அகமுடைய நாயக்கர்களின் ஆட்சேபனை மனு,,
---------------------------------------------------------------
1945 ஆம் ஆண்டு, அகில இந்திய முக்குலத்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரு K.சிவானாண்டித் தேவர் அவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் மூவருக்கும் பொதுவாக "தேவர்" என்று ஒரே பெயர் வைக்க வேண்டி அனுப்பிய கோரிக்கை மனுவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதுமிருந்து கள்ளர், மறவர், அகமுடையார் சங்கங்களின் சார்பாகவும், தனி நபர்களின் சார்பாகவும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான
சேலம் செவ்வாய்ப்பேட்டை, அகம்படியர் சங்கம் தாக்கல் செய்த இந்த ஆட்சேபனை மனுவின் ஆங்கில மொழியின் சாராம்சத்தை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து பதிவு செய்துள்ளோம். இந்த மனு மூன்று பக்கங்களை உள்ளடக்கியது. முழுமையாக படித்து தமது முன்னோர்களின் தனித்தன்மை அரசியலின் தேவையை நன்கு உணர்வோம்.
அகமுடையார் பேரினத்தவர்கள் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு பட்டப்பெயர்களுடன் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்து நாயக்கர், பிள்ளை, செட்டியார், சேர்வை, உடையார், அதிகாரி என பல்வேறு பட்டப்பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு சான்றாக இம்மடல்.
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்.
----------------------------------------------------------
அக்டோபர் 1945,
செவ்வாய்பேட்டை.
பெறுநர் :
செயலாளர், வளர்ச்சி துறை,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ்.
மதிப்பிற்குரிய ஐயா,
'கள்ளர், மறவர், அகம்படியர்' ஆகியோரை "தேவர்கள்" என்று அழைக்கும் திட்டம்.
நாங்கள், கீழ்க்கண்ட சேலம் அகம்படியர் சங்கத்தின் உறுப்பினர்கள். பின்வருவனவற்றை உங்கள் அன்பான கருத்தில் மற்றும் முடிவிற்கு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கள்ளர், மறவர், அகம்படியர் ஆகிய 3 சமூகங்களும் இனிமேல் தேவர்கள் என்று பொதுவான பெயரால் அழைக்கப்படுவதை, சுதேசமித்திரனில் இருந்து, சென்னை அரசாங்கத்தின் 4வது அறிவிப்பிலிருந்து நாம் அறிந்துக் கொள்கிறோம்.
"முக்குலத்தோர் சங்கம், மதுரை" என்ற கோரிக்கையும் இதற்குக் காரணம் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். இந்த சங்கத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, எனவே இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. சேலம் மாவட்டத்தில், நாம் அறிந்த காலம் முதல் "அகம்படியர்கள்" என்று தான் அழைக்கப்படுகிறோம். கள்ளர் மற்றும் மறவர் தனித்தனி சமூகங்கள். எங்களுக்குள் திருமண உறவிலோ அல்லது வேறு வழியிலோ எந்த உறவும் இல்லை.
எனவே, தேவர்கள் என மாற்றும் அரசின் இத்தகைய முன்மொழிவுக்கு எங்களின் கடும் எதிர்ப்பை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய தாழ்மையான விருப்பத்தை முன்வைக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், நாங்கள் வழக்கம் போல் அரசு மற்றும் தனிப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் "அகம்படியர்கள்" என்று அழைக்கப்பட வேண்டும்.
இது ஒரு வகுப்புவாத மற்றும் மதம் சார்ந்த விஷயமாகும், எனவே எங்கள் விருப்பங்களும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறோம்.
எங்களுக்கு மரியாதை உண்டு சார்,
மிகவும் தாழ்மையுடன்
அகம்படியா் சமூகத்தின் உறுப்பினர்கள்.
1) பி.தண்டராய நாயக்கர்,
ஓடு,மரம் மற்றும் கட் ஸ்லாப் வியாபாரி,
செவ்வாய்பேட்டை.சேலம்.
2) T.பெரியசாமி நாயக்கர்,
செவ்வாய்பேட்டை. சேலம்.
3) தா.மாணிக்கம் நாயக்கர்,
செவ்வாய்பேட்டை. சேலம்.
4) R.A.இராமகிருஷ்ண நாயக்கர்,
MERCHANT, செவ்வாய்பேட்டை, சேலம்.
5) கொ.இராமகோபால நாயக்கர்,
தரகு மண்டி, லீ பஜார்,
செவ்வாய்பேட்டை, சேலம்.
6) ற.கொ.ஸ்ரீனிவாச நாயக்கர்,
கமிஷன் மண்டி,
செவ்வாய்பேட்டை, சேலம்.
7) ஆ.நாகப்பன்,
PARTNER, For A.Nagappan & Peran Chetty,
8) R.வெங்கடாஜல நாயக்கர்,
மண்டி, செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
9) ----------------------
10) செ.பெரியசாமி நாயக்கர்,
11) மு.ரங்கசாமி நாயக்கர்,
தரகு மண்டி, லீ பஜார்,
செவ்வாய்பேட்டை, சேலம்.
12) R.கலியபெருமாள்,
கமிஷன் ஏஜெண்ட்,
செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
13) இராமானுஜம்,
14) இராமசாமி,
15) அம்பாயிரம்,
16) R.வேணுகோபாலன்,
17) S.இராஜகோபாலன்,
18) பக்கிரிசாமி, MERCHANT,
செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
19) கோ.ராமசாமி, கடலை வியாபாரம்,
செவ்வாய்பேட்டை, சேலம்.
20) கிருஷ்ண நாயக்கர், (கீரல்)
21) R.S.வெங்கடாசலம் நாயக்கர்,
MERCHANT,
22) ல.பெரியசாமி நாயக்கர்,
ர.கி.ரங்கசாமி நாயக்கர்,
புகையிலை மண்டி,
சந்தைப்பேட்டை மெயின் ரோடு,
செவ்வாய்பேட்டை, சேலம்.
25) சே.கோவிந்தசாமி நாயக்கர்,
26) மு.ஆறுமுகம் நாயக்கர்,
27) கு.பெருமாள்,
28) K.R.தங்கவேலு,
29) ----------------
30) வை.பழநிமுத்து நாயக்கர்,
31) ப.வையாபுரி நாயக்கர்,
32) மா.முனியசாமி நாயக்கர்,
33) கி.மஞ்சமுத்து நாயக்கர்,
34) --------------------
35) மு.சின்னுசாமி நாயக்கர்,
36) மு.ரங்கநாத நாயக்கர்,
37) S.ஆறுமுக நாயக்கர்,
38) V.சித்தன் நாயக்கர்,
39) M.வேலுசாமி நாயக்கர்,
40) ---------------------
41) ப.தங்கவேலு நாயக்கர்,
42) R.கேசவ நாயக்கர்,
43) M.சடகோப நாயக்கர்,
44) A.சின்னசாமி நாயக்கர்,
அனுப்புநர் :
"அகம்படியர் சங்கம்"
C/0, R.கலியபெருமாள் நாயக்கர்,
பிக் பஜார், செவ்வாய்பேட்டை,
சேலம்.
-----------------------------------------------------------
தகவல் உதவி,
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச: 94429 38890.