முன் தோன்றிய மூத்தகுடி..
புறப்பொருள் வெண்பாமாலையின் கரந்தை படலத்தின் கடைசி பாடலுக்கு பழங்கால உரையாசிரியர் சாமுண்டி தேவ நாயனார் உரைதான் தான் இப்பதிவில் உள்ள படம்,,
அவருடைய உரைக்கு விரிவான விளக்கம் 👇👇
1) பொய்ம்மை நீங்க நாடோறும் கீர்த்தியுண்டாக்குதல், என்ன அதிசயமாம் -
உலகில் உள்ள பொய்யான பெருமைகள் எல்லாம் நீங்கிப் போக கரந்தைப் போர்க்குடி தினம் தோறும் புகழை உண்டாக்குதல் என்ன பெரிய அதிசயமாம்?
2) பூமியைமறைத்த தெளிந்துகறங்கும் உகாந்த வெள்ளம் விட்டு நீங்க -
உலகத்தை மறைத்த தெளிவாக ஒலிக்கும் யுகமுடிவு பிரளய வெள்ளமானது பூமியை விட்டு நீங்க,
3) முற்பட மலைதோன்றிப் பூமிதோன்றாத அளவிலே -
(பிரளய வெள்ளம் பூமியை மறைத்திருந்து நீங்கியதனால்) முதலில் (உயரமான பகுதியான) மலை (கண்ணுக்குத்) தோன்றி சம நிலம் தோன்றாத போதே,
வாளுடனே எல்லாரிலும் முற்பட #மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி! - கையில் வாளுடனே எல்லா குடியை விடவும் முற்பட்டு மலைப் பகுதியிலே தோன்றி மிக்க பழமையுடையதாகிய குடி.
----
இதுவே இதன் பொருள்.
அதாவது யுக முடிவில் பிரளயம் வந்ததால் உலகம் முழுக்க நீரால் மூழ்கியது.அந்த நீரானது கொஞ்சம் கொஞ்சம் விலகும் போது முதலில் உலகின் உயரமான பகுதியான மலையை விட்டே நீர் நீங்கி அம்மலை கண்ணுக்கு தென்படும்.இதற்கு காரணம் புவியீர்பு விசை.இப்போதும் உயரமான பகுதியை விட்டே நீர் முதலில் இறங்கி வருதலே இயற்கை விதி.அப்படி பூமியின் பிற பகுதிகள் கண்களுக்கு தோன்றும் முன்னே முதலில் கண்களுக்கு மலை தோன்றிய காலத்தில் அம்மலையில் கையில் வாளுடனே பிற குடிகளை விட முந்தி தோன்றி பழமையான குடியாகிய பெருமை கொண்டது இந்த கரந்தை போர்க்குடி என்பதே இதன் விளக்கம்.
"வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி ."
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக