செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

சாளுக்கியர் லினேஜ்..

**
**
**
**

வேங்கி சாளுக்கியர் வம்சாவளி மரபு:
---------------------------------------------------------------------

#வேங்கி_சாளுக்கி_வம்சாவளி

வேங்கி சாளுக்கியர்கள் தங்களின் சந்திர வம்சாவளி மரபினை பல கல்வெட்டுகள் செப்பேடுகளிலும் வெளியிட்ட போதிலும், நாம் இங்கே மேற்கோள் காட்டவிருப்பது இரண்டு சாசனங்கள்:

1, நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு

2, வீரசோழனாரின் (1091-1092) செல்லூர் செப்பேடு

4ம் விக்ரமாதித்த சாளுக்கியன்
கல்வெட்டு:
----------------------------------------------------------

வேங்கி சாளுக்கிய அரசர் நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியரின் 38வது ஆட்சியாண்டு கல்வெட்டு சாளுக்கிய வம்சாவளியை தெளிவாக கூறுகின்றது இதன்படி சாளுக்கிய வம்சம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியது அந்த மரபில் அத்திரிமாமுனிவர் ⇒சந்திரதேவர் ⇒ புதன் ⇒ புருரவா ⇒ ஆகியோர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது.

வீரசோழனின் செல்லூர் செப்பேடு:
--------------------------------------------------------------

சோழ மன்னன் வீரசோழனார் கி.பி.1091-1092 ஆண்டில் வெளியிட்ட செல்லூர் செப்பேட்டு சாசனம் சசி குலத்து சாளுக்கிய பேரரசின் மரபை கீழ்கண்டவராறு விவரிக்கின்றது.

அத்திரிமாமுனிவர் ⇒சந்திரதேவர் ⇒ ஆயு ⇒ யயாதி ⇒ புரு மகாராசன், இவர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய அரச மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது.

இவைகளின் மூலம் சாளுக்கியர்கள் சந்திரகுலத்தவர்கள் என்பதும் அவர்களின் வம்சாவளி தொடர்ச்சியான முன்னோர் வழிகளைக் கொண்டது என்பதும் தெளிவாகிறது.
*****
*****

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

திருக்காளத்தி தேவன்..

***
***
***

South indian Inscriptions, Volume - 3 :
-------------------------------------------------------‐--------------

"Yadavaraya prince Simha alias Virarakshasa-Yadavaraja, the son of Yadavaraja alias Tirukkalattidava.
Both Tirukkalattideva and his son claimed descent from the #Eastern_Chalukya_family."

திருக்காளத்திதேவன் என்னும் பெயர் கொண்ட யாதவராஜாவின் மகன் வீர ராட்சச யாதவராஜா (என்ற) இளவரசர் சிம்ஹன்.

யாதவராய அரசரான திருக்காளத்திதேவன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் கிழக்கு சாளுக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்;

அவர்கள் #வேங்கிவல்லபர் மற்றும் #சசிகுல_சாளுக்கி ஆகிய குலத்தலைப்புகளை உடையவர்கள்.

         -  South indian Inscriptions Volume - 3

#Yadavarayas_The_descendant_of_Eastern_Chalukyas
#Chalukya #Yadavaraya #Golla #Ayar #Yadava #Vengi_Chalukyas

-###


ஒட்டக்கூத்தரும் குலோத்துங்கசோழனும்..

***
***
***
***

துவாரகை கிருஷ்ணர் மரபில் சந்திர குலத்தில் தோன்றிய சாளுக்கிய சோழன் :
--------------------------------------------------------------------------

"Kulothunga Chola Ulaa" Which written by the great Poet Ottakoothar who the royal Poet of Kulothunga Chola's Court. In this book he clearly said about Chalukya-Cholas lineage

"31, கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன்-பொற்றுவரை

32, யிந்து மரபின் றிருக்குலத்தி லுதித்துச் வந்து மனுகுலத்தை வாழ்வித்த- பைந்தளிர்க்கை"

▪︎பொற்றுவரை = Por-tuvarai (Dvaraka), 

▪︎முகில்வண்ணன் = Mugilvannan (Lord Krishna)

▪︎இந்து மரபின் = Indhu Marabil (Chandra-Kula)
-

Meaning of Poem
___________________

In these Poem lines he mentioned that Chalukya-Cholas were Descent from Dvaraka Krishna in the race of Chandra Kula (Lunar dynasty).
_

குலோத்துங்கசோழன் உலா :
------------------------------------------------------------

"31, கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன்-பொற்றுவரை

32, யிந்து மரபின் றிருக்குலத்தி லுதித்துச் வந்து மனுகுலத்தை வாழ்வித்த- பைந்தளிர்க்கை

33, மாதர் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன்: கனகனவன்"

  - #கவிச்சக்கரவர்த்தி_ஒட்டக்கூத்தர்

பாடலின் பொருள் :

#துவாரகை_முகில்வண்ணனாகிய (நிலவண்ணன்) #ஸ்ரீகண்ணபிரானின் மரபில் அவனது #சந்திர_திருக்குலத்தில் தோன்றி மனு குலமாகிய கரிகாலன் வழிவந்த சோழர் குலத்தை வாழ்வித்தவன் கரிகால சோழன் என்று இப்பாடல் வெளிப்படையாய் தெரிவிக்கின்றது. இந்நூலின் மகத்துவம் என்னவென்றால் சோழ அரசின் மிக முக்கியத்துவம் மிகுந்த அவைப்புலவர் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் முதலானவர்கள் கேட்டுணர்ந்து மகிழ்ந்த பெருமைக்குரியது. எனவே இந்நூலில் சாளுக்கியர்-சாளுக்கிய சோழர்களின் மரபை அறிய உதவும் கல்வெட்டுகள் செப்பேடுகளை காட்டிலும் மிக மிக உயர்ந்த தன்மையுடையது.

சந்திரகுலத்தில் துவாரகாபுரி ஸ்ரீகிருஷ்ணரின் யாதவ மரபில் குலோத்துங்கனின் தந்தைவழி வம்சமான வேங்கி சாளுக்கிய மரபு பிறந்ததாக இரண்டாம் குலோதுங்க சோழன் அவையின் முதன்மை புலவரும் கவிச்சக்கிரவர்த்தியுமான ஒட்டக்கூட்டத்தர் தனது குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலில் தெளிவுபட தெரிவிக்கின்றார்.

சந்திரகுலத்தில் துவாரகாபுரி ஸ்ரீகிருஷ்ணரின் யாதவ மரபில் குலோத்துங்கனின் தந்தைவழி வம்சமான வேங்கி சாளுக்கிய மரபு பிறந்ததாக இரண்டாம் குலோதுங்க சோழன் அவையின் முதன்மை புலவரும் கவிச்சக்கிரவர்த்தியுமான ஒட்டக்கூட்டத்தர் தனது குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலில் தெளிவுபட தெரிவிக்கின்றார்.

_______________________________

சாளுக்கிய அரசனை போற்றும் முன் கவியரசனை போற்றுங்கள் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெருமான் புகழ் வாழ்க!!! 🙏
_________________________________

#Chalukya #Chaluka_Chola #Dvaraka #Krishna_descendants #Ottakoothar #Kulothunga_Chola #Chandra_Kula #Yadava
#Golla #Ayar

*****