மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி சொல்ல பட்டுள்ளவை...
மனு ஸ்மிருதி 3-56
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: |யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா: ||
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
மனு ஸ்மிருதி 9-3
பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே| ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி ||
உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும்.பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது. காப்பவர் இல்லாமல் பெண்கள் இருக்கக்கூடாது. அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்பட மனுதர்ம வாக்கியம் இது
மனு ஸ்மிருதி 3-55
பித்ருபிர் ப்ராத்ருபிஶ் சைதை பதிபிர் தேவரைஸ் ததா | பூஜ்யா பூஷயிதவ்யாஶ்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி: ||
தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும்.
மனு ஸ்ம்ருதி 3-58
ஜாமயோ யானி கேஹானி ஸ்ஸபந்தி அப்ரதிபூஜிதா: | தானி க்ருத்யாஹதானீவ வினஶ்யதி ஸமந்தத: ||
எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.
மனு ஸ்ம்ருதி 9-26
ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய: | ஸ்த்ரிய: ஸ்ரீயச்ச கேஹேஷு ந விஶேஷோஸ்தி கஶ்சன ||
தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள்.
மனு ஸ்ம்ருதி 9-11
அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்| ஶௌசே தர்மே அன்னபங்க்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேஷணே||
வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.
மனு ஸ்ம்ருதி 9-90
ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருஶம் பதிம்
நல்லது கெட்டது பகுத்தறியும் புத்தி வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் என்றால் பெற்றோர் தேர்ந்தெடுப்பது உசிதம்.
.
மனு ஸ்ம்ருதி 8-28
வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு ச | பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச ||
பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
மனு ஸ்ம்ருதி 8-352
பரதாராபிமர்ஶேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி:| உத்வேஜன கரைர்தண்டை: சின்னயித்வா ப்ரவாஸயேத் ||
பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக