புதன், 18 ஜனவரி, 2023

தமிழக எல்லைகள் பாடல் விவரம்,,


கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்

சோழ நாட்டின் எல்லை:

கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு

குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில்

ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்

சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1)

[கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.]

மேலும்,

செல்லும் குணபால் திரைவேலை
          தென்பால் செழித்த வெள்ளாறு
வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும்
          மேல்பால் வடபால் வெள்ளாறே
எல்லை ஒருநான் கினும்காதம்
          இருபா னான்கும் இடம்பெரிதாம்
மல்லல் வாழ்வு தழைத்தோங்கும்
          வளம்சேர் சோழ மண்டலமே

       @#சோழமண்டல சதகம்,,

+++++++

பாண்டிய நாட்டின் எல்லை:

வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம்

தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார

ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்

பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)

 வடக்கே வெள்ளாறு, மேற்கே பெருவழி, தெற்கே தெளிந்த நீருடைய குமரி, கிழக்கே ஆட்சிக்குட்பட்ட கடல். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 56 காதப் பரப்பு பாண்டியநாடாகும். அஃதாவது தெற்கே கடல் எனக் குறிப்பிடாததால் கம்பர்காலத்தில் தெற்கே, குமரிமலையிலிருந்து பெருக்கெடுத்தோடிய குமரியாறுதான் இருந்துள்ளது.]

+++++

 சேர நாட்டின் எல்லை:

வடக்கு திசைபழனி வான்கீழ் தென்காசி

குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்

ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்

சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)

[ வடதிசையில் பழனி, கிழக்கே பெருமை தென்காசி, மேற்கே கோழிக் கோடு, தெற்கே கடற்கரை.  இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 80 காதப்பரப்பு  சேரநாடு. அப்படியானால், கம்பர்காலத்தில் சேரநாடு பெரும்பரப்பாக இருந்துள்ளது.]

+++++

தொண்டைநாட்டு எல்லை :

மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்காம்

ஆர்க்கும் உவரியணி கிழக்கு – பார்க்குளுயர்

தெற்குப் பினாகினி திகழிருபதின் காதம்

நற்றொண்டை நாடெனவே நாட்டு. (4)

[மேற்கே பவளமலை, வடக்கே திருவேங்கட மலை,   கிழக்கே கடல், தெற்கே உலகில் சிறந்த பெண்ணை ஆறுஇவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 20 காதப் பரப்பு, தொண்டை நாடு.]


++++




ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பழுவேட்டரையர் மகள் இருங்கோவேள் மணஉறவு,,


கேரளன் எனப்படும் பழுவேட்டரையர் மகளுக்கும் & யதுகுல கேது எனப்படும் இருங்கோவேள் அரசருக்கும் மன உறவு இருப்பதை கூறும் கல்வெட்டு,,

+++

சனி, 14 ஜனவரி, 2023

மறவ சேதுபதிகளை வேளாளர் எனும் ஆவணங்கள்,,

++
முத்து விஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவியாயர் அவர்களால் 1700களில் இயற்றப்பட்ட "பணவிடு தூது" எனும் இலக்கிய நூலில் பாட்டுடைய தலைவனான முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களை கீழ்கன்டவாரு கூறுகிறது பாடல் வரிகள்;


மெழியான் என்கிறார் புலவர் -
"விண்ணுக்கு ளோங்கு நெடு மெழியான்"(274)

++

நீதி தவறாமல் செங்கோல் செலுத்திய சேதுபதியை மிக தெளிவாக "வேளாளர்" என்று குறிப்பிடுகிறார் -

"பொய்யைத் துரத்திப் புவியில்செங் கோல்செலுத்த மெய்யைத் தலைநிறுத்தும் வேளாளன்"(237)

+++

மேலும் முத்து ரகுநாத மன்னர் அவர்களை கங்கை குலம் என்றும் புலவர் குறிப்பிடுகிறார் -

"கங்கைகுலத் தோன்றிவுங் கர்த்தவிசு வாசமுமாந் தங்கள் குலவித்தை தனைவளர்த்தோன் - திங்கள் உறுந்தா ரகைபோ லொழியார் முத்தார நறுந்தாரன் முத்துரகு_நாதன்"

++++

இங்கனம்,
மேழியான்,வேளாளன்,
கங்கை குலம் என நேரிடையாக மிகதெளிவாக வேளாளர் குல அடையாளங்கள் சேதுபதிக்கு கூறப்படுகிறது,,,

+++++


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

காராளர் கற்பகம் திருமங்கை ஆழ்வார் கல்வெட்டு,,

++
++

காராளன் சிவத்தெழுந்த பல்லவராயன் உலா..

+++
+++
+++

மேழி தனிக்கொடி,
காராளன்,
சந்திரகுலம்,
பட்டுமழவன் என்ற வேளாளன் மருமகன்,
என முக்கிய குறிப்புகளை தருகிறது சிவத்தெழுந்த பல்லவராயன் உலா,,

+++++

ஆறகளூர் நடுநாடே கல்வெட்டு,,

ஆறகளூர் நடுநாட்டின் ஓர் பகுதி என்பதற்கு பல கல்வெட்டுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் மேலும் ஒன்று,

உடன் அல்லாள இளைய நாயகர் குறிப்பு கல்வெட்டு,,,

வெள்ளி, 30 டிசம்பர், 2022

திருமால் வடிவம் ராஜராஜசோழன் கல்வெட்டு..

ராஜராஜ சோழனின் வருங்காலத்தைக் கணித்த கல்வெட்டு
----------------------------------------------------------------
போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது, உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது.  

இந்தக் கல்வெட்டு வருங்காலத்தைக் கணிப்பதைப் போல அமைந்திருக்கிறது. 

இது திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார் என்றும் தேவர்களின் குருவான வியாழன் அவனுடைய அமைச்சரான ஜயந்தனாகப் பிறப்பார் என்றும் குறிப்பிடுகிறது. 

அவர்கள் இவ்வுலகை அளந்து த்ரிசூல மலையின் மீது ஒரு நகரத்தை அமைப்பர் என்றும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இது ராஜராஜனின் காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் இது வருங்காலத்திலேயே செய்தியைக் குறிப்பிடுகிறது. 

இந்தக் கல்வெட்டு வரலாற்றுரீதியான தரவுகளை அதிகமாகத் தராவிட்டாலும், ராஜராஜனின் அமைச்சரின் பெயர் ஜயந்தன் என்று இந்தக் கல்வெட்டு தகவலைத் தருவது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு

वासुदेवो महाविष्णुः राजराजो भविष्यति।
जयन्तो वाक्पतिर्म्मन्त्री तस्य राज्ञो भविष्यति।
तत्काले जगतो मानं करिष्यति जगत्पतिः।
तन्नाम्ना नगरीन्दिव्याम् त्रिशूलोच्चगिरौ पुरी।।

வாஸுதே³வோ மஹாவிஷ்ணு​: ராஜராஜோ ப⁴விஷ்யதி|
ஜயந்தோ வாக்பதிர் ம்மந்த்ரீ தஸ்ய ராஜ்ஞோ ப⁴விஷ்யதி|
         
வஸுதேவரின் மகனான திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார். தேவர்களின் அமைச்சரான ப்ருஹஸ்பதியே அந்த அரசனுக்கு ஜயந்தன் என்னும் அமைச்சராகத் திகழ்வார்.

तत्काले जगतो मानं करिष्यति जगत्पतिः।
तन्नाम्ना नगरीन्दिव्याम् त्रिशूलोच्चगिरौ पुरी।।

தத்காலே ஜக³தோ மானம்ʼ கரிஷ்யதி ஜக³த்பதி​:|
தன்னாம்னா நக³ரீம் தி³வ்யாம் த்ரிஶூலோச்ச-கி³ரௌ புரீ||

அந்தப் பேரரசன் தன்னுடைய காலத்தில் உலகை அளப்பான். தன்னுடைய பெயராலே த்ரிசூல மலையின் உயர்ந்த முகட்டில் ஒரு நகரத்தை அமைப்பான்.

இதில் குறிப்பிடப்பெற்றுள்ள த்ரிசூல மலையானது தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள நவிரமலையென்பதும் இதன்மீது காரி உண்டியின் வழிபாட்டிடம் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  ராஜராஜனைத் திருமாலின் வடிவமாக மக்கள் கருதியிருந்தனர் என்பது திருவாலங்காட்டுச் செப்பேட்டாலும் உறுதி பெறுகிறது.

----------------------------------------------------------------------------------------------------
http://sarasvatam.in/ta/2016/02/02/ராஜராஜ-சோழனின்-வெளிவராத/ 

ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு
 02/02/2016  Sankara Narayanan