தவர்வகளாக கூறுகிறது,
இதன் வழி இச்சாதியரின் தோற்றுவாய்கு முன்னரே மூவேந்தரும் & அசுர அரசும் & துவரை யாதவ அரசும் இம்மன்னில் உண்டு என்பதை அவர்களின் குலபுராண சான்று வாயிலாகவே தெளிவாக உணர்ந்து கொள்ள இயலும் சான்றுகள்..
இவை இவர்களின் தோற்றம் மிகசமீபகாலம் என்பதை காட்டும் சான்றுகள்,
3.பார்கவகுலத்தார் குல புராணம் நத்தமர்களின் தாய் வழி முன்னோரே வடமதுரா எனப்படும் துவாரகை ஆயர்(இடையர்) குல அரசன் என்கிறது,
ஆனால் இவர்கள் வரலாறு பேசுவதோ தன்னை யாதவர் என்று..???
4.ருத்திர வந்நியர் குலபுராணம் பள்ளி சாதியருக்கு தாய் வழி முன்னோர் "அசுரகுலம்" எனக்கூறுகிறது..
ஆனால் இவர்கள் வரலாறு பேசுவதும் & நூல் எழுதிக்கொள்வதும் "அசுரகுல" வரலாற்றை தன்னுடையது என்றும் & இவர்கள் பிறப்பதற்கு முன்னரே இம்மன்னில் வாழ்ந்த மூவேந்தர் வரலாறும் தன்னுடையது என்றும்..??
அனைத்தையும் தான்டி
"யதுகுல யாதவரும்" நான்தான் "குரு வம்சமும் & பாண்டவரும்" நான்தான்னு வேற இவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் "வைகை புயல் வடிவேலை" மிஞ்சிவிடும் கலியுக சினிமாத்தனம்,,,
+++++
மொத்தத்தில் இவர்களின் நகைச்சுவையை எல்லாம் இனைய வெளியில் பார்க்கும்போது தோன்றுவது ஒன்றுதான் "என்ன கொடுமை சரவணன் இது" எனும் சந்திரமுகி படத்தில் பிரபு கூறும் வசனம்தான் வெறென்ன..
எலவானாசூர் எனப்படும் "இறைவாச நல்லூர் தல புராணம்" விரிவான விளக்கங்களை அடுத்த தனி கட்டுறையா காண்போம்,
"இங்கணம்"
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335