உ.வே.சா. பார்வையில் தொல்காப்பியம்.
உ.வே. சாமிநாத ஐயர் தான் எழுதிய சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் நூலில் தொல்காப்பியத்தின் பழமை என்ற அத்தியாயத்தில் ஒரு செய்தியை பதிவு செய்கிறார். பக் 10
தொல்காப்பியர் கூறும் நான்மறை என்பது தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், சாமவேதம்.
ஆனால் சிலர் இதை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்பார். இது பொருந்தாது. வேதவியாசர்
நான்கு வேதங்களை பகுப்பதற்கு முன்பே ..
அதை சிற்றறிவு உடையோருக்கு போதிக்கும் முன்பே தொல்காப்பியம் எழுதப்பட்டது. இதை நச்சினார்கினியார் குறிப்பிட்டுள்ளதால் தொல்காப்பியத்தின் பழமையை நாம் அறியலாம்..
இவ்வாறு கூறுவது
உ.வே. சாமிநாத ஐயர்..
சங்க இலக்கியம் பற்றிய ஏராளமான ஆய்வுத் தரவுகளையும் நூலில் பதிவு செய்துள்ளார்...
அதாவது..
ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பே தொல்காப்பியம் எழுதப்பட்டதாக நச்சினாக்கினியாரும்..
உ.வே. சாமிநாத ஐயரும் கூறுகிறார்கள்..
(திரு மா.மாரிராஜன். அவர்களின் முகநூல் பதிவிலிருந்து)
+++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக