சனி, 3 பிப்ரவரி, 2024

ஆதிசைவர் வரலாறு

****

ரிவ்யூ;

பொதுமக்களின் அறியாமையால் பாதிக்கப்பட்ட சமூகம் இருக்கும் என்றால் அது ஆதிசைவர் சமூகம்தான்.ஆதிசைவர் என்னும் சாதியை எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் ஆயிரத்தில் ஒருவர் தெரியும் என்று கூறுவாரா என்பது சந்தேகம்தான்.

சைவ ஆகமங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில்களில் மரபாக பூசை செய்யும் சாதியே ஆதிசைவர் என்பவர்கள்.உடனே ஐயர் அல்லது பிராமணர் என்று கூறவேண்டியதுதானே! அது என்ன புதிதாக ஆதிசைவர் என்று தெரியாத சொல் என்று கேட்கவும்கூடும்.

சைவ ஆகமக் கோயிலில் பூசை செய்யும் சாதியான ஆதிசைவர் வேறு பிராமணர்கள் வேறு என்பது பலருக்கும் தெரிவதில்லை.ஐயர் என்பது  பட்டம் அது பிராமணர்களுக்கும் உண்டு,ஆதிசைவர்களுக்கும் உண்டு.பிள்ளை,முதலி,கவுண்டர் போன்ற பல்வேறு சாதிகளிடையே காணப்படும் பட்டங்களை சாதிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொதுப்புத்தி ஐயர் என்பது பட்டம் என்று அறியாது இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல.

பிராமணர்கள் வேள்விகள்,புரோகிதம் செய்பவர்கள்.கோயில்களில் பூசை செய்பவர்கள் கிடையாது.

காலனிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வி கற்று அவர்களின் நிர்வாகத்தில் வேலைகளில் பெரும்பங்கைப் பெற்றவர்கள் பிராமணர்கள்.அவர்கள் கோயிலில் பூசை செய்வதில்லை பூசை செய்யும் சாதியான ஆதிசைவரை மதித்ததுமில்லை என்பது பொதுப் புத்திக்கு தெரியாதது.

பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணன் என்ற பொதுப்புத்தி கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய சமூகமான ஆதிசைவர்களையும் பிராமணர்களையும் ஒன்றாகக் கருதி அவர்கள் மீதும் வெறுப்புக் கக்கியது.கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பூசகருக்கு தட்டில் குருதட்சணையாகப் பணத்தை வைப்பார்கள்.அவர்களையும் பிராமணர்களையும் ஒன்றாக மயங்கி பிராமணன் மீதான கோபத்தினை வெளிக்காட்ட தட்டில் பிச்சை எடுக்கும் உனக்கு இவ்வளவு திமிரா என்று திட்டுவதை முகநூலில் காணாதவர்கள் உண்டா!

தில்லை கார்த்திகேய சிவம் எழுதிய ஆதிசைவர்கள் வரலாறு ஆதிசைவர் குறித்து வெளிவந்துள்ள முக்கியமான நூல்.ஆதிசைவர் யார் என்பதிலிருந்து அவர்களின் இன்றைய நிலைவரை படம் பிடித்துக் காட்டும் நல்லதோர் ஆவணமாக இந்த நூல் இருக்கிறது.

ஆதிசைவ சமூகத்தைச் சேர்ந்த தில்லை கார்த்திகேய சிவம் அருமையாக பல்வேறு ஆதாரங்களுடன் ஓர் ஆய்வுக்கட்டுரை போன்று இந்த நூலை எழுதியுள்ளார்.அதேவேளை அவரது தமிழ்நடை சொல்ல வந்த விடயங்களை இலகுவாகப் புரியக் கூடியதாகவும் வாசிப்பு இன்பத்தை கொண்டதாகவும் அமைந்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

ஆதிசைவர் தமிழர் என்பதை மலைபோன்று அசையாத உறுதியுடன் தில்லையார் இந்த நூலில் பதிவு செய்கிறார்.அருமையான இந்த நூலின் நிறைகளை கூறிக்கொண்டே போகலாம். 

அதேவேளை இந்த நூலில் உள்ள சில கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டுவது அவசியமானது.
 
சிவபெருமான் சதாசிவமூர்த்தியாகத் திருவுருவம் கொண்டு ஈசானம்,தத்புருஷம்,அகோரம்,வாமதேவம்,சத்யோஜாதம் என்னும் ஐந்து முகங்களில் இருந்து கௌசிகர்,காசியப்பர்,பரத்வாஜர்,கௌதமர், அகத்தியர் ஆகிய ஐந்து முனிவர்களைத் தோற்றுவித்தார்.அவர்களின் வழிவந்தோரே ஆதிசைவர் என்கிறார்.

இதில் ஐந்து முகங்களில் இருந்து தோன்றினர் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையையே சிதைத்துவிடும்.சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சற்காரிய வாதப்படி உள்ளத்தில் இருந்தே உள்ளது தோன்றும்.ஆதிசைவர் சிவபெருமானின் முகங்களில் இருந்து உருவானவர் என்றால் பிறப்பு இறப்புக்கு உட்படும் அவர்களின் தன்மையை சிவபெருமானும் கொண்டிருப்பார் என்று ஆகிவிடும்.எனவே அதை சிவபெருமானின் ஐந்து முகங்களால் தீட்சிக்கப்பெற்ற ஐந்து முனிவர்களின் வழிவந்தவர்கள் ஆதிசைவர்கள் என்பதே சரியானது.

பிராமணர்கள் பிரம்மனின் முகத்தில் உதித்த வேதவேதியர்கள்.ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவபெருமானுடைய திருமுகத்தில் இருந்து தோன்றியவர்கள்.இருவரது வாழ்வியலும்,வழிபாட்டு முறைகளும் வேறுபட்டவை.கோயில் அர்ச்சகத் தொழிலுக்கு உரிமை உடையவர்கள் ஆதிசைவர்கள்.வேதத்துக்கு முதன்மை கொடுப்பவர்கள் பிராமணர்கள்.ஆகமத்துக்கு முதன்மை கொடுப்பவர்கள் ஆதிசைவர்கள்.பிராமணர்களும் ஆதிசைவர்களும் ஒன்றாக உணவருந்துவதோ திருமணம் செய்வதோ கிடையாது.ஆதிசைவர்களின் கோத்திரங்கள்,சூத்திரங்களுக்கும் பிராமணர்களின் கோத்திரங்கள்,சூத்திரங்களுக்கும் ஆழ்ந்த வேறுபாடு உண்டு என்பதை வலியுறுத்தும் அவர், பிராமணர்கள் போன்று ஆதிசைவர் உருவத்தில் ஒன்றுபோல் காணப்பட்டாலும் என்று குறிப்பிட்டுச் செல்வது அவரின் ஆதிசைவர் தமிழரே என்ற அறைகூவலுக்கும்,பிரத்தியட்சப் பிரமாணமாகிய கண்ணால் காண்பதற்கும் முரணானதாகும்.பெரும்பாலான ஆதிசைவர் ஏனைய தமிழ்க் குடிகளின் தோற்றத்தையும் நிறத்தையுமே கொண்டுள்ளனர். 

சிவபரத்துவத்தைக் கொண்ட ஆதிசைவர்களுக்கும் ஏகான்மவாதக்கொள்கை கொண்ட பிராமணர்களுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்கூட மோதல்கள் இருந்தன,இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிராமணர் பிராமணர் அல்லாதார் போராட்டமே ஆதிசைவர்களை பிராமணர்களுடன் இணைந்து நிற்கச் செய்தது என்பதைக் குறிப்பிடும் தில்லை கார்த்திகேய சிவம் இந்த இக்கட்டான நேரத்தில் ஆதிசைவர்களுக்கு பிராமணர்கள் உதவினார்கள் என்று திருப்தி காட்டுவது ஆச்சரியமளிக்கிறது.நள்ளிரவில் இறுதி பஸ்ஸைத் தவறவிட்ட பெண்ணை வீட்டில் அழைத்து இடம் கொடுத்து பாலியல் வல்லுறவு செய்தவனை அந்தப் பெண் உதவினான் என்று பாராட்ட முடியுமா! ஆதிசைவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை அரை ஸ்மார்த்தர்களாக ஆக்கியதுடன்,கோயில்களையும் ஸ்மார்த்தக் கலப்புடையதாக மாற்றும் கபடவேடதாரிகளை புகழ்வதற்கு எதுவும் இல்லை.

இவ்வாறான சில குறைகளைத் தாண்டி ஒவ்வொரு சைவரும்,தமிழ்ச் சமூகம் குறித்த சரியான புரிதலைப் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூலாக ஆதிசைவர்கள் வரலாறு உள்ளது.

புதன், 24 ஜனவரி, 2024

அகமுடைய நாயக்கர் ஆட்சேபனை

அகமுடைய நாயக்கர்களின் ஆட்சேபனை மனு,, 
---------------------------------------------------------------
1945 ஆம் ஆண்டு, அகில இந்திய முக்குலத்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரு K.சிவானாண்டித் தேவர் அவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் மூவருக்கும் பொதுவாக "தேவர்" என்று ஒரே பெயர் வைக்க வேண்டி அனுப்பிய கோரிக்கை மனுவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதுமிருந்து கள்ளர், மறவர், அகமுடையார் சங்கங்களின் சார்பாகவும், தனி நபர்களின் சார்பாகவும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான

சேலம் செவ்வாய்ப்பேட்டை, அகம்படியர் சங்கம் தாக்கல் செய்த இந்த ஆட்சேபனை மனுவின் ஆங்கில மொழியின் சாராம்சத்தை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து பதிவு செய்துள்ளோம். இந்த மனு மூன்று பக்கங்களை உள்ளடக்கியது. முழுமையாக படித்து தமது முன்னோர்களின் தனித்தன்மை அரசியலின் தேவையை நன்கு உணர்வோம். 

அகமுடையார் பேரினத்தவர்கள் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு பட்டப்பெயர்களுடன் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்து நாயக்கர், பிள்ளை, செட்டியார், சேர்வை, உடையார், அதிகாரி என பல்வேறு பட்டப்பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு சான்றாக இம்மடல்.

அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்.
 ----------------------------------------------------------
அக்டோபர் 1945,
செவ்வாய்பேட்டை.

பெறுநர் :
செயலாளர், வளர்ச்சி துறை,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ்.

மதிப்பிற்குரிய ஐயா,
'கள்ளர், மறவர், அகம்படியர்' ஆகியோரை "தேவர்கள்" என்று அழைக்கும் திட்டம்.
நாங்கள், கீழ்க்கண்ட சேலம் அகம்படியர் சங்கத்தின் உறுப்பினர்கள். பின்வருவனவற்றை உங்கள் அன்பான கருத்தில் மற்றும் முடிவிற்கு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கள்ளர், மறவர், அகம்படியர் ஆகிய 3 சமூகங்களும் இனிமேல் தேவர்கள் என்று பொதுவான பெயரால் அழைக்கப்படுவதை, சுதேசமித்திரனில் இருந்து, சென்னை அரசாங்கத்தின் 4வது அறிவிப்பிலிருந்து நாம் அறிந்துக் கொள்கிறோம்.

"முக்குலத்தோர் சங்கம், மதுரை" என்ற கோரிக்கையும் இதற்குக் காரணம் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். இந்த சங்கத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, எனவே இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. சேலம் மாவட்டத்தில், நாம் அறிந்த காலம் முதல் "அகம்படியர்கள்" என்று தான் அழைக்கப்படுகிறோம். கள்ளர் மற்றும் மறவர் தனித்தனி சமூகங்கள்.  எங்களுக்குள் திருமண உறவிலோ அல்லது வேறு வழியிலோ எந்த உறவும் இல்லை.

எனவே, தேவர்கள் என மாற்றும் அரசின் இத்தகைய முன்மொழிவுக்கு எங்களின் கடும் எதிர்ப்பை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.  எங்களுடைய தாழ்மையான விருப்பத்தை முன்வைக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், நாங்கள் வழக்கம் போல் அரசு மற்றும் தனிப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் "அகம்படியர்கள்" என்று அழைக்கப்பட வேண்டும்.

இது ஒரு வகுப்புவாத மற்றும் மதம் சார்ந்த விஷயமாகும், எனவே எங்கள் விருப்பங்களும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு மரியாதை உண்டு சார்,

மிகவும் தாழ்மையுடன்
அகம்படியா் சமூகத்தின் உறுப்பினர்கள்.

1) பி.தண்டராய நாயக்கர்,
   ஓடு,மரம் மற்றும் கட் ஸ்லாப் வியாபாரி, 
  செவ்வாய்பேட்டை.சேலம்.
2) T.பெரியசாமி நாயக்கர்,
     செவ்வாய்பேட்டை. சேலம்.
3) தா.மாணிக்கம் நாயக்கர்,
     செவ்வாய்பேட்டை. சேலம்.
4) R.A.இராமகிருஷ்ண நாயக்கர்,
    MERCHANT, செவ்வாய்பேட்டை, சேலம்.
5) கொ.இராமகோபால நாயக்கர்,
     தரகு மண்டி, லீ பஜார், 
     செவ்வாய்பேட்டை, சேலம்.
6) ற.கொ.ஸ்ரீனிவாச நாயக்கர்,
    கமிஷன் மண்டி, 
    செவ்வாய்பேட்டை, சேலம்.
7) ஆ.நாகப்பன், 
    PARTNER, For A.Nagappan & Peran Chetty,
8) R.வெங்கடாஜல நாயக்கர்,
    மண்டி, செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
9) ----------------------
10) செ.பெரியசாமி நாயக்கர், 
11) மு.ரங்கசாமி நாயக்கர், 
       தரகு மண்டி, லீ பஜார்,   
      செவ்வாய்பேட்டை, சேலம்.
12) R.கலியபெருமாள், 
       கமிஷன் ஏஜெண்ட்,  
       செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
13) இராமானுஜம், 
14) இராமசாமி,
15) அம்பாயிரம்,
16) R.வேணுகோபாலன்,
17) S.இராஜகோபாலன்,
18) பக்கிரிசாமி, MERCHANT,    
       செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
19) கோ.ராமசாமி, கடலை வியாபாரம்,
       செவ்வாய்பேட்டை, சேலம்.
20) கிருஷ்ண நாயக்கர், (கீரல்)
21) R.S.வெங்கடாசலம் நாயக்கர்,
        MERCHANT,
22) ல.பெரியசாமி நாயக்கர்,
       ர.கி.ரங்கசாமி நாயக்கர், 
       புகையிலை மண்டி, 
      சந்தைப்பேட்டை மெயின் ரோடு,
       செவ்வாய்பேட்டை, சேலம்.
25) சே.கோவிந்தசாமி நாயக்கர்,
26) மு.ஆறுமுகம் நாயக்கர்,
27) கு.பெருமாள்,
28) K.R.தங்கவேலு,
29) ----------------
30) வை.பழநிமுத்து நாயக்கர்,
31) ப.வையாபுரி நாயக்கர், 
32) மா.முனியசாமி நாயக்கர்,
33) கி.மஞ்சமுத்து நாயக்கர்,
34) --------------------
35) மு.சின்னுசாமி நாயக்கர்,
36) மு.ரங்கநாத நாயக்கர்,
37) S.ஆறுமுக நாயக்கர்,
38) V.சித்தன் நாயக்கர்,
39) M.வேலுசாமி நாயக்கர்,
40) ---------------------
41) ப.தங்கவேலு நாயக்கர்,
42) R.கேசவ நாயக்கர்,
43) M.சடகோப நாயக்கர்,
44) A.சின்னசாமி நாயக்கர்,

அனுப்புநர் :
"அகம்படியர் சங்கம்"
C/0, R.கலியபெருமாள் நாயக்கர்,
பிக் பஜார், செவ்வாய்பேட்டை,
சேலம்.
-----------------------------------------------------------

தகவல் உதவி,

சோ. பாலமுருகன் அகமுடையார், 
தலைமை ஒருங்கிணைப்பாளர், 
அகமுடையார் அரண், 
பேச: 94429 38890.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

ராமர் கோவில் ஆதாரங்கள்


பா.இந்துவன் கட்டுரை,,

**********

ராம் ஜென்ம பூமியின் “இராமர் கோவிலின்” தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் தான் நீதிமன்றம் வழங்கியதா? ஒரு சிறிய அலசல்!!!

ஜென்மஸ்தான் என்றால் பிறப்பிடம் என்று பொருள். மசூதியைச் சுற்றி இருந்த பகுதியை காலம் காலமாக “ஜென்மஸ்தான்” என்றே அழைத்தார்கள். 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இராமர் பிறந்த அந்த இடத்தை  ஜென்மஸ்தான் என்று அழைத்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. பாபரின் ஆட்சி காலத்திற்கு பிறகு ராமர்கோவில் இடிப்பிற்கு எதிராக ராஜா மெகதீர், ராணி அகல்யாபாய், ஜெயராஜ் கன்வர், மன்னர் தேவேந்திர பாண்டே என்று பலர் முகலாயர்களுடன் போரிட்டனர். 1853 ஆம் ஆண்டு இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்றான “நிர்மோகி அகோரா” எனும் பிரிவினர் மசூதிக்குள் நுழைய முயற்சித்ததாக ஒரு நிகழ்வு பதிவாகி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1855ஆம் ஆண்டு மசூதியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மசூதி இருந்த பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு இரு தரப்பினரும் வழிபட அனுமதிக்கப்பட்டது.

(1530 முதல் ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப், முகமது ஆசம் ஷா, முகமது பகதூர் ஷா ஆரம்பித்து அபு ஜாபர் சிராஜுதீன் முகம்மது என்கிற இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் ஆரம்பித்து 1857 வரை முகலாயர்களின் ஆட்சி நடந்திருக்கிறது எனில் இத்தனை ஆண்டுகாலமும் போராடிக் கொண்டிருந்தோம் என்றுதான் கூறவேண்டும்.)

1855 ல் மசூதி இருக்கும் இடத்தில் சுவர் எழுப்பி ராமர் கோவில் கட்டி வழிபட நீதிமன்றத்தில் இந்து துறவியால் அனுமதி கேட்கப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு நள்ளிரவில் அங்கே ராமர் சீத்தாவின் திருவுருவம் வைக்கப்படுகிறது. இதை சுதந்திரம் வாங்கும் தினத்திற்காக காத்திருந்து திட்டமிட்டு செய்ததாகவேத் தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து 1992 டிசம்பர் 6 மசூதி இடிக்கப்படுகிறது. இதன் பின் விஸ்வரூபம் எடுத்த இந்த வழக்கானது 2010ல் 2:1 என்ற விகிதத்தில் ஒருவர் 2.77 ஏக்கர் ராம் லல்லாவிற்கே (ராமர் குழந்தை) சொந்தம் என்றும், மற்ற இருவர் மூன்று பேருக்கும் சொந்தம் என்றும் (அதாவது நார்மோகி அகோரா, ராம் லல்லா, பாபர்) தீர்ப்பை அளித்தது நீதிமன்றம். அதன்பின் 2019ல் 2.77 ஏக்கரும் “ராம் லல்லாவிற்கே” சொந்தம் என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பை அளித்தனர்.

இந்த விவாதங்களுக்கு இடையில் இந்த மசூதி பாபருக்கு சொந்தமானது/பாபர்தான் கட்டினார் என்பதற்கு மூன்று கல்வெட்டுகள் இஸ்லாமியர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இவைதான் முதன்மையான ஆதாரம். இவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த கல்வெட்டுகள் உண்மை என நிரூபித்திருந்தால் பாபர் மசூதி மீதான தீர்ப்பு அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளாக இந்த கல்வெட்டுகளை நீதிமன்றம் பார்த்தது. ஆனால் எதிர்தரப்பு இந்த கல்வெட்டுகளில் உண்மைத்தன்மை இல்லை என்று வாதிட்டு வெற்றியும் கண்டது.

இந்த கல்வெட்டின் முதல் ப்ரதி 1899 ஆம் ஆண்டு “Fuhrer” என்பவரால் எழுதப்பட்ட “The Sharqi Architecture of Jaunpur with notes on Zafarabad, Sahet-Mahet and other places in the Northern-Western Provinces and Oudh” என்ற நூலில் இடம்பெற்றிருந்ததை 1994 ஆம் ஆண்டு ASI மறு பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. இதில் அத்யாயம் X ல் XL,XLI,XLII என்ற தலைப்பின் கீழ் இந்த கல்வெட்டுகள் இடம்பெற்றிருந்தன. இந்த கல்வெட்டுகள்தான் பாபர் மசூதி அயோத்தியில் பாபரால் கட்டப்பட்டது என்ற  Fuhrer ன் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றிருந்தது. மொழிபெயர்ப்பிற்கு பின்பு Fuhrer மசூதி பற்றி குறிப்பிடுகையில் ஜென்மஸ்தானில் இருந்த பழைய ராமர் கோவிலின் பகுதிகளைக்கொண்டே இந்த மசூதி கட்டப்பட்டது. இந்த பகுதிகள் வலுவான கருப்பு நிறத்தில் ஏழு முதல் 8 அடி வரை உள்ள தூண்களால்தான் கட்டப்பட்டது என்ற தகவல்களைக் குறிப்பிடுவதை வழக்கறிஞர் மிஸ்ரா எடுத்துக் கூறினார். மேலும்,

இந்த கல்வெட்டைப் பற்றிய குறிப்புகளை எடுக்க காரணமான Fuhrer ன் மொழிபெயர்ப்பின் மூலமும், பாபர் நாமாவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இதே கல்வெட்டைப்பற்றிய  Beveridge ன் மேற்கோள்களும் துளியளவும் ஒத்துப்போகவில்லை.  ஆம், இந்த கல்வெட்டுகளைக் குறிப்பிட்டுதான் இதுபற்றிய தனது பார்வையுயும் பதிவு செய்திருக்கிறார் பாபர் நாமாவின் மொழிபெயர்ப்பாளர் Beveidge. மேலும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலத்தில் பாபர் அயோத்தியிலேயே இல்லை என்பதும், கல்வெட்டின் இரண்டு மொழிபெயர்ப்பிற்கும் பெருமளவு கால வித்யாசம் இருந்ததும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தின. Beveridge ன் உரையைப் பொறுத்தவரை அவர் அசல் உரையைப் பார்க்கவில்லை அல்லது கல்வெட்டுகளின் உரையை அவரே மொழிபெயர்க்கவில்லை என்பதாகவும் நீதிமன்றம் கருதியது. 

பைசாபாத் துணை ஆணையரிடமிருந்து Beveridge தனது மனைவி மூலம் இந்த கல்வெட்டுகளின் உரையைப் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். காலனித்துவ அரசாங்கத்தில் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த தனது மனைவியால் கடிதப் பரிமாற்றம் மூலம் தனக்கு உரையின் நகலைப் பெற்றதாக Beveridge குறிப்பிடுகிறார். Beveridge கல்வெட்டின் உரையில் சில சிறிய மாற்றங்களை" செய்ததாக அவரே கூறுகிறார். Beveridge என்ன மாற்றங்களைச் செய்தார் என்பதை அவர் அவரின் உரையில் விளக்கத் தவறியுள்ளார். அவரின் கூற்றுப்படி, முதல் இரண்டு கல்வெட்டுகளின் உரை முழுமையடையாததாக இருந்தது என்பதும் அவை படிக்கக்கூடியதாக இல்லை என்பதும் தெளிவாகிறது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பறகு நீதிபதி எஸ்.யு.கான் கூறியதாவது, மசூதி யாருடைய உத்தரவின் கீழ் கட்டப்பட்டதோ அந்த நிலம் பாபருக்கு சொந்தமானது என்பதை முஸ்லிம்களால் நிரூபிக்க முடியவில்லை. மேலும், Fuhrer மற்றும் Beveridge மற்றும் இசட் ஏ தேசாய் மொழிபெயர்த்துள்ள மசூதியில் உள்ள கல்வெட்டுகள் உண்மையானவை அல்ல என்றும், இந்தக் கல்வெட்டுகளின் அடிப்படையில் மட்டும் “சர்ச்சைக்குரிய கட்டிடம்” கட்டப்பட்டது என்று கூற முடியாது என்றும் நீதிபதி கூறினார். ஆகவே பாபர்தான் மசூதியைக் கட்டினார் அல்லது அவரின் ஆணைக்கு இணங்கத்தான் கட்டப்பட்டது என்று நிறுவுவதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை என்று கூறினர். கிடைத்த தகவலின்படி 1659 முதல் 1707 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அதாவது ஔரங்கசீப்பின் ஆட்சியின் போதுதான் இந்த மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.

தொல்லியல் சான்றுகளும், தொல்லியல் அறிஞர்களின் பார்வையும் : 

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பி.பி லால் என்ற தொல்லியலாளர் தலைமையில் மசூதியை அகழாய்வு செய்து நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் மசூதிக்கு அடியில் கோவில் தூண்கள் உட்பட ஒரு பெரிய கட்டிடம் இருந்ததை கண்டுபிடித்தார்கள். இதை இடதுசாரி தலைவர்கள் மறுத்து விமர்ச்சனம் செய்ததும் பி.பி லால் தலைமையில் இருந்த தொல்லியல் துறையினருடன் பணி செய்த ஒரே ஒரு முஸ்லிமான கே.கே முகமது இடதுசாரி தலைவர்களின் கூற்றை மறுத்தார். பின் அங்கே நடத்திய அகழாய்வின்போது கிடைத்த ராமாயண காட்சிகள், இராவணன் சீதையை தூக்கிச்செல்லும் நிகழ்வு, அனுமன் சீதையிடம் கொடுத்த மோதிரம் அடங்கிய சிற்பங்கள், கறுப்புக் கல்லால் செதுக்கிய 14 கோவில் தூண்கள், பூர்ண கலசம், இரண்டாவது அகழ்வில் 50 க்கும் மேற்பட்ட தூண்கள், அரசர்களின் சிற்பங்கள், உடைந்த சிற்பங்களின் கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகள், ஆண்கள் பெண்கள் என்று பல சிற்பங்கள், மகர பிரணாலா எனப்படும் அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பு, கீழே செல்லச் செல்ல கோவில் சுவர்கள் போன்றவை கிடைத்ததை புகைப்படம் மற்றும் காணொலி வாயிலாகவும் பதிவு செய்தனர்.

மேலும் 20 வரிகள் அடங்கிய, வாலி மற்றும் பத்து தலை அரக்கனான ராவணனை வதம் செய்த விஷ்ணுவிற்காக அற்பணிக்கப்பட்டது இந்த கோவில் என்ற வாசகத்துடன் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டானது கரசேவைக்குப் பின் கிடைத்ததால் பல விவாதங்களுக்குப்பின் வாதி, பிரதிவாதி மற்றும் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. மிக முக்கியமாக மசூதிக்கு அடியில் கிடைத்த பொருட்களில் 12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இராவணன், சீதா, அனுமன், மோதிரம், பூர்ண கலசம், அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பு  போன்றவை மசூதிக்கு அடியில் கோவில் தான் இருந்தது என்று இஸ்லாமியரான கே.கே முகமது தொல்லியல் சான்றுகளின் மூலம் அடித்துக் கூறினார். இது இந்துக்களுக்குச் சொந்தமானது என்றும் நமக்கு மெக்காவைப்போல் இது இந்துக்களுக்குப் புனிதமான கோவில் என்றும் தொல்லியல் சான்றுகள் கே.கே முகமதுவை வாதிட வைத்தது. ஏனெனில் இஸ்லாமிய முறைப்படி இவ்வளவு கோவில் பொருட்களுக்கு மேல் மசூதி கட்டினால் அது ஹராம் என்பதில் அவர் உறுதுயாக இருந்தார். இந்த பொருட்கள் பௌத்த ஜைன கோவில்களாக இருக்கலாம் என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது 2003  ஆம் ஆண்டு மசூதிக்கு அடியில் அகழ்வாராய்ச்சி நடத்திய “ஹரி மாஞ்சியே” ஒரு பெளத்தர் தான். அங்கிருந்தது எதுவும் பெளத்த ஜைனோகிராபி இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இறுதியாக அவர் கூறியதாவது அகழ்வாய்வின் போது 3 -4 மாதங்கள் அங்கேயே தங்கி இருந்து மசூதியைச் சுற்றி நடப்பவற்றைத் தெளிவாகப் பார்த்திருக்கிறேன். தினமும் நுற்றுக்கணக்கான இந்துக்கள் வந்து மசூதி இருந்த இடத்தை சுற்றி வழிபட்டு செல்வதையும், மனமுருகி பிரார்த்தனை செய்வதையும் கூட பார்த்திருக்கிறேன். அதனால் தான் இஸ்லாமியர்கள், மெக்கா, மதீனாவில் வழிபடுவது போன்று இது இந்துக்களுக்கான புனிதமான இடம் என்பதால் இஸ்லாமியர்கள் மனமுவந்து நிலத்தை விட்டுக்கொடுக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதினேன் என்றதோடு அதனை நான் மனப்பூர்வமாக என் சகோதர இஸ்லாமியர்களிடம் கோருவேன் என்றும் பாரதிய இஸ்லாமியர்கள் அதை மனமுவந்தும் செய்வார்கள் என்று நம்பிக்கையும் கொண்டிருந்தார். மேலும் மசூதிக்கு கீழ் இராமனுக்கு ஆலயம் இருந்தது என்பதும், அது இந்துக்களின் புனித பூமிதான் என்பதும், நான் அகழ்வாய்வில் கண்டடைந்த உண்மை என்பதால் அதை எதற்கும் ஈடாக விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். இரண்டாம் கட்ட அகழ்வின்போது 131 தொல்லியலாளர்களில் 52 முஸ்லிம் தொல்லியல் அறிஞர்களும் இருந்தனர்.

இந்த வழக்கில் அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததாக இந்துக்கள் தரப்பில் வைக்கப்பட்ட சான்றுகளில் சில..

1. 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அயோத்யா மகாத்மியம் என்ற நூல்.

2. 1631 ஆம் ஆண்டு அயோத்தியில் இடிபாடுகளுடன் கூடிய ராமர்கோவில்/கோட்டை/ அரண்மனை இருந்ததை Joannes De Laets (Director of dutch east india company) என்பவர் தெளிவாக பதிவு செய்துள்ளார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ராமனை வந்து வழிபட்டுச் செல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

3. 1634 ஆம் ஆண்டு தாமஸ் ஹெர்போர்ட் என்ற பயணியும் அங்கே வழிபாட்டுஸ்தலம் இருந்ததை பதிவு செய்கிறார்.

4. Joshep tieffenthalers என்ற பாதிரியார் 1742ல் அயோத்தி வந்து இங்கே ஔரங்கசீப் ராமர்கோவிலை இடித்து மூன்று குமிள் போன்ற அமைப்புடன் கூடிய மசூதியைக் கட்டியதாகவும், சிலர் பாபர் கட்டினார் என கூறுவதாகவும், இடிபாடுகளுக்கு இடையே அனுமன் கோவில், ராமர் மற்றும் அவர் சகோதரர்கள் பிறந்த இடம் இதுதான் என்று இந்துக்கள் நம்பி வழிபடுவதாகவும் தனது நூலில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

5. 1801 ல் பிரஞ்ச் அறிஞர் C. Mentelles அயோத்யா என்ற பெயருடைய இந்த நகரத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான ராமர் கோவில்இருந்ததாகவும், மக்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டதாகவும், ஔரங்கசீப்பால் இது இடிக்கப்பட்டது என்பதையும் பதிவுசெய்துள்ளார்.

6. இஸ்லாமியர் தரப்பில் 1858ல் முதல் வழக்கு பதிவுசெய்தபோது மஸ்ஜித் ஜென்மஸ்தான் என்றே பதிவு செய்திள்ளனர்.

7. அங்கே குழந்தை ராமர் கோவில் இருந்ததை சீக்கிய குருமார்களில் முதல்வரான குருநானக் (1510 - 1511) போன்ற காலகட்டத்தில் அயோத்தி சென்று குழந்தை இராமரை வழிபட்ட ஆவணக் குறிப்புகளை தீர்ப்பானது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

8. காளிதாசரின் பாடல்களும் ராமர் கோவிலைப் பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.

- பா இந்துவன்.