வியாழன், 24 நவம்பர், 2022

பச்சையப்ப முதலியார் பாகம்_5,,

++++


06-10-1941 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில் நடைபெற்ற, பெரியகுளம் தாலுகா 1வது முக்குலத்தோர் மகாநாட்டில், 

அகமுடையார் குலத்தோன்றல் 
"வள்ளல் வி.பச்சையப்ப முதலியார்"
விவரங்கள்,,,

1941 ஆம் ஆண்டு பெரியகுளத்தில் நடைபெற்ற முக்குலத்தோர் மகாநாட்டில் வட மாவட்டத்தில் வாழும் முதலியார் பட்டப்பெயரை தாங்கி வாழும் அகமுடையார் மக்களும், தென் மாவட்டத்தில் வாழும் சேர்வை, தேவர் பட்டப்பெயரை தாங்கி வாழும் அகமுடையார் மக்களும் ஒரே இனம் என்பதை பிரதிபலிக்கும் முகமாக, 

அகமுடையார் குலத்தில் உதித்த, 
வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து சிறப்பித்துள்ளனர். 

இத்திருவுருவப் படத்தை, மதுரை மாவட்டம், வி.நெடுங்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் முதுப்பெரும் தலைவர், 1952-1957 வரை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், தெய்வத்திரு பாரதா R.M.முத்துத்தேவர் Ex.MLA., அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். 

சமூக அமைப்புகளின் நீண்ட நெடிய வரலாற்றின் வழித்தடத்தினை அறியாத சில கத்துக்குட்டி தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும், முகநூலில் மட்டுமே கம்பு சுத்தும் போலி முகநூல் முகவரிகளும்... 

இந்த வரவேற்பு உபச்சார இதழை  முழுமையாக வாசித்து தெளிவடையுமாறு வேண்டுகிறோம். 

வள்ளல் வி. பச்சையப்ப முதலியார் அவர்கள் - அகமுடையார் குலத்தின் வழித்தோன்றல்! 

அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம். 

இந்த வரவேற்பு உபச்சார இதழினை எமக்கு அளித்து உதவிய தெய்வத்திரு, 
பாரதா R.M.முத்துத்தேவர் Ex.MLA., அவர்களின் குடும்பத்தினருக்கு அகமுடையார் அரண் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 
-----------------------------------------------------------------
அகமுடையார் பேரினத்தின் 
ஒற்றுமையை நோக்கி.... 

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், 
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.

+++

புதன், 2 நவம்பர், 2022

ஆதி பகவன் சிவன்,,


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

திருவள்ளுவர் கூறும் "ஆதி பகவன்" என்பது சிவபெருமானையேக் குறிக்கும். திவாகர நிகண்டிலும் சிவபெருமானுக்கு உரிய பெயர்களில் 'பகவன்' என்ற பெயரும் உண்டு. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சித்தாந்த சிகாமணி என்ற நூல் சிவபெருமானை நேரடியாக ஆதிபகவன் என்கிறது. மேலும் கபிலரால் பாடப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது, நாற்பெரும் தெய்வங்களைப் (சிவன், திருமால், முருகன், பலராமன்) பற்றிக் குறிப்பிடுகையில் சிவபெருமானை நேரடியாக "பகவன்" என்று அழைக்கிறது.!

"முக்கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா, பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா, சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா, சத்தியான் தாள் தொழாதார்க்கு"

- இன்னா நாற்பது.

பொருள் : முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியை உடையவனான பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்.

- பா இந்துவன்.

வியாழன், 27 அக்டோபர், 2022

மனுஸ்மிருதியில் பெண்கள்..


மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி சொல்ல பட்டுள்ளவை...

மனு ஸ்மிருதி 3-56

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: |யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா: ||

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.

மனு ஸ்மிருதி 9-3

பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே| ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி ||

உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும்.பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது. காப்பவர் இல்லாமல் பெண்கள் இருக்கக்கூடாது. அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்பட மனுதர்ம வாக்கியம் இது

மனு ஸ்மிருதி 3-55

பித்ருபிர் ப்ராத்ருபிஶ் சைதை பதிபிர் தேவரைஸ் ததா | பூஜ்யா பூஷயிதவ்யாஶ்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி: ||

தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும்.

மனு ஸ்ம்ருதி 3-58

ஜாமயோ யானி கேஹானி ஸ்ஸபந்தி அப்ரதிபூஜிதா: | தானி க்ருத்யாஹதானீவ வினஶ்யதி ஸமந்தத: ||

எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.

மனு ஸ்ம்ருதி 9-26

ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய: | ஸ்த்ரிய: ஸ்ரீயச்ச கேஹேஷு ந விஶேஷோஸ்தி கஶ்சன ||

தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள்.

மனு ஸ்ம்ருதி 9-11

அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்| ஶௌசே தர்மே அன்னபங்க்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேஷணே||

வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.

மனு ஸ்ம்ருதி 9-90

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருஶம் பதிம்

நல்லது கெட்டது பகுத்தறியும் புத்தி வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் என்றால்  பெற்றோர் தேர்ந்தெடுப்பது உசிதம்.
.

மனு ஸ்ம்ருதி 8-28

வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு ச |  பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச ||

பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

மனு ஸ்ம்ருதி 8-352

பரதாராபிமர்ஶேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி:| உத்வேஜன கரைர்தண்டை: சின்னயித்வா ப்ரவாஸயேத் ||

பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.

புதன், 26 அக்டோபர், 2022

யாதவர் நிலபத்திரங்கள்,

++
++

ஐயனார் பெயர் ஆரியன்..


ஐயனார் பற்றி நிகண்டுகள் :

கோழிக் கொடியோன் சாதவாகனன் காரி சாத்தன் கடல் நிற ஐயன்" (திவாகரம்)

+++

சாதவாகனன், கோழிக்கொடியோன், சாத்தன், வெள்ளை யானை வாகனன் காரி, செண்டாயுதன் கடல் நிற வண்ணன் பூரணை கேள்வன் புட்கலை மணாளன் ஆரியன் அறத்தைக் காப்போன் யோகி அரிகர புத்திரன் ஐயன் பெயரே" (பிங்கலம்)

"காரி ஊர்தி காரிக் குதிரை கோழிக் கொடியும் ஆகும் என்ப" (பிங்கலம்)

வானோர் முனிவர் மறையவர் ஆசான் சாத்தன் மூத்தோன் தகப்பனும் ஐயன்" (பிங்கலம்)

+++

காரியே புறத்தவன் பூங் கடல் வண்ணன் நெடிய சாத்தா
பூரணை கேள்வன் யோகி புட்கலை தன் மணாளன்
ஒரு மாசாத்தன் செண்டாயுதன் வெள்ளை யானை ஊர்தி
ஆரியன் அறத்தைக் காப்போன் அரிகர குமரன் ஐயன்" (சூடாமணி)

சாத்தனே அருகன் ஐயன்" 
(சூடாமணி )

+++

தன்னிகரற்றிலங்கும் எழில் ஐயனாரை தாவறு சீர் கடல் தனக்கு அருகு வைத்து" (வையா பாடல்)

வாகு செறி ஐயனைப் பூசிப்போர் தாமும்" (வையாபாடல்,)

பல பெயர்களில் "ஆரியன்" என்ற
பெயர் வருகிறது இதை நினைவூட்டுகிறோம்,,,

++++++

வலங்கை இடங்கை தெரு..