செவ்வாய், 22 அக்டோபர், 2019

குருகுலராயன் கல்வெட்டுகள்_50 பகுதி_2 தொடர்ச்சி..

ஓணம் திருநாள் நாயகர்களும்,

( வெட்டு மாவலி அரசர் )

தடாதகை(மீனாட்சி) பிராட்டியின் தந்தையும்,(பர்வதராஜன்_மலையமான் மலையர்குலம் )

இந்திரவிழாவை இப்புவியில் துவங்கி வைத்தவர்களுமான
(சேதிராயர்_மலையமான்),

"மூவராயர்களான(மூவேந்தர்)"

பர்வத( 8 மலைகளின்) 

ராஜகுல அகமுடையார் 

உறவுகளுக்கு வணக்கம். 

இக்கட்டுரை இத்தளத்தின் கடந்த பதிவான "குருகுலராயன் அகமுடையார்_கல்வெட்டு_50
பகுதி_1 கல்வெட்டுகள்_25 என்ற கட்டுரையின் தாெடர்ச்சியாக மேலும் 25 கல்வெட்டுகளின் தொகுப்பாகும்.

இத்தளத்தில் இதுவரை கூறப்பட்ட கல்வெட்டுகளும் சரி, இனிக்கூறப்பட இருக்கும் கல்வெட்டுளும் சரி
தொல்லியல் துறையால் படி எடுக்கப்பட்டு அரசால் பகுதி சார்ந்த பெயரில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்ட
"Tamil Digital library" தளத்தில் மற்றும்
" PDF" நூல்களில் இருந்தும் பெறப்பட்டதும்,மற்றும் தொல்லியல் துறையால் கண்டரியப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தித்தாள் தகவல்கள் மூலமாகவும் மற்றும் "ஆவணம் இதழ்" போன்ற ஆய்வுத்துறை இதழ்கள் வகையிலும்,துறை சார்ந்த அறிஞர்களின் நூலில் இருந்தும் பெறப்பட்ட 100% நம்பகத்தன்மை கொண்ட கல்வெட்டு படங்களையும்,
தகவல்களையுமே இங்கு பதிகிறோம் என்பதனை கூறிக்கொள்கிறோம்.

         குருகுலராயர் என்பது அகமுடையார் சமுதாய பெயர் என்பதற்கான பழமையான சான்றாக 1932 ஆம் ஆண்டு சின்னத்தம்பி சேர்வை அவர்களின் சமுதாய மாநாட்டு கடிதம் உள்ளதை நினைவில் நிருத்தி கட்டுறையை தொடர வேண்டுகிறோம்..      


++++++++

கல்வெட்டு_26;
(இலச்சியம் கல்வெட்டு_நடுநாடு)

"ஸ்வஸ்திஸ்ரீ விலாடராயனும் குருகுலராயனும் புரவரியாரும் செய்ய கடவபடி இலச்சியத்து "உடையாரானூறு" வோஜனை உடைய னாயனாற்க்கு இவூரில் பெரிஏரியில் வாராப் பற்றில் நன்ச்சைய் நிலத்தில் முதல் தரத்தில் தாயிலும் நல்ல பெருமாளுக்கு 10ஆவது முதல் அடைத்த நிலம் ஆயிரத்தஞூறும் அனைத்தாயமும் இழக்க பூசைக்கும் திருப்பணிக்கும் குடுத்தோம் சந்திராதித்தவரையும் இறையிலியாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க இவை #வாணகோவரையன் எழுத்து விழுப்பாதராயன் எழுத்து:"

இக்கல்வெட்டு “தாயிலும் நல்ல பெருமாள்” என்ற வாணகோவரையர் அரசரின் 10 வது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்ட சாசனம்.

இதே அரசர் தான் அன்றைய மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கிய ஆறகளூரில் சிவன் கோவிலை கட்டியுள்ளார். காரணம் அங்குள்ள சிவனுக்கு அரசர் பெயரான “தாயினும் நல்ல பெருமாள்” ஆகும்.

விலாடராயன்,   குருகுலராயன் ஆகிய இரு அதிகாரிகள், இக்கோவிலின் திருப்பணிக்கும்,பூசைக்கும் பெரிய ஏரி வாரப்பற்றில் நன்செயில் 1500 குழி (5 ஏக்கர்) நிலம் கொடுத்துள்ளனர்.

இந்த ஆணையை விழுப்பாதரையன் எனும் அதிகாரி நடைமுறைப்படுத்தி உள்ளான்.

        +++++++

கல்வெட்டு_27;
(மதுரை_கிபி_1226)


பரதேசிகளுக்கு பிராசதம் அளிக்க சுந்தரபாண்டிய பிரமாதிராசன் ஒரு
மா நிலக்கொடை வழங்கியதில் கையொப்பம் இட்டுள்ள  "குருகுலராயன் அகமுடையார்"
கல்வெட்டு.

         +++++++

கல்வெட்டு_28;
( முகப்பேர்_சென்னை )

தொல்லியல் அறிஞர் திரு எஸ்.இராமச்சந்திரன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட கல்வெட்டு.

இருப்பிடம்: சந்தான சீனிவாசப் பெருமாள் கோயில் அர்த்த மண்டபத் தென்புற வெளிச்சுவர். இரண்டு துண்டுகளாக உள்ளது.

காலம்: கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகலாம். (சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 13-ஆம் ஆட்சியாண்டு)

வாசகம்:

1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சட பன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தர பாண்டிய (தே)வர்க்கு யாண்டு யஙு4 – ஜயங்கொண்ட

2. சோழ மண்டலத்துப் புழற் கோட்டமான விக்கிரம (சோழ) வளநாட்டு அம்பத்தூர் நாட்டு

3. விசைய நுளப்பியாற்று இளந்திரு வேங்கட முடையானு (க்குஇ)வ்வூர் ஆறை வேளான் அம்பத்தூர் நாட்டு

4. மூவேந்த வேளான் வரந்தருமாளான குருகுலராய(ர்) வைத்த சந்தி விளக்கு இரண்டுக்கு

5. விட்ட பசு நாகு ஆக உரு எட்டும் கைக்கொண்டு இத்திருவிளக்கு இரண்டும் சந்திராதி

6. த்த வரை ஏற்றக் கடவோம் இக்கோயில் நம்பிமா(ரே)ம் இத்திருவிளக்கு ஸ்ரீ வைஷ்ணவ ரக்ஷை

7. திருவிளக்கேற்ற இக் குருகுலராயர் இட்ட திருக்குத்தி வி(ளக்கு)… னால் எடை…

முழு விவரம் உள்ள லிங்க், 👇👇

http://old.thinnai.com/?p=20409162

           ++++++++

கல்வெட்டு_29;
( நாகை மாவட்ட கல்வெட்டு தொகுதி)

"பனையூர் நாட்டு ஆனாங்கூர் உடையான் குருகுலராயன் மகன்" என்ற பெயருடையவர் தொடர்பாக நிலம் விற்றுக்கொடுக்கப்பட்ட ஓர் விவரம் கூறும் கல்வெட்டு.

இக்கல்வெட்டை பற்றிய மேலதிக தகவல்;

"பனையூர் நாட்டு ஆனாங்கூர் உடையார் குருகுலராயன்"


          +++++

கல்வெட்டு_30 & 31;

"திருநெல்வேலி உடையார் குருகுலராயன்"

"சேந்தப்பிள்ளை குருகுலராயன்"

ஆகிய இருவரை கூறும் திருச்சி லால்குடி கல்வெட்டு,


       ++++++

கல்வெட்டு_32;

"கல்லிடைக்குறிச்சி குருகுலராயன்" கல்வெட்டு,


           ++

கல்வெட்டு_33;

குருகுலராயர்,வில்லவராயர் ஆகியாேரை கூறும் கல்வெட்டு,

( சந்திரகுல அரச மரபு அல்லாத "பரத்வாஜ்" காேத்திரமான "பல்லவ" காேபெருஞ்சிங்கனிடம் நிர்வாக முதலிகளாக இருந்த "சந்திரகுல" அரச குடியான "அத்ரி" காேத்திர வாணர் குலத்தவரை குருகுலராயன்,வில்லவராயன் என்கிறது கல்வெட்டு)

இங்கு ஓர் விடயத்தை நினைவில் காெள்ள வேண்டும்,பல்லவ காேப்பெருஞ்சிங்கன் சந்திர குல அரச மரபினன் இல்லை காரணம் பரத்வாஜ் காேத்திரம், ஆனால் குருகுலராயர்களான வாணர்கள் சந்திரகுல ஷத்திரியர்களாவர்,,,


"வில்லவராயர்" வாணர்குல சுந்தரதோளுடையானுக்கு நந்தா விளக்கு வைத்த திருப்பதி கல்வெட்டு,

வாணர் குல குருகுலத்தவர் பெயரே வில்லவராயர்,இவர் பற்றிய முழு விவரங்களை தனிக்கட்டுறையில் காண்பாேம்.

    

         +++++

கல்வெட்டு_34;

(சிவகங்கை_திருபுவணம்_

நெடுங்குளம்)


மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் அவரின் முதன்மை அமைச்சர் "குருகுலராஜன்" என்ற விவரத்தை கூறும் சிவகங்கை கல்வெட்டு தகவலை இனையத்தில் வெளியிட்டுள்ள தினமலர் தளம்;

அதன் லிங்க், 👇👇

https://www.dinamalar.com/news_detail.asp?id=2391399

               +++++++


கல்வெட்டு_35;

அரையன் மூவாயிரத்தொருவன் alias Gurukularayan கல்வெட்டு.. 

+++


கல்வெட்டு_36;

இங்கைகுடையார் கருணாகர தேவர் Alias குருகுலராயர் எனப்படும் நன்னிலம் தாலுகா கல்வெட்டு,

++


கல்வெட்டு_37;

சிவகங்கை மாவட்ட திருமலை பாகம்பிரியாள் கோவிலில் உள்ள குருகுலராயர் கல்வெட்டு,

+++

கல்வெட்டு_38;
History of Andhra என்ற நூலில் இருந்து "தொண்டைமண்டல குருகுலராயன்" கல்வெட்டு தகவல் கீழே,
 
புலியூர் கோட்டத்தின் தொண்டைமன்டல குருகுலராயன் கல்வெட்டை தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 வெளியிட்டுள்ள படம்;
அதே கல்வெட்டை காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டு தொகுதி_3ம் வெளியி்ட்டுள்ளது;
+++

கல்வெட்டு_39;
திருப்பட்டூர் ஐயனார் கோவிலில் கிபி_1277 "சாத்தனூர் உடையான் குருகுலராயன்" எனும் கல்வெட்டு.. @ துரைசுந்தரம் கல்வெட்டு ஆய்வாளர் கோவை..
++++
கல்வெட்டு_40;

"பாண்டிய மண்டலத்து செவ்விருக்கை நாட்டு சக்கரபாணிநல்லூர் அரையன் விரதமுடித்தானான குருகுலராயன்" எனப்படும் கல்வெட்டு,
++++

கல்வெட்டு_41;

மாயவரம் மாவட்டம் ஆத்தூர் சொர்ணபுறீஸ்வரர் கோவிலில் 12 ஆம் நூற்றாண்டு குருகுலராயர் கல்வெட்டு,
+++

கல்வெட்டு_42;
மாயவரம் மாவட்டம் மேலப்பாதி ஈஸ்வரர்கோவில் 11 ஆம் நூற்றாண்டு குருகுலராயர்  கல்வெட்டு,

+++

கல்வெட்டு_43;
குடுமியான்மலை குருகுலராயன் கல்வெட்டு,,
+++

கல்வெட்டு_44,

அரியலூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி_1 எனும் இல.தியாகராஜன் ஐயா அவர்களின் நூல்தொகுப்பில் எறக்குடி கல்வெட்டு பக்கம் 89ல் "குருகுலராயர்" கல்வெட்டு,
+++

கல்வெட்டு_45,

வரலாற்று அறிஞர் திரு நீலகண்ட சாஸ்திரி அவர்களின் THE COLAS நூலில் இருந்து "கருப்பூர் உடையான்  பெரியாழ்வானான குருகுலராயன்" கல்வெட்டு தகவல்..
++++

கல்வெட்டு_46

நடனகாசிநாதன் அவர்களின் பெருமுக்கல் கல்வெட்டுகள் தொகுதியில் "குருகுலராயன்" "குருகுலராயன் ஆதிபுருஷன்" எனும் இருவர் ஒரே கல்வெட்டில் அலுவலர்ககளாக சாட்சி கையொப்பம் இட்ட கல்வெட்டுவிவரம்..
கல்வெட்டு_47

பெருமுக்கல் கல்வெட்டில் "குருகுலத்தரையன்" என்ற மற்றொரு கல்வெட்டு விவரம்..
+++

கல்வெட்டு_48;

அழகர் கோவிலில் "குருகுலத்தரையன்" 


++

கல்வெட்டு_49;

அழகர் கோவில் கல்வெட்டுகள் தொகுப்பில் இருந்து நிலக்கொடை வழங்கிய கல்வெட்டில் குருகுலராயன்..

+++

கல்வெட்டு_50,

அழகர்கோவிலில் உள்ள முக்கியமான குருகுலராயன் கல்வெட்டு ஐயா தொ.பரமசிவம் அவர்களின் அழகர்கோவில் என்ற நூலில் இருந்து,

"அழகர்கோவில்" என்ற நூலில் தொ.பரமசிவம் அவர்கள் கூறிய விவரத்தின் கல்வெட்டு படம்;👇👇

++++

அழகர் கோவிலில் மட்டும் 4 குருகுலராயன் கல்வெட்டுகள் உள்ளது,அவற்றில் இங்கு 3 கல்வெட்டை பதிந்த நிலையில் "குருகுலராயன் கல்வெட்டுகள் 50" என்ற கல்வெட்டு விவர இக்கட்டுறை நிறைவுற்றது. எனினும் எஞ்சிய அழகர் கோவில் குருகுலராயன் கல்வெட்டு ஒன்றையும் இங்கு பதிந்து கட்டுறையை முடிக்கிறோம்..


++

எங்கள் தேடல் பயணத்தில் கிடைக்கும் "குருகுலராயன்" கல்வெட்டுகள் யாவும் இதே தலைப்பிலான பாகம்_3 கட்டுறையில் தொடரும்,,

நன்றி நன்றி நன்றி..



@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
குருகுல மக்கள் இயக்கம்,
( 9500888335 )







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக