செவ்வாய், 14 ஏப்ரல், 2020

சிதம்பரம் ஆருத்ரா விழா,,



மேருமலை பாெருப்பன், குமரி,பஃறுளி ஆற்றங்கரை துறைவன்களான அஷ்ட பர்வத(மலை) ராஜகுல அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்,,

தமிழக வரலாற்றில் எத்தனையாே சாதிகள் "சிவன்_பார்வதி" வழி வந்தவராக கூறிக்காெள்ளும் நிலையில் தமிழகத்தில் சிவன் மனைவி சிவகாமசுந்தரியை(மலைமகள்) தன் மகள் என சீர்வரிசை தரும் & விழா செய்யும் ஒரே இனம் "பர்வதராஜகுல அகமுடையார்" பேரினம் மட்டுமே,,


கடந்த ஆயிரம் வருட புராண, இலக்கிய கால ஆவணம் வழி எந்த சாதியினரும் இங்கனம் "மலைமகளை" கூறுவது இல்லை எனினும் அங்கனம் ஏதேனும் கூற முயன்றாலும் எவறாலும் தம்மை சங்ககால "திருமுறுகாற்றுப்படை" & "சிலப்பதிகாரம்" & கிபி 5 ஆம் நூற்றாண்டு காளிதாசரின் "குமாரசம்பவம்" பாேன்ற பழமையான சான்றுள்ள "மலைமகள்" தந்தையான "பர்வதராஜகுலம்" எனக்கூற இயலாது,,

ஏனெனில் அங்கனமான தமிழக அரசானை & வாழ்வியல் & செப்புபட்டயம் மூன்றும் "ஆதியரசன் அகமுடையார்" நம்மிடம் மட்டுமே உள்ளது நமக்கான தனிச்சிறப்பு,,,

இன்றும் அகம்படவன்_அகமுடையார்கள் சிதம்பரத்தில் திருவாதிரையில் விழாசெய்யும் பத்திரிக்கை; 

இங்கனம் முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவில் கலந்துகாெண்டு இவ்விழாவை சிறப்பிக்கசெய்வதும் இவ்விழாவை நம் தாெண்மையின் அடையாளத்திற்கு உரிய பாரம்பரிய விழாவாக சிறப்பித்து பாதுகாக்க வேண்டியதும் மலைமகளின் தந்தையான "ஆதியரசன்_அகமுடையார்" ஒவ்வாெருவரின் முதன்மையான கடமையாகும்,,

உலகில் ஓர் பேரினத்தின் பெருமையை காப்பது வாழ்வியல் தாெடர்ச்சி சான்றுகளே என்பதை உணர்ந்து இனி வருடாந்திர "சிதம்பரம் ஆருத்ரா" விழாவை சிறப்பிக்க தமிழகம் தழுவிய இரண்டரை காேடி "அகம்படவன் அகமுடையார்" சாெந்தங்களையும் அழைக்கிறாேம்..

மேருமலை பாெருப்பன்,
குமரி,பஃறுளித் துறைவன் "ஆதியரசன்_அகமுடையார்"
பேரினத்தின் புகழ் ஓங்குக,,

தடாதகை(மீனாட்சி) தந்தை மலையத்துவஜன் மருதுபாண்டியர் புகழ் ஓங்குக,,

@ குருகுல மக்கள் இயக்கம்,,
9500888335..

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

எயினன் பர்வதராஜகுல அகமுடையார்..

ஆதி நாகரின பர்வதராஜகுலமே நாண்ங்கு பிரிவாக பிரிந்தது என்ற விவரத்தை ஐயா அரு.பரமசிவம் தனது நூலில் கூறியுள்ளார்,, 
அவை,

1.எயினர்,
2.ஔியர்,
3.அருவாளர்,
4.பரதவர்,,

மேலும் "குகன் குலம்" என்ற விவரத்தையும் தனது "எஞ்சிநிலைத்த வரலாறு" நூலில் ஐயா அரு.பரமசிவம் அவர்கள் கூறியுள்ளார்,

இராமனுக்கு படகாேட்டிய குகனை கம்பராமாயணம் 
"நாவாய் வேட்டுவன்" என்பதோடு "எயினர் வேந்தன்" என்கிறது,,,

பாடல்;

"தழுவிரு கரைக்கும் நாதன்,
தாயினும் உயிர்க்கு நல்லன்,
வழுவிலா எயினர் வேந்தன்,
குகன் எனும் வள்ளல் என்பான்,
           @கம்பராமாயணம்..


இவற்றில் "எயினர்" என கூறப்படும் சங்க இலக்கிய பாடல்கள் என் சிலவற்றை காண்போம்,,,


1.கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் - அகம் 319/3

2.கடும் பரி குதிரை ஆஅய் எயினன்/நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/7,8

3.ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று - அகம் 181/7

4.வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்/அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/5,6

5.ஆஅய் எயினன்/இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/4,5

6.வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6

7.கொடு வில் எயினர் கொள்ளை உண்ட - பட் 266

8.கொடு வில் எயின குறும்பில் சேப்பின் - பெரும் 129

9.கானமும் எயினர் கடமும் கடந்தால் - சிலம்பு_மது 11/79

10.இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் - சிலம்பு_மது 12/10

11.வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன - சிலம்பு_மது 12/13

12.இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது - சிலம்பு_மது 12/20

13.எய் வில் எயினர் குலனே குலனும் - சிலம்பு_மது 12/94

14.வேய் வில் எயினர் குலனே குலனும் - சிலம்பு_மது 12/98

15.எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - சிலம்பு_மது 12/139

16.அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது - சிலம்பு_மது 12/142

17.கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - சிலம்பு_மது 12/157

18.அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - சிலம்பு_மது 12/161

19.வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் - சிலம்பு_மது 12/149

20.அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலை அமர் செல்வி கடன் 
உணின் அல்லது - சிலம்பு_மது 12/15,16

21.ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர - சிலம்பு_மது 12/39

22.எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - சிலம்பு_மது 12/139

23.இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் - சிலம்பு_மது 12/128

24.கொடு வில் எயினர் கோட் சுரம் படர' அகம் 79/14
என்ற அடிகளில் அமைந்துள்ளது..


@#பெண்பலாக_கூறப்படுவன,,

1."கருங்கண் #எயிற்றி காதல் மகனொடு"
             @புறநானூறு_181..

2."நுண் புல் அடக்கிய வெண் பல் #எயிற்றியர்" 
       @பெரும்பாணாற்றுப்படை,,

3.“#எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு"
            (சிறுபாணாற்றுப்படை)

4."ஏவல் #எயிற்றியர் ஏந்தினர் பின் வர" 
     @சிலப்பதிகாரம்,,

5."எயினர் #எயிற்றியர் முன்றில் நிறைந்தன"  
          @சிலப்பதிகாரம்,,

6."இள மா #எயிற்றி இவை காண் நின் ஐயர்"  
          @சிலப்பதிகாரம்,,

சங்க இலக்கியங்களில் பெண்பால் பெயராகவும் "எயிற்றி" கூறப்படுகிறது ஆனால் "மறத்தி" என எந்த பாடலும் இல்லை என்பது முக்கிய தகவலாகும்,,,

பர்வதம் எனில் மலை என பாெருள்,
"அஷ்ட பர்வதம்" என்பது இந்தியாவின் முக்கிய 8 மலைகளை குறிக்கும்,,

1.மேருமலை,2.நிமிடதம்,
3.கந்தமாதணம்,4.மேற்கு தாெடர்ச்சி நீலகிரி மலைத்தாெடர், 5.கயிலை(தென்கயிலை),
6.விந்தியம்,7.இமயம்,8.ஏமகூடம்

ஆதி நாகரின மனித இனம் லெமூரியாவில் தாேன்றி மலைகளை ஆண்டு சமவெளிகளில் & ஆறுகளில் இயற்கை நீர்நிலைகளில் மீன்பிடித்து ஆற்றங்கரையில் நாகரீகத்தை தாேற்றுவித்த "மலையர்குல ஆதியரசன்" எனப்படும் பாெருள்பட இன்றும் வாழ்ந்து & தன் மகள் "மலைமகளின் வடிவங்களான" 

1.சிதம்பரத்தில் சிவகாமசுந்தரிக்கு சீர்வரிசைசெய்து, 2.இராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினிக்கு தெப்ப திருவிழா செய்து, 3.அங்காளியம்மனுக்கு பல பல ஆலயங்கள் கட்டி,
4.திருவண்ணாமலையில் தன் மாப்ளை சிவனுக்கு தீபம் ஏற்றும் உரிமையுடன்,
5.எடப்பாடியிலிருந்து பேரன் முருகனுக்கு பழனி காவடி திருவிழாசெய்து,பழனி மலையில் தங்கும் உரிமையுள்ள ஒரே இனமாக வாழ்ந்து,


மேலும் பல இடங்களில் "மலையத்துவஜன் மருதுபாண்டியர்" மகள் மலைமகளுக்கு சீர்வரிசை செய்து லெமூரியா முதல் இமயம் வரையான 8 மலைகளின் அரசன் என்பதையும் ஒருங்கே குறிக்கும் விதமான பெயரான "பர்வதராஜகுலம்" என்ற பெயரையும் இன்றும் வாழவைத்து காப்பாற்றி வருகிறது ஆதியரசன் அகமுடையார் பேரினம்...


அகமுடையார் என்பதில் அகம் எனில் மலை என பாெருள், உடையார் எனில் அரசன்,இறைவன் என பாெருள் எனவே "அகமுடையார்" எனில் "மலையரசன்" என்றே நேரடி பாெருள்படுவதாகும்,, அகமுடையார்(மலையரசன்) என்ற தூய தமிழ் சாெல்லின் வடமாெழி வடிவமே "பர்வதராஜகுலம்" என்பதாகும்,,,


@ஆதியரசன்_Suresh_N...
குருகுல மக்கள் இயக்கம்,,
9500888335