வியாழன், 3 அக்டோபர், 2019

குருகுலராயன் அகமுடையார் உறவுகளே!


தமிழகத்தின் பல சாதியினரும் தமிழக அரச மரபில் அனைவரையும் தாங்களே என உரிமை உடையவராக கூறி தங்களுக்கான ஒரு "குல" அடையாளத்தை தெளிவாக கூறாதும், அதற்கு பாெருத்தமில்லாத சான்றுகளையும் தன் சான்றாக காட்டிக் காெண்டு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் வேளையில்,  குருகுலராயன்_அகமுடையார் என்ற தெளிவான குல அடையாளம் மற்றும் கல்வெட்டு, தமிழக சாதி அரசாணை என தெளிந்த நீராேடையாக உள்ள நம் இனத்தின் வரலாறை தகுந்த ஆதாரமுடன் எழுத துவங்கப்பட்டதே இந்த தளமாகும். இங்கனமான தெளிவான அடையாளங்களில் குழப்பமில்லாமலும் பிற இனத்தவர் எவருக்கும் இடையூறு இல்லாமலும் நாம் பயணிக்க நாம் நமக்கு சான்றுள்ள அரச மரபினை முதலில் புரிந்துகாெள்ள வேண்டியது அவசியமாகும். அவை,

1.மாவலி வாணாதிராயன்,


2.மலையமான்,


ஆகிய அரச குலங்களுக்கான சான்றுகளும் வாழ்வியலும் அவ்வரச மரபினரின் பெயருமே நம் இனப்பெயர் என்பதற்கான பல்வேறு சான்றுகள் நமக்குண்டு என்பதை நம்மினத்தவர் பலரும் அறிவர். அவற்றிற்கான மேலான தகவல்களையும் நம்மினத்தவர் பலரும் அறிய தேவையான அனைத்து சான்றுகளையும் தாெகுத்து கூறுவதே இத்தளத்தின் முக்கிய நாேக்கமாகும். இதற்கு முதலில் நம் அரசர் ”மாவலி வாணாதிராயரும், மலையமானும்” ஒருவரே என்ற சில சான்றுகளையும் கல்வெட்டுகளையும் இத்தளத்தின் முதல் பதிவான இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



























மாவலி வாணாதிராயனின் பெயர் "குருகுலராயன்" என்பது வரலாறு. இதற்கான சான்றுகள் அடுத்த கட்டுரைகளில் பதியப்படும். எனவே வாணர் குலத்து மலையமானும் குருகுல சேதிராயனே என்ற புரிதல் இக்கட்டுரையின் வாயிலாக புரிதலை ஏற்படுத்திருக்குமென நம்புகிறோம்.


மலையமான்கள் வாணர் குலத்தவர்களே..

மலையமான் அரசர்கள் "வாணர் குலத்தை" சேர்ந்தவர்களே என்பதை சோழர் கால சான்றுகள் (மேல் கூறப்பட்ட படங்கள்) அனைத்துமே மிகத் தெளிவாக தெரிவிக்கின்றன. "வாணர் குலம்" என்பது #அசுர_குலமாகும். அவற்றின் விவரங்கள்,


1. திருக்கோயிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டுகள், மலையமான்களை "வாண குல ராயன்" என்றும், "வாணகோவரையன்" என்றும், "சேதியராயன்" என்றும்,
"அத்தி மல்லன்" என்றும், "வாண குல ராய நாடாழ்வான்" என்றும் தெரிவிக்கின்றன :-



2. "கிளியூர் மலையமான் அத்திமல்லனான எதிரிலிசோழ வாண குல ராயனேன்"
(S.I.I. Vol-VIII, No.1022).


3. "கிளியூர் மலையமான் அத்திமல்லனான எதிரிலி சோழ வாணகோவரையனேன்"
(Line- 3 of A.R.E, No.135 of 1934-35).


4. "எங்கள்ளைய்யன் மலையமான் மலையனான குலோத்துங்க சோழச் சேதியராயன்"
(Line- 4 & 5 of A.R.E, No.135 of 1934-35).


5. "வாணகுலராய நாடாழ்வான்"
(Line- 8 of A.R.E, No.135 of 1934-35).


6. "கிளியூர் மலையமான் மலையனான குலோத்துங்க சோழ வாணகுலராயன் மகன் மலையன் அத்திமல்லன்னான எதிரிலி சோழ வாணகுலராயனேன்"
(Line-10 & 11 of A.R.E, No.135 of 1934-35).


7. திருவண்ணாமலை இராஜன்தாங்கல் அருகே உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டுகள், மலையமான்களை "#சேதியராயர்கள் வம்சம்" என்றும் "மலையன் வாணகோவராயன்" என்றும் தெரிவிக்கின்றன.


8."கிளியூர் மலையமான்களான சேதியராயர்கள் வங்கசம்" (Line-11 to 13 of Avanam-24, pages- 31 & 32).


9."இரையூரனான இராசராச சேதிராய்யர் மகன் சேணையக் கொண்டானான தனியாண்மை வல்லவனேன்"
(Line-18 to 21 of Avanam-24, pages- 31 & 32).


10."கிளியூர் மலையமான்களில் அழகிய நாயனான வீரராசேந்திர சேதியராயர் மகன் மலையனான வாணகோவராயனேன்"
(Line- 7 to 11 of Avanam-24, pages- 32 & 33).


11."மலையன் வாணகோவராயனேன்"
(Line- 17 & 18 of Avanam-24, pages- 32 & 33).


மேற்குறிப்பிட்ட அடிப்படை சான்றுகளே வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதாகும். எனவே மலையமான்கள் "வாணர்” குலத்தவர்கள் என்பதும், ”அசுர” குலத்தவர் என்பதும் ”குருகுலராயர்”கள் என்பதும் நிறுவப்படுகிறது. மேலும், இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தென்னிந்திய கல்வெட்டு தொகுதி-8 ல் வரும் கல்வெட்டு எண்-1022 தவிர மற்ற கல்வெட்டுகள் அனைத்தும் கல்வெட்டியல் அறிஞர் முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டதாகும்.




#அசுரன், #அகம்படி, #அகம்படியார், #அகம்படி_உடையார், #உடையார், #வெட்டு_மாவலி, #வாணாதிராயன், #மலையமான்,
#சேதிராயன், #மகதராயன், #வத்தராயன், #விராடராயன்,
#துண்டராயன், #பர்தவராஜன், #அகம்படவன், #சிவன்_படவன்,
#பரத_வர்மன், #ஆரிய_சக்கரவர்த்தி, #ஐநூற்றுவர்(பதினென் விஷயத்தார்), #வருண_வம்சம், #குருகுல_சேதிராயன், #குருகுலராயன், #ஆதியரசன்

 - இவையாவும் நம்மினத்தை கல்வெட்டுகள் &செப்பேடுகள் வாயிலாக குறிக்கும் பல்வேறு பெயர்களாகும்.


--

"குருகுலராயன்"
#ஆதியரசன்_அகமுடையார்
குருகுல மக்கள் இயக்கம்
(9500888335)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக