"வடுகன்" என்பதை போலி தமிழ்தேசிய திரிபுவாதிகள் செய்த இழிவு சொல்லிமாளாதது,
உதாரனமாக தமிழ்தேசியம் என்ற பெயரில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் உட்பட பல நூலை எழுதிய "போலி அறிவர் குணா" போன்ற அதிமேதவிகள் செய்த திரிபுகள் ஏராளம்,
ஆனால் வடக்கில் உள்ளவரை வடுகர் என்பது மரபு அவர் தமிழ் மரபினராயினும் என்பதே வரலாறு,,
உதாரணமாக சங்க இலக்கியம் கூறும் ஓணம் திருநாள் கொண்டாடும் மாவலி அரசர் மகனை பல பெயரில் கல்வெட்டுகளில் கூறப்புவதோடு "வடுகன் வாணாதிராஜன்" என்ற கல்வெட்டையும் கீழே காண்க,
வாணாதிராயன் தலைநகர் வேலூர் திருவலமாகும் இது தமிழகத்திற்கு இன்றைய வடக்கு எல்லையில் அமைந்துள்ள பகுதியாகும்..
வேலூர் திருவலத்தை தலைநகராக கொண்டு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிராமங்களை தன்னுடையதாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் மாவலி வாணாதிராயர்களாவர்..
இதனை வேலூர் திருவலம் மெய்கீர்த்தி கல்வெட்டு தெளிவாக கூறுகிறது,
மேலும் மூவேந்தரும் மாவலி வாணர் குலத்துடன் மன உறவுடையோர் ஆவர்,
பண்டைய தமிழகத்தின் எல்லை "விந்தியம்" வரை ஆயினும் வேங்கடத்திற்கு அப்பாலான பிற்கால அந்நிய பல அரசிடமிருந்து இன்றைய தமிழக எல்லைப்பகுதியில் நின்று அரன் போல காத்தவர்கள் மாவலி வாணர்கள் அத்துடன் பாண்டியர்,சோழர்,பல்லவருடன் மன உறவுடன் படைஉதவி & நிர்வாக உதவியுடன் செயல்பட்டவர்கள் மாவலி வாணாதிராயர்கள் என்பது கடந்த ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால கல்வெட்டுகள் வழி தெளிவாக உலகம் அறியும்...
வெட்டு மாவலி அகம்படியர்களை மாவலி வாணாதிராயன் மகன் கலிங்கராயன் பெயரிலும் வாணர் குல மலையர்களான சேதிராயன் பெயரிலும் கூறுவதோடு "காயவடுகன்" என்றும் கூறும் கல்வெட்டை கீழே காண்க;
இதுவரை மாவலி வாணாதிராயனை & வெட்டு மாவலி அகம்படியார்களை வடுகன் என்பதான ஆவணங்களை கண்டுள்ளோம் இக்கட்டுறையின் கருப்பொருளிற்கு துணையாக இதர சில சான்றை கீழே காண்போம்,
தமிழ்குடி இடையர்களை "வடுகன்" பெயரில் கூறும் கல்வெட்டு_1,
++++
வடுக நாயுடு,
வடுக வெள்ளாளர்,
வடுக சானார்,
வடுக சான்றோர்,
வடுக வள்ளுவர்,
@செங்கல்பட்டு கெசட்..
+++
"வெள்ளாளன் குமாரமங்களம் ஆளுடையான் வடுகன்" கல்வெட்டு..
வடுக பள்ளர் எனப்படும் தேவேந்திரகுல வேளாளர் செப்பேடு..
இதுவரையன சான்றுகளின்படி "வடுகர்(ன்)" என்பது ஓர் தனித்த இனமாக எவறையும் குறிக்காது என்பதை மிகத்தெளிவாக உணர முடியும்...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்...
9500888335