செவ்வாய், 7 நவம்பர், 2023

சக்தி Mடம் 10 கேள்விகள்,,


அகமுடையார் சமுதாயத்திற்கு குருகுலம் என்பதற்கு ஆதாரம் இல்லை எனவும் சூரியகுலம் & வாணர்குலம் எனமட்டுமே சான்றுள்ளதாகவும் 6/11/2023 அன்று தனது முகநூல் பேஜில் அவதூறாக கூறியதோடு அங்கனம் கூறுபவர்களிடம் ஏமாறவேண்டாம் எனவும் கூறியுள்ள
Agamudayar Page Admin திரு சக்தி_M அவர்கள் வெளிப்படையாக கீழ் காணும் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும் எனவும் இதுவிவரமாக லைவ் காணொளி விவாதத்திற்கும் நான் தயார் எனவும் கூறிக்கொண்டு கேள்விகளை தொடர்கிறேன்;

கேள்வி:1,

ராயவேலூர்_திருவலம் மன்னர் வாணாதிராயனுக்கு குருகுலராயன்_வத்சராயன் ஆகிய இரண்டு பெயரில் கல்வெட்டுகள் பல உள்ளனவே ஏன்,,?

கேள்வி_2;

நடுநாட்டின் தலைநகருக்கு(திருக்கோவிலூர்) சேதிநாடென்றும் மன்னருக்கு சேதிராயர் என்றும் பெயர் ஏன்,,?

கேள்வி_3:
 நடுநாட்டின் வடக்கெல்லை ஆறகளூருக்கு மகதநாடு என ஏன் பெயர்,,?

கேள்வி_4;

மகதநாட்டு மன்னர் வாணகோவரையருக்கு மகதராயர் என்றும்,விராடராயர் என்றும் ஏன் பல கல்வெட்டுகளில் பெயர்,,?

கேள்வி_5;

நடுநாட்டின் கிழக்கு எல்லை கடலூருக்கு வேசாலி என ஏன் பெயர்,அந்நாட்டு வேசாலி பேரரையன் "குருகுலத்தரசன்" என மிகப்பழமையான பல்லவர் செப்பேட்டில் விவரித்து கூறப்படுவதன் காரணம் என்ன,,?

கேள்வி_6;

நடுநாட்டின் மன்னர்குலம் இன்றைய எந்த சாதியை சேர்ந்தவர் உங்க பார்வையில்,,?

கேள்வி_7;

கானப்பேரெயில் எனப்படும் காளையார்கோவிலுக்கு மாளவம் என்று மற்றொரு பெயர் ஏன்,,?

கேள்வி_8;

மாளவராயன் என்பது ஆறகளூர் எனப்படும் மகத நாட்டரசன் வாணகோவரையருக்கு ஏன் பெயர்,,?

கேள்வி_9:

மகாபலியின் கொள்ளுபாட்டன் அசுர வேந்தன் இரணியகசிபு கலியுகத்தில் அவதரித்து ஆண்டது எந்தநாட்டில்,,? எந்தகுலத்தில்,,?

நாங்கள் "குருகுல மன்னர்கள்" என குரு வம்சத்தின் அத்தனை நாட்டின் பெயரிலும் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேலான கல்வெட்டுகளின் வாயிலாக
திருக்கோவிலூர் மலையமான், வேலுர்_திருவலம் வாணாதிராயன்,
ஆறகளூர் வாணகோவரையர் அரசர்களை தவிற வேறு எவறும் அங்கனம் கூறிக்கொண்டனரா,,?

கேள்வி_10;

ஐயா உ.சின்னத்தம்பா சேர்வை அவர்களின் நூறாண்டிற்கு முந்தைய மாநாட்டு மலரில் நம் பெயர்களில் ஒன்றாக கூறப்படும் "குரு" என்பதற்கு என்ன பொருள்,,?

************************************************

எனது 10 கேள்விகளுக்கான பதிலை வரிசைப்பிரகாரம் கூறுவதோடு தமிழகத்தில் குருகுலம் என ஏமாற்றுபவர்களை நம்பவேண்டாம் என்றுள்ளீரே அது யாரை,,? இதுவரை ஏமாந்தவர்களின் பட்டியலை வெளியிட திராணி உள்ளதா,,? இயலாது எனில் பதிவின் முதல் வரியில் கூறியபடி லைவ் விவாதத்திற்கு  சக்தி_M நீர் நேர்மையாளர் எனில் தயாரா என கேட்டுக்கொள்கிறேன்,,,

            "இங்கணம்"
@#குருகுல_மக்கள்_இயக்கம்,,
9500888335,9884350025

(உங்களின் பதில்கள் எனது தங்கமான நேரத்தை எனது சமுதாய வரலாற்று பணிகளில் சிறிதேனும் கரைவதையும் கட்டாயம் நிறுத்திவிடும் அது எனக்கு பேருதவியாகும் என நம்பி உமது பதில்களுக்காக காத்திருக்கிறேன்,,,)

*******************************************


குருகுல மக்கள் இயக்கம் 5ஆம் ஆண்டு துவக்க விழா கார்த்திகை உத்திரம் ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை திருநாள் 2023 ஆண்டில் டிசம்பர்_6ந்தேதி என்பதை உறவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்,,,

*******************************************

இங்கணம்;

VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335,9884350026

புதன், 9 ஆகஸ்ட், 2023

தேவர் அரசானை ஆட்சேபனை கடிதம்,,


***********

பெறுநர்;  

உயர்திரு, தலைவர் அவர்கள்,
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,
எண். 212, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600004

பொருள் : தேவரினம் என்ற அரசாணை கோரிக்கையை ஆட்சேபித்தல் சம்பந்தமாக,

வணக்கம் ஐயா,

மதுரை மாவட்டம், மேலூர் நகரை சார்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் வரலாற்று ரீதியாகவும், திருமண உறவு முறை ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், கல்வெட்டு ஆதாரங்கள் ரீதியாகவும் எந்த தொடர்பு இல்லாத
கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று வெவ்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து தேவரினமாக அறிவிக்க சொல்லி பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மாண்புமிகு நீதியரசர்கள் விசாரித்து இதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பதிலளிக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி ஜூலை 22ஆம் தேதி எல்லா தினசரி நாளிதழில்களில் செய்திகளாக வந்துள்ளது. 

எங்கள் அகமுடையார் சமுதாய மக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வாழும் இடங்களுக்கேற்ப சேர்வை, தேவர், பிள்ளை, முதலியார், உடையார், மணியகாரர், அதிகாரி, நாயக்கர், பல்லவராயர், அம்பலம், செட்டியார், கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு பட்டபெயர்களில் பரவலாக பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறோம். 

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO :1) "அகமுடையார் including துளு or துளுவ வேளாள" என்றும், புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO :1) "அகமுடையார் including துளுவ வேளாளர்" என்றும்,
ஆந்திரா பிரதேச அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO : 39) அகமுடையான், அகமுடையார் and துளுவ வேளாளர்" என்றும், கர்நாடகா அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO : 1)
"அகமுடி" என்றும் அந்தந்த மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு இடத்துக்கும் உட்பிரிவுகளாலும் பட்டப்பெயர்களாலும் நாங்கள் மாறுபட்டிருந்தாலும், சாதியால் நாங்கள் "அகமுடையார்" என்ற ஒற்றை அடையாளத்துடன் வாழ்ந்து வருகிறோம். 

தமிழ்நாட்டில் மறவர் என்று சொல்லப்படும் சாதியிலேயே நான்கு பிரிவுகளாக வெவ்வேறு சாதி பட்டியலில் இடம்பெற்று இடஒதுக்கீட்டை அனுப்பவித்து வருகிறார்கள். இதேபோல கள்ளர் என சொல்லப்படும் சாதியிலேயே ஆறு பிரிவுகளாக வெவ்வேறு சாதி பட்டியலில் இடம் பெற்று இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். இந்த இரண்டு சாதிக்குள்ளையே பல வேறுபாடுகள், முரண்பாடுகள் இன்றும் உள்ளன. கள்ளர், மறவர் சாதிகளுக்குள்ளே பல பிரிவுகளாக பிரிந்துள்ள இச்சாதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவர முன்வராமல்,  எவ்வித வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் வேறுபாடுகள் கொண்ட இவர்களுக்கும், அகமுடையார் சமூகத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லாத நிலையில், அகமுடையார் மக்களில் ஒரு பகுதியை சார்ந்தோர் மட்டும் பயன்படுத்தும்  "தேவர்" என்ற பட்டப்பெயரை, சாதி பெயராக ஒன்றிணைக்க நினைப்பது முட்டாள்தனமான செயலாகும்.

தேவர் என்ற பட்ட பெயர் இந்தியா முழுவதும் பல்வேறு சாதிகள் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

"தேவரினம்" என்ற பொய்யான சொல்லாடல்கள் பல ஆண்டுகளாக சில தனிநபர்களால் அரசியலுக்காக கோரப்பட்டு வருகின்றது. பல்வேறு காலகட்டத்தில் இவ்வாறான அடிப்படை ஆதாரமற்ற கோரிக்கைகள் தனிநபர் சிலரால் முன்னேடுக்கப்பட்டு வந்துள்ளன. அவ்வாறான கோரிக்கையை அகமுடையார் சங்கங்கள் எதிர்த்து ஆட்சேபித்த காரணத்தால் அக்கோரிக்கைகள் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மீண்டும், மீண்டும், அகமுடையார் சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும், அழிப்பதற்காகவும் "தேவரினம்" என்று அரசாணை வேண்டுமென நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கையை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிதுறை மற்றும் அரசாங்க நேரத்தையும் தேவையில்லாது வீணடிப்பவர்களின் மீது நீதித்துறை அதிக அபராத தொகை விதிக்க வேண்டும். 

இனிமேல் இதுபோல் போலியாக தனித்தனி சாதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என நினைப்பவர்களின் மீது நீதித்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கனமான செயல்கள் இதுவே கடைசியாக இருக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமும் இவர்கள் மீது எச்சரிக்கை செய்யும்விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அகமுடையார் சமூகத்திற்கு சம்பந்தமில்லாத தனிநபர் விடுத்திருக்கும் கோரிக்கையான "தேவரினம்" என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கையை அகமுடையார் சமுகம் வண்மையாக கண்டிக்கிறது, ஆட்சேப்பிக்கின்றது. எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் எங்களின் ஆட்சேபனையை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் "தேவரினம்" என்ற கோரிக்கை நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கை என பதிலளித்து, மனு வாதியின் கோரிக்கையை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்துமாறு அகமுடையார் சமுகத்தில் பிறந்தவன் என்ற முறையில் அகமுடையார் சமுதாயம் சார்பாக வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

நாள் : 
இடம் :

**********

புதன், 19 ஜூலை, 2023

69% இடஒதுக்கீடு வரலாறு,,


தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு:

1951 - தமிழ்நாட்டில் தந்தை பெரியார் போன்றோர் நடத்திய தொடர் போராட்டங்களால் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.

1951 - குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு 41% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. (Bc:25%, SC:16%)

1971 - இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. (Bc:31%, SC:18%)

1979 - பொருளாதார இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்.

1980 - பொருளாதார இட ஒதுக்கீடு முடிவைக் கைவிட்டு இட ஒதுக்கீடு அளவை 68% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

1989 - MBC பிரிவு உருவாக்கப்பட்டு  20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1989 - பழங்குடியினருக்கு 1%  இட ஒதுக்கீடு அறிவிக்கட்டு, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி

1992 - இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என உச்சீதிமன்றம் தீர்ப்பு.

1993 - 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட முன் வடிவை ஆசிரியர் கீ.வீரமணி அவர்களது சட்ட உதவியுடன், சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிமுகம் செய்தார்.

1994 - தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப் பட்டது.

தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை:

BC: 26.5%

BCM: 3.5%

MBC: 20%

SC: 18%

(SC:15% + SCA:3% = 18%)

ST: 1%

Total = 69%

*****

வெள்ளி, 14 ஜூலை, 2023

முக்குலத்தோர் தியரியால் உறுவான மனநோயாளிகள் பட்டியல்,,


இங்கனம் நாட்டில் உலாவும் பைத்தியங்களின் உளரல்கள் யாவும் இக்கட்டுரையில் பிரசுரிக்கப்படும்,,,

*****

வெள்ளி, 7 ஜூலை, 2023

தினமலர் ஆன்மீக மலரில் காளையார்கோவில்,,

தினமலர் ஆன்மீக மலரில் காளையார்கோவில் ராஜகோபுரத்தை கட்டியது மன்னர் மருதுபாண்டியர் என்று பதிவு செய்து உள்ளார்கள்,,,

***

வெள்ளி, 2 ஜூன், 2023

குருகுல மன்னர் ஸ்ரீமெய்ப்பொருள் நாயனார்,,


குருகுல மக்கள் இயக்கம் சார்பாக வருடா வருடம் கார்த்திகை உத்திரத்தில் நடத்தப்படும் குருபூஜை நிகழ்வை உறவினர்களுக்கு நினைவூட்டும் வகையில் 5 ஆம் ஆண்டு விழாவிற்கு(2023 கார்த்திகை) அச்சடிக்கப்பட உள்ள நாட்காட்டி மாடல்,,,

****

Logo update 2023

மழவராயர் கோத்திரம் கல்வெட்டு,,


பல்லவராயர் கோத்திரம் கல்வெட்டு கடந்த ஆண்டே பதிந்துள்ளேன்,

தற்போது மழவராயர் கோத்திரம் கல்வெட்டு,,

தமிழக அரசகுல வரலாற்றில் பல்லவராயர் & மழவராயர் ஆகியன மாவலி வாணர் குலத்திற்கு மட்டுமேயான பெயர்களாகும்,,,

****

செவ்வாய், 9 மே, 2023

திருமுறைகளில் குருஷேத்திரம்..

திருமுறைகளில் குருஷேத்திரம்;

பாடியவர் சுந்தரர்,
ஏழாம் திருமுறை,
பண்; நட்டபாடை,
நாடு: இன்றைய ஹரியானா மாநிலம்,குருஷேத்திரம் மாவட்டம்,திருமுறை பாடல்களில் குருக்கேத்திரம்,

பாடல்;
"தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே
குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவரி குமரி
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே"

@#குருகுல_மக்கள்_இயக்கம்,,
மாநில செயற்குழு,
9500888335

திங்கள், 13 பிப்ரவரி, 2023

தொல்காப்பியத்தின் பழமை,,



உ.வே.சா. பார்வையில் தொல்காப்பியம்.

உ.வே. சாமிநாத ஐயர் தான் எழுதிய சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் நூலில் தொல்காப்பியத்தின் பழமை என்ற அத்தியாயத்தில் ஒரு செய்தியை பதிவு செய்கிறார். பக் 10

தொல்காப்பியர் கூறும் நான்மறை என்பது தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், சாமவேதம்.
ஆனால் சிலர் இதை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்பார். இது பொருந்தாது.  வேதவியாசர் 
நான்கு வேதங்களை பகுப்பதற்கு முன்பே ..
அதை சிற்றறிவு உடையோருக்கு போதிக்கும் முன்பே தொல்காப்பியம் எழுதப்பட்டது. இதை நச்சினார்கினியார் குறிப்பிட்டுள்ளதால் தொல்காப்பியத்தின் பழமையை நாம் அறியலாம்..

இவ்வாறு கூறுவது 
உ.வே. சாமிநாத ஐயர்..

சங்க இலக்கியம் பற்றிய ஏராளமான ஆய்வுத் தரவுகளையும் நூலில் பதிவு செய்துள்ளார்...

அதாவது..
ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பே தொல்காப்பியம் எழுதப்பட்டதாக நச்சினாக்கினியாரும்..
உ.வே. சாமிநாத ஐயரும் கூறுகிறார்கள்..

(திரு மா.மாரிராஜன். அவர்களின் முகநூல் பதிவிலிருந்து)

+++

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

மசூதி & தேவாலயங்கள் கட்டிய மருதுபாண்டியர்கள்,,


மருதுபாண்டியரின் மத நல்லிணக்க ஆட்சி! - வரலாற்றை புரட்டும் கே.டி.ராஜேந்திர பாலாஜி!


மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?’ எனத் தலைப்பிட்டு, மருதுபாண்டியரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்கிறார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

வீரம் என்ற குணமே எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்!

உலகிலேயே பூமராங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்பக்குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையிலும் சென்று, மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரது நூல் குறிப்பிலேயே இது உள்ளது. "வீரம் என்ற குணம்தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்கக்கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடனத்தை அமல்படுத்தி, அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.

‘எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளைப் பார்க்க நேரிடுகிறதோ, அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர்.‘ - இது மருதுபாண்டியரின் பிரகடனத்தின் ஒரு பகுதி.

மண்ணைக் காத்திட கொரில்லா போர் யுக்தி!

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, அவர் மீது பாய்ந்த புலியை, தனியாளாக நின்று, கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு, அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!

எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்தப் போர்முறை, இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல்- ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல்- தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில், அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியைப் பயன்படுத்தி,பெரும்படைகளை வென்று, மண்ணைக் காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

மசூதி, தேவாலயம், திருக்கோவில் கட்டி எழுப்பிய மருதுபாண்டியர்!

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலக்கட்டத்தில் சாதி, சமயச்சார்பற்ற,மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக, நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி,திருப்பணி செய்து வழிபாடு நடத்தி, இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர்களோடு மக்களும் தூக்கிலிடப்பட்டது திருப்பத்தூரில் மட்டுமே!

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85- ஆம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார், ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விடக்கூடாதென்பதாலும்,ஆட்சியைப் பிடிப்பதற்காக, ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக, அவர்களோடு, சாதி / மத வேறுபாடின்றி, துணை நின்ற ஆயிரக்கணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது, உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக, தங்களது உயிரைத் தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும்- ஆன்மீக பக்தியாலும், திருப்பத்தூர் மண்ணில், மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 213- வது நினைவேந்தல் நாளைப் போற்றுவோம்!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!’

இவ்வாறு வரலாற்று பக்கங்களைப் புரட்டியிருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.

+++



செவ்வாய், 24 ஜனவரி, 2023

சோழதேசம் பூம்புகார் தொண்மை,,


" மீண்டெழும் தமிழர் வரலாறு "

குமரி கடல் அகழாய்வும் பூம்புகார் கடல் அகழாய்வும் தமிழர் வரலாற்றின் ஆகப்பெரும் பழமைக்குச் சான்றாவணம்.

இவ்வாய்வு குறித்து எத்தனையோ கேலி பகடிகளுக்கு ஆட்பட்டாலும்
ஆகச் சிறந்த அறிஞர்கள் 
இவ்விரண்டு ஆய்வுகளையும் முன்னெடுத்தே வருகின்றனர்.

குமரி கடல் அகழாய்வு வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.

பூம்புகார் கடல் ஆய்வு ஒரு சிறப்பான முன்னேற்றம் கண்டது.  கடலுக்கடியில் உள்ள ஒரு பழந்தமிழர் துறைமுகம் ஒன்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.

இம்மகத்தான பணியை திறம்பட செய்தவர் பேராசிரியர் திரு. S.m.இராமசாமி அவர்கள்.

பூமியை துளைத்து வெளிவந்த கீழடியைப் போல்.. கடலில் இருந்து ஒரு நகரம் வெளிப்பட இருக்கிறது. 

இந்த ஆய்வு தமிழர் பழம்பெருமை வரலாற்றின் அடுத்தகட்ட நகர்வு என்பதில் ஐயமில்லை.

ஆய்வு விபரங்களை நமக்களித்த பேராசிரியர் சரவணவேல் அவர்களுக்கும்.. 
திரு ஒரிஸா பாலு அவர்களுக்கும் நன்றிகள்.

இந்த ஆய்வு விபரம் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பேசுப்பொருளாகி உள்ளது..
                -----------------
"கடல் கீழ் பூம்புகாரின் கண்டுபிடிப்பும் அதன் வாழ்க்கை வரலாறும்....."

சோம . இராமசாமி
புகழ் மிகு பேராசிரியர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் பூம்புகார் ஆய்வுத்திட்டம் தொலை உணர்வுத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி -  .

உலகின் பல பகுதிகளிலும் பெருவாரியான நகரங்கள்
பல கடலோரப்பகுதிகளிலே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பண்டைய அரசுகளின் தலை நகரங்களாகவும், உயர்மட்டமக்களின் விடுமுறைத் தளங்களாகவும், விளையாட்டு மையங்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக பண்டைய துறைமுக நகரங்களாகவுமே விளங்கி இருந்து இருக்கின்றன. இவற்றில், இந்திய துணைக்கண்டத்தில் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்த துவாரகாவும். கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்த பூம்புகாரும் மிகத் தலைசிறந்த நகரங்களாக விளங்கி இருந்து இருக்கின்றன. இவற்றில் பூம்புகார் மிகத் தலைசிறந்த துறைமுகமாக விளங்கி கிழக்கே தொலைதூர தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் மேற்கே எகிப்து வரையிலும் கடல் சார் வணிகத்தொடர்பு கொண்டு இருந்து இருக்கின்றது. இப்பூம்புகார் நகரமானது சோழமன்னர்களால் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று காணாமல் போய் விட்டது. தலை சிறந்த தமிழ் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா நிறுத்தப்பட்டு விட்ட காரணத்தால் கடல் தேவதை கோபம் கொண்டு பெரிய அளவில் அலைகளை அனுப்பி அதனால் பூம்புகார் அழிந்தது என்று கூறியுள்ளது. இக்கூற்று இன்று வரை நம்பப்படுவதால், பூம்புகாரின் அழிவு பற்றி இதுகாறும் ஆய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை.

அதற்கான இடங்கள் மற்றும் கால வரையறைகள். காவிப்பூம்பட்டினத்திலே சுமார் 1500 ஆண்டுகள் இருந்த காலக்கட்டத்தில்
இத்துறைமுக நகரில் ஏற்பட்ட பல்முனை பரிணாம வளர்ச்சிகள் மற்றும்  கடல் சார் வணிக சரித்திரத்திலே கோலோச்சிய பூம்புகார் நகரம் திடீர் என்று மறைந்து போனதற்கான காரணங்கள் ஆகியவை பெரும் மர்மமாகவே உள்ளன.

ஆகவே மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்
நுட்பத்துறையின் பல கோடி நிதி உதவியோடு, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தலைமையில் பல் துறை சார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வில் காவிரி வண்டல் பகுதிகள் இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலமும், மற்றும் கடல் கீழ் பகுதிகள் GEBCO (ஜெப்கோ -பல் துறை சார் கடல் கீழ் தரைமட்ட அளவு) மற்றும் MBES (ஒலிசார் கடல் கீழ் தரை மட்ட அளவீடு) மூலம் ஆராயப்பட்டன. இவ்வாய்வில் வண்டல் பகுதியில் காவிரி நதி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே இருந்து வடக்காக நகர்ந்து கொள்ளிடத்தை அடைந்தது என்ற உண்மை வெளிக்கொணரப்பட்டது. ஜெப்கோ மூலம் நடத்திய முதற் கட்ட ஆய்வுகள் கடலுக்கு கீழே 40 கி. மீ தூரம் வரை மூன்று மிகப் பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி இருப்பது தெரிய வந்தது. அதிலிருந்து, கடற்கரை தற்காலக் கடற்கரையில் இருந்து சுமார் 40-50 கி.மீ. கிழக்காக இருந்து இருக்க வேண்டும் என்ற உண்மை  வெளிக்கொணரப்பட்டது.

ஆகவே தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ள சுமார் 1000 சதுர கி.மீ. களில் MBES சர்வே, தேசிய கடல் சார் தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த MBES சேகரித்த கடல் கீழ் தரை மட்டத்தின் தகவல்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட வகைகளில் கணிணி சார் செயல் ஆக்கம் செய்து ஆராயப்பட்டது. இவ்வாய்வில் பூம்புகார் பற்றிய வியத்தகு பல உண்மைகள் முதன் முறையாக வெளிக்கொணரப்பட்டன.

தற்காலக் கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ பரப்பில் ஒரு துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துறைமுக நகரம் சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது...

இந்நகரத்தில் ஒரு துறைமுகம், அதன் அருகே மிகப்பெரிய கப்பல் துறைகள் அதைச்சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக்கொண்ட குடியிருப்புக்கள் மற்றும் கலங்கரை விளக்கமும் காணப்பட்டன.

இந்த துறைமுகம் வடக்கு-தெற்காக 11 கி.மீ நீளமும் கிழக்கு - மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்தது. இதில் வடக்கு - தெற்காக நீண்ட கால்வாய்கள் கப்பல்கள் போக்கு வரத்துக்காகவும், குறுக்குக்கால்வாய்கள் கப்பல்களை திருப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும். இந்த கால்வாய்களுக்கு இடையே அகலமான மற்றும் உயரமான நிலப்பகுதிகள் இருக்கின்றன. இவை, சரக்குகளை ஏற்றி- இறக்கவும், சேமித்துவைக்கவும் பயன்படுத்துவதற்காக இருந்து இருக்கலாம். இந்த துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்கள் நிறுத்துவதற்காக சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு கப்பல் துறைகள் காணப்படுகின்றன. துறைமுகம் மற்றும் கப்பல்துறைகள் ஆகிய இரண்டுமே வடக்கு-தெற்காக காணப்படும் 40 கி.மீ. நீளமான மற்றும் 3-4 மீட்டர் உயரமான கடந்த கால பீச் மணல் மேடுகளுக்கு மேற்காக இருக்கின்றன. இதில் இருந்து துறைமுகத்தையும், கப்பல் தளங்களையும் அலைகளின் நேரடித்தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த இடத்தில் துறைமுகத்தையும் மற்றும் கப்பல் துறைகளையும் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மேலும் இத்துறைமுகத்தைச்சுற்றி பல இடங்களில் குடியிருப்புக்கள் தென் படுகின்றன. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற பீச் மணல் மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு காம்பவுண்ட் சுவர்கட்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் காணப்படுகின்றன. இதே போன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் காம்பவுண்ட் உடன் கூடிய, ஆனால் உள்ளே உள்ள கட்டிடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு உள்ளே உள்ள இந்த கலங்கரை விளக்கத்தை அடைவதற்காக கட்டிய பாலத்தின் அடியேயுள்ள தூண்களும், சுற்றுப்படிக்கட்டின் அடித் தூண்களும் தெளிவாக MBES படங்களிலே தென்படுகின்றன. இந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பு எகிப்தில் உள்ள கிளியோபட்ரா கலங்கரை விளக்கம் போலவும், மற்றும் 1100 ஆண்டுகட்கு முன்பு பராந்தக சோழன் வேதாரண்ணியம் கோடியக்கரையில் அமைத்த கலங்கரை விளக்கம் போலவும் தெரிகின்றது. ஆனால் இக்கலங்கரை விளக்கம் எல்லாவற்றிற்கும் காலத்தால் முந்தைய, சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

ஆக, கடலுக்கு கீழே டெல்டா-1ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூம்புகார் நகரம் சுமார் 15,000 ஆண்டுகட்கு முன்பு முதன் முதலாக அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் (பூம்புகார்-1) என்று தெரிகிறது. இதற்கு மேற்கே உள்ள டெல்டா-2 ல் பூம்புகார் நகரம் -2 ம்(12,000 ஆண்டுகள்), டெல்டா-3 ல் பூம்புகார் நகரம்-3ம் (10,000 ஆண்டுகள்) இருந்து இருப்பதற்கான அறிகுறிகள் தென் படுகின்றன.

மேலும் GEBCO படங்களும், MBES படங்களும் மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் -1 ற்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே, காவிரியும் அதன் கிளைநதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்குகளும், பெரிய நீர் வீழ்ச்சியும், அதன் கீழ் கடல் பள்ளத்தாக்குகளும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம், புயல் எழுச்சி ஆகியவற்றிற்கு பாதைகளாக இருக்கின்ற காரணத்தால் இது போன்ற பேரிடர்கள் இடம் மாறி வந்த இந்த மூன்று பூம்புகார்களையும் அழித்து இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

இவை ஒரு புறம் இருக்க இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் மாயவரம் வரை கடல் இருந்ததற்கான தடயங்களாக வடக்கு-தெற்காக ஏழு கடந்த கால கடலோர பீச் மணல் மேடுகளைக் காண்பிக்கின்றது. இவற்றில் இருந்து கடல் மட்டம் உயரும் போது கொஞ்சம் கொஞ்சமாக கடல் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் மாயவரத்தை அடைந்து இருக்கிறது. பின்னர் கடல் கிழக்காக பின் வாங்கும் போது சீர்காழி (5000 ஆண்டுகள்), நாங்கூர் (3000 ஆண்டுகள்) ஆகிய பகுதியில் சில நூறு ஆண்டுகள் நிலைகொண்டு, அங்கு பீச் மணல் மேடுகளை உருவாக்கி, இறுதியாக தற்கால காவிரிபூம்பட்டினத்தை 2500 ஆண்டுகள் காலக்கட்டத்தில் அடைந்து இருக்கிறது. இப்பின்னணியில் பூம்புகார்-3ல் இருந்து மேற்கே தள்ளி கொண்டுவந்து கொட்டப்பட்ட பூம்புகார் உபகரணங்களை வைத்து பூம்புகார்-4 யை மாயவரத்திலும், பூம்புகார்-5 யை சீர்காழியிலும், பூம்புகார்-6 யை நாங்கூரிலும், பூம்புகார்-7 காவிரிபூம்பட்டினமாகவும் உருவாக்கி இருக்கக் கூடும். 

இவ்வாறு இந்த ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் பூம்புகார் 2500 ஆண்டுகள் வயது உடையவை அல்ல என்றும், 15,000 வருடங்கட்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் முதன் முதல் நிர்மானம் செய்யப்பட்டு பின்னர் கடல் மட்டம் உயரும் போதும், கடல் கோளினாலும் மூன்று இடங்களில் கடலுக்குள் மேற்காக இடம் மாறி, பின்னர் கடல் கோளின் போது மாயவரம் வரை தள்ளப்பட்டு, பின்னர், கடல் கிழக்காக பின் வாங்கும்போது மாயவரம், சீர்காழி, நாங்கூர் போன்ற மூன்று இடங்களில் இடம் மாறி இறுதியாக, ஏழாவதாக காவிரிபூம்பட்டினத்தை அடைந்து இருக்கிறது என்பது புலனாகிறது.

மேலும் பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை 
வடிவமைக்க சுமார் 12 நிறுவனங்களை இணைத்து இந்த ஆய்வு
 முழுமையாக வெளிக்கொணர உள்ளது.

இது இறுதியில் தமிழர்களின் வரலாற்றை
வெளிக்கொணர உள்ளது.

+++++

புதன், 18 ஜனவரி, 2023

தமிழக எல்லைகள் பாடல் விவரம்,,


கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்

சோழ நாட்டின் எல்லை:

கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு

குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில்

ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்

சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1)

[கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.]

மேலும்,

செல்லும் குணபால் திரைவேலை
          தென்பால் செழித்த வெள்ளாறு
வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும்
          மேல்பால் வடபால் வெள்ளாறே
எல்லை ஒருநான் கினும்காதம்
          இருபா னான்கும் இடம்பெரிதாம்
மல்லல் வாழ்வு தழைத்தோங்கும்
          வளம்சேர் சோழ மண்டலமே

       @#சோழமண்டல சதகம்,,

+++++++

பாண்டிய நாட்டின் எல்லை:

வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம்

தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார

ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்

பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)

 வடக்கே வெள்ளாறு, மேற்கே பெருவழி, தெற்கே தெளிந்த நீருடைய குமரி, கிழக்கே ஆட்சிக்குட்பட்ட கடல். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 56 காதப் பரப்பு பாண்டியநாடாகும். அஃதாவது தெற்கே கடல் எனக் குறிப்பிடாததால் கம்பர்காலத்தில் தெற்கே, குமரிமலையிலிருந்து பெருக்கெடுத்தோடிய குமரியாறுதான் இருந்துள்ளது.]

+++++

 சேர நாட்டின் எல்லை:

வடக்கு திசைபழனி வான்கீழ் தென்காசி

குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்

ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்

சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)

[ வடதிசையில் பழனி, கிழக்கே பெருமை தென்காசி, மேற்கே கோழிக் கோடு, தெற்கே கடற்கரை.  இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 80 காதப்பரப்பு  சேரநாடு. அப்படியானால், கம்பர்காலத்தில் சேரநாடு பெரும்பரப்பாக இருந்துள்ளது.]

+++++

தொண்டைநாட்டு எல்லை :

மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்காம்

ஆர்க்கும் உவரியணி கிழக்கு – பார்க்குளுயர்

தெற்குப் பினாகினி திகழிருபதின் காதம்

நற்றொண்டை நாடெனவே நாட்டு. (4)

[மேற்கே பவளமலை, வடக்கே திருவேங்கட மலை,   கிழக்கே கடல், தெற்கே உலகில் சிறந்த பெண்ணை ஆறுஇவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 20 காதப் பரப்பு, தொண்டை நாடு.]


++++




ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பழுவேட்டரையர் மகள் இருங்கோவேள் மணஉறவு,,


கேரளன் எனப்படும் பழுவேட்டரையர் மகளுக்கும் & யதுகுல கேது எனப்படும் இருங்கோவேள் அரசருக்கும் மன உறவு இருப்பதை கூறும் கல்வெட்டு,,

+++

சனி, 14 ஜனவரி, 2023

மறவ சேதுபதிகளை வேளாளர் எனும் ஆவணங்கள்,,

++
முத்து விஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவியாயர் அவர்களால் 1700களில் இயற்றப்பட்ட "பணவிடு தூது" எனும் இலக்கிய நூலில் பாட்டுடைய தலைவனான முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களை கீழ்கன்டவாரு கூறுகிறது பாடல் வரிகள்;


மெழியான் என்கிறார் புலவர் -
"விண்ணுக்கு ளோங்கு நெடு மெழியான்"(274)

++

நீதி தவறாமல் செங்கோல் செலுத்திய சேதுபதியை மிக தெளிவாக "வேளாளர்" என்று குறிப்பிடுகிறார் -

"பொய்யைத் துரத்திப் புவியில்செங் கோல்செலுத்த மெய்யைத் தலைநிறுத்தும் வேளாளன்"(237)

+++

மேலும் முத்து ரகுநாத மன்னர் அவர்களை கங்கை குலம் என்றும் புலவர் குறிப்பிடுகிறார் -

"கங்கைகுலத் தோன்றிவுங் கர்த்தவிசு வாசமுமாந் தங்கள் குலவித்தை தனைவளர்த்தோன் - திங்கள் உறுந்தா ரகைபோ லொழியார் முத்தார நறுந்தாரன் முத்துரகு_நாதன்"

++++

இங்கனம்,
மேழியான்,வேளாளன்,
கங்கை குலம் என நேரிடையாக மிகதெளிவாக வேளாளர் குல அடையாளங்கள் சேதுபதிக்கு கூறப்படுகிறது,,,

+++++