வியாழன், 24 நவம்பர், 2022

பச்சையப்ப முதலியார் பாகம்_5,,

++++


06-10-1941 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில் நடைபெற்ற, பெரியகுளம் தாலுகா 1வது முக்குலத்தோர் மகாநாட்டில், 

அகமுடையார் குலத்தோன்றல் 
"வள்ளல் வி.பச்சையப்ப முதலியார்"
விவரங்கள்,,,

1941 ஆம் ஆண்டு பெரியகுளத்தில் நடைபெற்ற முக்குலத்தோர் மகாநாட்டில் வட மாவட்டத்தில் வாழும் முதலியார் பட்டப்பெயரை தாங்கி வாழும் அகமுடையார் மக்களும், தென் மாவட்டத்தில் வாழும் சேர்வை, தேவர் பட்டப்பெயரை தாங்கி வாழும் அகமுடையார் மக்களும் ஒரே இனம் என்பதை பிரதிபலிக்கும் முகமாக, 

அகமுடையார் குலத்தில் உதித்த, 
வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து சிறப்பித்துள்ளனர். 

இத்திருவுருவப் படத்தை, மதுரை மாவட்டம், வி.நெடுங்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் முதுப்பெரும் தலைவர், 1952-1957 வரை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், தெய்வத்திரு பாரதா R.M.முத்துத்தேவர் Ex.MLA., அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். 

சமூக அமைப்புகளின் நீண்ட நெடிய வரலாற்றின் வழித்தடத்தினை அறியாத சில கத்துக்குட்டி தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும், முகநூலில் மட்டுமே கம்பு சுத்தும் போலி முகநூல் முகவரிகளும்... 

இந்த வரவேற்பு உபச்சார இதழை  முழுமையாக வாசித்து தெளிவடையுமாறு வேண்டுகிறோம். 

வள்ளல் வி. பச்சையப்ப முதலியார் அவர்கள் - அகமுடையார் குலத்தின் வழித்தோன்றல்! 

அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம். 

இந்த வரவேற்பு உபச்சார இதழினை எமக்கு அளித்து உதவிய தெய்வத்திரு, 
பாரதா R.M.முத்துத்தேவர் Ex.MLA., அவர்களின் குடும்பத்தினருக்கு அகமுடையார் அரண் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 
-----------------------------------------------------------------
அகமுடையார் பேரினத்தின் 
ஒற்றுமையை நோக்கி.... 

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், 
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.

+++

புதன், 2 நவம்பர், 2022

ஆதி பகவன் சிவன்,,


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

திருவள்ளுவர் கூறும் "ஆதி பகவன்" என்பது சிவபெருமானையேக் குறிக்கும். திவாகர நிகண்டிலும் சிவபெருமானுக்கு உரிய பெயர்களில் 'பகவன்' என்ற பெயரும் உண்டு. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சித்தாந்த சிகாமணி என்ற நூல் சிவபெருமானை நேரடியாக ஆதிபகவன் என்கிறது. மேலும் கபிலரால் பாடப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது, நாற்பெரும் தெய்வங்களைப் (சிவன், திருமால், முருகன், பலராமன்) பற்றிக் குறிப்பிடுகையில் சிவபெருமானை நேரடியாக "பகவன்" என்று அழைக்கிறது.!

"முக்கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா, பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா, சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா, சத்தியான் தாள் தொழாதார்க்கு"

- இன்னா நாற்பது.

பொருள் : முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியை உடையவனான பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்.

- பா இந்துவன்.