வியாழன், 24 டிசம்பர், 2020

சேலம் ஆறகளூர் மெய்ப்பொருளார் குருபூஜை..

மலையர்குல ராயர் மருதுபாண்டியர் குடும்பத்தின் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை 1.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்,
2.சிவகங்கை மாவட்டம்
காளையார் கோவில்,
3.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மந்திரபுரீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்த விழா படங்களை இத்தளத்தின் கடந்த கட்டுறைகளில் முழு படங்களுடன் கண்டோம், 

இக்கட்டுறையில் சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் விழா தொடர்பான படங்களை 
முழுமையாக காண்போம்...

விழா நினைவு சிறப்பு காலண்டர்: 👇👇
சேலம் மாவட்ட ஆத்தூர் வட்டம் ஆறகளூர் என்பது மிலாடு எனப்படும் மலைநாட்டில் மலையர்குலத்தின் முக்கிய தலைநகராகும்,மகதை மண்டலம் மிலாடு ஆற்றூர் கூற்றம் என பல கல்வெட்டுகளில் நம் வரலாற்றின் சுவடுகளை பதிந்து காலம் கடந்து வாழ்ந்து வரும் இப்பகுதியில் ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோவிலில் நம் மன்னர் மகதராயர் எனப்படும் வாணகோவரையருக்கு சிலையும் உள்ளது,
விழா தொடர்பாக முதல்முறையாக ஆறகளூர் சென்றபோது ஐயா திரு நரசிம்மன் அகமுடையார் அவர்களை சந்தித்த படம்;
விழா காலண்டரின் மாடலில் வருடாந்திர மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா அழைப்பிதழ் நகலை ஐயாவிடம் தந்த படம்,
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் படங்கள்; 👇
63 நாயன்மார் சன்னதி;
மலையர்குல வாணகோவரையர்;
ஆறகளூர் அகமுடையார் உறவுகளிடத்தில் விழா காலண்டர் தந்த படங்கள்; 👇
ஆறகளூர் கோவில் வாசலில் விழா பதாகை முன் திரு நரசிம்மன் அகமுடையார் அவர்களுடன்;

பிரதானமாக திருக்கோவிலூர் குருபூஜை விழாவை இவ்வாண்டில் ஒருங்கினைக்க நான்  அங்கு இருக்கவேண்டிய காரணம் கருதி(கீழ் படம்) ஆறகளூரில் மேலதிக விழா படங்களை என்னால் நேரடியாக எடுக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,
(திருக்கோவிலூர் மெய்ப்பொருளார் குருபூஜை விழா படம் கீழே)

மகத மண்டலம் ஆற்றூர் கூற்றத்தில் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் மட்டும் அல்லாது ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவில், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில் மற்றும் கூகையூர் கோவில்கள் ஆகியனவும் முக்கியம் வாய்ந்த கோவில்களாகும்..

குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா ஏற்பாடுகளின் போது அக்கோவில்களில் தரிசித்த படங்களை இனி காண்போம்,

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்;

மலையர்குல ராயர்களான வாணகோவரைய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது தென்பொன்பரப்பி கோவில்,
16 பட்டை வடிவ ஸ்படிக லிங்கம் உள்ள தமிழகத்தின் ஒரே கோவில் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில் மட்டுமே என்பதல்லாது மூவேந்தரும் தன் முடிகளை காணிக்கையாக்கி சேர,சோழ,பாண்டிய என தனி தனி லிங்கங்களை பிரதிஷ்டை செய்த தலமும் இதுவாகும்.. 👇👇


இனி வருவது ஆற்றுர் டவுனில் உள்ள காயநிர்மலேஸ்வரர் கோவிலில் குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனாரை வருடாந்திர குருபூஜை விழா ஏற்பாடுகளுக்கு முன்னர் தரிசித்த படங்கள்; 👇👇

வசிஷ்ட நதிக்கரை ஆற்றூர்;
இவ்விழா தொடர்பாக சின்ன சேலம் அகமுடையார் திருமண மண்டப தலைவரை சந்தித்த படம்;👇👇
2 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள உள்ள சின்னசேலம் அகமுடையார் திருணமண்டபம் பகுதி அகமுடையார் அண்ணனுக்கு விழா காலண்டர் தந்த படங்கள்;
ஆறகளூர்,ஆற்றூர்,தென்பரப்பி படங்கள் நிறைவுற்றது,

வரும் ஆண்டுகளில் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலின் குருகுலராயன் மெய்ப்பொருள் நாயனர் குருபூஜை விழா படங்கள் திருக்கோவிலூரில் நடந்ததை போல விமர்சையாக செய்யப்பட்டு முழுமையாக பதியப்படும்..

திருக்கோவிலூர்; 👇👇

திருக்கோவிலூர் மெய்ப்பொருளார் குருபூஜை முழு படத்தொகுப்பை நமது தளத்தின் தனிக்கட்டுறையில் காண வேண்டுகிறோம்..

வாழ்க மலையர்குல ராயர் மருதுபாண்டியர் புகழ்..

வளர்க குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் புகழ்..

       "இங்கனம்"
@ VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

முத்துப்பேட்டை மந்திரபுரீஸ்வரர் கோவில் மெய்ப்பொருளார் குருபூஜை..

டெல்டாவில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை..
டெல்டா மண்டலத்தில் எனது சொந்த ஒன்றியமான முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் வருடாந்திர மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா நிகழ்விற்காக டெல்டா சென்றபோது தஞ்சையில்(கரந்தை) 
ஆதியரசன் அகமுடையார் பாட்டனான ஐந்தாம் தமிழ்ச்சங்கம் கண்ட "தமிழவேள்" உமா மகேஸ்வரன் பிள்ளை ஐயாவிற்கு மரியாதை செய்யப்பட்டது..

தஞ்சையில் தலைமை அகமுடையார் சங்க  பொருளாளர் திரு.கார்த்திகேயன் அகமுடையார் அண்ணன் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் தரப்பட்ட படம்; 👇
அடுத்தபடியாக பட்டுக்கோட்டை சென்று கோட்டைத்தெரு சிவன் கோவில் தரிசனம்; 👇
நண்பர்கள் சந்திப்பு; 👇
தனம் பேக்கரி திரு.புகழ் அவர்கள் மற்றும் திரு.அருண் அவர்களுடன் பட்டுக்கோட்டையில் தேநீர் சந்திப்பு,
மருதுசேனை அமைப்பில் மாநில பொருப்பேற்ற திரு.சந்திரகாண்டீபன் அவர்களை குறிச்சியில் அண்ணன் இல்லத்தில் சந்தித்து மரியாதை செய்தது; 👇👇
இரவு திரு.குஞ்சப்பா அத்தானுடன் தில்லைவிளாகத்தில் ஓய்வு, மறுநாள் காலை அத்தானுடன் எனது பூர்வீக கிரமாம் மேலப்பெருமழை சென்று உறவிர்கள் அனைவருக்கும் விழா காலண்டர் தந்துவிட்டு திரும்பினோம்..👇

திரு.தில்லை மெய்யப்பா வீட்டு அத்தையுடன்;

மேலப்பெருமழை தலைவர் குடும்பம் எனது பெரியப்பா திரு இராஜமானிக்கம்தேவர் அவர்கள் இல்லத்தில் எனது சித்தப்பா திரு.கணபதி தேவர் அவர்களுடன்; 👇
எனது பூர்வீக கிராமத்தை உள்ளடக்கிய ஒன்றியத்தின் தலைநகரான முத்துப்பேட்டையில் ஆலங்காடு அத்தான் திரு.சந்திரபிரகாஷ் அவர்களின் கடையில் மாமாவுடன்.. 👇
மந்திரபுரீஸ்வரர் கோவிலில்;

முத்துப்பேட்டை ஜாம்புவனோடையில் எனது சொந்த பெரியப்பா திரு சக்திவேல் தேவர் வீட்டு பங்காளியான திரு 
VKGS.கீர்த்திவாசன் அண்ணன் அவர்களையும் சந்தித்துவிட்டு விழாப்பதாகை & மாலை & ஆகிய கடைகளில் முத்துப்பேட்டையில் விழாவிற்கு தேவையான விடயங்களை விசாரித்துவிட்டு தம்பிக்கோட்டை செல்லும் வழியில் செம்படவன்காடு பாமணி ஆற்றங்கரை அங்காளம்மன் கோவிலில் தரிசனம்.. 👇👇
செம்படவன்காடு கோவில் பூசாரியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மெய்ப்பொருளார் விழா காலண்டரும் தந்துவிட்டு சிறிது நேரம் உரையாடல்; 👇
தம்பிக்கோட்டையில் அத்தான் திரு.நந்த ஜீவா அவர்களை சந்தித்து உரையாடிவிட்டு ஊர் முக்கியஸ்தர் பலரை சந்தித்து விழா காலண்டர் தந்து அழைத்தோம்..

நந்தஜீவா டெக்ஸ்டைல்ஸ் திரு நந்தஜீவா அத்தான் அவர்களுடன்;👇
தம்பிக்கோட்டை பெரியவர் அமரர் பாவண்ணா அவர்களின் பேரன் உயர்திரு.பிரகாஷ் அவர்களுக்கு நந்தஜீவா அத்தான் அவர்களுடன் சென்று சந்தித்து வந்த படம்; 👇

தம்பிக்கோட்டையில் அரசியல் கட்சி சார்பின்றி பலரையும் சந்தித்து வந்தோம்,

இந்த ஆண்டு மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை நடுநாடாம் திருக்கோவிலூரில் நடப்பதில் நான் கலந்துகொள்ளவேண்டிய சூழல் ஆதலால் எனது சொந்த ஒன்றியத்தில் அதிக நேரம் செலவிட்டு விழா ஒருங்கினைப்பை செய்ய இயலவில்லை,

எனவே நேரமின்மை காரணமாக அடுத்தபடியாக துவரங்குறிச்சியில் அத்தான் திரு.மனுநீதிச்சோழன் 
(ஜீவன் மெடிக்கல் ) அவர்களை சந்தித்துவிட்டு திருக்கோவிலூர் விழாவிற்கு புறப்பட்டு வந்தேன்..

   (திருக்கோவிலூரில்)

திருக்கோவிலூரில் உயர்திரு.
TKT.முரளி அகமுடையார் அண்ணன் அவர்கள் தலைமையில் நடந்த குருபூஜை விழா படங்களின் தொகுப்பு இதே பிளாக்கில் 80 படங்களுடன் முழுமையாக முந்தைய கட்டுறையாக பதியப்பட்டுள்ளது உறவுகள் காண வேண்டுகிறோம்.. 

https://gurukularayanagamudayar.blogspot.com/2020/12/blog-post_18.html?m=1

இனி வருவன தம்பிக்கோட்டை அத்தான் திரு.நந்தஜீவா அவர்கள் எளியமுறையில் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் மெய்ப்பொருள் நாயனாருக்கு அர்ச்சனை, ஆராதனை விழா செய்த படங்கள்; 👇👇

கோவில் நுளைவாயிலில் தம்பிக்கோட்டை 
மலேயா கணபதித்தேவர்,
வாட்டாகுடி இரணியன் தேவர், ஜாம்புவனோடை சிவராமன் தேவர்,மேலப்பெருமழை புலவர் சோமசுந்தரனார் படங்கள் மற்றும் விழா சிறப்பு காலண்டர் மாடல் மற்றும் 63வர் போற்றி ஆகியவற்றுடன் விழா பதாகை;

விழா பதாகை மாடல்;
கோவில் நுளைவாயிலில்;
கோவிலூர் கோவில் விழா படங்கள்; 👇👇

முத்துப்பேட்டை கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவில் நுளைவாயிலில் உள்ள விழா பதாகையிடம் ஆலங்காடு அத்தான் திரு.சந்திரபிரகாஷ் அவர்கள்; 👇👇
ஒவ்வொரு தமிழ்குடிகளும் 63 சிவனிய நாயன்மார்களில் தனது சமுதாய நாயனாரின் நட்சத்திர குருபூஜை நாளன்று 63வரையும் போற்றி வணங்கி சிவனியம் போற்றவேண்டியதும் & காக்க வேண்டியதும் இன்றியமையாத கடமையாகும்..

இனி வரும் ஆண்டுகளில் எனது உறவினர்கள்ஊரார் & எனது ஒன்றிய அளவிலான சமுதாய நண்பர்கள் என அனைவரின் ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் வெகு விமர்சையாக மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா
முத்துப்பேட்டை மந்திரபுரீஸ்வரர் கோவிலில் முன்னெடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

நடுநாடு எனப்படும் திருக்கோவிலூரில் விழாவின் இறுதியில் கோவில் தரப்பில் விழா குழுவினருக்கு பிரசாதம் வழங்கி மரியாதை செய்த படங்கள்; 👇👇
தென்னாடுடைய சிவனே போற்றி,எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..
(திருக்கோவிலூரில் 🖕🖕
மெய்ப்பொருளார் உற்சவர் அலங்கார படம்)

சிவாயநம..

"இங்கனம்"
VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
மேலப்பெருமழை கிராமம்,
முத்துப்பேட்டை ஒன்றியம்,
டெல்டா.
9500888335

2021 கார்த்திகை உத்திரம் 
மெய்ப்பொருளார் குருபூஜை விழாவிற்கு பங்கேற்க & பங்களிக்க  விரும்புபவர்கள் தொடர்புகொள்க;
நன்றி நன்றி..