வெள்ளி, 30 டிசம்பர், 2022

திருமால் வடிவம் ராஜராஜசோழன் கல்வெட்டு..

ராஜராஜ சோழனின் வருங்காலத்தைக் கணித்த கல்வெட்டு
----------------------------------------------------------------
போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது, உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது.  

இந்தக் கல்வெட்டு வருங்காலத்தைக் கணிப்பதைப் போல அமைந்திருக்கிறது. 

இது திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார் என்றும் தேவர்களின் குருவான வியாழன் அவனுடைய அமைச்சரான ஜயந்தனாகப் பிறப்பார் என்றும் குறிப்பிடுகிறது. 

அவர்கள் இவ்வுலகை அளந்து த்ரிசூல மலையின் மீது ஒரு நகரத்தை அமைப்பர் என்றும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இது ராஜராஜனின் காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் இது வருங்காலத்திலேயே செய்தியைக் குறிப்பிடுகிறது. 

இந்தக் கல்வெட்டு வரலாற்றுரீதியான தரவுகளை அதிகமாகத் தராவிட்டாலும், ராஜராஜனின் அமைச்சரின் பெயர் ஜயந்தன் என்று இந்தக் கல்வெட்டு தகவலைத் தருவது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு

वासुदेवो महाविष्णुः राजराजो भविष्यति।
जयन्तो वाक्पतिर्म्मन्त्री तस्य राज्ञो भविष्यति।
तत्काले जगतो मानं करिष्यति जगत्पतिः।
तन्नाम्ना नगरीन्दिव्याम् त्रिशूलोच्चगिरौ पुरी।।

வாஸுதே³வோ மஹாவிஷ்ணு​: ராஜராஜோ ப⁴விஷ்யதி|
ஜயந்தோ வாக்பதிர் ம்மந்த்ரீ தஸ்ய ராஜ்ஞோ ப⁴விஷ்யதி|
         
வஸுதேவரின் மகனான திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார். தேவர்களின் அமைச்சரான ப்ருஹஸ்பதியே அந்த அரசனுக்கு ஜயந்தன் என்னும் அமைச்சராகத் திகழ்வார்.

तत्काले जगतो मानं करिष्यति जगत्पतिः।
तन्नाम्ना नगरीन्दिव्याम् त्रिशूलोच्चगिरौ पुरी।।

தத்காலே ஜக³தோ மானம்ʼ கரிஷ்யதி ஜக³த்பதி​:|
தன்னாம்னா நக³ரீம் தி³வ்யாம் த்ரிஶூலோச்ச-கி³ரௌ புரீ||

அந்தப் பேரரசன் தன்னுடைய காலத்தில் உலகை அளப்பான். தன்னுடைய பெயராலே த்ரிசூல மலையின் உயர்ந்த முகட்டில் ஒரு நகரத்தை அமைப்பான்.

இதில் குறிப்பிடப்பெற்றுள்ள த்ரிசூல மலையானது தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள நவிரமலையென்பதும் இதன்மீது காரி உண்டியின் வழிபாட்டிடம் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  ராஜராஜனைத் திருமாலின் வடிவமாக மக்கள் கருதியிருந்தனர் என்பது திருவாலங்காட்டுச் செப்பேட்டாலும் உறுதி பெறுகிறது.

----------------------------------------------------------------------------------------------------
http://sarasvatam.in/ta/2016/02/02/ராஜராஜ-சோழனின்-வெளிவராத/ 

ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு
 02/02/2016  Sankara Narayanan

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

2022 மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை திருக்கோவிலூர்,,

திருக்கோவிலூர் ஆலய நிர்வாகம் அழைப்பிதழ்,,
திருவீதி உலா உபயதாரர்களான அகமுடையார்(உடையார்) உறவினர்கள் கலந்து வழிபட்ட படங்கள்,
திரு தியாகராஜன் சார் & திரு தேவிமுருகன் சேர்மன் மற்றும் உறவினர் பலர் விழாவில்,
இனி வருவன உபயதாரர்களுக்கான ஆலய நிர்வாக மரியாதை & பிரசாதம் வழங்கும் படங்கள்;

தஞ்சை மாவட்ட 
அகமுடையார்(தேவர்) உறவினர்களின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் திருக்கோவிலூர் அகமுடையார்(உடையார்) உறவினர்களுக்கு "குருகுல மன்னர் மெய்ப்பொருள் நாயனார்" குருபூஜை நினைவு நாட்காட்டிகள் வழங்கப்படுவதுடன் வருடம் தவறாமல் திருக்கோவிலூர் சென்று முக்கியஸ்தர்களுக்கு மரியாதை செய்யப்படுவதுடன் டெல்டா மன்டலம் திருவாரூர் மாவட்டம் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை உத்திரத்தில் நடைபெறும் மெய்ப்பொருள் நாயனார் வருடாந்திர குருபூஜை அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது,,

அதன் படங்கள் கீழே;


++++++

@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,,
9500888335









சனி, 3 டிசம்பர், 2022

குருகுல மக்கள் இயக்கம் நான்ங்காம் ஆண்டு நாட்காட்டிகள்,,

கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் நாட்களே "குருகுல மக்கள் இயக்கம்" துவங்கப்பட்ட நாட்களாகும்,,

எனவே ஒவ்வொரு ஆண்டும் மெய்ப்பொருள் நாயனார் மற்றும் ஆனாய நாயனார் குருபூஜை தினங்களான இந்நாட்களை முன்னிட்டு அனைத்து சமுதாய நாயனார் குடும்பத்தாரிடமும் இன்னபிற நட்பு சமுதாயத்தவரிடத்திலும் நட்பையும்,உறவையும் பேனும் விதமாக நாட்காட்டிகள் அச்சடிக்கப்படுகிறது,,,

2022 கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் நாட்காட்டிகளின் மாடல் கீழே,,

++
++
++
++
++
+++++++++

வாழ்க சிவமதம்,
வளர்க இந்துக்களின் ஒற்றுமை,
சிவாயநம,,