வெள்ளி, 4 அக்டோபர், 2019

குருகுலராயன் யார்?



எந்த ஒரு இனமும் தன் இனத்தின்  பெயர்கள் அனைத்திற்குமான வரலாற்றை அறியாமல் இருந்தால் அப்பெயருக்கான வரலாற்றிற்கு உரிமையில்லாதவர் அவ்வினத்து பெயரையும் அதன் சார்ந்த வரலாற்றையும் அபகரித்தாலும் அதனை உரிமையுடையோர் புரியாமல் தன் பெயரை இழந்து, தன் அடையாளத்தை இழந்து அநாதையாவார். இது மானுட யதார்த்தம், எனவே வாணாதிராயன், மலையமான் அரசுக்கு மட்டுமே உரிமையான பெயரான "குருகுலராயன்" யார்? இப்பெயர் ஏன் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது இவ்வரச மரபினரின் இனத்தவரான "பர்வதராஜகுல அகமுடையார்" நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

சங்கத் தமிழ் மூவேந்தர் ஆட்சி காலம் நிறைவுற்று சங்கம் மறுவிய காலத்தில் "பல்லவர்" ஆட்சி தொடங்கியதை அனைவரும் அறிவர். பல்லவர்கள் சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுத்தவர்களாவர். நாவலந்தீவு எனப்படும் நம் பாரத நாட்டின் அனைத்து அரச குலங்களுமே சந்திர -  சூரிய குலம் எனும் இரண்டில் 90% அடக்கமாகும்.

"சந்திரகுல" வரலாறை கூறும் மாபெரும் இதிகாசம் மகாபாரதம். "சூரிய குல" வரலாறை கூறும் மாபெரும் இதிகாசம் இராமாயணம்.

நாவலந்தீவின் அனைத்து பகுதி சந்திர -  சூரிய அரசுளும் தன்னை மகாபாரதம் மற்றும் இராமாயணத்தில் இன்னார் மரபு என குறித்துக்கொள்வது கல்வெட்டுகள், செப்பேடுகள் துவங்கிய பல்லவர் மற்றும் பல்லவர் காலத்திற்கு பிறகு ஒரு மரபாக நடைமுறையில் இருந்தது. இதில் சங்கம் மறுவிய கால "பல்லவர்" தன்னை சந்திரகுல மகாபாரத வரலாற்றில் "பிராமணன்" அஸ்வத்தாமன் மரபு என்று தனது வம்சாவழி கல்வெட்டு, செப்பேடுகளில் ஐந்துக்கும் மேலான இடத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழியில் இக்கட்டுரையின் நோக்கமான "குருகுலராயன் யார்" என்பதை நாம் அறிய மகாபாரதத்தின் முன்னுறைகளை காணவேண்டியது அவசியமகிறது. காரணம் நம்மினத்தின் (அகமுடையார்) ஆயிரத்திற்கும் மேலான கல்வெட்டுகளோடு தொடர்புடையது இவை என்பதால் அறியவேண்டியது மிக அத்தியாவசியமாகிறது. "சந்திரகுல" வரலாறை கூறும் முக்கிய இதிகாசம் மகாபாரதம், இந்துக்கள் பெரும்பாண்மையான நாவலந்தீவில்(இந்தியா) இவை முதன்மையாக போற்றப்படுவதற்கு காரணம் "விஷ்னுவின்" தசாவதரங்களில் ஒன்றான "கண்ணனின்" அவதாரமும் நடந்த கதை இது என்பதால் ஆகும். மேலும் "கௌரவர் பாண்டவர்" எனும் சகோதர யுத்தத்தை கொண்டது இது என்பதாலும் பாரத நாட்டிற்கு பெயர் தந்த "பரதன்" பெயரை தந்த இதிகாச வரலாறு ஆதலாலும் இக்கதைகளை அறியாதார் இந்தியாவில் எவறும் இல்லை என்றே கூறலாம். எனவே "சந்திர" குலத்தவரான, "குரு"குலத்தவரான வாணாதிராயர், மலையமான் மரபினரான "பர்வதராஜகுல அகமுடையார்" கட்டாயம் இக்காவியத்தின் அடிப்படை வரலாறை அறிய வேண்டும்தானே?

சந்திர குல "நாகன்" நகுஷன் மகன் யயாதியின் 5 மகன்களுக்கான பங்காளிச்சன்டை யில் தொடங்குகிறது மகாபாரதம்.


யார் யயாதி?
1.சந்திரன்(கிரகம்)

2.சந்திரன் மகன் புதன்(கிரகம்)

3.புதன் மகன் புரூரவன்,

4.புரூரவன் மகன் ஆயுஸ்,

5.ஆயுஸ் மகன் "நாகன்" நகுஷன்,

6.நாகன் நகுஷன் மகன் யயாதி.

யயாதியின் 5 மகன்கள் யார்?

நாகன் நகுஷன் மகன் யயாதிக்கும் அசுரர் "குலகுரு" சுக்கிராச்சாரியார்(பிருகு_பார்கவ) மகள் தேவயானிக்கும் பிறந்தவர் இருவர்

1.யது,
2.துர்வசு.

யயாதிக்கும் "விருசபர்வன்" எனும் அசுரர் மகள் சர்மிஷ்டைக்கும் பிறந்தவர் மூவர்

1.அநு,
2.திருஹ்யு,
3.புரு.

ஆக "நாகன்" நகுஷன் மகனான யயாதியின் 5 மகன்கள்

1.யது,
2.துர்வசு,
3.அநு,
4.திருஹ்யு,
5.புரு ஆகியோர் ஆவர்,

இவர்களின் பங்காளி சன்டையும் அதன் தொடர்சியுமே மகாபாரதம்.
ஏன் பங்காளிச் சண்டை எனில் "நாகரின" யயாதி அரசர் சுக்கிராச்சாரி எனும் "பார்கவ முனிவர்" மகள் தேவயானியை மணம் முடித்த போது "தானவ" மன்னனும் "அசுரனுமான" விருஷபர்வன் மகள் "சர்மிஷ்டை" தன் தோழி தேவயானிக்கு துணையாக சென்றபோது யயாதி சர்மிஷ்டை இடையே காதல் மலர்ந்து "மூவர்" பிறந்ததை அறிந்த தேவயானி தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் (பார்கவ_முனி) முறையிட அம்முனிவர் தன் மாப்ளை யயாதியை சபிக்க அவ்வரசருக்கு(யயாதி) முதுமை அடையாளம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு சாபவிமோசனம் கோரிய நிலையில் சுக்கிராச்சாரி எனும் பார்கவ முனிவர் உன் ஐந்து மகன்களில் ஒருவர் உன் முதுமையை ஏற்றால் உனக்கு இளமை திரும்பும் எனக்கூற,
யயாதி தன் ஐந்து மகன்களிடம் முறையிட நான்கு மகன்களோ அதை ஏற்க மறுத்துவிட்டனர்,அவர்கள்...

1.யது,
2.துர்வசு,
3.அநு,
4.திருஹ்யு,

ஆனால் ஒருவர் முன்வந்தார் அவரே ஐந்தாவது மகன் "புரு". இதனால் கோவமடைந்த யயாதி அரசர் தன் முதல் நான்கு மகன்களை சபித்தார். அதாவது தன் அரச வாரிசு ஐந்தாவது மகன் "புரு" மட்டுமே என்றும் ஏனையவர் எவரும் என் பேரரசின் அரச குல அங்கீகரிக்கப்பட்ட வாரிசல்ல, முடி சூடக்கூடாது என்றும் சபித்தமையால், முதல் மகன் "யது" ஆடு,மாடு மேய்கும் இடைத்தொழில் மரபினராக இடம்பெயர்ந்தும், சிற்றரசாகவும் மாற்றம் பெற்றனர்.

இரண்டாவது மகன் துர்வசு தனது ஐந்தாவது தலைமுறைக்கு மேல் வாரிசற்ற நிலையால் "புரு வம்ச" மரபில் சுவீகாரமாக தத்தெடுக்கப்பட்ட ஒருவரால் "புரு" வம்சமாகி அதில் கரைந்துவிட்டது. ( இத்துர்வசு வம்சமே அதாவது "புரு" வம்சமே தமிழ் மூவேந்தர் என்ற தனிக்கதை உண்டு)
முன்றாவது,நான்காவது மகன்களான 3.அநு,4.திருஹ்யு ஆகியோர் "மிலேச்சர்களாக" அதாவது பாரத நாட்டை விட்டு வடபகுதியில் நோக்கி வேளியேறினர் / வெளியேற்றப்பட்டனர்.
ஐந்தாவது மகன் "புரு" அவர் வம்சமான "பௌரவ வம்சம்" பாரத நாட்டின் முழுமையான மற்றும் "நாகன்" மகன் யயாதியின் அங்கிகரிக்கப்பட்ட "சந்திரகுல" அரச மரபாக மலர்ந்து நிலைத்தது.
எனவே "நாகன்" நகுஷன் மகன் ஐவரில், 1.யது(யாதவர்),
2.புரு(பௌரவர் பரதன் குரு கௌரவர் பாண்டவர்), இவர்களின் வரலாறும் வம்சாவழியுமே பாரத நாட்டின் அனைத்து சந்திரகுல அரசர்களின் கொடிவழியை கூறும் வரலாறாகும்.

இக்கட்டுரையின் துவக்கத்தில் "பல்லவர்" அரச மரபு தம்மை மகாபாரத வரலாற்றில் பிராமணன் "அஸ்வத்தாமன்" வழியினன் எனக் கூறியிருந்ததை எழுதியிருந்தேன் அல்லவா, அதே போல பாரத நாட்டின் அனைத்து சந்திரகுல அரச மரபும் தான் யார் என்பதை மகாபாரத வரலாற்றிலிருந்து தான் இன்னார் என பல நூறு கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் வழியாக (தன் வம்சாவழிகள் வரலாற்று "பாதுகாப்பிற்காக") பதிந்துவிட்டே சென்றுள்ளனர். 
எதற்காக பாதுகாப்பிற்காக என்கிறேன் எனில்,

1. எவர் அதாவது எந்த அரசர் மகாபாரத பிராமணன் "அஸ்வத்தாமன்" வழியினன் என்று கல்வெட்டு, செப்பேட்டில் கூறியுள்ளாரோ அவர் யது , புரு(பரதன்_குரு) வம்ச வரலாறை உரிமை கோர இயலாது.

2. எவர் அதாவது எந்த அரசர் தன்னை மகாபாரத யது(யாதவ) வம்சம் என்று கல்வெட்டு, செப்பேட்டில் கூறியுள்ளாரோ அவர் புரு(பரதன் குரு) மற்றும் அஸ்வத்தாமன் மகன் (பல்லவர்) வரலாறை உரிமை கோர இயலாது.

3. எவர் அதாவது எந்த அரசர் மகாபாரத புரு (பரதன் குரு) வம்சம் என்று கல்வெட்டு,செப்பேட்டில் கூறியுள்ளாரோ அவர் யது(யாதவ), அஸ்வத்தாமன் மகன் (பல்லவர்) வரலாற உரிமை கோர இயலாது.
இக்கட்டுறையின் தலைப்பு குருகுலராயன் யார் என்பதுதானே?



நாவலந்தீவின் சந்திர குல வரலாறு 1.யது(யாதவ), 2.புரு(பரதன்_குரு) இருவருடையது மட்டுமே என்று மேலே பார்த்தோம் அல்லவா?! அதில் 1.யது(யாதவ) குலத்தில் அவதரித்தவர் "கண்ணன்", 2.புரு(பரதன்_குரு) வம்சத்தில், குரு வம்த்தில் அவதரித்தான் சேதிராயன் உபரிசரவசுவும்,சிசுபாலனும் ஆவர்.
(அதாவது புரு(பௌரவ) வம்சத்தில் குரு வம்சத்தில் தோன்றியவர்)
ஒவ்வொரு சந்திர குல அரச மரபும் தன்னை மகாபாரதத்தில் யார் எனக்கூறுவது மரபு எனக்கூறினேன் அல்லவா,?

1."வாணாதிராயன்" மட்டுமே தன்னை கல்வெட்டுகளில் புரு(பரதன்_குரு) வம்சம் என்று "குருகுலராயன்" ஐம்பதுக்கும் மேலான கல்வெட்டுகளில் என பதிவு செய்துள்ளார்.

2."மலையமான்" மட்டுமே தன்னை புரு(பரதன்_குரு) வம்ச "சேதிராயன் என்று பதிவு செய்துள்ளார்.
இத்தளத்தில் முதல் பதிவாக குருகுலராயனான "வாணாதிராயன்" மற்றும் சேதிராயனான "மலையமான்" ஒன்றுதான் என்பதற்கு தேவையான கல்வெட்டு சான்றுகள் கட்டுரையாக பதியப்பட்டுள்ளதை படிக்காத உறவுகள் வாசிக்க வேண்டுகிறோம்.
நமது வரலாற்றை எந்த பிற அரச (சூரியகுல, பல்லவகுல) இனமும் அபகரிக்காமல், உரிமை கோராமல் இருக்க வேண்டுமெனில் இக்கட்டுரை "குருகுலராயன் அகமுடையார்" உறவுகளுக்கு மிக நன்றாக புரிய வேண்டும். ஏனெனில் இவை நம்மினத்திற்கு மட்டுமே உரிமையான ஆயிரத்திற்கும் மேலான கல்வெட்டுகளை நமக்கு பாதுகாப்பனதாக காக்கும் குல அடையாளமாகும்.
மீண்டும் வாசியுங்கள்,சந்தேகங்களை பதிவு செய்யுங்கள்.
அவை தொடர்பாக கட்டுரை எழுதப்படும். 


"குருகுலராயன் அகமுடையார்”
குருகுல மக்கள் இயக்கம்.
( 9500888335 )


2 கருத்துகள்:

  1. குருகுல மக்கள் என்று பரதவர் தான் அழைக்க படுகிறார்கள்.அதை வலை வீசு புராணம் மற்றும்கண்ணகி வழக்குரை காதை தெளிவாக சொல்லி உள்ளது. அடுத்து மகரம் மற்றும் மணிப்புறா மா மன்னர் அடுத்தி பரதவர் அடையாளம் தான். நீங்கள் குருகுல மக்கள் அகமுடையார் என்று சொல்கிறீர்கள். மற்றும் பருவத ராஜகுலம் என்ற பரதவர் மக்கள் வாழ்கிறார்கள். உங்களுக்கு அது பட்டமாக இருக்கலாம் ஆனல் அது வாழ்வியல் அடையாளமகா இல்லை.

    பதிலளிநீக்கு