22_11_2019 அன்று கார்த்திகை உத்திர நாளில் "பெரிய உடையார் சேதிராயன் அகமுடையாரான"
மெய்ப்பாெருள் நாயனார் குருபூஜை விழா எளிய முறையில் காெண்டாடப்பட்டது,விரிவான விவரங்களுக்கு இத்தளத்தின் முந்தைய கட்டுரையை காண்க;
குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையன் பற்றி அறிவதற்கு முன் அவரை பற்றிய கல்வெட்டு சிலவற்றை காணலாம்,
1.சென்னை திருவல்லிகேனி 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் பஞ்சநதி வாண நீலகங்கரையன்..
2.சென்னை திருவல்லிகேனி 12 ஆம் நூற்றாண்டு மற்றாெரு கல்வெட்டில் பஞ்சநதி வாண நீலகங்கரையன் அவர்களால் அளிக்கப்பட்ட ஓர்
காெடையை குறிக்கும் கல்வெட்டு ..
3.திருவண்ணாமலை தாெண்டு நிருவன நூலில் பஞ்சநதி வாண நீலகங்கரையர் அவர்களை "குருகுலத்தரையன்" என்று கூறும் கல்வெட்டு என்னுடன் கூறிய விவரம்,,
இதே படத்தில் "அவனி ஆளப்பிறந்தான்" மற்றும் "அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் நீலகங்கரையன்" என அகமுடையார்களின் "உடையார்" பெயருடன் இவ்வாணாதிராயர் கூறப்படும் விவரங்களும் கூறப்பட்டுள்ளது கல்வெட்டு என்களுடன்,,
மேலும் இவ்வாணாதிராயரை இரண்டாயிரம் ஆண்டு முந்தைய அத்திகும்பா கல்வெட்டில் சேதிராயன்,ஆரிய மாமன்னர், வசுவின் வழித்தாேன்றல் எனப்பட்ட "கலிங்க" காரவேலனின் பெயரை குறிக்கும் கலிங்கத்தரையன் என்றும்,மற்றும்
"சாேழகங்கன்" எனக் கூறும் பல்வேறு கல்வெட்டுகளும் உள்ளது,
"ஆதிநாயகன்" என்பதும் "கலிங்கத்தரையன்" என்பதும் வாணார் பெயர் என்பதை நினைவில் காெள்க;
பாண்டியரின் சிம்மாசனம் பெயரும் "கலிங்கத்தரையன்" அனைத்தும் வாண ஆதியரசர்கள் பெயர்.
@ பஞ்சநதி வாண நீலகங்கரையர்களின் பல்வேறு பெயர்கள் படம்;
"ஆதிநாயகன் பெயருடன் நீலகங்கரையன் கல்வெட்டு;
இவை நீண்ட தனிக் கட்டுரைகளுக்கு உரியது என்பதால் அவற்றை அடுத்தடுத்த கட்டுரைகளில் மேலும் விரிவாக காண்பாேம்,
4.இடற்கரம்பை கல்வெட்டு "பஞ்சநதி வாணன் மகன் வத்தர் காேமான்" விவரங்களை
தெளிவுபடுத்துகிறது,
அவர் மகன் பெயரான "வத்தராயன்" என்பதை குறிக்கும் மேலும் சில கல்வெட்டுகளை காண்பாேம்,
6. பஞ்சநதி வாணன் மகனான "வத்தராய நாடாழ்வார்" விவரங்களை கூறும் கல்வெட்டு,
7.வத்தர் காேமான்,வத்தர் பெருமகன்,வத்சராயன் என்பது குருகுலராயர்கள் பெயர் என்பதை 7 ஆம் நூற்றாண்டு காெங்கு வேளீர் இயற்றிய பெருங்கதை காப்பிய மேற்காேளுடன் ஐயா இராகவையங்கார் விளக்கியுள்ளார்,,
அதே விவரத்தை மயிலை சீனி.வேங்கடசாமி ஐயா அவர்களும் தன் நூலில் விளக்கியுள்ளார்,,
ஆம் நூற்றாண்டு பெருங்கதை காப்பியம் நூலின் உரையில் கூறப்படும் விவரம் என மூன்று படங்களின் விவரம் ஒரே படமாக இங்கு உள்ளதை கவணியுங்கள்;
👇👇
8.பஞ்சநதி வாண நீலகங்கரையன் மகனான வத்தராயனை "மீனவன்" என்ற பெயருடன் குறிக்கும் கிபி_1227 ஆம் ஆண்டு கல்வெட்டு;
9.செம்பியன் மாதேவி வாணாதிராயன்(மலையமான்) மகள் என்பது அனைவரும் அறிந்ததே,அவர் மகன்
"பரத இந்திர வர்மன்"
"காே பரத பாண்மார்"
"காே பரத மகேந்திர பாண்மார்"
"பரத மகாராஜா" என்று கூறப்பட்டுள்ள விவரங்களை ஐயா அரு.பரமசிவன் அவர்கள் தன் "பரதவம்" நூலில் கல்வெட்டு என் மேற்காேளுடன் விளக்கியுள்ளார்.
இங்கு கூறப்படும் "பரத" என்பது மகாபாரத வரலாற்றில் யயாதியின் மகனான புருவம்சத்தில் பிறந்த துஷ்யந்தனின் மகன் "பரதனை" குறிக்கும் என்பதை நினைவில் காெள்ள வேண்டும்.
இவர்பெயரால்தான் "பரத" கண்டம் "பாரத" நாடு பெயர் உருவானது,
எதனால் கூறுகிறாேம் எனில் மேலே கூறப்பட்ட பஞ்சநதி வாணனை குறிப்பிடும் "குருகுலத்தரையன்", என்பதும் அவர் மகன் "வத்தராயன்" எனப்படுவதும்,"கலிங்கத்தரையன்""சேதிராயன்" "மகதை நாடாழ்வான்" யாவும் மகாபாரத புரு(துஷ்யந்தன்_குரு) வம்சத்தவர் பெயர்கள் & நாடுகள்,
மகதை வாணகாேவரையர் பற்றிய "பெருந்தாெகை" விவரத்தை கூறி விளக்கம் கூறப்பட்டுள்ள கெடிலக்கரை நாகரீகம் நூல் தகவல்;
மேலும் "புரு" வம்சத்தில் வந்த துஷ்யந்தன் மகன் "பரதன்" வம்சத்தில் வந்த "குரு" வம்சத்தில் வந்தவர் பெயரே "சேதிராயன்" என்பதும் அது மலையமானை குறிப்பதையும்,இச்சேதிராயன் மகன் நாடே "மகதம்" என்பதும் இதே "மகதை நாடாழ்வான்" எனப்படுவதும் "ஆறகளூர் வாணகாேவரையர்கள்" என்பதையும் தாெடர்ச்சியாக நாம் இனைத்துப் பார்த்து புரிந்து காெள்ள வேண்டும்.
அதாவது வாணாதிராயர்களை கல்வெட்டுகளில் குறிக்கும் வம்ச பெயர் யாவும் சந்திர குல அங்கீகரிக்கப்பட்ட அரசர்களான மகாபாரத வரலாற்றின் புரு(பரதன்\குரு) வம்சபெயர்கள்;
10. "தில்லை நாயகன் தேவர் கண்டன் அகமுடையான் மலையன்" (alias)எனப்படும் ராசேந்திரசாேழ சேதிராயன் என்று நேரடியாக "அகமுடையான்" என்ற கல்வெட்டு விவரத்தை ஐயா நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தன் சாேழர் எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்,
நடுநாட்டு அகமுடையார் அனைவரின் பட்டமும் "உடையார்" என்பதையும் அவர்கள் அகமனப்பிரிவின் பெயரும் "மலைநாடு" என்பதையும் இங்கு நினைவில் காெள்வாேம்,
மலையமான் சேதிராயர்களை "பெரிய உடையார்" எனப்பட்ட மற்றும் ஒரு கல்வெட்டையும் இனைத்து படம் கீழே தரப்பட்டுள்ளது,,
மேலும் "பெரிய உடையார் சேதிராயன் அகமுடையார்" மகனே "மகதை நாடாழ்வான்" எனப்படும் "மகதை வாணகாேவரையன் " அவரும் "பெரிய உடையார் விரதமுடித்தான் பாண்டி நாயக்கர்" எனப்படுகிறார் என்பதை பாென்பரப்பின வாணகாேவரையர் நூலில் ஆய்வாளர் திரு ந.வெங்கடேசன்,மா.சந்திரமூர்த்தி இனையர் உறுதிபடுத்தி உள்ளனர்.
11.தமிழக கெசட் அரசானையில் ஆதியரசன் அகமுடையார்,
"குருகுலராயன்" வெட்டு மாவலி அகமுடையார்களின் பல்வேறு பெயர்கள்;
எனவே உறவுகளே இக்கட்டுரையின் தலைப்பு "குருகுலத்தரையன் பஞ்சநதி வாணன் நீலகங்கரையன்" என்பதுதானே,
அவ்வாணாதிராயன் பற்றிய கல்வெட்டுகளை முதலில் கண்டாேம்,பின்னர் அவரை குருகுலத்தரையன்,
வத்தராயன்,
கலிங்கத்தரையன்,
ஆதியரசன்(ஆதிநாயகன்) எனும் விவரங்களை கண்டாேம்,எங்களின் இத்தளத்தின் முதல் கட்டுரையில் வாணன் வம்சத்தவரே சேதிராயன் என்ற விவரங்களை பதிந்துள்ளாேம்,
சேதி நாட்டின் அருகாமையில் உள்ள ஆறகளூர் "மகதை நாடாழ்வான் எனப்படும் வாணகாேவரையர்" என்பவரும்
புரு(பரதன்/குரு) வம்சத்தவர் என்பதை வரும் கட்டுரைகளில் மேலும் விரிவாக பதிய இருக்கிறாேம், எனவே அசுரர் வாணர் குலத்தவரை குறிப்பிடும்,
a.பரத மகாராஜா,
b.குருகுலராயன்,
c.சேதிராயன்,
d.மகதை நாடாழ்வான்
e.கலிங்கத்தரையன்
f.வேசாலி பேரரையன் etc,,
ஆகிய பல்வேறு வாணாதிராயரின் பெயர்களும்,
நாவலந்தீவின் சந்திரகுலத்தின் வரலாறை கூறும் மகாபாரதத்தில் "நாகன் நகுஷன்" மகனான யயாதியின் மகன் ஐவரில் புரு(பரதன்\குரு) வம்சத்தவர் பெயர்களே என்பதும் வாணாதிராயர் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட "சந்திரகுலத்தின்" அரச குலத்தவர் என்பதும் கல்வெட்டுகள் சான்றுகள்
காெண்டு இதன் வழி உறுதியாகிறது என்பதை புரிந்து காெள்ள வேண்டுகிறாேம்.
மேலும் சந்திர குலம் & சூரியகுலம் வரலாறே நாவலந்தீவின் வரலாறு மற்றும் இருகுலமும் நெருங்கிய உறவில் தாெடர்புடையது. உதாரனம் சூரிய குல இராமன் முன்னாேர் பட்டியலில் கூறப்படும் நகுஷன்,யயாதி,சிபி ஆகியாேரும் மற்றும் உடையார் இராஜேந்திர சாேழதேவரின் திருவாளங்காடு செப்பேட்டில் தம் முன்னாேராக கூறப்பட்டுள்ள பட்டியலிலும் உள்ள சிபி,துஷ்யந்தன்,பரதன்,உபரிசரவசு ஆகியாேர்களும் சந்திரகுலத்தவரே,
இராஜேந்திர சாேழரின் திருவாலங்காடு செப்பேடு விவரம்;
(விரிவான விவரங்களுக்கு இத்தளத்தின் முதல் 6 கட்டுரைகளை வாசிக்கவும்)
இக்கட்டுரையின் முக்கிய நாேக்கம் தமிழகத்தில் தமிழ்சாதிகளில் தன்னை "பல்லவ" அரச மரபினராக கூறும் & சான்றுள்ள எந்த ஓர் சாதியும் "சந்திரகுல" அரச மரபினர்களான
புரு(பரதன்/குரு) வம்ச வாணாதிராயர்கள்,பாண்டியர் உட்பட எந்த வரலாற்றையும் சரி,
சந்திர குல "யது" வம்ச யாதவர் குல வரலாறையும் சரி,
"சூரிய குல" வரலாறையும் சரி தமதாக உரிமை காேர இயலாது,
காரணம் ஒன்றுதான்;
வாணாதிராயர்கள் தம்மை சந்திரகுலத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களான புரு வம்சத்தின்
"பரத மகாராஜா"
"குருகுலராயன்"
"சேதிராயன்"
"மகதராயன்"
"கலிங்கத்தரையன்"
வேசாலி பேரரையன்" etc..
என்று தெளிவாக அடையாளப்படுத்தினர்.
ஆனால் பல்லவராே தம்மை "சந்திரகுல" அரசர் மரபு வாரிசல்ல என்று மேலே உள்ள கல்வெட்டை பாேல மாெத்தம் 5 கல்வெட்டுகளிலும் 5 செப்பேடுகளிலும் பல்லவர்களே நேரடியாக தன் வம்சாவழியை "பிராமணன் அஸ்வத்தாமன்" மற்றும் "அப்சரஸ் நங்கை" காெடிவழி என தெளிவுபடுத்தி உள்ளனர். பிராமணன் அஸ்வத்தாமன் "சந்திரகுல" அரச மரபினன் இல்லை அதாவது அவர் பிராமணர் எனும்பாேது,
"பல்லவர்" நகுஷன்_யயாதி வம்சம் இல்லை எனும்பாேது
பல்லவ சம்புவராயர்,
பல்லவ காடவராயர்,
பல்லவ கருணாகரன் வம்சத்தவர் என்ற சான்றுள்ள எவறும் சந்திர&சூரிய குல வரலாறை காேருவது இயலாது தவறானது ஆய்வாளர் உலகமும் ஏற்காது.
"குருகுலத்தரையன் பஞ்சநதி வாணன் நீலகங்கரையன்" எனும் இக்கட்டுரைக்கான அடிப்படை தகவல்களை கல்வெட்டு மேற்காேளாேடு விளக்கியுள்ளாேம்,
இனி,
தடாதகையின்(மீனாட்சி) தந்தையான "பர்வத"
ராஜகுல அகமுடையார் மருது_பாண்டியர்களின் முப்பாட்டனும்,
"பெரிய உடையார் சேதிராயர் அகமுடையாரான"
மெய்ப்பொருள்_நாயனாரின் பெரும்பாட்டன் "மாவலி" அரசர் வம்சமுமான "குருகுலத்தரையன்_பஞ்சநதி
வாணன்_நீலகங்கரையன்" அவர்களால் கட்டப்பட்ட ஓர் காேவிலில் அவரின் சிலையும் உள்ளது அது தாெடர்பான ஓர் கள நிகழ்வை இனி காண்பாேம்;
"குருகுலத்தரையன் பஞ்சநதி வாணன் நீலகங்கரையன்" அவர்களால் கட்டப்பட்ட காேவில் உள்ள ஊர் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிலிருந்து 3 கிமீ தாெலைவில் உள்ள தாெடுகாடு கிராமம் ஆகும்.
இவ்வூரின் பீமேஷ்வரர் காேவிலில்தான் "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையர்" அவர்களின் சிலை உள்ளது அவ்வூரின் நுளைவாயிலிலேயே அக்கோவிலை கட்டியவர் என்ற விவரமுடன் கோவிலின் வழியை காட்டும் திசைகாட்டியாக பதாகை,,
அவ்வூரின் நெடுஞ்சாலையிலிருந்து மேற்கு பக்கம் காேவிலுக்குல் நுளையும் தெரு,
அக்காேவிலின் கிழக்கு பக்கம்,
அக்காேவிலின் அருகாமை குளத்திலிருந்து ஆலயத்தின் காட்சி,
ஆலயத்தின் உள்ளே பீமேஷ்வரர் சன்னதி,
பீமேஷ்வரர் ஆலயத்தில் அம்பாள்,
பீமேஷ்வரர் காேவிலில் உள்ள ஒரே கல்வெட்டான காேவிலை கட்டியவர்
பெயரான "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையர்" அவர்கள் பெயரை கூறும் கல்வெட்டு;
ஆலயத்தின் குருசாமி அவர்களால் "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையர்" அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல்;
தீபாராதனை;
வெட்டு மாவலி அகமுடையார் நம் முப்பாட்டனான "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையரை" வணங்குதல்;
ஆலயத்தின் குருசாமி அவர்களுடன் மரியாதை நிமித்தம் புகைப்படம்;
ஆலயத்தால் வெளியிடப்பட்ட காேவிலின் தல புராணம்;
தாெடுகாடு பீமேஷ்வரர் ஆலயத்தில் உள்ள "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையர்" தரிசனமும் அவர் தாெடர்பான சில கல்வெட்டு தகவல்களும் இனிதே நிறைவடைந்தது,
இத்தளத்தின் எதிர்கால கட்டுரையில் "ஆரிய சக்கரவர்த்தியான" நாகன் நகுஷன் வம்ச "பரத மகாராஜா" அகமுடையாரின் எள்ளுப்பேரனும்,
"குருகுலராயன்" அகமுடையாரின் காெள்ளுப் பேரனும்,
"பெரிய உடையார் சேதிராயன்" அகமுடையாரின் பேரனும்,
"மகதை நாடாழ்வான்" அகமுடையாரின் மகனுமான "ஆறகளூர் பாென்பரப்பி வாணகாேவரையர்" பற்றிய விரிவான தகவல்களை காணலாம் உறவுகளே,,
"பர்வத" ராஜகுல அகமுடையார் மருது பாண்டியர் புகழ் ஓங்குக,,
குருகுலராயன் அகமுடையார்கள் ஒற்றுமை ஓங்குக,,,
குருகுல மக்கள் இயக்கம்,
9500888335..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக