புதன், 9 ஆகஸ்ட், 2023

தேவர் அரசானை ஆட்சேபனை கடிதம்,,


***********

பெறுநர்;  

உயர்திரு, தலைவர் அவர்கள்,
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,
எண். 212, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600004

பொருள் : தேவரினம் என்ற அரசாணை கோரிக்கையை ஆட்சேபித்தல் சம்பந்தமாக,

வணக்கம் ஐயா,

மதுரை மாவட்டம், மேலூர் நகரை சார்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் வரலாற்று ரீதியாகவும், திருமண உறவு முறை ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், கல்வெட்டு ஆதாரங்கள் ரீதியாகவும் எந்த தொடர்பு இல்லாத
கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று வெவ்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து தேவரினமாக அறிவிக்க சொல்லி பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மாண்புமிகு நீதியரசர்கள் விசாரித்து இதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பதிலளிக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி ஜூலை 22ஆம் தேதி எல்லா தினசரி நாளிதழில்களில் செய்திகளாக வந்துள்ளது. 

எங்கள் அகமுடையார் சமுதாய மக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வாழும் இடங்களுக்கேற்ப சேர்வை, தேவர், பிள்ளை, முதலியார், உடையார், மணியகாரர், அதிகாரி, நாயக்கர், பல்லவராயர், அம்பலம், செட்டியார், கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு பட்டபெயர்களில் பரவலாக பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறோம். 

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO :1) "அகமுடையார் including துளு or துளுவ வேளாள" என்றும், புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO :1) "அகமுடையார் including துளுவ வேளாளர்" என்றும்,
ஆந்திரா பிரதேச அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO : 39) அகமுடையான், அகமுடையார் and துளுவ வேளாளர்" என்றும், கர்நாடகா அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (Backward Classes list in S.NO : 1)
"அகமுடி" என்றும் அந்தந்த மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு இடத்துக்கும் உட்பிரிவுகளாலும் பட்டப்பெயர்களாலும் நாங்கள் மாறுபட்டிருந்தாலும், சாதியால் நாங்கள் "அகமுடையார்" என்ற ஒற்றை அடையாளத்துடன் வாழ்ந்து வருகிறோம். 

தமிழ்நாட்டில் மறவர் என்று சொல்லப்படும் சாதியிலேயே நான்கு பிரிவுகளாக வெவ்வேறு சாதி பட்டியலில் இடம்பெற்று இடஒதுக்கீட்டை அனுப்பவித்து வருகிறார்கள். இதேபோல கள்ளர் என சொல்லப்படும் சாதியிலேயே ஆறு பிரிவுகளாக வெவ்வேறு சாதி பட்டியலில் இடம் பெற்று இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். இந்த இரண்டு சாதிக்குள்ளையே பல வேறுபாடுகள், முரண்பாடுகள் இன்றும் உள்ளன. கள்ளர், மறவர் சாதிகளுக்குள்ளே பல பிரிவுகளாக பிரிந்துள்ள இச்சாதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவர முன்வராமல்,  எவ்வித வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் வேறுபாடுகள் கொண்ட இவர்களுக்கும், அகமுடையார் சமூகத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லாத நிலையில், அகமுடையார் மக்களில் ஒரு பகுதியை சார்ந்தோர் மட்டும் பயன்படுத்தும்  "தேவர்" என்ற பட்டப்பெயரை, சாதி பெயராக ஒன்றிணைக்க நினைப்பது முட்டாள்தனமான செயலாகும்.

தேவர் என்ற பட்ட பெயர் இந்தியா முழுவதும் பல்வேறு சாதிகள் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

"தேவரினம்" என்ற பொய்யான சொல்லாடல்கள் பல ஆண்டுகளாக சில தனிநபர்களால் அரசியலுக்காக கோரப்பட்டு வருகின்றது. பல்வேறு காலகட்டத்தில் இவ்வாறான அடிப்படை ஆதாரமற்ற கோரிக்கைகள் தனிநபர் சிலரால் முன்னேடுக்கப்பட்டு வந்துள்ளன. அவ்வாறான கோரிக்கையை அகமுடையார் சங்கங்கள் எதிர்த்து ஆட்சேபித்த காரணத்தால் அக்கோரிக்கைகள் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மீண்டும், மீண்டும், அகமுடையார் சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும், அழிப்பதற்காகவும் "தேவரினம்" என்று அரசாணை வேண்டுமென நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கையை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிதுறை மற்றும் அரசாங்க நேரத்தையும் தேவையில்லாது வீணடிப்பவர்களின் மீது நீதித்துறை அதிக அபராத தொகை விதிக்க வேண்டும். 

இனிமேல் இதுபோல் போலியாக தனித்தனி சாதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என நினைப்பவர்களின் மீது நீதித்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கனமான செயல்கள் இதுவே கடைசியாக இருக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமும் இவர்கள் மீது எச்சரிக்கை செய்யும்விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அகமுடையார் சமூகத்திற்கு சம்பந்தமில்லாத தனிநபர் விடுத்திருக்கும் கோரிக்கையான "தேவரினம்" என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கையை அகமுடையார் சமுகம் வண்மையாக கண்டிக்கிறது, ஆட்சேப்பிக்கின்றது. எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் எங்களின் ஆட்சேபனையை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் "தேவரினம்" என்ற கோரிக்கை நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கை என பதிலளித்து, மனு வாதியின் கோரிக்கையை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்துமாறு அகமுடையார் சமுகத்தில் பிறந்தவன் என்ற முறையில் அகமுடையார் சமுதாயம் சார்பாக வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

நாள் : 
இடம் :

**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக