செவ்வாய், 7 நவம்பர், 2023

சக்தி Mடம் 10 கேள்விகள்,,


அகமுடையார் சமுதாயத்திற்கு குருகுலம் என்பதற்கு ஆதாரம் இல்லை எனவும் சூரியகுலம் & வாணர்குலம் எனமட்டுமே சான்றுள்ளதாகவும் 6/11/2023 அன்று தனது முகநூல் பேஜில் அவதூறாக கூறியதோடு அங்கனம் கூறுபவர்களிடம் ஏமாறவேண்டாம் எனவும் கூறியுள்ள
Agamudayar Page Admin திரு சக்தி_M அவர்கள் வெளிப்படையாக கீழ் காணும் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும் எனவும் இதுவிவரமாக லைவ் காணொளி விவாதத்திற்கும் நான் தயார் எனவும் கூறிக்கொண்டு கேள்விகளை தொடர்கிறேன்;

கேள்வி:1,

ராயவேலூர்_திருவலம் மன்னர் வாணாதிராயனுக்கு குருகுலராயன்_வத்சராயன் ஆகிய இரண்டு பெயரில் கல்வெட்டுகள் பல உள்ளனவே ஏன்,,?

கேள்வி_2;

நடுநாட்டின் தலைநகருக்கு(திருக்கோவிலூர்) சேதிநாடென்றும் மன்னருக்கு சேதிராயர் என்றும் பெயர் ஏன்,,?

கேள்வி_3:
 நடுநாட்டின் வடக்கெல்லை ஆறகளூருக்கு மகதநாடு என ஏன் பெயர்,,?

கேள்வி_4;

மகதநாட்டு மன்னர் வாணகோவரையருக்கு மகதராயர் என்றும்,விராடராயர் என்றும் ஏன் பல கல்வெட்டுகளில் பெயர்,,?

கேள்வி_5;

நடுநாட்டின் கிழக்கு எல்லை கடலூருக்கு வேசாலி என ஏன் பெயர்,அந்நாட்டு வேசாலி பேரரையன் "குருகுலத்தரசன்" என மிகப்பழமையான பல்லவர் செப்பேட்டில் விவரித்து கூறப்படுவதன் காரணம் என்ன,,?

கேள்வி_6;

நடுநாட்டின் மன்னர்குலம் இன்றைய எந்த சாதியை சேர்ந்தவர் உங்க பார்வையில்,,?

கேள்வி_7;

கானப்பேரெயில் எனப்படும் காளையார்கோவிலுக்கு மாளவம் என்று மற்றொரு பெயர் ஏன்,,?

கேள்வி_8;

மாளவராயன் என்பது ஆறகளூர் எனப்படும் மகத நாட்டரசன் வாணகோவரையருக்கு ஏன் பெயர்,,?

கேள்வி_9:

மகாபலியின் கொள்ளுபாட்டன் அசுர வேந்தன் இரணியகசிபு கலியுகத்தில் அவதரித்து ஆண்டது எந்தநாட்டில்,,? எந்தகுலத்தில்,,?

நாங்கள் "குருகுல மன்னர்கள்" என குரு வம்சத்தின் அத்தனை நாட்டின் பெயரிலும் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேலான கல்வெட்டுகளின் வாயிலாக
திருக்கோவிலூர் மலையமான், வேலுர்_திருவலம் வாணாதிராயன்,
ஆறகளூர் வாணகோவரையர் அரசர்களை தவிற வேறு எவறும் அங்கனம் கூறிக்கொண்டனரா,,?

கேள்வி_10;

ஐயா உ.சின்னத்தம்பா சேர்வை அவர்களின் நூறாண்டிற்கு முந்தைய மாநாட்டு மலரில் நம் பெயர்களில் ஒன்றாக கூறப்படும் "குரு" என்பதற்கு என்ன பொருள்,,?

************************************************

எனது 10 கேள்விகளுக்கான பதிலை வரிசைப்பிரகாரம் கூறுவதோடு தமிழகத்தில் குருகுலம் என ஏமாற்றுபவர்களை நம்பவேண்டாம் என்றுள்ளீரே அது யாரை,,? இதுவரை ஏமாந்தவர்களின் பட்டியலை வெளியிட திராணி உள்ளதா,,? இயலாது எனில் பதிவின் முதல் வரியில் கூறியபடி லைவ் விவாதத்திற்கு  சக்தி_M நீர் நேர்மையாளர் எனில் தயாரா என கேட்டுக்கொள்கிறேன்,,,

            "இங்கணம்"
@#குருகுல_மக்கள்_இயக்கம்,,
9500888335,9884350025

(உங்களின் பதில்கள் எனது தங்கமான நேரத்தை எனது சமுதாய வரலாற்று பணிகளில் சிறிதேனும் கரைவதையும் கட்டாயம் நிறுத்திவிடும் அது எனக்கு பேருதவியாகும் என நம்பி உமது பதில்களுக்காக காத்திருக்கிறேன்,,,)

*******************************************


குருகுல மக்கள் இயக்கம் 5ஆம் ஆண்டு துவக்க விழா கார்த்திகை உத்திரம் ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை திருநாள் 2023 ஆண்டில் டிசம்பர்_6ந்தேதி என்பதை உறவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்,,,

*******************************************

இங்கணம்;

VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335,9884350026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக