உறவுகள் அனைவரும் தம் அரச மரபு பெயர் அனைத்திற்குமான விவரங்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் கருதி இத்தளத்தில் இதுவரை எழுதப்பட்ட முதல் மூன்று கட்டுரைகள் மிகமுக்கியம் வாய்ந்தவையாகும். அவற்றை வாசித்த அகமுடையார் உறவுகளுக்கு இக்கட்டுரையை பற்றிய விரிவான விளக்கம் தேவைப்படாது எனினும் சுருக்கமாக முன்னுரை;
நாவலந்தீவின் அனைத்து அரச மரபும் சந்திரகுலம்,சூரியகுலத்தில் அடங்குவர். அதில், வாணாதிராயன் மற்றும் மலையமான் - குரு(சந்திர) குலத்தவர். கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில், கல்வெட்டுகளின் வாயிலாக தமிழக வரலாற்றில் "குருகுலராயன்" என அடையாளப்படுத்தப்பட்டவர் "மாவலி வாணர்" குலத்தவர் மட்டுமே. மாவலி வாணர் குலத்திற்கு பல்வேறு பெயர் இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை பெயர் "குருகுலராயர்" எனும் இப்பெயரேயாகும்.. ஆதலால் முதல் பகுதியான இதில் 25 கல்வெட்டுகளை காண்பாேம்;
காண்பதற்கு முன்,
தமிழக அரசானையில் இன்றைய தேதி வரை,
# அகம்படி
# அகம்படியார்
# அகம்படவன் மிலாடுடையார்
# உடையார்,
என்ற நம்மினத்தின் நான்குவிதமான வரலாற்று சாெல்லாடல் பெயரையும் ஒருங்கே குறிக்கும் அகம்+உடையார் = "அகமுடையார்" என்ற பெயரை நம்மினத்தின் பெயராக,
சாதி (BC) பட்டியலில் அரசாணையாக கொண்டுள்ள ஒரே இனம் அகமுடையார் நாம் மட்டுமே என்பதை நாம் நினைவில் காெள்ளவேண்டும். அதாவது தமிழ்சாதியில் ("குயவர்" உட்பட பல இனக்குழுக்களுக்கு) வேறு பலருக்கும் "உடையார்" என்பது பட்டமாக இருக்கலாம். ஆனால், அப்பெயரை (மிலாடு உடையார்) அரசாங்க ஆணையாக(Go no 1564 @1985) இனப்பெயராக உள்ளடக்கிய இனக்குழுவாக "வெட்டு மாவலி அகமுடையார்" சமூகமான நாம் மட்டுமே வாழ்கிறோம் என்பதை நினைவில் காெண்டு கட்டுரையை தாெடர்வாேம்.
கல்வெட்டு 1:
பொன்பற்றி உடையான் அரையன் மூவாயிரத்தொருவனான குருகுலராயன்,
"குருகுலராயன்" என்றால் அது வாணாதிராயன் மற்றும் மலையமான் மட்டுமே என்பது வரலாறு. இக்கல்வெட்டு, முதலாம் குலாேத்துங்க சாேழன் காலம் கிபி 1111. அமராவதி மங்களத்தை சேர்ந்த "குருகுலராயன் அகமுடையார்" இனத்தை சேர்ந்தவன் திருநுந்தா விளக்கு வைத்த விவரத்தை கூறுகிறது.
முக்கிய குறிப்பு 1:
இக்கல்வெட்டு ஏன் இன்றைய தமிழ்சாதியில் "பார்கவ" குலத்தை குறிக்காது என "குருகுலராயன் அகமுடையார்" உறவுகளுக்கு ஓர் வினா எழலாம். ஒருவேளை அவ்வினா அகமுடையார்களுக்கு எழுந்தால் அவர்களுக்கு கூறிக் காெள்வது யாதெனில், நம்மை நம் சாதி அரசாணை எங்கனம் "சேதிராயன் மிலாடுடையாரை" குறிக்கும் "உடையார்" என்ற பெயரை நமக்கான பெயராக அரசாங்க (BC) பட்டியலில் உள்ளடக்கி குறிக்கிறதாே அதே பாேல அவர்களை(பார்கவர்) தமிழக சாதி அரசாணை (BC) பட்டியல் "பார்கவ குலம்" என்றேதான் குறிக்கிறதே அன்றி நம்மை பாேல அகம்+உடையார் = அகமுடையார் எனக்குறிக்கவில்லை. மேலும் அவர்களே(பார்கவர்) தம்மை அசுர(வாணர்) குலத்தின்
குலகுரு "பார்கவமுனி" சுக்கிராச்சாரியார்(பிராமணர்) மரபை குறிப்பிடும் பெயரால்தான் தம் இனப்பெயரை கூறுகிறரே அன்றி,வாணர் அரசரையே நேரிடையாக குறிப்பிடும் "குருகுல" வம்சம் தாங்களென அவர்களே(பார்கவர்) தம்மை கூறிக் காெள்வதில்லை.
மேலும் இன்றைய பார்கவகுலத்தார் தம்மை யதுகுல யாதவர் என வரலாறை பேசி வருகிறர் என்பதாலும் வாணாதிராயர்களை குறித்த "குருகுலராயர்" என்ற குலப்பெயர் அவர்களை நிச்சயமாக குறிக்காது.
அசுர குல அரசர் தம் குலகுருவை வழிகாட்டுனர் என்பதால்
காேத்திரமாக கூறுவது நடைமுறை என்பதால் இதை உணர்ந்து இன்றைய "பார்கவர்கள்" தம்மை குருகுல அரச மரபாக கூற முன்வருகிறர் எனில்,அவர்களின் இதர சான்றுகளை ஆராய்ந்து "குருகுலராயன் அகமுடையார்" குடும்பத்தவராக அங்கீகரிப்பதும் சரியான நடைமுறையே.இவற்றை எதிர்காலமே முடிவு செய்யட்டும். இவ்விரங்களை மிக நுட்பமாக புரிந்துகாெண்டு கட்டுரையை தாெடர எம் உறவுகளை வேண்டுகிறாேம்.
கல்வெட்டு 2:
"சுந்தரத் தாேளுடையான்" என்பது மாவலி வாணாதிராயன் பெயர்களில் ஒன்று. அப்பெயரில் "குருகுலராயன்" எனக்குறிக்கும் பாென்னமராவதி கல்வெட்டு "ஆவணம்" இதழ் வெளியீடு.
புறமலை நாட்டு "உடையான் நாட்டான்" என்ற நம் முக்கிய பெயர் அடையாளமுடன் இக்கல்வெட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டு 3:
திநெல்வேலி மாவட்ட கல்வெட்டு தாெகுதியிலிருந்து மூன்று கல்வெட்டுகளை காண்பாேம்.
"வாணதராய விச்சாதிர நல்லூர் அண்டக்குடையான் தேவபிரான் அழகியமண்டலராயன் குருகுலராயன் எழுத்து" என நேரிடையாக ஒரு வாணாதிராயன் "குருகுல அரையன்" எனப்படுகிறார்.
கல்வெட்டு 4:
(திருநெல்வேலி - 13 ஆம் நூற்றாண்டு)
நெல்லையப்பர் காேவிலுக்கு தன் பெயரில் சந்தி ஏற்படுத்திய ஓர் வாணாதிராயன் "குருகுல காேன்" என கூறப்பட்டுள்ளார்.
கல்வெட்டு 5:
(திருநெல்வேலி - 13 ஆம் நூற்றாண்டு)
இக்கல்வெட்டும் நெல்லையப்பர் காேவிலில் ஓர் வாணாதிராய குருகுலத்தரையன் தன் பெயரில் சந்தி வழிபாடும் தானங்களும் செய்தமையை பாடல் வடிவில் கூறுகிறது.
கல்வெட்டு 6:
விருதுநகர் மாவட்ட சிவகாசி ’திருத்தங்கள்’ கல்வெட்டுகள் மாெத்தம் "பத்து" அவற்றை வரிசையாக காண்பாேம்,
இக்கல்வெட்டு கிபி- 1238_1239.
கல்வெட்டு 7:
(விருதுநகர் - கிபி 13ம் நூற்றாண்டு)
கல்வெட்டு_8:
(விருதுநகர் - 12ம் நூற்றாண்டு)
சுந்தரபாண்டியன் அமைச்சரான "வாணாதிராய குருகுலத்தரையன்" பற்றிய விவரம்.
கல்வெட்டு 9
(விருதுநகர் - கி.பி.1222)
கல்வெட்டு 10:
(விருதுநகர் மாவட்டம் சிவகாசி)
வாணாதிராய குருகுலத்தரையன் நிலம் வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு.
கல்வெட்டு 11:
(விருதுநகர் - கி.பி. 13ம் நூற்றாண்டு)
கல்வெட்டு 12:
(விருதுநகர்- கி.பி. 1224)
கல்வெட்டு 13:
(விருதுநகர் - கி.பி. 13ம் நூற்றாண்டு)
(விருதுநகர் - கி.பி. 13ம் நூற்றாண்டு)
"மூவராயர்" எனக்கூறப்படும் வாணாதிரய குருகுலத்தரையன் கல்வெட்டு.
கல்வெட்டு 15:
(விருதுநகர்- திருத்தங்கல் - கி.பி. 13ம் நூற்றாண்டு)
👆👆
மேலே ஓர் இடத்தில் கூறியதல்லாது இது மற்றாெரு "குருகுல காேன்" என வாணாதிராயனை கூறும் கல்வெட்டு.
கல்வெட்டு 15;1
"செவ்விருக்கை நாட்டு சக்கரபாணி நல்லூர் விரதமுடித்தானான குருகுலராயன்"
இதே கல்வெட்டில் "வத்தராயன்" கையொப்பமிட்டளதை நினைவில் கொள்ளுங்கள் ஏனெனில் வத்தராயன் வாணாதிராயன் மகனாவார்.. 👇👇
கல்வெட்டு 15;2
செம்பிநாட்டு கீரனூரான் உய்யவந்தான் உய்யநின்றாடுவான் குருகுலராயன்;
விருதுநகர் மாவட்ட கல்வெட்டு தொகுதி_2 ல் உள்ளவை மேலை தொடர்சியாக பதியப்பட்டுள்ளது..
++
கல்வெட்டு 16:
(செங்கல்பட்டு - திருக்கச்சூர் )
வாணாதிராயனை நேரிடையாக குருகுலராயன் எனக்கூறும் கல்வெட்டு விவரம்;
"பஞ்சநதிவாணன் நல்ல நாயகனான குருகுலத்தரையன்" என வாணாதிராயனை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. "நீலகங்கரையன்" பற்றிய தகவல்கள் தனியாக விரிவாக எழுத அவசியமுள்ள வாணர் குலத்தில் முக்கிய ஒருவராவார்; அதை தனி கட்டுரையாக காண்பாேம். இங்கு "நீலகங்கரையர்" வாணர் என்பதை உறுசெய்யும் இரு கல்வெட்டை துணைச் சான்றாக பதிகிறாேம்.
16.1 (துணை சான்று கல்வெட்டு:
("பஞ்சநதிவாணன் நீலகங்கரையர்")
16.2 (துணை சான்று கல்வெட்டு:
("பஞ்சநதிவாணன் நீலகங்கரையர்")
கல்வெட்டு 17:
(இடற்கரம்பை)
இடற்கரம்பை கல்வெட்டு மிக தெளிவாக "பஞ்சநதி வாணன் புதல்வன்" மாநெடுவேல் வத்தர் வேந்தன் என்கிறது.அதாவது குருகுலராயன் வாணன் மகன் பெயராக "வத்தர் வேந்தன்" அதாவது வத்சராயன் என்கிறது.இதற்கான துணைச்சான்று சிலவற்றையும் காண்பாேம்,
17.1 (துணை சான்று ):
திரு. இராகவையங்கார் அவர்கள் ஏழாம் நூற்றாண்டு காெங்கு வேளிரின் "பெருங்கதை" காப்பியத்தை மேற்காேளாக கூறி "வத்தர் பெருமகன்" எனும் வத்சராயர் பெயரே "குருகுலராயன்" என்றுள்ளார்.மேலும், இதனை திரு. மயிலை சீனிவேங்கடசாமி அவர்களும் உறுதி செய்து கூறியுள்ளார். பெருங்கதை காப்பியத்திலும் இவ்விவரங்கள் விரிவாக பேசப்படுகிறது.
(கீழ் படங்கள்)
17.2 (துணை சான்று):
17.3 (துணை சான்று) :
17.4 (துணை சான்று):
சித்ரமேழி தாெடர்பான இக்கல்வெட்டில் ’குருகுல வத்தராயன்’ என்ற ’வாணாதிராயன்’, "மீனவன் வத்தராயன்" என்ற பெயருடன் குறிக்கப்பட்டுள்ளார்.
கல்வெட்டு 18:
(மாத்தூர்)
மாத்தூர் உடையான், "மடந்தைபாகன் குருகுலராயன்" என வாணாதிராயனான அகமுடையாரை குறிப்பிடும் கல்வெட்டு.
கல்வெட்டு 19:
திருநெல்வேலி ஆற்றூரில் நாடகம் நடத்த இரண்டு மா நிலம் காணியாக "சிங்கப் பிரானன் குருகுலத்தரையன்" எனும் வாணாதிராயனாகிய அகமுடையார் அளித்த விவரம் மற்றும் கல்வெட்டு தொடர்புடைய செய்தி.
கல்வெட்டு 20:
(காஞ்சிபுரம் - கி.பி. 1252)
காணியுடைய அடைப்பன்(அடப்பன்) காட்டிகையான் எனும் தாெண்டை மன்டல "குருகுலராயன் அகமுடையார்" பெருமாளுக்கு நாெந்தா விளக்கள எரிக்க 11 எருமைகளை காேவிலுக்கு வழங்கிய விவரம் கூறும் கல்வெட்டு.
கல்வெட்டு 21:
(தஞ்சை, குடந்தை - கி.பி. 1229)
பாணபுரீஸ்வரர் காேவிலில் உள்ள தூணில் ஒரு நிலக்காெடையை கூறும் கல்வெட்டில் குருகுலராயன் கையெலுத்திட்ட விவரம் கூறும் கலவெட்டு.
கல்வெட்டு 22:
(கடத்தூர்)
காேயில் அதிகாரியாக சுந்தரவானந்தக் கூத்தன் ஆன "வீரசாேழ குருகுலராயன்" என்பவரை பற்றிய கல்வெட்டு.
கல்வெட்டு 23:
(திருக்கழுகுன்றம்)
"சாத்தையான் குருகுலராய பெரியஅரையன்" என்ற விவரமுள்ள கல்வெட்டு.
கல்வெட்டு 24:
இங்கு நாம் காணப்பாேவது பல்லவரிடம் "குருகுலராயன் அகமுடையார்" அலுவலன் அதாவது வாணர் வம்சத்து வேசாலிப்பேரரையன் மூன்று கிராமங்களை பெற்று காெடை வழங்கிய விவரம் கூறும் செப்பேடு.
7 ஆம் நூற்றாண்டு கொங்குவேளீர் படைத்த "பெருங்கதை" காப்பியத்தின் படி ”வத்தர் வேந்தன்” என்ற குருகுலராயன் உதயணன், தன் தந்தை "குருகுல சதானிகன்" நாடான கௌசாம்பி தலைநகர் வத்ச நாட்டரசன் மட்டுமல்ல. தன் தாய் மிருகவதி நாடான வைசாலியின் அரசனும் ஆகும். அதாவது வேசாலி பேரரையன் எனில் அது குருகுலராயனை குறிப்பது.
குருகுல குரிசில் உதயணனை பெருங்கதை குறிக்கும் "வத்தர் கோமான்" என்பதனை சுட்டும் விதமாக, அதே ’வத்தராயன்’ என்ற பெயரில் இடற்கரம்பை கல்வெட்டு "குருகுலராயன்" வாணாதிராயனுக்கும் உள்ளது என்ற விவரத்தை மேலே (கல்வெட்டு 17 பகுதியில்)சான்றுகளுடன் கண்டோம்.
குருகுல (வை)வேசாலி பேரரையனை பற்றிய ஆவணம்:
9 ஆம் நூற்றாண்டு இலக்கியம் நந்தி கலம்பகம் "அங்க நாடன்(கர்ணன்)" என தன்னை எனக்கூறிக்காெண்ட மூன்றாம் நந்திவர்ம பல்லவன் மகன் நிருபதுங்கன்,
பாகூர் செப்பேடு:
பாகூர் செப்பேடு வாயிலாக குருகுலராயன்(அகமுடையார்) வேசாலி பேரரையருக்கு வழங்கியது. "அங்க நாடன்(கர்ணன்)" மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் மகன் நிருபதுங்க வர்மன்
(கி.பி. 850 - 882) வழங்கிய பாகூர் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியானது கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:-
"கோவிசைய நிருபதொங்கவர்மற்கு யாண்டு எட்டாவது #வேசாலிப் பேரரையன் விண்ணப்பத்தால் விடேல்விடுகு காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன் ஆணத்தி ஆக அருவாநாட்டுக் கீழ்வழி வாகூர் நாட்டு நாட்டார் காண்க"
"அங்க நாடன்(கர்ணன்)" நந்திவர்ம பல்லவன் மகன் நிருபதுங்க வர்மனின் பாகூர் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியானது தெரிவிப்பது என்னவென்றால், வேசாலிப் பேரரையர்(அகமுடையார்) அவர்கள், அரசர் நிருபதுங்க வர்மனிடம் விண்ணப்பித்த மூன்று ஊர்களை, அரசரின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரியான ஆணத்தி மூலமாக பெற்று, வாகூர் (பாகூர்) வித்யாஸ்தானத்திற்கு (கல்வி வளர்ச்சிக்கு) பிரம்மதேயமாக அளித்தார் என்று தெரியவருகிறது. அரசனின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரியின் பெயர் "விடேல்விடுகு காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன்" என்று தெரியவருகிறது.
"அங்க நாடன்(கர்ணன்)" நிருபதுங்க வர்மனின் பாகூர் செப்பேட்டின் தமிழ்ப் பகுதி குறிப்பிட்டதை பார்த்தோம்.அதே செப்பேட்டின் சமஸ்கிருத பகுதியானது, வேசாலிப் பேரரையரைப்(அகமுடையார்) பற்றி மிக விரிவாக குறிப்பிடுகின்றது:-
ஸ்லோகம்-18 : "அந்த (பல்லவன் நிருபதுங்கன் கர்ணன்) அரசனால் உபகாரங்களை நன்கு அடைந்தவனும், குரு குலத்தில் தோன்றியவனும் ஆன வேசாலி வம்சத்து மார்த்தாண்டன்(அகமுடையார்), குடி மக்களுக்கு புகலிடம் அளிப்பதில் விருப்பம் கொண்டவனும் (ஆனான்)"
ஸ்லோகம்-19 : "சந்திரனைப் போல் உலகத்தின் திலகமாகவும், சமுத்திரத்தைப் போல் கம்பீரம் நிறைந்தவனுமான அந்த அரசன் உலகைப் பாதுகாக்கும் சூரியன் போல் உலக மக்களுக்கு (நிலையம்) இருப்பிடமாக ஆனான்"
ஸ்லோகம்-20 : "அதனால் நிலை தாங்கி என்ற பெயர் ஒரு தெய்வத்துக்கு ஏற்றது போல அந்த அரசனுக்கும் பொருத்தமாக அமைந்தது ; அல்லது அவன் (அரசன்) இயற்பெயர் நேரிடையாக நன்கு தோற்றமளித்தது எனலாம்"
ஸ்லோகம்-21 : "#குரு வம்சத்தை வளரச் செய்யும் அவன் தன்னுடைய நாட்டிலே மூன்று கிராமங்களை நிருபதுங்கனான(பல்லவன்) அரசனிடம் விண்ணப்பித்து ஆணத்தி மூலமாக அடைந்தான்"
ஸ்லோகம்-29 : "இந்த தர்மம் (அனைவருக்கும்) பொதுவானதால் அதை நீங்களும் பரிபாலிக்க வேண்டுமென்று இனி வரப்போகும் அரசர்களைக் குரு வம்சத்தில் பிறந்தவன்(அகமுடையார்) தானே வேண்டுகிறான்"
அதாவது, "வேசாலிப் பேரரையர்(அகமுடையார்)" அவர்கள்:-
"குரு குலத்தில் தோன்றியவன்"
"வேசாலி வம்சத்து மார்த்தாண்டன்"
"குடி மக்களுக்கு புகலிடம் அளிப்பதில் விருப்பம் கொண்டவன்"
"சந்திரனைப் போல் உலகத்தின் திலகமானவன்"
"சமுத்திரத்தைப் போல் கம்பீரம் நிறைந்தவன்"
"உலகைப் பாதுகாக்கும் சூரியன் போல் உலக மக்களுக்கு இருப்பிடமாக விளங்கியவன்"
"நிலைதாங்கி என்ற பெயரினைப் பெற்றவன்"
"குரு வம்சத்தை வளரச் செய்தவன்"
"குரு வம்சத்தில் பிறந்தவன்"
என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்று தெரியவருகிறது. மேற்குறிப்பிட்ட சமஸ்கிருத ஸ்லோகங்களின் மூலமாக "வேசாலிப் பேரரையர்கள்" பரதமகாராஜா, வத்தராயன், சேதிராயன், விராடராயன் எனப்பட்ட "குருகுலராயன் வாணர்" மரபினரே என்பது உறுதியாகிறது.
கல்வெட்டு 25:
இது இக்கட்டுரையின் இறுதி பகுதி; இதில் நாம் காணப்பாேவது சேதிராயன். அதாவது இந்த வலைதளத்தின் முதல் கட்டுரையில் "சேதிராயன்" மலையமானும், "குருகுலராயன்" வாணாதிராயனும் ஒன்று என ஒரு கட்டுரை சான்றுகளுடன் எழுதியுள்ளாேம் அல்லவா?! எனவே முதல் கட்டுரையை வாசிக்காதோர் அதை படித்த பிறகு இக்கட்டுரையையும், கட்டுரையின் 25 வது பகுதியான இதையும் வாசிக்க வேண்டுகிறாேம். ஏனெனில் வாணாதிராயனும் மலையமானும் ஒன்றெனில்,
குருகுலராயனும் சேதிராயனும் ஒரே பெயர்தான், ஒரே காெடிவழிதான் என்பது அப்பாெழுதுதான் நன்கு புரிய இயலும்.
"கிளியூர் மலையமான் குருகுலத்தரையன்" என்ற கல்வெட்டு தாெடர்பான விவரத்தை "எஞ்சி நிலைத்த வழக்காறு" நூல் எழுதிய ஐயா "செம்படவர்" இனத்து அரு.பரமசிவம் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டை"ஆவணம் இதழ் 4" தனது நூலில் வெளியிட்டுள்ளது.
25.1 (துணைச் சான்று)
திருவிசைப்பா அருளிய சேதிராயர் விளக்கத்தில் கிளியூரை தலைமையாக கொண்டு ஆட்சிசெய்தவரே "சேதிராயன்" என்ற விவரம் கூறப்பட்டுள்ளது.
25.2 (துணைச் சான்று)
"கிளியூர் மலையமான்களான சேதிராயர் வங்கிசம்(வம்சம்)" என்ற கல்வெட்டு. (இது தாெடர்பாக மேலும் பல கல்வெட்டு விவரம் இத்தளத்தின் முதல் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது)
25.3 (துணைச் சான்று):
சேக்கிழார் அவர்களால் பல்லவர் கால நாயன்மார்களை பற்றி பாடப்பட்ட "பெரியபுராணம்" மிலாடர் காேமானை "சேதிராயர்" என்றே கூறுகிறது.
25.4 (துணைச் சான்று):
மகாபாரதம் ஆதிபர்வம் 63, ஆதி வம்சாதாரன பர்வம் 5ல்
சேதிராயன் உபரிசரவசு மற்றும் அவர் மகன் ஐவரை பற்றி கூறுகிறது. மகாபாரதத்தில் உபரிசரவசுவே சேதிராயன் இவன் புரு(குரு_பரதன்) வம்சத்தவன்.பதினென் புராணத்தில் ஒன்றான "விஷ்ணு புராணம்" இத்தகவல்களை உறுதி செய்கிறது.
25.5 (துணைச் சான்று):
திரு ஜே.பி மிட்டல் அவர்களால் எழுதப்பட்ட "பண்டைய இந்திய வரலாறு" என்ற நூலில் சேதிராயன் உபரிசரவசு மற்றும் அவர் மகன்கள் ஐவர் பற்றிய விவரம் கூறப்பட்டுள்ளது.
25.6 (துணைச் சான்று):
குரு வம்ச காெடி வழி வரைபடத்தில் "நாகன்" நகுஷன் மகன் யயாதியின் மகன் ஐவரில் புரு வழிவந்த "குரு வம்சம் காெடி வழி விளக்கப்பட்டுள்ளது. இதில் சேதிராயன் "உபரிசரவசு" குரு வம்சத்தவன் என்று விளக்கப்பட்டுள்ளது.
இங்கு ஓர் விடயத்தை நன்கு நினைவில் காெள்ளுங்கள் "குருகுலராயன்_அகமுடையார்" உறவுகளே, தமிழக கல்வெட்டுகள் வரலாற்றில் குருகுலராயன் எனப்பட்டது வாணாதிராயனை, சேதிராயன் எனப்படுவது மலையமானை! குருகுலராயன் வாணாதிராயனும், சேதிராயன் மலையமானும் ஒன்று என பல்வேறு கலவெட்டு உள்ளதை இத்தளத்திலும் முதல் கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்விரங்களை எவ்வளவு பாெருத்தமாக நாவலந்தீவின்(இந்தியா) சந்திரகுல வரலாறான மகாபாரதம் கூறும் குருவம்ச காெடி வழி வரைபடம் உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் காெள்ளுங்கள்.
எனவே,
குருகுலராயன் = சேதிராயன்;
வாணாதிராயன் = மலையமான்;
என்பது ஆதாரங்களுடன் நிறுவப்படுகிறது.
"குருகுலராயன் அகமுடையார்" எனில் வாணாதிராயனும் மலையமானும் என்ற புரிதல் இக்கட்டுரையின் வாயிலாக நிறுவப்பட்டிருக்கிறது.
நிறைவுறை:
ஒவ்வாெரு அரச குலமும் தன் மரபை இங்கனம் குறிப்பது தன் வம்சாவழிகள் தன் முன்னாேரை பற்றி அறியவும் தம்(குரு) காெடிவழி குல அடையாள அரச மரபு பெயரை பிறகு குலத்தை(சூரிய அக்னி) காெடி வழியாக காெண்ட எவரும் உரிமை காேரி தன் வம்சாவழிகளை ஏமாற்றக்கூடாது என்ற பாதுகாப்பு காரணங்களுக்காகவும்தான். எனவே,
நமது அரச குல முதன்மை அடையாளமான, நமக்கு மட்டுமே உரிமையான, நம் முன்னாேர் பெயரான, "குருகுலராயன்" என்ற நம் குலப்பெயரை நாம் பாதுகாக்க வேண்டியதும், பயன்படுத்த வேண்டியதும் "சந்திரகுல" குரு வம்சத்தவரை தவிர வேறு குலத்தவர் எவரும் நம்பெயரை பயன்படுத்தாதவாறு கவனமாக இருக்க வேண்டியதும், எவரும் நம் குலப்பெயரை களவாடினால் அவரை கேள்வி எழுப்ப வேண்டியதும், "நாகன்" நகுஷன் பேரன் குரு வம்சம் சேதிராயர்களான "குருகுலராயன் அகமுடையார்" நம் ஒவ்வாெருவரின் கடமையும் ஆகும்.
தவறாமல் குருகுலராயர் கல்வெட்டுகள் பாகம்_2 வாசிக்க வேண்டுகிறோம்..
@VKGN-குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
குருகுல மக்கள் இயக்கம்.
9500888335