திங்கள், 13 செப்டம்பர், 2021

குருகுலராயன் அகமுடையார் சூரியகுலமா..?


இக்கட்டுறையின் தலைப்பே விவரம் அறிந்தவர்களுக்கு சிரிப்பை தரலாம்,காரணம் குருகுலராயன்(சந்திரகுல அரசன்) அகமுடையார் சூரியகுலமா..? என இருப்பதை பார்த்தால் நமது தளத்தின் 100 கட்டுறைகளை வாசித்த விவரமறிந்தவர்களுக்கு சிரிப்பு வரவே செய்யும்..

எனினும் இக்கட்டுறை எதற்காக எனில் சமீபத்தில் "Agamudayar Ottrumai" தளத்தின் நிர்வாகி திரு Sakthi M அவர்களால் வெளியிடப்பட்ட "சோழரின் சாதி என்ன" என்ற காணொளியில் அது(சோழர்) அகமுடையார் என்றும் எனவே அகமுடையார் சூரியகுலம் என்றும் மிகவும் நகைச்சுவைக்கு உரிய கருத்தை காணொளியாக்கியிருந்தார்,

அவரின் அறியாமைக்கு அக்காணொளியில் இக்கட்டுறையில் மேலே முதல் கல்வெட்டு படமாக உள்ள மிகமுக்கிய கல்வெட்டை பயன்படுத்தி இவற்றை சூரியகுல சான்றாக பதிவு செய்திருந்தார்,

அவரின் அறியாமைக்கு பதில்கூறுவதன் வாயிலாக எனது சமுதாய உறவினர்களுக்கும் உண்மையை சுருக்கமாக புரியவைப்பதே இக்கட்டுறையின் நோக்கம் ஆகும்,

சரி அதிமுக்கிய அந்த கல்வெட்டின் விவரங்களை காண்போம்;👇👇

கிபி 14 ஆம் நூற்றாண்டின் திருவெற்றியூர் கல்வெட்டு "வெட்டு மாவலி அகம்படியர்களின்" மிகமுக்கிய கல்வெட்டாகும்,

இதில் 1.காலிங்கராயன்,2.சேதிராயன்,
3.ஆதித்தன்,4.காயவடுகன் என்ற நான்ங்கு பெயரில் அகம்படியர் கூறப்பட்டுள்ளர்..

இதில் வரும் பெயர்களை சூரியகுல சான்றாக தனது 90 நிமிட காணொளியில் கூறி வைகை புயலை மிஞ்சியிருந்தார் நண்பர் Sakthi M அவர்கள்,

இந்நான்ங்கும் "குருகுலராயனாகிய வாணாதிராயன்" பெயர் என்பதற்கு தனித்தனியாக நமது தளத்தில் கட்டுறைகள் பதிவு செய்துள்ளோம் விருப்பமுள்ளவர் அதை வாசிக்க வேண்டுகிறோம் இக்கட்டுறையில் சுருக்கமாக அவ்விரங்களை பதிகிறேன்,

1.முதலில் வாணாதிராயன் பெயரில் ஆதித்தன் என உள்ள கல்வெட்டுகள்,

மேற்கோள் கல்வெட்டு _1,
**
மேற்கோள் கல்வெட்டு_2,
**
மேற்கோள் கல்வெட்டு_3,
**
மேற்கோள் கல்வெட்டு_4,
**
மேற்கோள் கல்வெட்டு_5,
இன்னும் நிரம்ப உள்ளது இங்கு இவை போதுமானது மேல் உள்ள 5 கல்வெட்டும் "ஆதித்தன்" பெயருடன் வாணாதிராயனை கூறுவன ஆகும்..

நமது கேள்வி என்னவெனில் ஆதித்தன் பெயர் உள்ளபடியால் "திதியின்" மைந்தன் அசுரகுல வேந்தன் தன்னை குருகுலராயன் என்று கூறிக்கொண்ட மகாபலி மகன் வாணாதிராயன் எங்கனம் "அதிதியின்" மைந்தன் சூரியகுல அரசனாவான்..?  வாணாதிராயர்களுக்குள்ள பெயர் எதுவாயினும் அது அகம்படியர்களுக்கு வராதா என்ன..? விஞ்ஞானி Sakthi M அவர்களுக்கே வெளிச்சம்..?

**

2.அடுத்தபடியாக காலிங்கராயன் என்பதையும் இங்கனமே சூரியகுல சான்று என்று உளரியிருந்தார் அருமை நண்பர்,

ஆனால் காலிங்கராயன் என்பதும் வாணாதிராயன் பெயர் என்பதற்கு சான்று;👇👇
மிகத்தெளிவாக வாணாதிராயன் மகன் பெயர் காலிங்கராயன் எனும் கல்வெட்டு;👇👇
மேல் உள்ள இரண்டு பகுதி விளக்கங்களில் உள்ள கல்வெட்டுகளின் முழு கல்வெட்டு விவரத்தை காண நமது தளத்தின் "காலிங்கராயன் கல்வெட்டுகள்" என்ற தனி கட்டுறையை வாசிக்க வேண்டுகிறேன்..
***

3.மூன்றாவது பெயரான "சேதிராயன்" என்பதை கூறி சோழரின் கிளைக்குடி சேதிராயன் என்று இருந்தார்,
சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.?

இதற்கு நமது தளத்தின் "சேதிராயன் கல்வெட்டுகள்" என்ற கட்டுறையை வாசிக்க வேண்டுகிறேன் உறவுகளே, நடுநாட்டை ஆண்ட சேதிராயனாகிய "மலையமான்" தன்னை குருகுலராயன் எனக்கூறிக்கொண்ட மகாபலி வாணாதிராயன் குலத்தவன் என்றும் அதற்காக அசுரர்களின் குலகுரு "பார்கவ கோத்திரம்" என்றும் கூறிக்கொண்டானே தவிற ஒருநாளும் தன்னை சூரியகுலமாக எப்போதும் பதிவு செய்யவில்லை,

4.கடைசியாக இக்கட்டுறையின் நாம் காணொளியில் பயன்படுத்தப்பட்ட முதல் உதாரண கல்வெட்டில் நாண்ங்காவது பெயர் "வடுகன்" பெயரும் வாணாதிராயனுடையது என்பதற்கு கல்வெட்டை காண்போம்; 👇👇
தமிழகத்தின் கிழக்கு தொடர்சி மலைக்கு வடபக்கத்திலும் மகாபலி வாணர்குலத்தின் நாடுகள் உண்டென்பதால் "வடுகர்" பெயரும் அசுர குலத்தவருக்கு உண்டு, மைசூரில் இன்றும் மகிசாசுரனுக்கு சிலையும் உண்டு அவை அசுரனான மகிசநாடு எனப்பெயருடையது மேலும் அப்பகுதி எருமையூரன் எனப்பட்ட சங்க இலக்கியம் கூறும் "வேள்" நாடுகள் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

மேலும் யதுகுல யாதவர்களான இடையர் சாதியர் உட்பட இன்றைய பல சாதியருக்கும் வடுகன் பெயர் உண்டென்பதற்கு நமது தளத்தில் சான்றுடன் தனிக்கட்டுறை உள்ளது உறவுகள் அதை வாசிக்க வேண்டுகிறேன்,

***

இங்கனம் வாணாதிராயர்களின் & வாணர் குலத்தின் பெயர் எதுவாயினும் அது வெட்டு மாவலி அகம்படியர்களுக்கு இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்,

**

மேலும் அவர்(Sakthi M) தனது காணொளியில் "சோழகங்கன்" என்பதை சூரியகுல பெயர் என கூறியிருந்தார் ஆனால் அதுவும் வாணாதிராயர்கள் பெயர் என்பதற்கு கல்வெட்டு சான்று கீழே;

மேற்கோள்_1,
மேற்கோள்_2
மேலும் மலையமானும் சோழகங்கர் பெயரை பயன்படுத்திய கல்வெட்டு சான்று கீழே;👇👇
மேற்கோள்_3,
திரு Sakthi M அவர்கள் காணொளியில் பயன்படுத்திய கல்வெட்டில் கூறப்படும் அனைத்து பெயரும் மாவலி வாணர்களுடையது என்பதற்கான சான்றுகள் இதுவரை பதியப்பட்டுள்ளது..

****

இங்கனம் வாணாதிராயர்களின் & வாணர்குல மலையமானின் பெயர் அனைத்தும் வெட்டு மாவலி அகம்படியர்களுக்கு வரும் எனும் அடிப்படை தெரியாமல் தன்னை தனக்கான செப்பேட்டிலும் "வெட்டுமாவலி அகம்படியர்" என்றும் "வல்லத்தரையன்" என்றும் கூறிக்கொண்ட "திதியின் மைந்தன்" அசுரகுல அகமுடையார்களை "அதிதியின்" மைந்தன் சூரியகுலம் என்பது வரலாற்றுக்கே முரணான விடயமாகும்...

மாவலி வாணாதிராயன் எப்ப தன்னை சூரியகுலம் என்றான் மிஸ்டர் Sakthi M ஐயா அவர்களே...??? சேதிராயன் மலையமான் தன்னை வாணகுலராயன் என்றுதானே கூறிக்கொண்டான்,,

****

குருகுலராயன் அகமுடையார் நாம் நமது வரலாற்றை பிறர் களவாடாமல் இருக்கவும் & காத்துக்கொள்ளவும் நமக்கான தகுதியாக இருக்கவேண்டியதே பிறர் குல வரலாறை நாம் ஆதாரமற்ற விடயங்களால் உரிமை கோராமல் இருப்பதே முதல் தகுதியாகும்..

திரு Sakthi M அவர்கள் தனது அறியாமையால் மலையர்குலமான மருதுகுலத்தை சூரியகுலம் என்பதன் வாயிலாக,

1.சோழ நாட்டில் சோழர்குடி என சான்றுள்ள சக தமிழ்சாதிகளிடத்தில் நம்மை பகையாக்குகிறார்,

2.அகமுடையார் இனத்தை தனது முழு வரலாற்றை உணர்ந்து அறியவிடமால் மடைமாற்றி மலடாக்குகிறார்,

3.நமது சந்திரகுல(குரு மரபு) வரலாற்றை பிறர்(சூரியகுலத்தவர்) களவாடும்போது அவர்களை நாம் கேள்வி கேக்க உரிமையற்றவர்களாக நமக்கு சூழலை உண்டாக்குகிறார்...

சுருக்கமாக எதற்கும் உதாவாத உணவிற்காக மட்டுமே தயாிக்கப்படும் பிராய்லர் கோழிகளாக தன் சிம்மாசனத்தில்கூட மீன் சின்னத்தை பொறித்து அழகுபார்த்த மருதுகுலத்தை உற்பத்தி செய்ய முனைகிறார்..

***

இக்கட்டுறையின் வாயிலாக எனது சமுதாயத்தவருக்கு நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான்,

"அகமுடையார் ஒற்றுமை" என்பதனை பேசுபவர் என்பதனால் மட்டுமே ஒருவர் வரலாறு தொடர்பாக கூறுவது அனைத்தும் சரியாக இருக்கும் என நினைப்பது மடமை Sakthi M &  Balamurugan Agamudayar ஆகிய இருவருக்கு மட்டுமல்ல இது எனக்கும் பொருந்தும் எதையும் ஆராய்ந்து பார்த்து தெளிவாகவேண்டியது ஒவ்வொருவரின் கடமை மேலும்,

பிறையை தலையில் சூடி உலகமாதா நம்குலமகள் மலைமகளுடன் மதுரையை ஆளும் சிவனின் சோமகுலத்தை விட பழமையானதும்,சிறந்ததும் 
உலகில் எதுவுமில்லை,
மருது பாண்டியர் பிறந்த நாட்டின் அடையாளமான நம் சந்திரகுலத்திற்கு(குரு மரபு & யது மரபு) நிகரானது சூரியகுலம் உட்பட எக்குலமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து "குருகுலராயன் அகமுடையார்" இனம் வரலாற்று தெளிவடைய வேண்டும் என்பது ஒன்றே என் வேண்டுகோள்...

நன்றி நன்றி..

     "இங்கனம்"
தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் மேலப்பெருமழை கிராமம்,
வைத்திலிங்கத் தேவர் மகன்,
குமாரசாமித் தேவர் மகன்,
கணபதித் தேவர் கடைசி மகன்,
நடராஜ் தேவர் ஒரே மகன்,

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

வியாழன், 2 செப்டம்பர், 2021

முன்தோன்றிய மூத்தகுடி..


முன் தோன்றிய மூத்தகுடி..

புறப்பொருள் வெண்பாமாலையின் கரந்தை படலத்தின் கடைசி பாடலுக்கு பழங்கால உரையாசிரியர் சாமுண்டி தேவ நாயனார் உரைதான் தான் இப்பதிவில்  உள்ள படம்,,

அவருடைய உரைக்கு விரிவான விளக்கம் 👇👇

1)  பொய்ம்மை நீங்க நாடோறும் கீர்த்தியுண்டாக்குதல், என்ன அதிசயமாம்   -

 உலகில் உள்ள பொய்யான பெருமைகள் எல்லாம் நீங்கிப் போக கரந்தைப் போர்க்குடி தினம் தோறும் புகழை உண்டாக்குதல் என்ன பெரிய அதிசயமாம்?

2) பூமியைமறைத்த தெளிந்துகறங்கும் உகாந்த  வெள்ளம் விட்டு நீங்க       -    

 உலகத்தை மறைத்த தெளிவாக ஒலிக்கும் யுகமுடிவு பிரளய வெள்ளமானது பூமியை விட்டு நீங்க,

3)  முற்பட மலைதோன்றிப் பூமிதோன்றாத அளவிலே         -

(பிரளய வெள்ளம் பூமியை மறைத்திருந்து நீங்கியதனால்) முதலில் (உயரமான பகுதியான) மலை (கண்ணுக்குத்) தோன்றி சம நிலம் தோன்றாத போதே,

வாளுடனே எல்லாரிலும் முற்பட #மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி! - கையில் வாளுடனே எல்லா குடியை விடவும் முற்பட்டு மலைப் பகுதியிலே தோன்றி மிக்க பழமையுடையதாகிய குடி.

---- 
இதுவே இதன் பொருள்.

அதாவது யுக முடிவில் பிரளயம் வந்ததால் உலகம் முழுக்க நீரால் மூழ்கியது.அந்த நீரானது கொஞ்சம் கொஞ்சம் விலகும் போது முதலில் உலகின் உயரமான பகுதியான மலையை விட்டே நீர் நீங்கி அம்மலை கண்ணுக்கு தென்படும்.இதற்கு காரணம் புவியீர்பு விசை.இப்போதும் உயரமான பகுதியை விட்டே நீர் முதலில் இறங்கி வருதலே இயற்கை விதி.அப்படி பூமியின் பிற பகுதிகள் கண்களுக்கு தோன்றும் முன்னே முதலில் கண்களுக்கு மலை தோன்றிய காலத்தில் அம்மலையில் கையில் வாளுடனே பிற குடிகளை  விட முந்தி தோன்றி பழமையான குடியாகிய பெருமை கொண்டது இந்த கரந்தை போர்க்குடி என்பதே இதன் விளக்கம்.

"வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி ."

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

புதன், 1 செப்டம்பர், 2021

இறைவாசநல்லூர் தலபுராணம் பார்வை..


மலையரையன் எனப்படும் பார்வதியின் தந்தை பர்வதராஜனின் அவதார வரலாறு கூறும் இந்தியாவின் ஒரே சிவன்கோவில் தலவரலாறு "இறைவாசநல்லூர்த் தலபுராணம்"

உலகமாதா மலைமகளை தன்மகளாக பெற்ற மலையர்குலராயர் மருதுபாண்டியர் குடும்பத்தினருக்கு சமர்ப்பனம்..
தமிழகத்தில் பண்டைய தென் ஆற்காடு பகுதிகளும் இன்றைய விழுப்புரம்,திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி பகுதிகளுமான நடுநாடு,மிலாடு,பெண்ணை நாடு,சேதிநாடு எனப்படும் "மலைநாடாம்" தென்பெண்ணை ஆறு பாயும் திருக்கோவிலூரின் மன்னனாக "மலையரையன்" எனப்படும் பார்வதியின் தந்தையான பர்வதராஜனின் அவதார பிறப்பாக "தெய்வீகன்" என்பவரையும் அவர் "காருண்டன்" எனும் அசுரனை அழிக்க முருகன் வழிகாட்டலில் குகமுனிவர் யாகத்தில் தோன்றியதாகவும் கூறப்படும் இன்றைய "எலவானாசூர்" எனப்படும் இறைவாசநல்லூர் தலபுராணம் எனும் நூலின் முக்கிய பக்கங்களை "குருகுலராயன் அகமுடையார்" குடும்ப உறவுகள் அனைவரின் பார்வைக்கு வாசிக்க தொகுப்பது இக்கட்டுறையின் நோக்கமாகும்..

எத்தனையோ தமிழ் இலக்கிய அமுதங்களை பாதுகாத்து பதிப்பித்த ஐயா உ.வே சாமிநாதையர் பொற்பாதங்களை வணங்குகிறோம், 
நடுநாட்டு மன்னனாக பர்வதராஜன் அவதரித்த பழமையான தலபுராண வரலாற்று பொக்கிசம் கால ஓட்டத்தில் மறைந்துவிடாமல் மலையர் குலத்தின் வரலாறு தமிழ் வாழும் வரை சிவன் ஆலயம் வாழும் வரை என்றும் பேசப்படும் விதமாக இவை நூலாக வெளிவர காரணமாக இருந்தமைக்காக ஐயர் அவர்களின் பொற்பாதம் பாதம்பணிவதே சரியானது..
         *****

தலபுரண நூல் முகப்பு;
**
**
**
**
**
**
**
பர்வதராஜன் அவதாரம் "தெய்வீகன்" பற்றிய குறிப்புடைய ஒரே தலபுராணமான 374 செய்யுள்களையுடைய இத்தலபுராணத்தில் "காருண்டன் உற்பவச்சருக்கம்" & "தெய்வீகன் உற்பவச்சருக்கம்" பகுதிகள் கீழே முழுமையாக படங்களாக வரும் உறவுகள் வாசித்து வரலாறு அறிய வேண்டுகிறேன்..
**
**

குலபதி,பதுமாவதி,கமலவல்லி,அளகை எனும் "தெய்வீகன்" மனைவியர் நால்வரின் புதல்வர்களாக தலபுராணம் நேரடியாக கூறுவது இந்நால்வரை மட்டுமே,

அதில் தெய்வீகனின்(பர்வதராஜன்) அரசாட்சியை தொடர்பவர் மூத்த தாரமான பாண்டியன் மகளின் வாரிசே ஆகும். முதல்தாரமான குலபதியை தவிற்த ஏனைய மனைவியர்களான பதுமாவதி,கமலவல்லி,அளகை ஆகியோரின் மக்களே முறையே,
1.மலையமன்னர், 
2.சுருதிமன்னர்,
3.நத்தமன்னர்,

என இன்று அறியப்படும் மதிப்பிற்குறிய இன்றைய "பார்கவகுல" சமுதாயத்தவர் ஆவர்..  👇👇


தெய்வீகனுக்கும்(பர்வதராஜன்) பாண்டியன் மகள் குலபதிக்கும் பிறந்த வாரிசே அரசாட்சியை தொடர இளவரசாக பட்டம் கட்டப்பட்டார் என்பதற்கும் இதர மனைவியர் மூவர் வழிவந்தோருக்கும்  அதாவது மலையமன்னர் 100 பேர் & நத்தமன்னர் 68 பேர் & சுருதிமன்னர் 60 பேர் ஆகிய 228 பேர் கொண்ட இன்றைய பார்கவகுல மக்களுக்கும் பர்வதராஜகுல(மலையர்) வரலாற்றில் பங்குன்டு என்பதையும் நேரடியாக தலபுராணம் செய்யுள்கள் மூலம் குறித்துள்ளன அனைத்தையும் விரிவாக காண்போம்.

  ***********

தலபுராண நூலில் முன்னுரை போன்ற முக்கிய விவரங்களை இதுவரை கண்டோம் இதில் 374 செய்யுள்களில் கூறப்பட்டுள்ள விவரங்களின் "கதை சுருக்கம்" விவரங்களை அந்நூலின் படங்களாக தொடர்ந்து வருகிறது உறவினர்கள் வரிவிடாமல் வாசித்துணர்க..

***

கதைசுருக்கம்;
இத்தலப்புராணத்தின் 374 செய்யுள்கள் கூறும் கருப்பொருளின் விவரங்களையும் இக்கதைச்சுருக்கம் வாயிலாக எளிதாக புரிந்துகொள்ள இயலும்...
_படம்_1 முதல் 21 வரை முழு புராண கதையின் சுருக்கம் தொடர்ச்சியாக..
👇👇👇

**
**
**
**
**
**
**
**
**
**
**

***

***

**

நடுநாடு எல்லையை விவரிக்கும் பகுதி,, 👇👇
தலபுராணம் விவரிக்கும் பகுதிக்கு துள்ளியமாக பொருந்தும் நடுநாடு வரைபடம்; 👇👇
***

***

**

**

**
இறைவாசநல்லூர்,நீரேற்றபுரி, என்ற ஊர் பெயரும் ஊர்பாகம்கொண்டருளிய மகாதேவர் என்ற இறைவன் பெயரும் பர்வதராஜன் அவதாரமான தெய்வீகன் நிகழ்வால் மட்டுமே ஏற்பட்ட பெயர் என்பதை விளக்கும் பகுதிகை கீழே காண்க;👇👇

**

உரைநடை கதைசுருக்கம் முற்றும்..

++++

கதைச்சுருக்கம் என்பது இத்தலபுராணத்தின் 374 செய்யுள்களில் அடங்கியுள்ள கருப்பொருளை எளிமையாக புரிந்துகொள்ள உரைநடையில் தெளிவான சுருக்க விளக்கமாகும்..

கதைச்சுருக்கம் இங்கு பதியப்பட்டுள்ளதை வாசிப்பவர்களுக்கு 374 செய்யுள்களையும் வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதால் " அபிதான விளக்கம்" வழியாக தல புராணத்தில் கூறப்படும் முக்கியஸ்தர் பற்றிய விவரங்களை அறியும் 11 படங்களை தொடர்ந்து காண்போம்,


**


**

**
**
**
**

**
**
**
**
**
**

ஊர்பாகம்கொண்டருளிய நாயனார் கோவில் & எலவனாசூர் ஊர் பற்றிய விவரங்கள் கொண்ட படங்கள் இனிவருவன 👇👇
**
**
**
**
**


இனி புராணத்தின் கதைசுருக்கம் கூறும் கருப்பொருளின் முக்கிய தகவல்களின் அதிமுக்கிய "செய்யுள்கள்" யாவும் தேவையான படத்தில் அடிக்கோடிட்டு மார்க் செய்யப்பட்டு வாசிப்பவர்களின் வசதிக்கு உளதாக தொடர்ந்து வரிசையாக விளக்கி கூற இனைக்கப்படும்..

++++

நாட்டுச் சிறப்பை கூறும் செய்யுள்கள் பகுதியில் முக்கியமானவை;👇👇
**
**
**
**
**
**
**

அசுரன் காருண்டன் உற்பவசருக்க செய்யுள்களில் "பர்வதராஜன்" பற்றிய செய்தியுடன் கூடிய முக்கி செய்யுள்கள்;👇👇
**
**
**
**
**
**
**

இனிவருவன "தெய்வீகன் உற்பவசருக்க முக்கிய செய்யுள்கள்;👇👇
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
எல்லை விவரம் கூறும் 👆மேல் காணும் செய்யுளின் விளக்கமே பதிவின் துவக்கத்தில் உள்ள கதைசுருக்கம் பகுதியில் பார்த்த படமாகும்.. மீண்டும் அப்படம் கீழே.. 👇👇
அதற்கு சரியாக பொருந்தும் நடுநாடு எல்லை வரைபடம்;
***
********

ஊர்பாகம்கொண்டருளிய எனும் இறைவாசநல்லூர் இறைவன் பெயர்காரணம் என்னவென தலபுராணம் கூறும் செய்யுள்;👇👇
&
இறைவாசநல்லூர்,நீரேற்றபுரி எனும் பெயர்களும் பர்வதராஜன் அவதாரம் தெய்வீகன் மூலமே ஏற்பட்டதை கூறும் செய்யுள்;👇👇
********


இரண்டாவது மனைவி பத்மாவதி(சேரன் மகள்), மூன்றாவது மனைவி கமலவல்லி (வடமதுரை ஆயர் மகள்),
நான்ங்காவது மனைவி (சுருதிஅந்தணன் மகள்களை) பற்றிய எந்த விரிவான விவரங்களையும் செய்யுளாக பதிவுசெய்யாத இத்தலபுராணம் சந்திரவம்ச பாண்டியன் மகள் குலபதியை "மலையரையன்" மனந்தது பற்றிய முக்கிய செய்யுள்கள் பலவற்றை கூறியுள்ளது அவற்றை இனி தொடர்சியாக காண்க;👇👇

**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**

**
**
**
**
அரசாட்சியை தொடர மலையரையனுக்கும் பாண்டியன் மகள் குலபதிக்கும் வாரிசு உறுவானதை விளக்கும் செய்யுள்;
**
மலையமன்னர்,நத்தமன்னர்,
சுருதிமன்னர் ஆகியோருக்கு மலையரையன் முடிசூடவில்லை என்பதற்கும்,
அரசாட்சியை தொடரும் முதல்தார வாரிசுக்கு அனைத்து கலைகளையும் கற்பித்து இளவரசு பட்டம் கட்டிய விவரம் கூறும் செய்யுள்;
**
**
**

தெய்வீகனாக அவதரித்தது பார்வதியை பெற்ற பர்வதராஜன் என்பதை சிவபெறுமான் கூறும் செய்யுள்;
**
**
**

நடுநாடு,மிலாடு,சேதிநாடு,
பெண்ணை நாடு எனப்படும் மலைநாடாம் மலையமான் நாட்டை "தெய்வீகன்" எனப்படும் "மலையரையன்" எனப்படும் "பர்வதராஜன்" பட்டம்கட்டிய வாரிசுகளாக இன்றும் ஆண்டு வரும் திருக்கோவிலூர் பெரியோர்கள் தங்கள் மன்னர் கடையேழு வள்ளல்குல வழித்தோன்றல்களான குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனாருக்கு ஆண்டுதோரும் விழா எடுத்து தன்குலப்பெருமையை காத்து மலைநாட்டில் வாழ்ந்து வருகிறர்,

தங்கள் மன்னவர்களை வணங்கியபடி திருக்கோவிலூர் தொழிலதிபர் உயர்திரு TKT.முரளி அகமுடையார் அவர்களுடன் ZUdiac Cable உயர்திரு தியாகரஜன் ஐயா அவர்கள்..👇👇

மாவலி அரசர், வாணாதிராயன்,பர்வதராஜன்,
தெய்வீகன் ஆகியோர் படங்களுடன் கூடிய வருடாந்திர நாட்காட்டி;
*****

"பர்வதராஜனின்" அவதாரமான தெய்வீகன் தோற்றம் பற்றிய பழமையான இறைவாசநல்லூர் புராண விவரங்களில் இருந்து முற்றிலும் வேறான சில விடயங்களை செய்யுளாக இனைத்து கடந்த நூற்றாண்டான சமீபகாலத்தில் 2.பத்மாவதி,3.கமலவல்லி,
4.அளகை ஆகிய மூன்று மனைவி குடும்பத்தவர்களால் எழுதப்பட்டதே "திருக்கோவலூர் புராணம்" எனும் நூலாகும்.. நன்கொடை தந்து செய்யுள்களை இனைத்து எழுதப்பட்டதை அவர்களின் நூலே கூறும் சான்று படம் கீழே உள்ளது;

இவர்களாக எழுதிக்கொண்டதில் முதல் மனைவி என ஒருவர் உண்டு அவர் வழியினரே முடிசூட உரிமையுடையோர் என்ற மூலப்புராணமான "இறைவாசநல்லூர்" தலபுராணத்திற்கு முரணாக திரித்து கூறப்பட்டுள்ளது...
***

வாழும் மலையரையன் குடும்பத்தின் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை முழுவிவர படங்களை நமது தளத்தில் தனிக்கட்டுறையில் காண்க,
*****

@#டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335