இதுநாள் வரையான அகமுடையார் சமூக ஆய்வு தளத்தில் உள்ள எம் முன்னவர்கள் நம் "மரபு" பற்றி தனிப்பட்ட நமக்கு அவசியமான எதை கற்றுத்தரவில்லையோ? எதனால் பல பொது விவாதங்களில் இது தொடர்பாக விவாதிக்க முடியாத சூழல் உருவானதோ? அதை எல்லாம் தேடி அலைந்து, எமது பர்வதராஜகுல அகமுடையார் உறவுகளுக்கு என்னென்ன சந்தேகமெல்லாம் தோன்றியதாே? நாம் எந்த திசையை இதுநாள்வரை தவறவிட்டோமோ? என்ற இவை அனைத்தின் தொடர்பாக கற்றுணர்ந்த விடயங்களை 100 பிரம்மாஸ்திர கட்டுரைகளாக எழுத வேண்டுமென்பது தனிப்பட்ட என் திட்டமிடல். ஏற்கனவே "குருகுலராயன் அகமுடையார்" எனும் இத்தளத்தில் இரண்டு பதிவை பதிந்திருக்கிறோம். இங்கே, வம்சாவழி கல்வெட்டு எனில் என்ன? அதன் பயன் என்ன? என்பதே மூன்றாவதான இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
வம்சாவழி கல்வெட்டுகள்:
கடந்த இரு கட்டுரைகளில் இந்திய அரசகுலங்கள் யாவுமே சந்திர- சூரிய குலங்களில் அடங்குவர் என்பதையும், சந்திர குலத்தவர் தங்களின் வரலாற்று இதிகாசமான "மகாபாரதத்தில்" தான் யார் என்பதை கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் கொடிவழி என குறிப்பர் என்ற விவரங்களையும் கண்டோம் அல்லவா! அதன்வழி சில அரச வம்ச மற்றும் கொடிவழி கல்வெட்டுகளை இனி காண்போம்.
- பாண்டியர் (சந்திரகுலம்)
- மாவலி வாணர் (சந்திரகுலம்)
- ராஷ்டிரகூடர் (சந்திரகுலம்)
- சாளுக்கியர் (சந்திரகுலம்)
- பல்லவர்,
ஆகிய ஐவரை உதாரணங்களாக காணப்போகிறோம்.
உதாரணமாக ஒவ்வொரு அரசிற்கும் அதன் பழமை, பெருமை, போர்வெற்றி, வாழும் திசை, செல்வம் ஆகிய பல்வேறு காரணிகளுக்கான பலநூறு கல்வெட்டுகள் கிடைக்கும். ஆனால் எந்த அரசும் தன் வம்சாவழியை, கொடிவழியை மிக சொற்ப அளவிலான கல்வெட்டாகவே பதிவர்; அங்கனம்,
1.பாண்டியர் (சந்திரகுலம்):
சந்திரகுல வரலாற்றில் பாண்டியர் மகாபாரத நாகன் "நகுசன்" மகன் "யயாதி" வம்சத்தவர்_பிறகானவர் என்று தன்னை திருப்பதி கல்வெட்டில் பதிந்துள்ளனர். படம் கீழே,
1.1. ஆயிரத்து இருநூறு(1200) வருடங்களுக்கு முந்தைய பாண்டியரின் நேரடி பார்வையில் எழுதப்பட்ட "வேள்விக்குடி" செப்பேட்டில் தம் கொடிவழியாக,
- சந்திரன்(கிரகம்)
- புதன்(பாண்டியன்)
- புரூரவஸ்(பாண்டியன்)
- ஆயுஸ்,
- நாகன் நகுஷன்,
- யயாதி
என்று கூறப்பட்ட குலவரிசையில் சந்திரன்(கிரகம்) மகன் புதனே(கிரகம்) பாண்டியனாக பிறந்தான் என கூறப்பட்டு செப்பேட்டில் பதியப்பட்டுள்ளர். இதன்படி நாகன் நகுஷனே பாண்டியன் என்றாகிறது,எனில் யயாதியும் அவர் மகன் ஐவரும் பாண்டிய மரபினராகிறர் மகாபாரதம் முழுவதுமே பாண்டியர் கதை என்பதும் சான்றுடன் உறுதியாகிறது. படம் கீழே;
தமிழரில் முக்கிய வேந்தரான பாண்டியரும் தன்னை இந்திய அளவிலான சந்திரகுல இதிகாச மகாபாரதத்தில் தனக்கான கொடிவழியை கூறியுள்ளனர் என்பதை இங்கு நாம் நினைவில்கொள்ள வேண்டும். இச்சான்றுகள் பாண்டிய அரசின் பழமைக்கும் சான்றுகளாகிறது.
2.மாவலி வாணாதிராயர்:
மூவேந்தர்களுக்கும் முற்பட்டவராக தென்னிந்தியாவையே ஆண்ட "அசுர" குலத்தவரான வாணர்கள் தன் முன்னவர் "மாவலி" அரசர் என்று தெளிவாக வம்சாவழி கல்வெட்டு வாயிலாக கூறியுள்ளனர்,
படம் கீழே;
இவ்வாணாதிராயர்களே "குருகுலராயர்" என்றும்,
"பரத வர்மன்" என்றும், ”ஆரிய சக்கரவர்த்தி” என்றும் பல்வேறு கல்வெட்டுகளில் கூறப்படுகிறர் என்பதையும், இவர்களது வம்சத்தவரே "சேதிராயர்" எனப்படும் நடுநாட்டை ஆண்ட ”மலையமான்” என்பதாக உள்ள கல்வெட்டு விவரங்களை இத்தளத்தின் முந்தைய இரு பதிவுகளில் வாசிக்க வேண்டுகிறோம்.
குருகுலராயர், சேதிராயர், ஆரியசக்கரவர்த்தி உட்பட வாணர் மலையமான் அரச குடும்ப கல்வெட்டில் கூறப்படும் பெயர்களின் பலவும் "நாகன்" நகுஷன் மகன் யயாதியின் 5 மகன்களில் புரு(குரு) வம்சத்தவர் பெயர்களாகும். அக்கல்வெட்டுகள் யாவும் அசுரகுலத்தின் கொடிவழியை நிறுவும் சான்றுகளாகும்.
3.ராஷ்டிரகூடர்:
இவர்கள் தம்மை சந்திர குலத்தை சேர்ந்த "நாகன்" நகுஷன் மகன் யயாதி மகன்களான 5 பேரில் "யது" வம்ச யாதவ குலத்தில் கண்ணனின் பேரன் அநிருத்தனையும் அவருக்கு பிறகானவர் என்றும் கூறியுள்ளர், கண்ணன் பேரன் அநிருத்தனின் மனைவி வாணாசுரன் மகள் "உஷை" என்பது குறிப்பிடதக்கது. படங்கள் கீழே;
4.சாளுக்கியர்:
இவர் வாதாபி சாளுக்கியர் என்றும் கூறப்படுவர்,"வாதாபி" என்பவர் அசுரர் ஆவார்,அசுர குலத்தை சேர்ந்த சாளுக்கியர் தம்மை யயாதி மகன்கள் ஐவரில் புரு( குருபரதன்) வம்சத்தில் கௌரவர் பாண்டவருக்கு பிறகான "உதயணன்(குரு)" வழியில் வந்தவர்களென கொடிவழி கல்வெட்டில் கூறுகின்றனர். அதாவது அசுரர்குருவம்சம்தொடர்ச்சி என்று தன் தலைமுறை பெயர்வரை விளக்கியுள்ளர்.
அசுரரான சாளுக்கியர் புரு(குரு) வம்சம் என பதிவு செய்துள்ளர் என்பதும்,மற்றொரு அசுரரான மாவலி வாணரை கல்வட்டுகள் குருகுலராயர் என்பதும் என அசுர குலத்தவரே "நாகன்" நகுஷனின் மகன் யயாதியின் வாரிசு ஐவரில் அங்கீகரிக்கப்பட்ட அரச மரபினரில் வருகிறர் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். (புரு வம்சமே_குருவம்சம் அவ்வம்ச பெயரே "பரத" குலம் அதன் வழி உருவான பெயரே பாரத நாடு). மற்றும் அசுரகுல இச்சாளுக்கிய மரபினரே முதலாம் சோழ குலோத்துங்கன் தொடங்கி பிற்கால அனைத்து சோழரும்.
கொடிவழி கல்வெட்டு (13)படங்கள் கீழே;
5.பல்லவர்:
இதுவரை சந்திரகுல அரச இனத்தவர் தன்னை சந்திரகுல இதிகாச மகாபாரதத்தில், தான் இன்னார் எனக்கூறிய "நான்கு" உதாரணங்களை மேலே கண்டோம். மேல் கூறிய இந்நால்வரும் சந்திரகுல அரச மரபினரான "நாகன்" நகுஷன் மகன் யயாதியின் மக்கள் ஐவரில், யதுவம்சம் என்றோ, குருவம்சம் என்றோ தெளிவாக தன் கொடிவழி வம்சாவழி கல்வெட்டுகளில் கூறியுள்ளனர்.
இதில் பல்லவர் சற்று விசித்திரமானவர். ஆம்! காரணம், சந்திரகுல வேந்தன் "நாகன்" நகுஷனின் மகன் யயாதியின் மக்கள் ஐவரில் எவரையும் பல்லவர் தன் கொடிவழியாக கூறாது பிற்காலத்திலான கௌரவர் பாண்டவர் காலத்தின் "பிராமணர்" பரத்வாஜர் வழிவந்த அஸ்வத்தாமனை தன் வம்ச முன்னோராக கூறுகின்றனர். இதனையும் ஒரு இடத்தில் இல்லாது பல்வேறு கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் என எட்டுக்கும் மேலான இடத்தில் இக்கொடிவழியை ஒரே விதமாகவே தகவலை பதிவு செய்துள்ளனர்.
சான்றாக இரண்டு கல்வெட்டை காண்போம்; படம் கீழே.
பல்லவரின் இவ்விவரங்களின் படியும், மேலே கூறப்பட்ட நால்வரின் விவரங்கள் படியும் பொருத்திப்பார்த்தால் ஓர் விடயத்தை நன்கு உணரலாம். பல்லவர் தம்மை பாண்டியர் வம்சாவழி அல்ல, சோழர் வம்சாவழியும் அல்ல, சேரர் வம்சாவழியும் அல்ல, யது குலமும் அல்ல, புரு(குரு பரதன்) வம்சமும் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தனித்து "பரத்வாஜ்" கோத்திரம், பிராமணன் அஸ்வத்தாமன் மரபினன் என ஓர் பிராமணனை கூறியுள்ளனர். எனவே தான் இன்றளவும் பல்லவரை தமிழராக கூட ஆய்வாளர் எவறும் ஏற்கவில்லை.
இனிஇக்கட்டுரையின் தலைப்பிற்கு வருவோம். இதுவரை நாம் அறிந்ததையும் என்னவென்ற மீளாய்வுக்கு வருவோம்.
01. வம்சாவழி - கொடிவழி கல்வெட்டுகள் எனில் சந்திரகுல அரசர்கள் சந்திரகுல இதிகாசமான மகாபாரதத்தில் தாம் யார் என கல்வெட்டு மற்றும் செப்பேடு வழியாக, தன் வம்சாவழிகள்(மக்கள்) பற்றியும் அறியவேண்டி கூறியுள்ளதை மேலே நான்கு சான்றுகளின் வழியே அறிந்தோம்.
02. பல்லவரும் தம்மை சந்திரகுல வரலாற்றில் தாம் யார் எனக்கூறியுள்ளார். ஆனால், அவர் சந்திரகுல அரசமரபினர் எவரும் அல்ல என்பதை அறிந்தோம்.
03. சான்றுள்ள இத்தகவல்கள் வழி எவர் "யது" வம்சத்தவரோ, அவர் புரு(குருபரதன்) வம்ச வரலாற்றை உரிமை கோர இயலாது. எவர் "புரு"(குருபரதன்) வம்சத்தவரோ, அவர் யது வம்ச வரலாறை உரிமை கோர இயலாது. எவர் ”பல்லவ” வம்சத்தவரோ அவர் யது மற்றும் புரு(குரு) என்ற இரு வம்சங்களின் வரலாறுகளையும் உரிமை கோர இயலாது. ஏனெனில் ஒரு சொத்தின் உரிமைக்கான உயில் போல கொடிவழி வம்சாவழி கல்வெட்டுகள் சான்றுகளாக அரசமரபுகள் வெட்டியுள்ளனர் என்பதை அறிந்தோம்.
படம் கீழே,
(சந்திர குலம் வேறு, பல்லவர் வம்சம் வேறு- ஒப்பீட்டு கல்வெட்டு)
எனவே இக்கட்டுரையின் வழியே உறவுகள் அனைவரும் உணரவேண்டியது, ஒருவரின் சொத்துக்கு ஆதாரம் தம் முன்னோரின் உயில்; அது போல பல்வேறு கல்வெட்டுகள் அரச மரபினருக்கு இருப்பினும், கொடிவழிவம்சாவழி கல்வெட்டுகளே, அவ்வரச மரபினரின் வம்சாவழியில் வந்த மக்களுக்கு தம் முன்னோர் தமக்கு எழுதிவைத்த உயில் என்பது போன்றதாகும. எனவே அவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டியதும், பாதுகாத்து போற்றப்படவேண்டியதும் ஒவ்வொரு அரசகுலத்து வம்சாவழிகளின் முதற்கடமையாகும்.
குருகுலராயன்அகமுடையார்
குருகுல மக்கள் இயக்கம்.
(9500888335)