"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
திருவள்ளுவர் கூறும் "ஆதி பகவன்" என்பது சிவபெருமானையேக் குறிக்கும். திவாகர நிகண்டிலும் சிவபெருமானுக்கு உரிய பெயர்களில் 'பகவன்' என்ற பெயரும் உண்டு. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சித்தாந்த சிகாமணி என்ற நூல் சிவபெருமானை நேரடியாக ஆதிபகவன் என்கிறது. மேலும் கபிலரால் பாடப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது, நாற்பெரும் தெய்வங்களைப் (சிவன், திருமால், முருகன், பலராமன்) பற்றிக் குறிப்பிடுகையில் சிவபெருமானை நேரடியாக "பகவன்" என்று அழைக்கிறது.!
"முக்கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா, பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா, சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா, சத்தியான் தாள் தொழாதார்க்கு"
- இன்னா நாற்பது.
பொருள் : முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியை உடையவனான பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்.
- பா இந்துவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக