வியாழன், 24 டிசம்பர், 2020

சேலம் ஆறகளூர் மெய்ப்பொருளார் குருபூஜை..

மலையர்குல ராயர் மருதுபாண்டியர் குடும்பத்தின் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை 1.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்,
2.சிவகங்கை மாவட்டம்
காளையார் கோவில்,
3.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மந்திரபுரீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்த விழா படங்களை இத்தளத்தின் கடந்த கட்டுறைகளில் முழு படங்களுடன் கண்டோம், 

இக்கட்டுறையில் சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் விழா தொடர்பான படங்களை 
முழுமையாக காண்போம்...

விழா நினைவு சிறப்பு காலண்டர்: 👇👇
சேலம் மாவட்ட ஆத்தூர் வட்டம் ஆறகளூர் என்பது மிலாடு எனப்படும் மலைநாட்டில் மலையர்குலத்தின் முக்கிய தலைநகராகும்,மகதை மண்டலம் மிலாடு ஆற்றூர் கூற்றம் என பல கல்வெட்டுகளில் நம் வரலாற்றின் சுவடுகளை பதிந்து காலம் கடந்து வாழ்ந்து வரும் இப்பகுதியில் ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோவிலில் நம் மன்னர் மகதராயர் எனப்படும் வாணகோவரையருக்கு சிலையும் உள்ளது,
விழா தொடர்பாக முதல்முறையாக ஆறகளூர் சென்றபோது ஐயா திரு நரசிம்மன் அகமுடையார் அவர்களை சந்தித்த படம்;
விழா காலண்டரின் மாடலில் வருடாந்திர மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா அழைப்பிதழ் நகலை ஐயாவிடம் தந்த படம்,
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் படங்கள்; 👇
63 நாயன்மார் சன்னதி;
மலையர்குல வாணகோவரையர்;
ஆறகளூர் அகமுடையார் உறவுகளிடத்தில் விழா காலண்டர் தந்த படங்கள்; 👇
ஆறகளூர் கோவில் வாசலில் விழா பதாகை முன் திரு நரசிம்மன் அகமுடையார் அவர்களுடன்;

பிரதானமாக திருக்கோவிலூர் குருபூஜை விழாவை இவ்வாண்டில் ஒருங்கினைக்க நான்  அங்கு இருக்கவேண்டிய காரணம் கருதி(கீழ் படம்) ஆறகளூரில் மேலதிக விழா படங்களை என்னால் நேரடியாக எடுக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,
(திருக்கோவிலூர் மெய்ப்பொருளார் குருபூஜை விழா படம் கீழே)

மகத மண்டலம் ஆற்றூர் கூற்றத்தில் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் மட்டும் அல்லாது ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவில், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில் மற்றும் கூகையூர் கோவில்கள் ஆகியனவும் முக்கியம் வாய்ந்த கோவில்களாகும்..

குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா ஏற்பாடுகளின் போது அக்கோவில்களில் தரிசித்த படங்களை இனி காண்போம்,

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்;

மலையர்குல ராயர்களான வாணகோவரைய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது தென்பொன்பரப்பி கோவில்,
16 பட்டை வடிவ ஸ்படிக லிங்கம் உள்ள தமிழகத்தின் ஒரே கோவில் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில் மட்டுமே என்பதல்லாது மூவேந்தரும் தன் முடிகளை காணிக்கையாக்கி சேர,சோழ,பாண்டிய என தனி தனி லிங்கங்களை பிரதிஷ்டை செய்த தலமும் இதுவாகும்.. 👇👇


இனி வருவது ஆற்றுர் டவுனில் உள்ள காயநிர்மலேஸ்வரர் கோவிலில் குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனாரை வருடாந்திர குருபூஜை விழா ஏற்பாடுகளுக்கு முன்னர் தரிசித்த படங்கள்; 👇👇

வசிஷ்ட நதிக்கரை ஆற்றூர்;
இவ்விழா தொடர்பாக சின்ன சேலம் அகமுடையார் திருமண மண்டப தலைவரை சந்தித்த படம்;👇👇
2 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள உள்ள சின்னசேலம் அகமுடையார் திருணமண்டபம் பகுதி அகமுடையார் அண்ணனுக்கு விழா காலண்டர் தந்த படங்கள்;
ஆறகளூர்,ஆற்றூர்,தென்பரப்பி படங்கள் நிறைவுற்றது,

வரும் ஆண்டுகளில் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலின் குருகுலராயன் மெய்ப்பொருள் நாயனர் குருபூஜை விழா படங்கள் திருக்கோவிலூரில் நடந்ததை போல விமர்சையாக செய்யப்பட்டு முழுமையாக பதியப்படும்..

திருக்கோவிலூர்; 👇👇

திருக்கோவிலூர் மெய்ப்பொருளார் குருபூஜை முழு படத்தொகுப்பை நமது தளத்தின் தனிக்கட்டுறையில் காண வேண்டுகிறோம்..

வாழ்க மலையர்குல ராயர் மருதுபாண்டியர் புகழ்..

வளர்க குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் புகழ்..

       "இங்கனம்"
@ VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக